Blog Archive

Wednesday, December 19, 2012

கண்ணனும் மழையும்

 
                                  ஆழிமழைக்கண்ணா!



எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்  கோதைக்கு. கருமை நிறத்தில் எதைக் கண்டாலும் கண்ணன் அதில் இருப்பதாகநினைக்கிறாள். நம்புகிறாள்.  முந்தைய   பாடலில் சாற்றி நீராடச் சொன்னாள். நீர் வேண்டாமா?  அதுவும்  ஐப்பசி கார்த்திகை  முடிந்துவிட்டது.   மார்கழியிலும் மழைபெய்தால்தான் குளங்கள் ஏரிகள் நிறையும்.  இப்பொழுது நம் தமிழ்நாட்டிலேயே தண்ணீர் தட்டுப்பாடு   வருவதற்கான அறிகுறிகள் வந்துவிட்டன.                                              

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பாடும்  ஆண்டாள்
நீலவண்ணக் கண்ணா  வாடா
அந்நாளிலும் வரட்சி வந்திருக்க வேண்டுமோ  தெரியவில்லைஅவள் வானத்தைப்  பார்க்கும்போது நீலவண்ணத்தில் கண்ணன் தெரிகிறான்  அவனிடம் முறையிடுகிறாள். கண்ணா  ஆழிமழைக்கண்ணா நீ ஒன்று செய்ய வேண்டும். மழை பெய்ய வைக்கவேண்டும். உன் கருநிற மேனியைப் போலக் கறுத்த மேகங்கள்   திரண்டு    ,உன் கைச்  சக்கிரத்து ஆழ்வார்போல மின்னி,உன் கை வலம்புரி  சங்கு போல  இடி முழக்கம்  அதிர வேண்டும். உன் கை சார்ங்கம் எனும் வில்லில்  இருந்து புறப்படும் பாணங்கள் போல மழைச்சரங்கள் பூமியை நனைக்க வேண்டும். மழையும் பெய்யவேண்டும். நிறையவும் பெய்ய வேண்டும். நாங்கள் வாழும் வகையில் அழிவு காட்டாத   மழையாகவும் இருக்கவேண்டும்.  அந்தக் குளிர்ந்த நீரில் நாங்கள் மனதார நீராட வேண்டும்  ,உன்னைதொழ வேண்டும் என்று வேண்டுகிறாள்.       இதோ பாடல்    
  இதோ பாடல்  

ஆழி மழைக் கண்ணா  ஒன்று நீ கைகரவேல்                                                      
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி                                                                                 
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்க்கறுத்து                                                                    
 பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்                                                                               
ஆழிபோல் மின்னி  வலம்புரி போல் நின்றதிர்ந்து                                                                    
தாழாதே சார்ங்கம் உதைத்த  சரமழை போல்                                                                        
 வாழ உலகினில் பெய்திடாய்  நாங்களும்                                                                                
 மார்கழி நீராட  மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.                                                                       
ஆண்டாள் திருவடிகளே சரணம்.உன்கருணையால்
எங்களுக்கும் மழை வேண்டும் நல்மழை வேண்டும்.

20 comments:

கவியாழி said...

\\ஆழிமழைக்கண்ணா நீ ஒன்று செய்ய வேண்டும். மழை பெய்ய வைக்கவேண்டும்// ஆம் இப்போதுதான் வேண்டும்

வெங்கட் நாகராஜ் said...

மார்கழியின் ஒவ்வொரு நாளிலும் ஒரு சிறப்புப் பகிர்வு. ரம்யமாக இருக்கிறது வல்லிம்மா.... தொடரட்டும் பகிர்வுகள்.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல மழை பெய்ஞ்சு நாடு செழிக்கட்டும் ஆண்டாள் வழிபட்ட கண்ணன் அருளால்.

பாடும் ஆண்டாள் கொள்ளையழகு. டிவியில் பிடிச்சதா வல்லிம்மா?

சாந்தி மாரியப்பன் said...

பத்திகள் லெஃப்ட் அலைன்ல இருக்குதான்னு செக் செய்யுங்க வல்லிம்மா. இல்லாவிட்டால் அத்தனையையும் கட் செய்து நோட்பேடுக்குக் கொண்டுபோய்ட்டு மறுபடியும் அங்கிருந்து இங்கே கொண்டு வந்து பேஸ்ட் செஞ்சு பாருங்களேன்.

