Sunday, December 29, 2013

HAPPY NEWYEAR GREETINGS


2 Attachmentsசீரிய சிங்கம் 


Add caption


DSCF2101.JPG

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அன்பு துளசிக்கு நன்றி.

வீட்டைப் பார்க்கும்போது கண்ணில் நீர் நிறைந்தாலும் ,கவனித்துக் கொள்ளும் தோட்டக் காரருக்கும் நன்றி.

எத்தனையோ வேலைகளுக்கு நடுவில்
எங்கள் வீட்டுக்கும் போக நேரம் ஒதுக்கிய நல்ல மனங்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டும்.


Saturday, December 28, 2013

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தூ ம் லர்  தூவித் தொழுது

இந்த மார்கழிக்கு  சிங்கம் தான் முதல் தெய்வம்
இனி எப்போதும் .
அந்தக் கடைசி நாள் கூட  அவரின் அக்காவுக்கு ஏதோ வாங்கிக் கொடுத்து விட்டு நிலக்கடலைக் கடைக்குப் போய் இரண்டு பொட்டலமாக வாங்கினார்,.
ஏம்பா இரண்டு என்னோடதை எப்பப் பார்த்தாலும் சாப்பிட்டு விடறே.
அதான் இதை உணக்கி வச்சுக்கோ என்றூ  சிரித்த வண்ணம் ஓ ட்டினார் வண்டியை.
நேற்று பக்கத்தில் இருக்கும் கடையில் பெரிய கடலையை வாங்குமபோ து பையன் சொல்கிறான். அப்பா நீயும் எங்கயாவது இந்தக் கடலை யைச் சாப்பிடுப்பா.. என்னையே நினைக்கிறேனே .இந்தக் குழந்தைகள் பாடும் சிரமம்தான்.

Monday, December 23, 2013

தோட்டத்தின் புலம்பல்

Add caption


 பூக்கள்   எல்லாம்,செடிகள் எல்லாம் ,மரங்கள் எல்லாம்  உங்களைத்
தேடுகின்றனவாம்.
உரமிட்டு,
மண்ணிட்டு,களை எடுத்து  ..பாவமம்மா இந்தக் செடிகள் .வாய்விட்டுக் கேட்கமுடியாது. நாம்தான பார்த்துக் கொள்ளணும்.. என்றவர் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டீர்கள்.

யார் கனவிலாவது வந்து சொல்லிவிட்டுப்   போகவும்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, December 17, 2013

Sunday, November 24, 2013

இட மாற்றங்கள்,நிலை மாற்றங்கள்


அனைவருக்கும் நன்றி.
 என் எஜமானர் சிங்கத்துக்கும் நன்றி.


நல்ல வாழ்வு கொடுத்தார். எப்போதும் உறுதுணை அவரே.
நான் எத்ற்குமே அஞ்சாமல்  துணிவோடு செயல் பட்டேன் என்றால் அதற்குப் பின்னால்   அவரது  அனுமதியும் ஆதரவும் இருக்கும்.


என்னைவிட அவருக்கு மிகவும்     பிடித்தவர்  ஒருவர் ஸ்ரீமந் நாராயணன் என்று நான் புரிந்து கொள்ளவில்லை.
சிங்கம்  சொன்ன வண்ணம் செய்த  அருமையான ஆத்மா ஆகிவிட்டார்,.

'படுக்கக் கூடாதுய்யா. நிக்கணும். அப்படியே மறைஞ்சுடணும்'' என்பது அவர்கள் நண்பர்களிடம் அவர் சொல்வது. செய்தும் காட்டிவிட்டார். நின்றார் விழுந்தார். இறைவனடி சேர்ந்தார்.


ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.

