Blog Archive

Friday, January 11, 2013

அநுமன் பிறந்தநாள் மார்கழி மூலம்

Add caption
துளசியோடு அனைத்துத் தெய்வங்களும்
நம் வீட்டுச் சர்க்கரைப் பொங்கல்
அருளிய ராமனுக்கு நன்றி

 சுந்தரா
சீதை துயர் போக்கினவனே
ராமனுக்கு இன்பம் கொடுத்தவனே
பரதன் உயிர் காத்தவனே
சஞ்சீவ ராயா
அனுமனே
அஞ்சனை மைந்தா

இவ்வளவும் இதற்கு மேலும் செய்து இராமாயணத்தை வழி நடத்திச்சென்றாய்.
இன்று எம் வாழ்வு வளம் பெற வேண்டி நிற்கிறோம்.

குற்றாங்கள் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் நாங்கள்.
நீயோ குணக்குன்று.
எப்படியாவது எங்களைச் சங்கடங்களிலிருந்து விடுவித்துவிடு அப்பா.

நீயே கதி.
அனுமன்   பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் காப்பான்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

sury siva said...



// எப்படியாவது எங்களைச் சங்கடங்களிலிருந்து விடுவித்துவிடு அப்பா.

நீயே கதி.
அனுமன் பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் காப்பான்.//

அனுமத் பஞ்சரத்னத்தைப் பாடிவிட்டு நேற்று சாயந்தரம் அனுமன் உத்சவ மூர்த்தி புறப்பாடுக்கு
நேற்று மாலை நான் வழக்கமாகப் போகும் அகத்தீஸ்வரர் கோவிலை அடைந்தேன். அங்கு கோதண்டராமர்
சன்னதி முன் ஹனுமான் மூலவர் சகல விதமான மாலைகளும் துளசிதளங்களாலும் அலங்கரிக்கப்பட்டு
விராஜமாகியிருக்கிறார்.

பட்டர் ஸ்வாமிகள், இதோ ஆரம்பமாயிடும் என்றார். மணி 6.30 க்கு புறப்பாடு ஆரம்பம். திடீரென எங்கிருந்தோ
நாலைந்து பேர் உத்சவ மூர்த்தி ஹனுமாரை அழைத்துக்கொண்டு கோதண்ட ராமர் சன்னதிக்கும் ஹனுமார்
சன்னதிக்கும் இடையிலே உள்ள ஒரு ப்ளாட்பாரத்தில் வைத்து, அந்த உத்சவ மூர்த்திக்கு ஏகப்பட்ட அலங்காரங்கள்.
வடை மாலைகள் கழுத்திலே கையிலே என்று ஒரு பத்து பதினைந்து. தீப ஆரத்திகள் எடுக்கும் சமயம்
ஏகப்பட்ட கும்பல் அதுக்குள்ளே,

நான் உத்சவ மூர்த்தி பக்கத்திலேயே நின்னுண்டு, அஸாத்ய் ஸாதக ஸ்வாமின், அஸாத்ய தவ கிம் வத என்ற
ஸ்லோகத்தை சொல்லின்டு இருக்கேன்.

தூப தீபங்கள் நடக்கிறது. நைவேத்யம் எல்லாம். அங்கே நாலஞ்சு பேர் இரண்டு பெரிய மூங்கில் கட்டைகளைக்
கொண்டு வந்து உத்சவ மூர்த்திக்கு இருபக்கமும் தூக்கி பிராகாரம் வழியாக தூக்கிக்கொண்டு பொக தயார்.

அப்ப தீவட்டி வரது. அந்த பட்டர். சுத்து முத்தும் பார்த்தார். என்னைப் பார்த்தார். நீங்க புடிங்கோ அப்படின்னு
தீவட்டி யைக் கொடுத்தார். இரண்டு அடி நீளம் தான். ஆனால் என்ன கனம்.!!