அப்பாதுரை said...

படங்கள் பிரமாதம்.. அந்தச் சிறுமி!

Geetha Sambasivam said...

இன்னிக்குக் காலம்பர சிந்துஜா (விஜய் டிவி???) விளக்கம் சொல்லி இருக்காங்க. முதலில் இருந்தே போடலை. நாங்க போட்டப்போ முடியும் நேரம். :( அதுக்குள்ளே நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு திருப்பாவைக்கும் ஒரு பதிவா? வாழ்த்துகள். வையத்து வாழ்வீர்களைக் காணோமே? எனக்கு வரலையோ?

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு கண்ணதாசன். உங்கள் பெயரிலியே ஆழி இருக்கிறது!மழி பெய்யட்டும். எல்லோரும் வேண்டுவது அதுதான். வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

முடியும் வரை எழுதலாம் என்று நினைக்கிறேன் வெங்கட். முதல் இரு நாளும் போடத் தெம்பில்லை. இனிச் சூடுபிடிக்கிறதா பார்க்கலாம்.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் போன வரட விஜய் டிவியில் பிடிபட்ட ஆண்டாள்:) என்ன டெடிகேஷன் பாருங்க. மழை வேணும்மா. இப்போதே வெயில் ஆரம்பித்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொன்ன மாதிரியே செய்தேன்மா சாரல். சரியாகிவிட்டது. மிக மிக நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அந்தச் சிறுமி ஸ்ரீரங்கத்துப் பெண். ஆண்டாள் வேஷம் போட்டுக் கொண்டு பாடித்து போன வருஷம் விஜய் டிவில:) துரை.

வல்லிசிம்ஹன் said...

நான் பொதிகை பார்க்கிறேன் கீதா.ராமரையும் விடவேண்டாம். மாம்பலம் சகோதரிகளின் பாவைப்பாடலையும் கேக்கலாம்.
மார்கழிப் பதிவுகள்னு ஆரம்பிக்கவில்லை. ஓங்கி உலகளந்த ரொம்பப் பிடிக்கும். அதை எழுதினேன்.மழைக்கண்ணன் பிடித்துக் கொண்டான் கீதா.

இராஜராஜேஸ்வரி said...

கோவையில் மழை வேண்டி இந்தப்பாசுரத்தை கோவிலில் பலமுறை பாடினோம் ..

அருமையான மார்கழிப்பதிவுக்குப் பாராட்டுக்கள் ..

கோமதி அரசு said...

மார்கழி 1 ம் தேதியே எங்கள் ஊரில் லேசாக மழை பெய்தது.

எல்லோரும் பாடி மழை பெறுவோம். நிறைய மழை பெய்தாலும் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து ஆழி மழைகண்னன் நம்மை காப்பார்.


பதிவை தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாசுரத்துக்கு நல்ல பலன் உண்டு முன்பு கேள்விப்பட்டு இருக்கிறேன்,. இப்போது நீங்கள் நிருபித்து
இருக்கிறீர்கள் இராஜராஜேஸ்வரி. கூட்டுப் பிரார்த்தனை எப்பொழுதும் பலிக்கும்.வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,.
இந்த நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றி வருகிறது.முன்னெல்லாம் பொங்கல் கோலம் போட்டதும் மழை வரும்.உங்கள் ஊரில் மழை பெய்யவேண்டும். நிறைய வேண்டும்.
செய்திகளில் விவசாயிகளின் வருத்தத்தைப் பார்ப்பது ரொம்பக் கொடுமையாக இருக்கிறது.

மாதேவி said...

மார்கழி மாத சிறப்புப் பகிர்வு அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. நீங்கள் எனக்கு ஒரு லின்க் அனுப்பி இருந்தீர்கள். என்ன வென்று தெரியாமல் எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டு வந்தேன்:)

ஸ்ரீராம். said...

மாதம் மும்மாரி பெய்ய வேண்டும் என்று மன்னர்கள் யாகங்கள் செய்வதில்லையா? விரும்புவதில்லையா? மழை வேண்டாக் காலம் எது?

"நீலவண்ணக் கண்ணா வாடா....

காவிரியில் மழையைக் கொடடா.."

ராமலக்ஷ்மி said...

கண்ணன் அருளால் பொழியட்டும் மழை.

பாடும் ஆண்டாள் பரவசம்:)!