எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Tuesday, February 04, 2014
ஒரு நல்ல மனிதர் மண வாழ்வு கொடுத்த நாள் தை 22 1966
கடல் வாழ் உயிரினங்கள் பேத்தி வரைந்தது
Add caption
லில்லிப்பூக்கள்
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
உங்களை அமரர் என்று சொல்ல மனம் வரவில்லை. கணவர் என்று சொல்லுக்கு எப்போதும் பாதுகாப்பவர் என்ற பொருளையே தந்திருக்கிறீர்கள். அதனால் தான் இந்த வெறுமை.. நல்ல வாழ்வே வாழ்ந்திருக்கிறோம்.பழைய நாள் குறும்புகளும் வாக்குவாதங்களும் மறைந்து புதிய நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தோம். இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்திருக்கலாம். இருந்தவரைக்குக்கும் இருந்தவருக்கு நன்றி. உங்களை மனதில் வைத்து நம் மணநாளைச் சிறப்பிக்கிறேன்.
கண்ணீர் வர வைச்ச பதிவு வல்லி! அருமையா இருக்கு பேத்தியின் ஓவியங்கள்!
1966 ஆம் வருஷம் கல்யாணமா? அந்த வருஷம் தான் நான் எஸ் எஸ் எல் சி எழுதினேன். பதினைந்து முடியலைனு தேர்வுக்குப் பணம் கட்டக் கூடாதுனு ஸ்கூல்லே சொல்ல, நான் அழுத அழுகையும், அப்புறமா அப்பா வந்து வருஷம், மாசம், தேதி எல்லாத்தையும் மாத்தினதும் நினைவில் வந்தது. :)))))
இப்பதான் சுபாஷிதானிலெந்து ஒரு ஸ்லோகம் எடுத்து என்னுடைய பதிவுக்கு நடுவிலே போட்டு இருந்தேன்.
அதற்கு தகுந்தாற்போல நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்.
சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று.
பெண்ணாக பிறந்தவள் பால்யத்துலெ அம்மா அப்பாவை சார்ந்திருப்பவளாகவும் , பருவம் வந்து திருமணம் ஆன உடன் பர்த்தாவின் ஆச்ரயத்தில் இருப்பவளாகவும், பின் விருத்தாப்யாசத்தில் பையனின் அரவணைப்பில் இருப்பவதாகவும் தான் இருக்கிறாள். அவள் தனியாக இருப்பதில்லை.
என் தங்கை 1997 இதே சூழ்நிலை. வானொலி பாடகி ஆன அவள் இனி பாடமாட்டேன் என்று சொல்லி விட்டாள் . அவர் கேட்காத பாட்டை நான் பாட மாட்டேன் என்று ....
அவள் சங்கீத திறமை எல்லாம் எங்கே போனதோ என்று வியப்பேன். இன்றும் சங்கீத நுட்பங்களை,இலக்கணங்களை பற்றி என்னிடம் மணிக்கணக்காக பேசுவாள். ஒரு பாட்டு இரண்டு வரி பாடேன் என்றால் பாட மாட்டாள்.
அந்த ஒரு வைராக்கியம். பையன் மாட்டுப்பொன் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார்கள்.
இன்னமும் அவர் நினைவு . அவர் நினைவு.
மனிதன் மட்டுமே மறைகிறான் என்றாலும், அவனைச் சுற்றிய நினைவுகள் மறைவதில்லை. அந்த நினைவுகள் தான் இனி வாழ்க்கை.
அன்பு சுப்பு சார். பெற்றோர் பிரிவை இப்போதுதான் கொஞ்சமாவ்து பொறுத்துக் கொள்கிறேன். இந்தத் துயரம் போகாது. 48 வருட வாழ்க்கை எங்கே போயிற்று. .உங்கள் சகோதரியின் நிலை நன்றாகவே புரிகிறது. மிகவும் நன்றி. எங்கள் குழந்தைகளும் தங்கமானவர்கள். நான் அதற்குத் தகுதியானவளாக நடந்து கொள்ள வேண்டும்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் மஹேந்திரன். உடல் ஆரோக்கியம் உள்ள ஆரோக்கியம் மிகப் பெற்று குடும்பமும் சுற்றமும் சூழ நீண்ட வாழ்க்கை வா வேண்டும். உங்கள் மனைவிக்கும் எங்கள் ஆசிகள்.
