Blog Archive

Saturday, December 29, 2012

பெண்



திரௌபதியின் கண்ணீர்  ஒருகோடி மனிதர்களை அழித்தது.
****************************************************************8


அந்தக் காலத்திலும் கொள்ளை கொலை இருந்திருக்கலாம்.
பிஞ்சுகளையும்,பேதை,பெதும்பைப் பருவம் என்றேல்லாம் பார்க்காமல்  சிதைப்பவர்கள்
யார்.
அவர்களும் யாருக்கொ மகன்,சகோதரன்,தகப்பன்.
இந்த வெறி துச்சாதனன் துரியோதனன் காலத்தோடு போனது
என்று நினைத்ததுதான் நம் தவறு.
மது எனும் அரக்கனை மாதவன் அன்று ஒழித்தான்.
மதுவினால் வாழ்பவர்களை    அப்புறப்படுத்த யார் வருவார்.
இன்று  உலகத்தில் உள்ள அனைத்து ஆண்மகன்களும் தன் குழந்தைகளைக் காக்க
  மாதவன்களாக மாற வேண்டிய நிலை.


மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்தபொன்னாடு
பாரத நாடு பழம் பெரும் நாடு
பாடுவோம் ஈதை இதற்கில்லை ஈடே.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

Geetha Sambasivam said...

அப்படிப் பாடும் நிலை வரட்டும். நம் நாட்டில் ஒரு இளம்பெண் இரவு பனிரண்டு மணிக்கும் சர்வாலங்கார பூஷிதையாகத் தன்னந்தனியாகப் போக முடிகிறதோ அதுவே ராமராஜ்யம் என்றார் காந்தி.

ஆனால் அவர் வழி வந்த தற்கால அமைச்சர்களோ தங்கள் பணியின் நிமித்தம் கூடப் பெண்கள் இரவுகளில் வெளிவர வேண்டாம் என்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மாணவி இரவில் வெளியே வராமல் மருத்துவம் கற்பது எப்படி? இது அந்த அமைச்சர்களுக்குப் புரியாமல் போனது எப்படி? கேள்விகள், கேள்விகள்! :(((((((((

சீனு said...

மா தவம் செய்து பெற்றெடுத்த பிள்ளைகளை காமுகன் கரம் நசுக்கிட
" பெண்மை என்ன பாவம் செய்ததோ"
வேதனை

பால கணேஷ் said...

தன்னை ஈன்றெடுத்து வளர்த்த. தன்னுடன் இணைந்து தன் குலம் வளர்க்கும் பெண்மையை மதிக்கத் தெரியாமல் காமப் பொருளாய்ப் பார்க்கும் மிருகங்களை வதம் செய்ய நிறைய மாதவன்கள் தேவைதான் இன்றைய உலகில். மனம் கனத்துத்தான் போகிறது வல்லிம்மா இதுபோன்ற செய்திகள் நம்மை அடைகையில்.

வல்லிசிம்ஹன் said...

நல்லவேளையாக பாரதியார் இப்போது இல்லை.

மனம் கசந்துதான் அந்த வரிகளை எழுதினேன்.ஏன் இத்தனை வன்மை பெண்களுக்கெதிராக?

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்கும் விந்தை மனிதர்களாக மாறிவிடுவோமோ கீதா,.
அமைச்சர்கள் வார்த்தைகளால் வதம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

பெண்கள் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
மொத்தத்தில் மனக் குடைச்சல் தான் மிச்சம் சீனு.
எங்கள் வீட்டில் உதவி செய்பவருக்கு மூன்று பெண்கள் 12,10,6 வயதில். கோழிக்குஞ்சுகளைக் கூட்டிச் செல்வது போல் பள்ளிக்குக் கூட்டிச் சென்று அழைத்துவருகிறார்.

சாந்தி மாரியப்பன் said...

மனம் கசந்துதான் போகிறது வல்லிம்மா.யாரை நோவது :-(

கோமதி அரசு said...

இன்று உலகத்தில் உள்ள அனைத்து ஆண்மகன்களும் தன் குழந்தைகளைக் காக்க
மாதவன்களாக மாற வேண்டிய நிலை.//

எல்லா ஆண்மகன்களும் மாதவனாக இருந்து விட்டால் நலமே!