அப்பா எப்போ வெளில போகலாம்? |
இப்படி சந்தோஷமாகப் போஸ் கொடுக்கக் கூடாது மா.:)(ஹிட்ச்காக் புத்திமதி) |
ஆம்ப்ரோஸ் தெரு எங்கே இருக்கிறது? |
Add caption |
சொல்லாதே யரும் கேட்டால்..ஹிட்ச்காக் |
சொன்ன ரகசியம் என்ன? |
ஆங்கில அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய அவசிய,.
இருவரும் இங்கிலாந்திற்கு விரைந்து
ஸ்காட்லாண்ட் யார்டில் செய்தியைச் சொல்லி விடுகிறார்கள் இதனால் மகனுக்கு ஏதாவது ஆகுமோ என்ற வருத்தம் வேறு.
இதற்கிடையில் ஸ்காட்லண்ட் ஏஜந்த் பென்னிடம் அவர்கள் பையனைப் பிடித்துவைத்திருக்கும்
ட்ரேய்டன் தம்பதியர் ஆம்ப்ரோஸ் தெரு சர்ச்சில் பாதிரியாரக இருப்பதாகச் சொல்லுகிறார்.
அவசரமாக ஆம்ப்ரோஸ் தெரு சாப்பலுக்கு விரையும் டாக்டர் பெஞ்சமினை அந்த பாதிரியார் உருவிலிருக்கும் ட்ரேட்டன் ,பென்னைத் தாக்கிவிட்டு சர்ச்சின் ஆர்கன் பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிக்கிறான்.
கணவனைத் தேடி அங்கே வரும் ஜோ அவரைக் காணாமல் போலீசின் உதவியை நாடுகிறாள்.
அவர்கள் அனைவரும் ஆல்பர்ட் ஹாலுக்கு விரைந்து இருப்பதை அறிந்து அங்கே ஓடுகிறாள். அங்கே தான் அந்த மர்மம் உடையப் போகிறது.
அயல் நாட்டுப் பிரதமர் கொல்லப்படப் போகிறார்.
அந்தச் சதிகாரர்களின் கையில் தான் தன் மகன் மாட்டி இருக்கிறான் என்று தெரிந்து துடித்துப் போகிறாள்.
இதற்குள் சர்ச்சில் சுயநினைவு பெற்ற பென்னும் கச்சேரி நடக்கும் இடத்துக்கு வந்து கொலைகாரனைத் தேடுகிறார்.
அதுவோ பெரிய இடம்.
விரைவாக ப்ரைவேட் பாக்ஸஸ் அமைந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்திருகும் பிரதமமந்திரியைக் கண்டுபிடித்து அங்கெ இருக்கும் வெல்வெட் திரை பின்னால் ஒளிந்து கவனிக்கும் போதுதான்
அந்தக் கொலைகாரன் அவர் கண்ணில் பட்டுவிடுகிறான்.
அதற்குள் கச்சேரி ஆரம்பித்துவிடுகிறது.
கொலைகாரகளின் திட்டம் கடைசியாக அந்த சிம்பல் ஒலிக்கும் சத்தத்தில் பிரதமமந்திரியைச் சுட்டால்
சத்தம் வெளியே கேட்காது என்பதே.
இந்தச் செய்தியை மனைவிக்கு அவசர செய்தியாக அனுப்புகிறார் பென்.
அவளும் மனம் படபடக்கக் க் காத்திருக்கிறாள்.
பாட்டு முடியும் நேரம் அந்தப் பெரிய சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு முன் ரத்தம் உறையவைக்கும் விதத்தில் ஒரு ஹைபிட்ச் அலறலை( SCREAM) வெளியிடுகிறாள்.
இதனால் நிலைகுலைந்த கொலைகாரன் தப்பாகச் சுட்டுவைக்க,பிரதமர் தப்பிக்கிறார்.
சரியாகக் காத்திருக்கும் பென் எ ரியல் ஹீரோவாக அவனுடன் சண்டை போட அவன் கை துப்பாக்கி வெடித்து அவனே மடிகிறான்.
அயல்நாட்டுப் பிரதமர் பெஞ்சமினையும் அவர் மனைவி ஜோவையும் வெகுவாகப் பாராட்டி விருந்துவைக்கிறார்.
அந்த மாளிகையின் ஒரு அறையில் தான் அவர்களது மகன் சிறையிருக்கிறான்.
ஜோ மெக்கென்னா ஒரு நல்ல பாடகி. பிள்ளையோடு விளையாடும்போது எப்போதும் அவனுக்குப் பிடித்த பாடல் ஒன்றைப் பாடுவாள்.
பிரதமர் அவளைப் பாடச் சொன்னதும் அதே பாடலைத் தொண்டை அடைக்கக் கண்ணில் நீர் வரப் பாடுகிறாள்.
ஹான்க் கைப் பிடித்துவைத்திருக்கும் தம்பதியரில் மனைவிக்கு அவனை வருத்துவதில் இஷ்டமில்லை.
பாடல் இசை மிதந்து மேலே வரும்போது ஹான்க் விழித்துக் கொள்கிறான்.
உடனே கொலைத்திட்டம் இட்ட கணவனின் சைகையையும் பொருட்படுத்தாமல் ஹான்க் ஐ விசில் மூலம் பதில் அனுப்பச் சொல்கிறாள்.
தன்சக்தியெல்லாம் சேர்த்து விசில் அடிக்கிறான் ஹான்க்.
அதற்குள் தப்பி ஓட முயற்சிக்கிறார்கள் இந்தத் தம்பதியர்.
சரியான நேரத்தில் விசிலைப் பின்பற்றி மாடி அறைக்கு வரும் பென் கதவை உடைத்து உள்ளே புகுகிறார்.
தங்களைப் பிடித்தால் ஹான்கைச் சுட்டுவிடுவதாக
மிரட்டுகிறான் ப்ரிட்டிஷ் வேஷமிட்ட அந்நிய உளவாளி.
அவன் துப்பாக்கியைத் தட்டிவிட்ட மனைவி தப்பிக்கும் வழியை நோக்கி ஓடுகிறாள்.
அதற்குள் ஸ்காட்லாண்ட் யார்ட் வந்துவிடுவதால்
மேலும் ரத்தம் சிந்தாமல் முடிகிறது.
இது நான் சேலத்தில் இருந்தபோது 1968இல் பார்த்த படம்.
பெயர்கள் எல்லாம் கூகிளிலிருந்து எடுத்துக் கொண்டேன்
நிறைய தவறுகள் இருக்கலாம்.
இந்தக் கதையின் படத்தின் சிறந்த அம்சமே, இந்த அமெரிக்க
தம்பதியர் தங்களுடன் உதவிக்கு வந்தவர்களுக்குக் கூட தங்கள் பிள்ளைக் காணாமல் போன விஷயத்தைச் சொல்லாமல் இருவருமாகப் போராடுவதுதான்.
அத்தனை பயத்தில் இருப்பது படம் முழுவதும் விரவி இருக்கும்.
அற்புதமான படம்.
ஆங்கிலப் படங்களுக்கு என்னை அறிமுகப் படுத்திய என் சிங்கத்துக்கு மிக நன்றி.
முதலில் பதிந்திருக்கும் பாடலையும் கேளுங்கள்.
நன்றி,.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்