அன்பு அக்கா வணக்கம், வாழ்க வளமுடன். உங்களுக்கும் எனக்கும் தை மாதம்தான் திருமணநாள். உங்களுக்கு 4, எனக்கு 7. நீங்கள் எழுதிய இந்த பதிவு மனநெகிழ்வை தந்து விட்டது.
சிறுவயதில் உள்ள அன்பும் அரவணைப்பும் காலம் செல்ல செல்ல கூடிதான் வருகிறது.மறுபாதியின் இழப்பை எதுவும் ஈடுகட்ட முடியாதுதான். நினைவுகளில் வாழும் சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்பின் கோமதி. உங்கள் மணநாளுக்கு இனிய வாழ்த்துகள்.மீண்டுவர வழி தேடுகிறேன். வாழ்வின் முக்கால் பாகம் அவருக்குக் கொடுத்துவிட்டேன். மிச்சம் கால்பாகம் இறைவனுக்கும் குழந்தைகளுக்குமே. வாழ்க வளமுடன் கோமதி. உங்கள் சாருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பு வெங்கட் மிகமிக நன்றி. அன்பு சாந்தி நன்றிமா நலமே வாழுங்கள். அன்பு த்யானா தவறாமல் வந்து செல்கிறீர்கள் உங்கள் அன்புக்கெல்லாம் நான் என்ன பதில் செய்யப் போகிறேன்.அன்பு மாதேவி மிக மிக நன்றி. அன்பு தனபாலன் செய்திக்கு மிக மிக நன்றி.
25 comments:
மனம் மிகவும் நெகிழ்ந்தது அம்மா...
கண்ணீர் வர வைச்ச பதிவு வல்லி! அருமையா இருக்கு பேத்தியின் ஓவியங்கள்!
1966 ஆம் வருஷம் கல்யாணமா? அந்த வருஷம் தான் நான் எஸ் எஸ் எல் சி எழுதினேன். பதினைந்து முடியலைனு தேர்வுக்குப் பணம் கட்டக் கூடாதுனு ஸ்கூல்லே சொல்ல, நான் அழுத அழுகையும், அப்புறமா அப்பா வந்து வருஷம், மாசம், தேதி எல்லாத்தையும் மாத்தினதும் நினைவில் வந்தது. :)))))
தொடர
கண்கள் பனித்தன
இப்பதான் சுபாஷிதானிலெந்து ஒரு ஸ்லோகம் எடுத்து
என்னுடைய பதிவுக்கு நடுவிலே போட்டு இருந்தேன்.
அதற்கு தகுந்தாற்போல நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்.
சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று.
பெண்ணாக பிறந்தவள் பால்யத்துலெ அம்மா அப்பாவை சார்ந்திருப்பவளாகவும் , பருவம் வந்து திருமணம் ஆன உடன்
பர்த்தாவின் ஆச்ரயத்தில் இருப்பவளாகவும், பின் விருத்தாப்யாசத்தில் பையனின் அரவணைப்பில் இருப்பவதாகவும் தான் இருக்கிறாள்.
அவள் தனியாக இருப்பதில்லை.
என் தங்கை 1997 இதே சூழ்நிலை. வானொலி பாடகி ஆன அவள்
இனி பாடமாட்டேன் என்று சொல்லி விட்டாள் . அவர் கேட்காத பாட்டை நான் பாட மாட்டேன் என்று ....
அவள் சங்கீத திறமை எல்லாம் எங்கே போனதோ என்று வியப்பேன். இன்றும் சங்கீத நுட்பங்களை,இலக்கணங்களை பற்றி என்னிடம் மணிக்கணக்காக பேசுவாள். ஒரு பாட்டு இரண்டு வரி பாடேன் என்றால் பாட மாட்டாள்.
அந்த ஒரு வைராக்கியம். பையன் மாட்டுப்பொன் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார்கள்.
இன்னமும் அவர் நினைவு . அவர் நினைவு.
மனிதன் மட்டுமே மறைகிறான் என்றாலும்,
அவனைச் சுற்றிய நினைவுகள்
மறைவதில்லை.
அந்த நினைவுகள் தான்
இனி வாழ்க்கை.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
நெகிழ்ச்சியாக இருந்தது.
நினைவுகளில் ஆறுதல்.
