உனக்கு மனப்பிரமை பயப்படாதே! |
ஒரு விளக்கு எரியவில்லையே |
விருந்துக்குச் செல்லும் புதுமண தம்பதியர் |
காஸ்லைட் 1944 போஸ்டர் |
கேள்வி கேட்டு மனம் சலிக்கும் இங்க்ரிட் |
கணவனுக்கும் டிடெக்டிவ்க்கும் நடுவில் குழம்பும் மனைவி |
கணவனைச் சந்தேகிக்க ஆரம்பிக்கும் இங்க்ரிட்(Paula) |
தோழி ஒருவர் படங்கள் பற்றிப் பேசும்பொழுது பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைப் பற்றிப் பேசினோம்.
அதன் பலனாகப் பழைய டர்னர் க்ளாஸிக் மூவீஸில் வந்த படங்களை ஆய்ந்தேன்.
முக்கால்வாசிப் பழைய படங்கள் மியூசிக்கலாகவோ, காதல் இவைகளை அடிப்படையாக வந்திருந்தாலும்
சில ஹாரர்,சில த்ரில்லர் என்ற வகையில் வந்திருந்தன.
ஹிட்ச்காக்கின் சைக்கோ, பறவைகள், த மேன் ஹூ நியூ டூ மச்,(கே சரா சரா) பாட்டு வருமே).
சைக்கோ வின் பயங்கரம்,இதில் சிறிதே குறைவு.
ஆனால் படபடப்பு குறையாமல் படம் போகும்.
Paula வின் அத்தை ஒரு ஓபரா பாடகி.
லண்டனில் அவளுடைய நகைகளைத் திருட வந்தவன் அவளைக் கொன்றுவிடுகிறான். நகைகள் கிடைக்காமலேயே ஓடிவிடுகிறான்.
இதைக் கண்முன்னால் கண்ட சிறுமி
பாலாவின் அதிர்ச்சி அளவற்றுப் போகிறது.
அவளை இத்தாலிக்கு மனக்கலவரத்திலிருந்து விடுபடவும்
இசை கற்கவும் அனுப்பப்படுகிறாள்.
அங்கு ஒரு அழகிய பெண்ணாக வளருபவள் க்ரிகாரி என்பவரைப் பார்த்துக் காதல் வசப் படுகிறாள்.
இருவரும் மணம் முடித்து இங்கிலாந்துக்கே திரும்பலாம் என்று
Gரிகாரி சொல்ல Pஆலா பயப் படுகிறாள்.
அவளைச் சமாதான்ப்படுத்தி அத்தையின் லண்டன் வீட்டுக்கேத் திரும்புகிறார்கள்.
மகிழ்வாக ஆரம்கும் வாழ்க்கையில் சில விபரீதங்கள் குறுக்கிடுகின்றனா.
பாலாவுக்கு வீட்டிம்ன் பரணறையில் யாரோ நடக்கும் சப்தம் கேட்கிறது.
அங்கேதான் அவள் அத்தையின் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டி இருக்கிறார்கள்.
கணவனிடம் சொன்னால் அவன் தனக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று மறுக்கிறான்.
திடிரென்று பொருட்கள் காணாமல் போக ஆரம்பிக்கின்றன..
வீட்டில் பொருத்தப் பட்டிருக்கும் காஸ் விளக்குகள்
விட்டு விட்டு எஇகின்றன.
பாலாவின் பயம் அதிகரிக்கிறது.
கணவனோ அவளைதிருட்டுத்தனம் செய்பவளாகவும்,மனப்பிரமை கொண்டவளாகவும் பார்க்கிறான்.
அவள் எவ்வளவு மறுத்தும் நம்ப மறுக்கிறான்.
வீட்டைவிட்டு வெளியேவிட மறுக்கிறான்.
பிறகு மனம் மாறி ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போகிறான். அங்கு ம்
அவளைக் கலவரப் படுத்துவது போல அவனுடையக் கைகடிகாரம் காணாமல் போகிறது.
உன் கைப்பையையில் போட்டிருக்கிறாய என்று எல்லோர் முன்பும்வினவ
அவள் அதிர்ந்து போய் மறுக்கிறாள்.
கைப்பையை அவளிடமிருந்து எடுத்துப் பார்த்தால் அதில் அவனுடையக்
கைகடிகாரம் இருக்கிறது.
எல்லோர் முன்னும் அவமானப் பட்ட பாலா வெளியே ஓடுகிறாள்.
அவளுடைய பழைய கவர்னஸ் ஒருத்திதான் அவளுக்கு ஆறுதல்.
இன்னோரு வீட்டு உதவிக்காக இருக்கும்
ஆஞ்சலா அவளை வெறுப்பதை வெளிப்படையாகவே காண்பிக்கிறாள்.
இந்த அதிர்ச்சி சம்பவங்களுக்கெல்லாம் முடிவுக்கு வரும் நாளும் வருகிறது.
பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு கிழவி,
கிரிகாரி கையில் ஒரு டார்ச்சுடன் வீட்டின் பின்புற ஏணி வழியாக ' ஆட்டிக்"
என்னும் பரணுக்குப் போவதைப் பார்க்கிறாள்.
