ருக்மணிக்கு நிறைமாசம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வேலைகள் ஏகத்துக்கு இருந்தது. உதவிக்கு அக்காக்கள் நாச்சியும்
கிச்சம்மாவும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
கீழநத்தம் கிராமத்தில் 84 வருடங்களுக்கு முன் என்ன வசதியிருந்ததோ. .மனிதக் கட்டு இருந்தது.
அவ்வப் போது ஏற்படும் சலசலப்பைத் தவிர அநேகமாக அனைவருமே பாசத்தோடு பழகிக் கொண்டிருப்பார்கள்.
பொறக்கப் போறது பொண் குழந்தைதான்.அமாவாசை வரது. தை அமாவாசை
நாளைக்குப்
பிறந்தா நன்றாக இருக்குமே
ருக்மணியின் தந்தை ஒரு புறம் யோசனை செய்தார்.
சனிக்கிழமை ,தை அமாவாசை,ஃபெப்ரவரி 9 ஆம் தேதி
ஒரு அருமையான பூப்போல ஒரு பெண்குழந்தை பிறந்துவிட்டது.
தாயாருக்கு அதிகக் கஷ்டம் கொடுக்காமல்.
அன்றிலிருந்து அது விரதம் பூண்டது போல
தொந்தரவு தராத அக்காவாகவே வளர்ந்தது.
தனக்குப் பிறகு பிறந்த தம்பிகளிடமும் மாறாத நேசம். அம்மாவுக்குச் செய்யவேண்டிய கடமைகள்.
தன் அப்பாவிடம் அதீத பாசம் எல்லாம் சேர்ந்த நல்ல கலவை என் அம்மா புஷ்பா ,பாப்பா,ஜயலக்ஷ்மி.
சென்னைக்கு வந்து படிப்பு முடித்தல், பதினான்கு வயதில் திருமணம்,
17 வயதில் ஆண் குழந்தையின் வருகை,அன்பான கணவன்.
9 மாதங்கள் மகிழ்ச்சி கொடுத்த அந்தக் கிருஷ்ணன் சீக்கிரம்
இறைவனடி சேர்ந்தபோதும் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக
இருந்தார்கள்.
அந்ததாம்பத்தியம் வளமாக அதிகம் பேசாத அன்பு நிறைந்த சாம்ராஜ்ஜியத்துக்கு இன்னோரு பெண்ணும் இரு
ஆண்குழந்தைகளாகக் கிடைத்தனர்.
அளவான வருமானம்,சிக்கன வாழ்க்கை. அவ்வப் பொழுது
வெளியூர்ப் பயணங்கள்.
கடனில்லாத வாழ்க்கை. மனதுக்கினிய நண்பர்கள். என்று வாழ்ந்து
முடித்த என் அன்னைக்கு வணக்கம்.
தோற்றம் ஃபிப்ரவரி 9 ஆம் தேதி.
75 வயதில் எங்கள் மனத்தினில் புகுந்து விட்டாள்.
அம்மா அம்மா அம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
ஓ... அம்மாவின் பிறந்த நாளா இன்று? எங்கள் நமஸ்காரங்கள்.
// கடனில்லாத வாழ்க்கை. மனதுக்கினிய நண்பர்கள். என்று வாழ்ந்து
முடித்த என் அன்னைக்கு வணக்கம்.//
ஏதோ ஒரு கடன் இருக்கக் கொண்டுதானே இப்புவியிலே மறுபடியும் மறுபடியும்
பிறக்கவேண்டியதாக இருக்கிறது.
அந்தக் கடன் க்ரெடிட் ஆகவும் இருக்கலாம், டெபிட் ஆகவும் இருக்கலாம்.
அதாவது பண்ணின புண்ணியமாகவும் இருக்கலாம். நேர் மாறாக வும் இருக்கலாம்.
பண்ணியது புண்ணியமாக இருந்தால்தானே வல்லி மாதிரி ஒரு பெண் பிறக்கும்.
அந்தப் பெண்ணும் இத்தனை வருஷங்களுக்குப் பின்னேயும் அம்மா அம்மா என
அந்த அம்மா தந்த இனிய உலகத்திலே இசைந்து மகிழும். குழையும். கண்ணீர் மல்கும் இல்லையா ?
அம்மா என்றாலே அந்த நினைப்பே ஒரு ஸ்வர்க்கம்.
நீங்கள் அம்மா என்று சொல்லும்போதே எனக்கு எங்கள் அம்மா பற்றிய நினைவு வருகிறது.
என் " கடன் " பணி செய்து கிடப்பதே என்று நாளும் குழந்தைகளுக்காகவே இருந்தார்கள்.
அம்மாவைப் போற்றுவோம். அம்மா பூதேவி மாதிரி . சகலத்தையும் தாங்கக்கூடிய சக்தி
அவள் ஒருத்திக்குத் தான் உண்டு.
ஆல் த பெஸ்ட்.
சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
என் அம்மா ரசித்த பாடிய பாடல்களை நான் இந்த வலையிலே போட்டு இருக்கிறேன். u will also like it. mostly carnatic.
http://mymaamiyaarsongs.blogspot.in/
அம்மாவின் பிறந்த நாள் நினைவலைகள் அருமை.
அன்பு அது தானே அம்மா!
அம்மாவிற்கு நமஸ்காரங்கள்.
அம்மா, அப்பா படம் அழகு.
//
அளவான வருமானம்,சிக்கன வாழ்க்கை. அவ்வப் பொழுது வெளியூர்ப் பயணங்கள்.
கடனில்லாத வாழ்க்கை. மனதுக்கினிய நண்பர்கள் என்று வாழ்ந்து
முடித்த என் அன்னைக்கு வணக்கம்.
