பசுமை காண உழைப்போம். |
எங்கும் பசுமை |
முதலில் உன் வீட்டுச் சுத்தத்தைப் பார்.
பிறகு வீட்டைச் சுற்றி இருக்கும் குப்பைகளை விலக்கு.
குப்பைத்தொட்டியைத் தேடிச் சென்று குப்பையைப் போடலாம்.
குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குச் சுத்ததைப் போதிக்கவேண்டும்.
சாக்கலேட் சுற்றிய காகிதம்,
உணவு சுற்றிய பொட்டலங்கள்,
தண்ணீர் பாட்டில்கள், பெண்களின் இதர வகை கழிவுப் பொருட்கள்,குழந்தைகளின் டயப்பர்கள்
இன்னும் எத்தனையோ மிச்சமான சோறு கூடக் கிடந்தது எங்கள் வீட்டுக் கருகில் இருந்த குப்பைத்தொட்டி. இது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா இடத்திலும் இருப்பதுதான்.
குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரிக்காரரை நமது நண்பராக ஆக்கிக் கொள்ளவேண்டும்..
கூட வரும் கலைச் செல்வியை நமக்கு உதவியாளராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வீடு என்றால் கழிவுகளூம் சேர்த்துதான். அது செடிகளை வெட்டிப்
போட்டலும், வீட்டில் பழைய செங்கல்கள், சிமெண்ட் தொட்டி உடைத்த துண்டுகள் இவை சிறிய அளவாக
இருந்தாலும் மழை வந்தால் கொசுக்கள் கூடும் கொண்டாட்ட
இடமாகிவிடும்.
கலைச் செல்வியை ஒரு தடவை உதவி கேட்டால் போதும்
இன்னும் இரண்டு பேரை அழைத்துவந்து அத்தனை குப்பைகளையும்
அகற்றிவிடுவார்.
அவர் ஏற்கனவே அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டவர்தானே. அவருக்கு
கைப்பணம் வேறு கொடுக்கவேண்டுமா என்று கேட்டால்
பதில் கிடையாது. பணம் கொடுத்தும் உதவி செய்யாதவர்கள்தான்
நிறைய.
ஆறுமாதமாக எங்கள் வீட்டு வாசலில் குமிந்துகொண்டே இருக்கிறது
எதிர்வீட்டில் இடித்துக் கட்டப்படும் கட்டிட இடிபாடுகள்.
மேலும் வருத்தம் தரக் கூடியது நிழலாக இருந்த ஒரு மரம். வெட்டப் பட்டது.
நாம் முன்னேறிவிட்டோம். கட்டிட மரங்கள் வந்துவிட்டன.
அந்தமரம் ஆக்சிஜன் கொடுத்தது. இந்த மரங்கள் நம் பணத்தை வாங்கிக் கொண்டு இன்னும் குப்பைகளைக் கொடுக்கப் போகிறது.
இதற்கும் மேல் எங்கள் வீட்டு முன் இருக்கும் மீட்டர் பெட்டி. காம்பவுண்டுக்கு வெளியே இருக்கிறது. 30 ஆண்டுகளாக அது சிறுநீர் கழிக்கும் இடமாகத்தான் இருக்கிறது.
கேட்டால் நீங்க ஒரு கழிப்பறைகட்டிக் கொடுங்களேன் என்று சொல்கிறார்கள்:(
இது உங்க இடம் இல்லையே அரசாங்க இடம். அதனால நீங்க வாயை மூடிக்கொள்ளலாம் என்று படித்த ஒருவர் சொல்லிட்டுப் போனார்.
சுற்றுப் புறச் சூழல் நாளை வீட்டுக்குள் தான் கொண்டாடணுமோ.
எதிர்மறைப் பதிவு இல்லை.
ஆதங்கம்தான்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
// குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரிக்காரரை நமது நண்பராக ஆக்கிக் கொள்ளவேண்டும்... // உட்பட அவரவர் உணர வேண்டிய தகவல்கள்...
சிலரை திருத்தவும் முடியாது... தானாக திருந்தினால் தான் உண்டு... இன்றைய எனது பதிவும் அவ்வாறே... நண்பராகிக் கொண்ட ஒரு பகிர்வு... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி அம்மா...
எல்லாமே அனுபவிச்சாச்சு வல்லி, நீங்க தைரியமா எதிர்கொண்டு அங்கேயே இருக்கீங்க. எங்களால் முடியாமக் கிளம்பிட்டோம். வேணும்னு சாப்பிட்ட இலைகளை எங்க பக்கம் வீசி எறிந்துட்டு, நீங்க பெருக்கிறச்சே சேர்த்துப்பெருக்குங்கனு சொல்லிடுவாங்க. அதோடயா? இப்போதைய நாகரிகங்களான டயப்பர்கள், பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள்/இவற்றைப் பேப்பரில் சுற்றி ஒரு பையில் போட்டு வெளியே போட்டாலும் பரவாயில்லை. :(( பெரும்பாலும் அப்படியே போட்டுடறாங்க.:((( சொன்னால் விரோதம் தான். பொல்லாதவள் என்ற பெயர் தான். :((
நேற்றைய சீரியல் ஒன்றில் மலேசியாவில் வேலை செய்து அங்கே சில ஆண்டுகள் தங்கிய இளைஞன் இந்தியா திரும்பியதும், தான் குடியிருந்த மாடியில் இருந்து குப்பையைத் தெருவில் வீசி எறிகிறான். :(((( தெருவில் போகிறவங்க மேலே விழும் என்ற பொது அறிவு கூட இல்லாதவனாக அந்தக் கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்! :(((
கலைச்செல்வி தன் வேலை நேரம் போக மீதம் இருக்கும் நேரத்தில் தானே உங்களுக்கு உதவுகிறார். கட்டாயமாய்ப் பணம் கொடுக்க வேண்டும். தப்பே இல்லை. :))))) அவங்களே வேலை நேரத்தில் கூப்பிட்டால் கூட வர மாட்டாங்க. அப்புறமா வரோம்னு சொல்லிட்டு வேலை நேரம்முடிஞ்சதும் தான் வருவாங்க.
