Blog Archive

Friday, August 23, 2013

தேய் பிறையின் களங்கமில்லா அழகு

எத்தனை வண்ணம் எம்பெருமான்.
தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ
வானத்தின் தீப மங்கள் ஜோதி
நீலகண்ட சிவனின் சிரசில் உறையும் பிறையோ
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆள் வந்துப் புரியாமலே  இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்
தெருவிளக்குப் பூமியின் விளக்கை மங்க வைக்க முயற்சித்தாலும் தண்மை  வீசுகிறாள் நிலவன்னை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு...

Geetha Sambasivam said...

நீலகண்ட சிவன் வைச்சுக்கறது அமாவாசைக்கு முதல்நாளைய பிறை இல்லையோ? :))) இன்னிக்கு எங்க ஹாலில் வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. மாடிக்குப் போய்ப் பார்க்கணும்னு. ஆனால் என்னவோ போக மனமில்லாமல் உட்கார்ந்துட்டேன். :)))) பால்கனியில் தெரியும் கொஞ்ச இடைவெளியில் ஹால் பாதிக்கு வெளிச்சம் போட்டு ஆட்டம்! :)))))

ராமலக்ஷ்மி said...

களங்கமில்லா அழகை இரசித்து எடுத்தப் படங்களும் படங்களுக்கான வரிகளும் இன்னும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.நிலவே அழகுதான்.

வல்லிசிம்ஹன் said...

அமாவாசைக்கு முதல் நாள் பிறையா. !! ஓஹோ. மஹாதேவரிடம் முதலில் கேட்டிருக்கணும்:)
தப்பாச் சொல்லிட்டேன் கீதா.
ஸ்ரீரங்கத்துல நிலாவுக்கும் கொண்டாட்டமா. உங்கள் மேல் அத்தனை கரிசனம். மாடியேறி வரவேண்டாமேனு வீட்டுக்குள்ளயே வந்துவிட்டது!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்.
மீண்டும் வெளியே போய் தான்க் யூ சொல்லிவிட்டுவந்தேன். கிறுக்கு தானே:)

சாந்தி மாரியப்பன் said...

நிலாம்மா அத்தனை அழகு வல்லிம்மா..

ஸ்ரீராம். said...

படங்களும் வரிகளும் அழகு. கடைசி இரண்டு படங்களில் நிலா நீல வட்டத்தில்... இன்னும் அழகு.

மகேந்திரன் said...

இயற்கையின் அழகுக்கு இணை இயற்கைதான்...
களிக்கச் செய்கிறது மனம்..