Blog Archive

Saturday, September 28, 2013

அழகன் என் தம்பி

இனிய 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள்.சொர்க்கத்தில் எல்லோரும்சுகமாப்பா?

 அன்பு ரங்கன்  என்  தம்பி

அன்பைத் தவிர வேறொன்றும் அறியாதவன்.

எப்பொழுதும் எல்லோருக்கும் விட்டுக் கொடுப்பவன்.
அறுவைக் கடியால் ஆட்களைக் கொல்லுவான்:)

அடிக்கப் போனால் பார்த்து வா. கல்தடுக்கி விழுவாய்
என்று கேலி பண்ணுவான்.

அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை,
உடனே ஸ்கூட்டர் ப்றக்கும். தானும் அடிபட்டுக் கொள்வான் .
வலியும் தாங்கி,அந்த மருத்துமனையிலேயெ கட்டும் போட்டுக் கொண்டு
எல்லாரிடமும் ஏவலன் காவலன்,ஆறுதல் சொல்பவனாக   மாறிக்
கொண்டே இருப்பான்.

அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தால் இரவு நேரம் கூட இருப்பது  அவன்தான்.

அவனுக்கு என்று  எமன் வந்தபோது நாங்கள் யாரும் அருகில் இல்லை.
அதையும் மன்னித்து இருப்பான்.
என்னடி செய்யறது. 

சொல்லிக் கொண்டா  சாகமுடியும் என்று ஜோக் சொல்லுவானாக இருக்கும்.

என் அருமை தம்பி, காத்திரு நாங்களும் வந்துவிடுவோம்.

உனக்காக  உனக்குப் பிடித்த முந்திரி மிக்சர்  யாருக்காவது வாங்கிக் கொடுக்கிறேன்.
அன்னதானமும் சொல்லியாச்சு.
திருப்தியா!!





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, September 27, 2013

வண்ணம் செய்யும் கோலம்.

கண்ணை மயக்கும் கறுப்பு
தாயங்கள்
கறுப்புவானும் வெள்ளைநிலாவும்
கறுப்புக் கண்ணாடியில்  வெள்ளைவானம்

 வெள்ளந்தி  என்ற வார்த்தைச் சினிமாவில் 
அடிக்கடி உபயோகமாகும்.
அதி அப்பாவியான,
சிலசமயம் அசடான   பெண்ணைப் பற்றித் தான்
இந்தப் பேச்சு இருக்கும்.(

அதுபோல இப்போது யாரும் கிடையாது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கிராமங்களில் கூடச் சமர்த்துப் பெண்கள் தான் இருக்கிறார்கள்.
என் தோழியைப் பற்றி  முன்னொரு பதிவு போட்டிருந்தேன்.
அதையெல்லாம் தேடி எடுக்கும் பொறுமை (மற்ற வல்ல எழுத்தாளர்கள்  போல)
எனக்குக் கிடையாது.
15 வருடங்கள் முன்  என்னைத் தேடிவந்தாள் கணவருடன்.

அன்பு வெள்ளம் என்றால் தூய அன்பு.
பள்ளியில்  படிக்கும் போது வீட்டுக் குதிரை வண்டியில் தான் வருவாள்.
அச்சு அசல் அந்த நாளைய சரோஜாதேவி போல
இரட்டைக் குட்டை ஜடை போட்டு வாசமான பிச்சிப்பூவைத்து

கறுப்பு முகமும் வெள்ளைப் பற்களும் அழகு அள்ளிக் கொண்டு
போகும்.
எங்களை எப்போதும் சேர்த்துதான் பார்க்கமுடியும்.
பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்காகப் பிரிந்தோம்.
அவள் கல்லூரிப் பட்டம் வாங்கித் திருமணம் முடித்து ஆரணிக்குப் போய்விட்டாள்.

எனக்கு எழுதும் கடிதங்களில் ஆசைப் பவுர்ணமியே
என்று கவிதையாக  எழுதி முடிக்கும்போது
எப்பவாவது உன்னைப் பார்க்கக் காத்திருக்கும் அமாவாசை
என்று முடிப்பாள்.
என் தந்தை  அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, ஏன் அந்தப் பெண்ணிற்கு
இவ்வளவு வருத்தம் என்றார்.