ஒரு வாய்  தீர்த்தம் கொடுக்கவே நேரம் இருந்தது.
அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
தெரிந்த தெரியாதவர்கள் அந்த இரவு நேரத்தில்  வந்து
உதவினார்கள் அவர்களுக்கு என்றேன்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

அவர் பெற்றசெல்வங்களும் உரிய நேரத்தில் வந்துவிட்டார்கள்.
நிர்மலமான  முகத்தில்  மாறாத புன்னகையுடன் அருமையான த்ரயோதசி  திதியில்   அக்னியுடன் கலந்தார்.
என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்டார்.

எதிர்காலம்...  குழந்தைகளுடன்  கழியும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இறைவன்  உரிய நேரத்தில் எனக்கு உரிய பொறுமையையும் தைரியத்தையும் தந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.
வணக்கம்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, November 12, 2013

நவம்பர் நாட்கள் இனிமை கொடுப்பவை

என்றும் இன்பம் பெருக வாழ வாழ்த்துகள்

 ஐப்பசி அழகானதொரு மாதம்.
மருதாணி வாசம், தீபாவளி உடைகள்

சிறிய அளவேனும் வெடிக்கப்படும் பட்டாசுகள். மாடவீதியின் தோரணங்கள்.

தொலைபேசி அழைப்புகள்.
அவ்வப்போது பெய்யும் மழை.
அலுக்காமல் வெடியைக் காயவைக்கும் சிறார்கள்.

இவை எல்லாம்  ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாகக்
குறைவாகவே எங்கள் இருவருக்கும் தெரியும்.
இயந்திரத்தனமாக  மகிழ்ச்சி வேஷம் பூண்டு கொண்டு அத்தனை
உறவு நட்புகளுக்கும்   தொலைபேசி, நம்மை
அழைக்காதவர்களை அழைத்து வலிய வாழ்த்துகளை வாங்கி எல்லா வம்பும் நிகழ்கின்றன. பத்துமணி அளவில்  தொலைக் காட்சி நண்பரிடம்
அடைக்கலமாகிவிடுவோம்.

நடு நடுவில் தலை தீபாவளித் தம்பதிகள் வந்து ஆசி வாங்கிச் செல்வார்கள்.

இவ்வளவுக்கு மேல் எனக்கு மனதில் நிற்பது என் தலை தீபாவளியும், எந்த நேரத்திலும்  பிறக்கத்  தயாராக   இருந்த எங்கள் முதல் சிசுவும்,
அதற்காகச் சேலத்திலிருந்து வந்திருந்த அவன் தந்தையும்,
காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்.
அடுத்த கணம் ஆரம்பித்த    வலி அடுத்த நாள் காலையில்
எங்கள் முதல்  புத்தம்புது வாரிசை,புதல்வனைக் கொடுத்தது.

மருத்துவமனையில் நானும் அவனும் மட்டுமே.
அவ்வப்போது வரும் தாதியர்,
ஐய்ய பிள்ளையைத் தூக்கக் கூடத் தெரியலையேமா.
இத்யாதி இத்யாதிகளைக் கடந்து
நானும் பிள்ளையைப் பேணினேன்:)
பிறகு வந்தனர் பெற்றோரும் உறவுகளும்.
அடுத்தநாள்  நானே மருத்துவமனையில்
கேட்டுக் கொண்டு முன்னறிவிப்பு இல்லாமல்
மருத்துவமனை   ஆம்புலன்சில் வீட்டுக்குப் பசுமலைக்கு வந்து சேர்ந்தேன்.

அம்மா பாட்டி எல்லோரும் ஆரத்தி கரைக்க ஓட ,அப்பா என்னைப் பெருமிதமாகப் பார்க்க,

நிம்மதியாகத் திரும்பிச் சென்றது  ஆம்புலன்ஸ்.

பதினோராம் நாள்  மாமியார் புது உடைகள் கழுத்து,கைகள் கால்களுக்கெல்லம் பொன் கொண்டுவர
த்வாரகாதீசனின்  நாமம்  அவனுக்குச் சூட்டப்பட்டது.