தோற்றம் ஃபிப்ரவரி 9 ஆம் தேதி.
75 வயதில் எங்கள் மனத்தினில் புகுந்து விட்டாள்.
அம்மா அம்மா அம்மா.//
அழகான புகைப்படத்துடன் அருமையான நினைவலைகளுடன் கூடிய அற்புதமான பதிவு.
இன்றும் தை அமாவாசை.
அதே பிப்ரவரி 9
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
எங்கள் அஞ்சலிகள்.
ஆமாம் ஸ்ரீராம். அம்மாவின் பிறந்த நாள். பேரனுக்கும் கொள்ளுப் பேரன்களுக்கும் ஆசிகள் அனுப்புகிறாள்.
//சனிக்கிழமை ,தை அமாவாசை,ஃபெப்ரவரி 9 ஆம் தேதி//
இன்றைக்கும் அதே நாள்.
//தாயாருக்கு அதிகக் கஷ்டம் கொடுக்காமல்.
அன்றிலிருந்து அது விரதம் பூண்டது போல
தொந்தரவு தராத அக்காவாகவே வளர்ந்தது.
தனக்குப் பிறகு பிறந்த தம்பிகளிடமும் மாறாத நேசம். //
அம்மா எங்கள் மனதிலும் புகுந்துவிட்டார்.
உங்கள் அம்மாவுக்கு என்னுடைய வணக்கங்களும், நமஸ்காரமும்.
நல்வரவு கோபு சார்.
தை அமாவாசை,திருவோணம்,பிறந்தநாள் சனிக்கிழமை,9ஆம் தேதி என்று நான்கும்
இணைந்த நாளாகிவிட்டது. எத்தனையோ சிரமப்பட்டிருக்கிறாள்.இறைவனை நொந்த நாள் கிடையாது.
மாப்பிள்ளையிடம் அத்தனை மரியாதையும் அன்பும்.
இவரும் அப்படியே.எந்தந்தையிடமும் அன்னையிடமும்
அளவில்லாத பாசம் வைத்திருந்தார்.வைத்திருக்கிறார்.
உங்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கணினி ஒத்துழைக்கணும்:)
அன்பு கோமதி,மிக அருமையாக நான் நினைப்பவர்கள்
இந்தப் பதிவுக்கு வந்தது குறித்து மிகவும் சந்தோஷம்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறகுதான் எனக்கு தெய்வமே.
மனம்நிறைந்த நன்றி.
அன்பு கீதா,நன்றிமா.இன்னும் 13 நாட்கள் .பறந்துவந்துவிடுவோம் சென்னைக்கு.
அன்பு ரமா,ஒரு சிறு துரும்புக்கும் துன்பம் தரமாட்டார். பழி,பாவத்துக்கு
அஞ்சி வளர்ந்தவள். கோழையெனச் சொல்லமுடியாது.தீர்க்கமாக முடிவெடுப்பாள்.
நான் ஏன் மீண்டும் மீண்டும் அவளை இங்கே வரவழைக்கிறேன் என்று யோசிக்கும் போது,
உயிரோடு இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்த்து அவளின் நலிந்த நாட்களில் கூட இருந்தேன்.
அவள் இறைவனடி சேர்கையில் கூட இல்லை.
அந்தக் குற்ற உணர்ச்சி மறைய மறுக்கிறது.அதுதான் காரணம். மிக நன்றிமா.
அன்பு மீனாக்ஷி,அன்னையின் ஆசி உங்களுக்கும் கிடைக்கட்டும்.
அம்மாவின் பிறந்த நாளா....
அவரது ஆசி எல்லோருக்கும் கிடைக்கட்டும்....
அம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
அன்பு நிறைந்த அம்மாவுக்கு எங்கள் அஞ்சலிகள்.
ஓஹோ இந்தப் பின்னூட்டமா
மன்னிக்கணும் சுப்புசார் மீனாட்சி
மாமி.இவ்வளவு சிலாக்கியத்துக்கும் நான் உரியவளே இல்லை.
அதுதான் மீண்டும் மீண்டும் அவள் நினைவைப் பதிக்கிறேன்.
சோகக் கதை சொல்லிக் ஏட்டு அனைத்துப் பதிவுலக நண்பர்களும் அலுத்தே போயிருப்பார்கள்.
ஆனால் என் அன்னை எனும் அபூர்வப் புத்திசாலி,கணவனுக்கு எதிராக வார்த்தை சொல்லத்தெரியாதவர்.
அவளுடைய கடைசி நாட்களில் என் சேவை அவளுக்குச் சிறிதே கிடைத்தது.
இந்தக் குற்ற உணர்ச்சியே என்னை எழுத வைக்கிறது.
இரண்டு நாட்களாகப் பேத்திக்கு விடுமுறை. எப்பொழுதெல்லாம் கணின் என்கைக்கு வர்டுகிறதோ அப்போது
என் பதிவைத் திறக்கவே நேரம் ஒன்று ஆகும்.
அப்படியும் மற்றப் பின்னூட்டங்களைஇப் படித்துப் பதில் எழுதிய போது உங்கள் பின்னூட்டம் எப்படிவிட்டுப் போனது தப்பே.தயவு செய்து மன்னிக்கணும்.
இனி ஊருக்கு வந்தபிறகுதான் செய்த பிழைகளை நேர்ப்படுத்த வேண்டும்.
அன்பு வெங்கட் நன்றி மா.
@ அன்பு ஆதி,
அன்பு மாதேவி வலைப்பதிவில் ஏதோ
பிரச்சினை இருக்கிறது. அதனால் சரியாகப் பதில் கொடுக்க முடியவில்லை.
மன்னிக்கணும்.
Post a Comment