|
சீரிய சிங்கம் |
|
Add caption |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அன்பு துளசிக்கு நன்றி.
வீட்டைப் பார்க்கும்போது கண்ணில் நீர் நிறைந்தாலும் ,கவனித்துக் கொள்ளும் தோட்டக் காரருக்கும் நன்றி.
எத்தனையோ வேலைகளுக்கு நடுவில்
எங்கள் வீட்டுக்கும் போக நேரம் ஒதுக்கிய நல்ல மனங்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டும்.
27 comments:
வரும் ஆண்டு மனம் அமைதியடைய வேண்டும் அம்மா...
இதே நாள் சென்ற ஆண்டு வந்திருந்த தங்கள் பதிவினைப்
போற்றும் வகையில் இன்று நான்
திருப்பாவை தமிழ் சங்க மாலை திருவிழா வை அமைத்திருக்கிறேன்.
வருக. அந்த அரங்கன் அருள்
பெறுக் .
சுப்பு தாத்தா.
WWW.www.menakasury.blogspot.com
மனம் அமைதிகொள்ளட்டும்......
சீரிய சிங்கம் என்றென்றும் உங்களுடன் இருப்பார் நினைவில்...
காலம்தான் ஒரே மருந்து. சிங்க பெருமான் காக்கட்டும்.
சிங்கத்தின் நினைவுகள் நீங்காது.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்கள் உடல் மன நலம் முக்கியம். வரும் வருடம் சற்று இனிதாகட்டும்.
மிக நன்றி தனபாலன். தினமும் தியானம் அமைதியைக் குறித்துத்தான் .கடவுள் எல்லோர் நலனையையும் காக்கட்டும்.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
நன்றி சுப்பு சார்.என்னை மிகவும் கௌரவப் படுத்துகிறீர்கள்.. புத்தாண்டு எல்லோருக்கும் நன்மை கொடுக்கட்டும்
வரணும் டாக்டர். இறைவன் அப்படியே அருளட்டும். மிக நன்றி.
அன்பு ஸ்ரீராம் ,நலமே வரணும் டாக்டர். இறைவன் அப்படியே அருளட்டும். மிக நன்றி.விளையட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எதைப் பார்த்தாலும் அவரது நினை நினைவுதான் வருகிறது .
துரை உலக முழுவதும் இருக்கிறபெண்கள் (என் போன்றவர்கள் )
மீண்டுதான் வருகிறார்கள்
சிங்கம் சார் உங்ககூடவே தான் இருக்கார்... மன அமைதி தங்களுக்கு கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன் அம்மா...
வருகிற ஆண்டு தங்களுக்கு நல்லபடியாக அமையட்டும்..
புத்தாண்டு இனிமையும் நன்மையும் கொடுக்கட்டும்
மார்கழி மாதம் பிறந்தவுடன் உங்கள் நினைவுதான் வல்லி. போனவருடம் தினமும் திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கம் எழுதியிருந்தீர்களே என்று ரொம்பவும் நினைத்தக் கொண்டேன்.
மனம் அமைதி பெறட்டும்.
வணக்கம்
அம்மா
மனம் அமைதிகொள்ளட்டும்..அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சீரிய சிங்கம் என்றும் உங்களூடன்.
மன அமைதியுடன் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மறுபடியும் எல்லோர் பதிவுகளை படித்து கருத்து சொல்லுங்கள்.
மலகலக்கத்திலிருந்து மீண்டு வாருங்கள். புத்தாண்டிலிருந்து அனைவர் பதிவுக்கும் வருகை தாருங்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.
எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை! உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்! கிடைத்ததா என்று தெரியவில்லை.
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
- படம்: தியாகம் ( 1978 )
பாடல்: கண்ணதாசன்
கோலங்கள் தான் இளங்கோ தியாகம் படத்தில் சிவாஜியின் பகுதி போலத்தான் சிங்கத்தின் வாழ்க்கையும் . எத்தனை நபர்கள் இன்னும்
அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை
என்று அவர்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிகிறது.
மீ ண்டும் மெயில் பார்க்கிறேன். நன்றி அப்பா.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
பிறக்கும்ஆண்டு மனஅமைதியையும் நலத்தையும் கொடுக்கட்டும். வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
காலம் தான் கவலைதீர்க்கும் அருமருந்து! இந்த ஆண்டு அமைதி தவழும் ஆண்டாக அமைய நரசிம்மர் நல்லருள் புரிவார்! நன்றி!
அன்புள்ள வல்லிம்மா, விஷயம் கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தம் கொண்டேன். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். ஸ்தூல ரூபமாய் நம்முடன் வாழ்ந்த சிங்கம் இனி ஸூக்ஷ்ம ரூபமாய் இருந்து வழி நடத்துவார்.
அன்புடன்,
தக்குடு
நன்றி ஸ்ரீராம் ,
ஜிமெயிலில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்வதில் சில பதில்கள் விட்டப் போகின்றன .இடைவிடாத தலைவலி வேறா.. அனைவருக்கும் வாழ்த்துகள் அப்பா.--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
வரணும் தக்குடு .காலம் கடக்கும். நினைவுகளோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்பா. குடும்பத்தில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அன்பு ரஞ்சனி ,புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. கண்ணுக்கு எட்டாத தூ ரத்தில் நீங்கள் எல்லோரும் இருந்துகொண்டு அன்பை அனுப்புகிறீர்கள். இந்த நன்றியை என்றும் மறவாதிருக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அன்பு கோமதிமா ,அமைதி வேண்டும் என்றே இறைவனை வேண்டுகிறேன். குளிருக்குப் பயந்து வீட்டினுள்ளேயே இருப்பதால் தலைவலி வந்துவிடுகிறது..தொடர்ந்து படிக்க முடிவதில்லை.
படிக்கிறேன் அம்மா. நன்றி
அன்பு மாதேவி
அன்பு திரு சேஷாத்ரி
நன்றி மா. பொறுமையையும் தைரியத்தையும் இறைவன் அருளட்டும்
Post a Comment