அதற்கு ஒருவர் எண்ணையை ஊத்தி பத்த வைக்கிறார். நாதஸ்வரம் மேளம் கோட்ட ஸ்வாமி புறப்படுகிறார்.
நான் தீவட்டியைத் தூக்கிக்கொண்டு உத்ச்வர் ஹனுமனுக்கு முன்னாடி செல்ல பக்கத்துலே பட்டர் வர,
பின்னாடியே ஹனுமான் நாலு பிராகாரங்களிலும் புறப்பாடு ஆகிறது.

முதல் சுத்து முடிகிற நேரம். என்னால் நேற்று பிரதோஷம் ஒரு சுற்று கூட முடியல்லையே, இன்னிக்கு கையிலே
தீவட்டி வேற . முடியுமா முடியாதா என்கிற என்ணம் இரண்டாம் சுற்று வரும்பொழுது மனதை விட்டு சென்று விட்டது.

நானா தூக்கறேன். !! ஹனுமான்னா கொடுத்திருக்கிறார். அதற்குண்டான பலத்தையும் அவர் கொடுக்காமல இருப்பார் !!

மூன்று சுற்று சுற்றியபின் உத்சவ மூர்த்தி யதா ஸ்தானம் வந்து மறுபடியும் கற்பூர ஆரத்தி. எல்லாம் பிரசாத‌
வினியோகம்.

இதுமாதிரி கோவிலிலே தீவட்டி தூக்கி ஸ்வாமியோட வந்தது இந்த 71 வயசிலே முதற்தடவை.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

இராஜராஜேஸ்வரி said...

அனுமன் பிறந்தநாளில் அழகான பதிவு ..பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

அனுமன் பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் காப்பான்.//

அனுமன் நம் அனைவரையும் காக்க வேண்டும்.
அவருக்கு பிடித்த ராம நாமத்தை சொல்லி வணங்குவோம்.

ராம ராம ராம ராம ராம ராம ராம்.
ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ராம்.

ராமலக்ஷ்மி said...

அஞ்சனையின் மைந்தனை நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்.

சாந்தி மாரியப்பன் said...

ஆப்பி பர்த்டே ஆஞ்சு :-)

சர்க்கரைப்பொங்கல் பிரமாதம் வல்லிம்மா.

@சுப்பு ஐயா,.. கொடுத்து வைத்தவர் நீங்கள் :-)

ஸ்ரீராம். said...


ஆஞ்சி உம்மாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

அருமை சுப்பு சார்.
இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அற்புதமாக நடந்திருக்கிறது. தீபம் அதவும் நம் அனுமனுக்குப் பிடிப்பது
என்பது சாதாரண காரியமா. அதுவும் எவ்வளவு மெலிய உடல் உங்களுக்கு. சக்தியையும் அவர்தான் கொடுத்திருக்கணும்.மிக மிக மகிழ்ச்சி.மாமி வந்திருந்தாரா.இந்தக் கோலகலக் காட்சியைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பாரே.பிரதோஷ சிவனின் தனயன் உங்களை மகிழ்வித்துவிட்டார். உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அனுமனின் அருள் நம் அனைவரையும் காக்கட்டும் கோமதி. சங்கடஹரனாக அல்லவா அவன் அவதரிக்கிறான்.
நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

எத்தனைவித அனுமனை உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன் இராஜராஜேஸ்வரி. அதற்கே மனம் நிறைந்த நன்றிகள் மா.

வல்லிசிம்ஹன் said...

க்ஷண நேரத்தில் நம் சங்கடங்களைப் போகும் அனுமனிடம் மாறாத பக்தி வைக்கவேண்டும்.


நல்லவையே நடக்கும் அன்பு ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.ஒருவிதத்தில் என் சங்கடங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அவைதான் நம்மைக் கடவுளை நோக்கித் தள்ளுகின்றன.

உங்கள் வருகைக்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராம ஸ்ரீராமா, ஆஞ்சு,கட்டாயம் நம் சங்கடங்கள் வியாதி எல்லாம் ஓடிவிடும்படி செய்துவிடுவார். நன்றி மா.

துளசி கோபால் said...

//துளசியோடு அத்தனை தெய்வங்களும்//

ஆஹா ஆஹா......