இல்லப்பா,அவளுக்குச் சுதந்திரம் போதாது.வீட்டில் கடைசிப் பெண்.
மூன்று அண்ணன்கள் .
நல்ல பணம் இருந்தும்  கறுப்பு என்ற ஒரே  காரணத்துகாக்த் திருமணம் தள்ளிச் சென்று 21  வயதில்  ஒரு துணிக்கடை முதலாளிக்குத் திருமணம்
செய்துவைத்தார்கள்.
வியாபாரம் நொடித்தும்,
பிறகு ஏதோ மண்டிவியாபாரம் என்று எடுத்துச் செய்து கொண்டிருக்கும் நாட்களில் இரு பெண்களும் ஒரு பையனும்   பிறந்தார்கள்

நல்ல படிப்புப் படிக்க  வைத்தாள்
இரண்டு பெண்களுக்கும்திருமணம் செய்து வைத்தது  தெரியும்.
இவ்வளவும் நுணுக்கி எழுதின கவர்   இன்னும் இருக்கிறது.
என் அருமை
சாந்தி  எங்க  இருந்தாலும் நன்றாக இரு.

இப்பொழுது  இந்த கொசுவத்திக்குக் காரணம்
காலையில் மீண்டும் தலையெடுத்த
கறுப்பு வெள்ளை.

எங்கள் வீட்டு உதவிக்கு  வரும்  ராணியின்  சித்தி பையன்
ஏழுமலை.
அவனுடைய  23 வயதில்  அவனுடைய பணக்கார சிங்கப்பூர் அக்கா,
வீட்டுக்கு அடங்கின பையனா இருப்பான்
என்று தன் இரண்டாவது பெண்ணுக்குத் திரும்ணம் முடித்துவைத்தாள். வீட்டைப் பார்த்துக் கொள்ள,வரிகட்ட, ரிப்பேர்களைச் சரி செய்ய
ஒரு ஹேண்டிமன்  ஆக அவனும் செயல்பட்டான். மதுப் பழக்கம் பிடித்துக் கொண்டது.
காரணம், மனைவியின்    வண்ண   அழகும் இவனுடைய பழுப்புக் கலருமாம்.
இதைத் திருமண காலத்திலியே சொல்லி இருக்கலாம் அந்தப் பெண்.

அப்போது மாமாவை அவளுக்குப் பிடித்ததாம். ரஜினி மாதிரி இருக்காரு என்று சொல்லி மகிழ்ந்தவள்
நம்ப முடிகிறதா..
இவர்கள் வழக்கைத் தீர்த்துவைக்க சிங்கப்பூர் மாமியார் வந்திருக்கிறாள்.
பேச்சு வார்த்தை தடித்திருக்கிறது.

பெண்ணைச் சிங்கப்பூருக்கே அழைத்துச் செல்வதாக்ச் சொன்னதும் மனமுடைந்த ஏழுமலையின் முடிவுக்குக் கெரசின் உதவி செய்தது.

கிராமத்திலியே இருந்து விவசாயம் செய்து அங்கயே ஒரு பெண்ணை க் கல்யாணம் முடித்திருப்பான். அவனை இழுத்தது பட்டணவாசம்.

வாழ்வை முடித்தது   அறியாமை எனும் கறுப்பு.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, September 24, 2013

துளசி தளம்&திரு. கோபால் பிறந்த நாள் 24ஆம் தேதி

வாழ்த்துகள்   துளசிமா, வாழ்த்துகள் கோபால் ஜி
பூங்கொத்து
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

செப்டம்பர் 24 பதிவுலகுக்கு,தமிழ் இதயங்களுக்கு மிகப் பொன்னான நாள்.

அன்றுதான் துளசியின் திரு கோபால் பிறந்தார்
அவர் பிறந்து மணமுடித்த மங்கை துளசி அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரில் ஆரம்பித்த துளசிதளமும் 24 ஆம் தேதி 2004இல் மலர்ந்தது

இருவரின்  செல்லக் குழந்தை இந்தத்   துளசி தளம்.
படிப்பவருக்கெல்லாம் இன்பமும்,மகிழ்ச்சியும்,ஆதரவும், அறிவுரையும்,நெகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரே ஒரு கல்பதரு இந்தத்  துளசிதளம்..

வாழ்த்துகள் துளசிமா.