//சுற்றுப் புறச் சூழல் நாளை வீட்டுக்குள் தான் கொண்டாடணுமோ.//
வீட்டிலிருந்துதான் முதலில் ஆரம்பிக்கணும். ;)
அது என்னங்க கலைச்செல்வின்னு பேரு,லச்சுமி என்று வரக்கூடாதா?
அனால் ஒன்று குப்பைத்தொட்டிக் கலாச்சாரம் என்பது சிறந்தது. டென்மார்க் போன்ற நாடுகளில் குப்பைத்தொட்டிகள் அழுக்கின் அடயாளம் அல்ல சுகாதாரத்தின் கருவி. அதனைச் சுத்தப்படுத்த அரசு சரியாகவே முனைகிறது. குப்பயிலிருந்து மின்சாரம் எட்க்கிறது. குப்பயிலிருந்து மின்சாரமா? அதிகச் செலவு என்று அய்.ஏ.எஸ் அதிகாரிகள் காட்டி அணு மிசாரத்தில் இடம் வாங்கி ந்ன்கொடைகளைக் ஒடுத்தும் தாமும் ஒபெற்று குட்டிச்சுவராக்கும் நிலை அங்கு இல்லை. அங்கு வாரிசு சொத்துரிமை தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும்போது பயப்படுத்தும் விஷயங்களில் முதன்மையானது இதுதான். செய்றதெல்லாம் செஞ்சுட்டு, கொசுக்கடிக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க்லைன்னும் புலம்புவாங்க. :-((((
தனிமனித விழிப்புணர்வு என்பது நம் நாட்டில் குறைவு. 'திருடனாப் பார்ஹ்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' எப்று பாட்டு வருமே, அது போலத்தான் எதுவும்! ம்...ஹூம்!
எனக்கு சுத்தம் செய்யும் லாரிகளைக் கண்டால் வருத்தம்தான் மேலிடுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும்
அவர்களுடைய பொறுமையை வாங்கமுடியாது தனபாலன்.
பொறுப்பில்லாமல் நடக்கும் வீட்டுக்காரர்களைக் கண்டுதான் கோபம் வருகிறது.
ஆமாம் கீதா. தன் வேலைநேரம் முடிந்தபிறகுதான் வருவார்.
கலைச்செல்வி. யார் உனக்கு இவ்வளவு அழகாகப் பெயர் வைத்தார்கள் என்று கேட்பேன். அவளுடைய அம்மாவுக்குச் சினிமா பெயர் எல்லாம் பிடிக்காது. நல்ல தமிழ்ப் பெயர் வைக்கவேணுமாம்.
தொலைக்காட்சி கதை ஆசிரியர்களுக்கும் சுத்தத்தைப் பற்றி பாடம் எடுக்கணுமோ என்னவோ:(
அதுதான் சரி கோபு சார்.
''தன் முதுகு ஒரு போதும் தனக்கேதான் தெரியாது. பிறரென்றால் நையாண்டி பேசுகின்ற உலகம் இது ''என்று
பழைய பாடல் ஒன்று உண்டு.அது போலத்தான் இந்த நிலைமை. அதற்குப் பொருந்தும்.:)
நன்றி இறை கற்பனை இலான்.
அவர் பெயரை மாற்ற எனக்கு உரிமை இல்லையே.
அத்தனை அழகாக அவருடைய பெற்றோர் வைத்த பெயர்.தமிழ்ப் பெயர்.
அதுதான் நம்ம ஊரு ஹுசைனம்மா.
எத்தனையோ வெளிநாடுகள் போகிறார்கள் வருகிறார்கள்.
அங்கே இருக்கும் சுத்தத்தை இங்கே கொண்டுவர யோசிப்பதில்லை.
உண்மைதான் ஸ்ரீராம்.
ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு குப்பை மேடு. பழைய கிராமங்கள் சுத்தத்தைப்
பேணி வந்ததுதான் நினைவு வருகிறது.
நாங்கள் இருந்த ஊர்களில் எல்லாம் தெருக்கள் நடப்பதற்கு அத்தனை சுத்தமாக இருக்கும்.
நாகரீகம் வளர்ந்த பிறகு இந்த நிலைமை.
சுற்றுப் புறச் சூழல் நாளை வீட்டுக்குள் தான் கொண்டாடணுமோ.//
சுற்றுச்சூழல் தினச் சிந்தனை...!
வருத்தம் அளிக்கும் விஷயங்கள். பெங்களூரில் குடியிருப்புகளில் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை போன்றன நடைமுறைக்கு வந்திருப்பினும், தனிவீடுகள் உள்ள வீதிகள் பலவற்றில் தொட்டிக்குள் போடாமல் குப்பைகள் விசிறியடிக்கப்பட்டிருப்பது சாதாரணமாய் காணக்கிடைக்கிற காட்சி:(.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது அனைவருக்குமே அவசியம்.
அதை வலியுறுத்தும் பகிர்வும் வேண்டும்.
சுற்றுப் புறச் சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் கூட. அரசாங்கத்தினை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பதால் பலனில்லை.......
திருந்துவார்களா..... எனக்கு நம்பிக்கையில்லை....
Post a Comment