நன்றி தனபாலன். துன்பம்தான். இருந்தாலும் நண்பர்களால் குறைகிறது.
என்ன செய்யலாம் கீதா. எத்தனையோ வழிகளில் மனப் பொறுமலைச் சமாளிக்க நினைக்கிறேன். உங்கள் எஸெஸ் எல் சி பரீட்சையும் சவாலோடுதான் ஆரம்பித்ததா.
அன்பு சுப்பு சார். பெற்றோர் பிரிவை இப்போதுதான் கொஞ்சமாவ்து பொறுத்துக் கொள்கிறேன். இந்தத் துயரம் போகாது. 48 வருட வாழ்க்கை எங்கே போயிற்று. .உங்கள் சகோதரியின் நிலை நன்றாகவே புரிகிறது. மிகவும் நன்றி. எங்கள் குழந்தைகளும் தங்கமானவர்கள். நான் அதற்குத் தகுதியானவளாக நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி ஸ்ரீராம். நன்றி ராமலக்ஷ்மி.
அன்பின் வல்லி சிம்ஹன்
பதிவு அருமை - மலரும் நினைவுகள் - மண நாளை அசை போட்டு ஆனந்திப்பது நன்று - மனப் பொறுமல் விரைவினில் தீர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வல்லி சிம்ஹன்
1966 திருமணமா - அவ்வருடத்தில் தான் நான் மதுரையில் எஸ் எஸ் எல் சி எழுதினேன். நினைத்துப்பார்க்கிறேன் அந்நாட்களை.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இனிய வணக்கம் அம்மா...
இன்றுதான் அம்மா என்னுடைய திருமண நாளும் கூட
உங்களுடைய ஆசிகள் என்னை வாழ்விக்கும்...
மனம் நிறைந்த வாழ்த்துகள் மஹேந்திரன். உடல் ஆரோக்கியம் உள்ள ஆரோக்கியம் மிகப் பெற்று குடும்பமும் சுற்றமும் சூழ நீண்ட வாழ்க்கை வா வேண்டும். உங்கள் மனைவிக்கும் எங்கள் ஆசிகள்.
சின்ன சின்ன விஷயங்கள் கூட நினைவுக்கு வரும் நேரம். ஒரு விதத்தில் மருந்துமாகின்றன.
அன்பு அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
உங்களுக்கும் எனக்கும் தை மாதம்தான் திருமணநாள். உங்களுக்கு 4, எனக்கு 7.
நீங்கள் எழுதிய இந்த பதிவு மனநெகிழ்வை தந்து விட்டது.
சிறுவயதில் உள்ள அன்பும் அரவணைப்பும் காலம் செல்ல செல்ல கூடிதான் வருகிறது.மறுபாதியின் இழப்பை எதுவும் ஈடுகட்ட முடியாதுதான்.
நினைவுகளில் வாழும் சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பேத்தி வரைந்த ஓவியம் அழகு.
அன்பின் சீனா சார், மதுரையிலிருந்துதான் தொடங்கியது என் மணவாழ்க்கை. மதுரையில் தான் எங்கள் முதல் பையனும் பிறந்தான். உங்கள் அன்புக்கு நன்றி. நலமே வாழ்க.
ஆமாம் துரை. மெல்ல மெல்ல எழுந்திருக்கவேண்டியதுதான் .என்னால் குழந்தைகள் மனமும் துக்கப் படுகிறது.
அன்பின் கோமதி. உங்கள் மணநாளுக்கு இனிய வாழ்த்துகள்.மீண்டுவர வழி தேடுகிறேன். வாழ்வின் முக்கால் பாகம் அவருக்குக் கொடுத்துவிட்டேன். மிச்சம் கால்பாகம் இறைவனுக்கும் குழந்தைகளுக்குமே. வாழ்க வளமுடன் கோமதி. உங்கள் சாருக்கும் என் வாழ்த்துகள்.
உங்கள் பேத்தி வரைந்த ஓவியம் அழகு......
நினைவுகள்..... நெகிழ வைத்தன....
நினைவுகளே மருந்து..
நெகிழ்ச்சி. இனிய நினைவுகள் மனதை ஆறுதல்படுத்தும்.
நிகழ்வுகள் நெகிழ வைத்துவிட்டன அம்மா..

Post a Comment