உங்களுக்கு மேலும் மேலும் பகிர விஷயங்கள் கிடைக்கும். ஏனெனில் அவ்வளவு நினைவாற்றல்.  உங்களுக்கு.
கண்ணுக்குக் குளிர்ச்சியாய்ப் படங்கள்
அனைத்துவிவரங்கள் தரும் ஒரு பத்திரிகையாகப் பரிமளிக்கிறது ஒவ்வொரு பதிவும்.

மகள், நீங்கள்,கோபால்,துளசிதளம்  எல்லாம் செவ்வனே  இயங்கவும் மேன்மேலும் நலம் பெறவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.


Monday, September 23, 2013

ஊஞ்சல் அம்மாக்களும் ஓடும் பிள்ளைகளும்

வாங்க நினைத்த  ஊஞ்சல்:)
என்வாழ்வு உன்னோடுதான்
யார் யார் யார்  இவர் யாரோ
பேச்சுக்குப் பேச்சு வேலைக்கு வேலை!!
பேரனோட  செஸ் விளையாட்டு
அம்மா  பிஸிடா  சாரி
பிசி பிசி பிசி     ஃபேஸ் புக்
வெல்லுவதே  எங்கள் நோக்கம்
படிப்பு,வேலை,நடுநடுவே  ஷாப்பிங்!!!!!!!!!!!!
கடவுளின்  சுறு சுறுப்பு ஆக்கம்
சுறு சுறுப்பின் பிம்பம்   செடிகளிடம் கருணை

 ஊஞ்சல் அம்மாக்கள் என்று குறிப்பிடுவது என்னைப் போன்ற அம்மாக்களை.
சுறு சுறு பிஸி  பிஸி  மற்ற அம்மாக்கள் அப்பாக்களை:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, September 22, 2013

மேகம் விலகிய நிலா

நட்சத்திரத் தங்கைகளைக் காணோம்
அணைத்த அன்பினால் மேலும் பிரகாசமானேன்

உங்கள் எல்லோரையும் அணைக்கத் தான் என் இருகரங்கள்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
இலையோடு விளையாடும் கதிர்
பறக்கும் தட்டோ
 




22ண்டாம் தேதியின்   நிலா. இதுவரை சூழ்ந்திருந்த
மேகங்கள்   விலகியதால் காமிராவில் சிக்கியது:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, September 20, 2013

1980யில்வீடுகட்ட நினைப்பு....... வீடு கைக்கு வந்தது1985இல்


Add caption
வீடு  அதற்கான  சொந்தங்கள் வருவத்ற்கு முன்னால்:)

vallisimhan
***********
இந்திரா நகர் வீடு எல்லோருக்கும் பிடித்தது.
மாடிவீடு. வீட்டுச் சொந்தக்காரர்கள்  தெலுங்கு  பேசுபவர்கள். அவர்  இந்தியன் ஏர்லைன்சில் பைலட்டக இருந்தார். மனைவியும் குழந்தையும் அம்மா அப்பாவோடு  மிகவும் நெருங்கி விட்டார்கள்.
அம்மாவுக்குப் பிடித்த  பால்கனி. பக்கத்திலேயே ஒரு  தென்னைமரம்.
அதில் விளையாடும் அணில்கள். தூரத்தில் தெரியும் கோட்டுர்புரம்  பாலம்.
பக்கத்துவீட்டில் அப்பாவின் சித்தப்பா  பெண்ணும் கணவரும் அவர்களுடைய பசங்களும்.

இரு  தம்பிகளுக்கும் திருமணம் நடந்தது. ஒரு பெட்ரூம்  ,ஒரு கூடம்,சமையலறை என்று இருந்த வீட்டில்
இன்னோரு படுக்கை அறையும் கட்டிக் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்.

குழந்தைகள் பிறந்ததும் வேலையும் கூடியது. களிப்பும் கூடியது.
மூன்று குடும்பத்தின் பீரோக்கள் ,கட்டில்கள்,புத்தக அலமாரிகள், பாத்திரங்கள்,
  இது  போல பல  சமாசாரங்கள் வீட்டை நெருக்க,
அம்மா அப்பாவிற்கு    வேறு வீடு பார்க்கலாம் என்ற யோசனை வந்தது. அது போலவே அவர்களுக்குத் திருவான்மியூரில்
கொஞ்சம் பெரிய வீடு ஹெச் ஐ ஜி  ஃப்ளாட்  கிடைத்தது.