நடுவே ஒரு நாள் டவர் அஃப் லண்டனுக்குப் போகிறாள் பாலா,வீட்டில் இருக்கப் பிடிக்காமல்.
அங்கே ஒரு புதிய மனிதனைச் சந்திக்கிறாள்.
அவளுடைய பதட்ட நிலையைப் பார்த்து அவளை அவன்
விடாமல் அவளைத் தொடர்கிறான்.
அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறியவரும் பாலா தன் வீட்டில் நடக்கும் விபரீதங்களைச் சொல்லித் தன்னைக் காப்பாற்றச் சொல்கிறாள்.
அவள்தான் கொல்லப்பட்ட ஓபரா பாடகி ஆலிஸின் மருமகள் என்று அறிந்ததும் Bryan cameran kku இந்தக் கேசில் சந்தேகம் ஏற்படுகிறது..
ஒரு நாள் வீட்டிற்கு வருகிறான்.
அவன் சந்தேகம் வலுப்பெறுகிறது.
பாலாவின் கணவனைக் கண்டதும் திடுக்கிடுகிறான்.
அவந்தான் முதன்முதலில் பாலாவின் அத்தையைக் கொன்றவன்.
திட்டமிட்டு இத்தாலிக்குச் சென்று இளம்பெண்ணாக அன்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் பாலாவைத் தன் வசப் படுத்தித்
திருமணமும் செய்து
லண்டன் வீட்டிற்கே வந்துவிடுகிறான். அவனுடைய உதவியாள் ஆஞ்சலா.
அவன் மாடிப் பரணில் நகைகளைத் தேடும்போதெல்லாம் கீழே பாலா நடுங்குகிறாள்.
அவன் எடுத்துச் செல்லும் காஸ்லைட்
கீழே இருக்கும் மற்ற விளக்குகளை மங்கச் செய்கிறது.
ப்ரையனை இன்ஸ்பெக்டர் என்று அறியாமல் பரணுக்கு வழக்கம் போலச் செல்லும் கிரிகாரி கையும் களவுமாகப் பிடிபடுகிறான்.
நிகழ்ச்சிகளின் விளைவாகத் தைரியம் கைவரப் பெற்ற பாலா அவனை ஒரு நாற்காலியோடு சேர்த்துக் கட்டி
இடைவிடாது கேள்விக்கணைகளைத் தொடுத்துத் துன்புறுத்துகிறாள்.
போ;ஈஸ் இலாகாவின் தலையீட்டில் கெட்டவர்கள் சிறைபுக ப்
பாலா மன விடுதலை அடைகிறாள்.
இங்க்ரிட் பெர்க்மன் என் ஃபேவரிட் ஆர்டிஸ்ட்.
அந்த மாதிரித் திகிலையும், கள்ளம் கபடமற்ற முகத்தையும் எங்கும் காண
முடியாது.
நாலைந்து ஆஸ்கார்கள் கிடைத்தன இந்தப் படத்துக்கு.
கிரிகோரியாக நடித்தவருக்கும்,இங்க்ரிட் பெர்க்மனுக்கும்
பெஸ்ட் ஆக்டர் அக்ட்ரஸ் அவார்ட்.
நான் இந்தப் படத்தை இங்கே சென்னையில் தான் பார்த்தேன்..
அப்போது டாடாஸ்கை ஒளிபரப்பில் டிசிஎம் இருந்தது. இப்போது இல்லை.
மன உறுதி உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்..
காஸ்லைட் 1944 த்ரில்லர்
18 comments:
http://www.ovguide.com/video/gaslight-trailer-922ca39ce10036ba0e1117058cd0b125//
இந்த ட்ரெயிலரில் 10% திரைப்படத்தைப் பார்க்கலாம்:)
சுவாரஸ்யமான விமர்சனம்....
/// மன உறுதி உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்... ///
அப்போ பார்த்து விட வேண்டியது தான் அம்மா...
சுட்டி கொடுத்தமைக்கும் நன்றி....
கதையைச் சொல்லிட்டீங்களே! :)))) த்ரில்லிங் போயிடும். :)))) எப்போவாவது தொடர்ந்து 2 மணி நேரம் மின்சாரமும் கிடைச்சு இந்தப் படத்தையும் பார்க்க முடிஞ்சா பார்க்கிறேன்.
கருப்பு வெள்ளையில் படங்களும், கீழே விளக்கங்களும், தங்கள் விமர்சனமும் அருமையாய் உள்ளன. பாராட்டுக்கள்.
பட விமர்சனம் பார்க்கத் தோன்றுகிறது.
கீதா சொல்வது போல் மின்வெட்டு
அதிகமாய் தான் இருக்கிறது..
உங்கள் பதிவைப் படிக்கும்போதே இதயத் துடிப்பு எகிறுவதை உணர முடிகிறது. நன்றி. முழுப் படத்தைத் தேடிப் பார்கிறேன்.
