யார் அங்கே ,இந்தப் போஸ் போதுமா!!! |
என்ன அதிசயம், இப்படி இளைச்சிட்டியே:) |
காட்டுப் பூனை!! |
மிரட்டும் போஸில் இன்னோரு பறவை |
நம்ம இமயமலையின் கிளிகள் அங்கே ஏன் போயின? |
மெதுமெதுவே மலரத்தொடங்கும் மொட்டுகள். மயக்கும் வண்ணம் |
இது என்ன பறவையோ.அழகாக இரை தேடிக் கொண்டிருந்தது. |
உறைந்த அருவிகள் |
பனியிலிருந்து வெளிவந்திருக்கும் லைட் ஹவுஸ் |
பிராணிகள் உலகம்,டிஸ்கவரி சானலில் சில நிமிடங்கள் செலவழிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அற்புதமான படப் பிடிப்பு.
நேற்று நான் பார்த்தது Wild Europe.
கடுங்குளிரில் மிருகங்கள் பறவைகள்
சமாளிக்கும் அழகு. அவைகளை வெல்லும் பெரிய
பிராணிகள்.
உறையும் பனி. அதில் அநாயாசமாக வளைய வரும் ஆட்டர்.
புதர் எலிகள்,
பனியை உலுக்கி எடுக்கும் கலைமான்.
ஒரு அதிசய உலகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
அதிசய உலகத்தை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!
டி.வி.யிலிருந்து படம் பிடித்தது......
அழகாகவே இருக்கிறது வல்லிம்மா....
பிராணிகளின் உலகம் அழகானதுதான்!
நேஷனல் ஜியோகிராபிக் சேனல், வைல்ட் நான் அடிக்கடி பார்ப்பேன். எனக்குப் பிடித்த சேனல்.
அழகிய புகைப்படங்கள்!!
அழகாக பகிர்ந்திருக்கின்றீர்கள்.
எனக்கும் பிடித்தமான சனல் :)
அருமையான பகிர்வு.
அதிசய உலகம் மிக அருமை.
அந்தக் காட்டுப்பூனைக்கு நம்ம ரஜ்ஜுவின் சாயல் கொஞ்சம் இருக்கே!!!!
நன்றி இராஜராஜேஸ்வரி.உண்மையிலியே அற்புத உலகம்தான். காமிராவுக்கு அந்தப் பக்கம் அந்த உலகம் இந்தப் பக்கம் நாம் .குளிரில் உறைய வேண்டாம்.:)
ஆமாம் வெங்கட்.
எவ்வளவு சிரமங்களை இந்த பிராணிகள் சந்திக்கின்றன. எப்படி அவ்வளவையும் தாண்டித் தன் உணவைத்தேடி ,இனம் பெருக்கி,எதிரிகளிடமிருந்து தப்பித்து,நம்மால் எல்லாம் முடியாது.நமது சிரமங்கள் வேறு இல்லையா:)
நம் ரசனைகள் ஒத்துப் போவதால்தான்
இங்கே இணையத்தில் சந்திக்க முடிகிறது ஸ்ரீராம்.
நன்றி மாதேவி.
நடுவில் விளம்பரங்கள் கிடையாது.
முழுவதும் சிரமம் இல்லாமல்
காண முடிகிறது.அறிவுக்கான சானல்.
வரணும் கோமதி. அங்கெ இன்னும் விதவிதமான சயன்ஸ் சானல்கள் காணக் கிடைக்கும். பள்ளியில் படிக்க விட்டதை தொலைக் காட்சி மூலம் படித்துவிடலாம்.
அந்தப் பூனையை முதலில் பார்த்தபோதே நினைத்தேன் துளசி:)
ரஜ்ஜு அங்க எங்க போனான் னு!!
நன்றி மனோ.
நாங்க நிறையப் பார்ப்போம். எல்லாப் படங்களும் அருமை என்றாலும் இளைச்சது பத்தின விசாரிப்புத் தான் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி வல்லி. :)))
Post a Comment