இதன்  நடுவில்  பேரனுக்குப் பள்ளி அமைந்தது.
அத்தோடு எங்கவீட்டுப் பிள்ளையும் அங்கே போய்ச் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியும் அங்கே இருந்ததால் அப்பா அவன் அங்கே  வந்து படிக்கட்டும் என்று விட்டார்.
தினம் மயிலைக்கும்   இந்திராநகருக்கும் அலைய வேண்டாம் என்று
அங்கு வரவழைத்துக் கொண்டார்.

அப்போது தோன்றிய எண்ணம் தான் நாமே வீடு கட்டிவிடலாம் என்பது.
அது அவ்வளவு சுலபமில்லை  என்று இரண்டு  வருடங்களில் புரிந்தது

இவர்கள் நினைத்தது போல ,கோவில் குளம்,சுத்தமான சூழ்நிலை என்று பார்த்தபோது   இடங்கள் அமையவில்லை. மயிலை மந்தைவெளி அடையார்
என்று தன் பெண் வீட்டுக்குப் பக்கத்தில்   அப்பா தேடுகிறார் என்று தம்பிகள் சிரித்துக் கொண்டார்கள்:)

எப்போதும் தன் பாதுகாப்பு வளையத்தில் குழந்தைகள் இருக்க வேண்டும்
என்பது அப்பாவின்    தியானம்,யோகம் எல்லாம்.

கடைசியாகத் தேடி தேடி மைந்தது  ஒரு வீடு .இல்லை இல்லை இரு வீடுகள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம்  கல்லூரியின்

பொறுப்பாளரோ யாரோ  தெரியாது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் அப்பா தீர்மானித்துவிட்டார்.
அவர் கட்டும் ஆனந்த்  கட்டிடங்கள்(அபார்ட்மெண்ட்கள்)  உறுதியாக இருப்பது தெரியவந்தது.

அப்பாவும் தம்பிகளும் உடனேயே போய் இரண்டு வீட்டுக்கான
அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள்.
இரண்டு வீட்டுக்கு  4  லட்சங்கள்தான்    எண்பதுகளில்.
ஒரு நல்ல  நாள் பார்த்துக் கிரகப் பிரவேசம் நடந்தது.

பேத்தி ஹோலி ஏஞ்சல்ஸ்
பேரன் பத்மா சேஷாத்ரி  சேர்த்தாச்சு.
என் பிள்ளையும் இங்கே வீட்டுக்கு வந்தாச்சு.
11த்  &12த்  இரண்டும்  மயிலையிலிருந்து  படித்து முடித்தான்.
என் பெண்ணுக்கும் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தில் அலுவலகம் வாய்த்தது:)

மதியம் நான் கொடுத்த லன்ச் பெட்டியைநண்பர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பாட்டி  கை குழம்புசாதம் சாப்பிடப் போய்விடுவாள்.
எங்க வீட்டுச் சின்னவன் சனி ஞாயிறு  வீடியோப் படங்கள் பார்க்கத் தாத்தா வீட்டுக்குப் போய்விடுவான். பெரியவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு
பக்கத்திலிருக்கும் தோழர்களைப் பர்த்துவிட்டுத் தாத்தாவையும்பாட்டியையும் பார்த்து விட்டு வருவான்.

ஆகக் கூடி   சுபமாக வீடு தேடல் முடிந்து நல்ல விசேஷங்களும்
நடந்தன.

எல்லாம்  சுபம்.மங்களம்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, September 19, 2013

அமெரிக்காவின் ஹார்வெஸ்ட் நிலா

உதித்துக் கொண்டிருக்கும் நிலா
இது அல்லவோ  புகைப்படம்
ரொம்பப் பெரிய தோசை நிலா
சந்திரனோ   சூரியனோ
ஊரும் பெருசு நிலாவும் பெருசு:(


கூகிளில் அறுவடை நிலாவைத் தேடினேன்.
அமெரிக்காவின் பிரத்தியேக நிலாக் கண்காட்சி.

ஹ்ம்ம்ம். பெருமூச்சுதான் வருகிறது.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

புரட்டாசி முழுநிலா..மேகத்தில் மறைந்த காட்சி

இலைகளுக்குள்  நான் இருக்கிறேன்
பிற்சேர்க்கைக்குப் பின் நிலா
பஞ்சவர்ண     நிலா
மழைக்கு முன்   நிலா
Add caption
வெளியே வர முயற்சிக்கும் நிலா அம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்