தனபாலன்,
நன்றி. அந்த வாசகம் பழைய படங்களின் ட்ரெய்லரில் வரும் வாசகம் மா. இப்போ அதெல்லாம் கிடையாது.நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டுமானால் '' காஸ்லைட் 1940'' என்று க்ளிக் செய்து முழுப் படமும் பார்க்கலாம்.
நான் பதிவிட்ட படத்துக்கு முன் வந்த படம் அது.இந்த அளவு நடிப்பு இல்லை.ஆனாலும் நல்ல படம்.
என்னோட வீக்னஸ் அது கீதா.
முன்ன பின்ன திரைக்கதை எழுதி இருந்தால் தானே தெரியும்:)
''காஸ் லைட் 1940 '' இந்தப் படத்துக்கு முன்னால் வந்த படம் இணைய்த்தில் பார்க்க கிடைக்கிறது ஒரு மணி நேரம் 24 நிமிஷங்கள் தான்.
கோபு சார்.
மிக நன்றி.இணயத்தில் தேடினேன். க்ரெடிட்கார்ட் கொடுத்தால் பார்க்கலாம்னு வந்தது.ஆளைவிடு சாமினு கூகிளார் துணை+ இரண்டு வருடங்கள் முன் திரையில் பார்த்த நினைவில் எழுதிவிட்டேன்.
கறுப்பு வெள்ளைப் படங்கள் இப்போது கலரில் மாற்றிவிடுவதால் கிடைப்பது அரிதாகிவிடுகிறது.உங்கள் பின்னூட்டதிற்கு மிகவும் நன்றி.
நன்றி ஸ்ரீராம்.
ஒரு மணி 24 நிமிடங்களே படம் ஓடுகிறது. கோமதி.
எனக்குப் பிடித்தது
1,,ஆபாசம் இல்லை.
துப்பாக்கி இல்லை
தெளிவாகக் கதை சொல்லப் படுகிறது . அதுதான்:)மிக நன்றி மா.
உண்மையாகவா!கடைசி பென்ச்?
சிறுகச் சொல்லி விளங்க வைப்பது
எனக்குக் கைவரவில்லை.:(
உங்கள் ரசனைக்கு நன்றிமா.
கேஸ்லைட் பார்க்கவில்லை.
இங்ரிட் எனக்கும் பிடிக்கும்
பிடிச்ச படம் - நொடொரியஸ். அத்தனை அப்பாவியாகத் தோன்றுவார். பார்க்கும் பொழுதெல்லாம் அப்படியே கையைப் பிடிச்சுக்கிட்டு தோள்ல சாய்ச்சு (ஹிஹி, got carried away). ஆனால் அந்த முத்தக்காட்சி.. யப்ப்ப்ப்ப்ப்பா. நம்ம உலுக்குநாயகன் இந்தக் காட்சியை ரொம்ப பிரயத்தனப்பட்டு ஒரு பழைய படத்தில் ட்ரை பண்ணியிருக்கிறார்.
கேரி க்ரேன்ட் போல இந்திய நடிகர்கள் யாரும் இல்லையே என்று தோன்றும். சகிகபூர்?
of course, கேசப்லேன்கா பிடிக்காமல் இருக்க முடியாது. வருசத்துக்கு ஒரு தடவையாவது பார்த்தேயாகணும்.
கூடிய சீக்கிரம் கேஸ்லைட் பார்த்துவிடுகிறேன். நன்றி.
இன்னோரு இங்க்ரிட் ஃபான்.
நான் நொடோரியஸ் பார்க்கவில்லை.
நீங்கள் அனஸ்டேசியா பார்த்தீர்களா.
எனக்குப் பிடித்த யூல் ப்ரென்னரும் நம்ம இங்க்ரிடும்.அச்சோ அந்த த்ரில்.
இளவரசியும்,ரஷ்யன் தீவிரவாதியாகப்ரென்னரும்.
அதையும் பாருங்கள்.
ஸ்பெல் பௌண்ட் இன்னோரு படம்.
காரி க்ராண்ட்,கிரிகெரி பெக் மறக்க முடியாது.க்ளார்க் கேபிளின் கான் வித் தெ விண்ட் நடிப்பு அபாரம்.
நிறுத்திக்கிறேன்.:)
நன்றி மா துரை.
அட நீங்க விமர்சனம் எல்லாம் எழுதுவீங்களா... அருமை... இது போன்ற விமர்சனங்களின் மூலம் இப்படியெல்லாம் படம் இருப்பது எனக்குத் தெரிய வருகிறது.. மிக்க நன்றி
பட விமர்சனம் அருமையாக இருக்கின்றது.
நல்ல அறிமுகம். பார்க்க முயற்சி செய்கிறேன்.
திரு சீனு,
பதிவு ஆரம்பித்தபோது சினிமாக்கள் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன்.
பிறகு ரசனையும் யோசனையும் மாறியது.
நான் எழுதி இருப்பது விமரிசன வகையில் சேருமா என்று தெரியாதுமா.
எனக்குப் பிடித்த படத்தின் கதை.:)
மிக நன்றி மா.
Post a Comment