அன்பு மகனே எங்கள் மனம் நிறைய மகிழ்ச்சியை எப்பொழுதும் கொடுக்கிறாய்.
எப்பொழுதும் நீயும் உன் குடும்பமும் சகலவிதமான
சுகங்களுடனும் ஆரோக்கியத்துடன்  இருக்க எங்கள் ஆசிகள் .
ஹாப்பி பர்த்டே பாபு.

அடுத்தவர் என் அன்பு நாத்தனார். 79 வயது பூர்த்தி செய்கிறார்.
அவருக்கும் இந்த வாரம்  பிறந்தநாள். வாழ்வில் சகலவிதமான உயரங்களையும் எட்டிப் பிடித்த நல் ஆசிரியை.
அவர் பெயர் சொல்லிக் கொண்டு உலகம் முழுவதும் உலவும்   மாணவர்கள்
அவர் போதித்த  பாடங்களைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள்.
அன்பு அக்கா ஸ்ரீமதி ஹேமா ஸ்ரீனிவாசன்
தங்களுக்கும் எங்கள் இருவருடைய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
இணைய நட்புகளின் வாழ்த்துகளும் வந்து சேரும். நன்றி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, November 11, 2013

பார்த்ததில் பிடித்தது

உலகத்திலியே சந்தோஷமாக  இருக்கத் தோதான இடமாம்  பிபிசி சொல்கிறது
கோடைவிடுமுறைக்குப் போகலாமா
கொண்டாட்டம்
ஆநந்தம் தரும் இடமாம் ஜெனிவா.நானும் ஒத்துக் கொள்கிறேன்
பஹாமா  கடற்கரை
முருகா என்றழைத்தபடி வானேகுகிறதோ!!!
வெள்ளை அன்னம் உண்டு. வெள்ளை மயிலும் உண்டோ?
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, November 07, 2013

187 ரிகி மலைக்குன்றுகள்(2008)

ம்ம்ம்ம்.நல்ல காஃபி,உருளை வறுவல், பெரிய மெது மெது ரொட்டி,கிண்ணம் நிறைய வெண்ணெய்.
பற்சக்கிரம் பொருத்தப்பட்ட  முதல்  ரயில்
Add caption
Add caption

ஸ்விஸ் பயணத்தின் போது டூர் போன இடங்களில் இந்த ரிகி மலையும்  ஒண்ணு.
ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பாதைகள் உண்டு என்றாலும்
உச்சியில் சென்று கிடைக்கும் வியூ பிரமாதம்.
வாலிபர்கள் கிழவர்கள் இங்கே ஏறலாம் என்பதற்காக செத்துக்கி வைத்த சிற்பம் புகைப்படத்தில் இருக்கிறது.
எப்போதும்போல ஒரு பெரிய மேப் வைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து தெரியும் மற்ற
சிகரங்களை அடையாளம் காட்டும் வண்ணம்
திசை, படம் பெயர் எல்லாம் அதில் குறித்து வைத்து இருக்கிறார்கள்.
முதல் முதல் இங்குதான் மலை மேல் ரயில் வந்துதாம்.
இங்கெ நம்ம ஊரு நீலகிரி-குன்னூர் ரயிலைப் பற்றியும் படித்ததுதான் எங்களுக்குப் பெருமையாக இருந்தது.


Wednesday, November 06, 2013

தொலை காட்சியில் பிடிபட்டவை

யார் அங்கே  ,இந்தப் போஸ்  போதுமா!!!
என்ன அதிசயம், இப்படி இளைச்சிட்டியே:)
காட்டுப் பூனை!!
மிரட்டும் போஸில்    இன்னோரு பறவை
நம்ம  இமயமலையின் கிளிகள் அங்கே ஏன் போயின?
மெதுமெதுவே மலரத்தொடங்கும் மொட்டுகள். மயக்கும் வண்ணம்
இது என்ன பறவையோ.அழகாக இரை தேடிக் கொண்டிருந்தது.
உறைந்த அருவிகள்
பனியிலிருந்து வெளிவந்திருக்கும் லைட் ஹவுஸ்

 பிராணிகள் உலகம்,டிஸ்கவரி   சானலில் சில நிமிடங்கள் செலவழிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

அற்புதமான படப் பிடிப்பு.
நேற்று நான் பார்த்தது  Wild Europe.
கடுங்குளிரில் மிருகங்கள் பறவைகள் 
சமாளிக்கும் அழகு. அவைகளை வெல்லும் பெரிய
பிராணிகள்.

உறையும் பனி. அதில் அநாயாசமாக   வளைய வரும் ஆட்டர்.
புதர் எலிகள்,
பனியை உலுக்கி எடுக்கும் கலைமான்.
ஒரு அதிசய உலகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, November 04, 2013

செட்டி நாட்டின் உபசாரம்,உதார குணம்

Add caption

Adhirasam

 பார்த்தாலே வாயூறும்   பல்காரங்கள் .! எனக்கு வீடு  தேடி வந்தன.
அதிசயம் என்ன என்றால் முற்றும் தொடர்பே இல்லாத
ஒரு பெண்ணிடமிருந்து.
யார்?
நான் மாதமொருமுறை மருந்து வாங்கும் லக்ஷ்மி மெடிகல்ஸின் முதலாளி அம்மா.

அங்கே போகும்போது அரட்டை அடிப்பது வழக்கம். அப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த செட்டிநாடு  பலகாரங்களைப் பற்றியும் அவை ஒருமாதம் வரை கெடாமல் இருக்கும் என்கிறதையும் அவர்களிடம் சொல்லும்போது சிரித்தார்கள்.
எங்க ஆச்சி காரைக்குடியிலிருந்து செய்து அனுப்பிவிட்டார்கள்
என்றார்.அப்ப நீங்க செட்டிநாடா?
ஆமாம் பரிபூர்ணமா:)
ஓ.கொடுத்துவைத்தவர்தான்.
அம்மா கையால் பட்சணம் என்றால் அமிர்தம் என்று சொல்லியபடி
மருந்துகளை வாங்கிக் கொண்டு  ஹாப்பி தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வந்த பத்து நிமிடங்களில் தொலைபேசி அவர்களிடமிருந்து.
அம்மா  தீபாவளியன்று  எங்க வீட்டுச் சாப்பாடு உங்களுக்கு வரப் போகிறது என்று!!
என்னம்மா?
நீங்க சொன்னதிலிருந்து உங்களுக்கு ஏற பலகாரம் அனுப்ப ஆசை.
தயவு செய்து ஏற்றுக் கொள்ளணும். அம்மா.''
என்றதும் எனக்குத் தலைகால் புரியவில்லை. என்ன  ஒருஅதிசயம்.
இப்படிக்கூட யாராவது இருப்பார்களா என்று அடுத்த நாளுக்குக் காத்திருந்தேன்.
தொலைபேசி அழைப்புகளுக்கிடையே 
வாசலில்  அழைப்பு. அம்மா கொடுத்தனுப்பினாங்க
என்று ஒரு பெரிய பை. அதில் அழகாக டப்பர்வேரில்
பார்சல் செய்த குழிப்பணியாரம்,பால்பணியாரம், கார சீயன்,இனிப்பு சீயன்,
அதிரசம்,
தேன்குழல்.!!!
சாமி.!!!!!

சிறிது நேரம்  கழித்துதான்  அவர்களுக்குப் ஃபோன் செய்தேன். அவர்களுக்குக் கொடுத்துவிட்டதில் சந்தோஷமாம். !

எனக்குப் பேச்செ எழவில்லை.

எவ்வளவோ வேண்டாத செய்திகள்     காதில் விழுகின்றன.
இது போல நல்ல நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கண்ணில் படத்தான்
தெரிவதில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு என் பெண் வயதுதான் இருக்கும்.

வாடிக்கையாளர்,விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது இந்நிகழ்ச்சி. மறக்க முடியாதது
நன்றி ப்ரவீணா.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்