பாடும் பாவை |
இதோ இன்னோரு மார்கழித் திங்கள். மாயனை மணிவண்ணனைப்
பாட,நினைக்க,வணங்க இனிமையான முப்பது நாட்கள் முப்பது பூக்கள்
முப்பது பாக்கள் என நேரம் காத்திருக்கிறது. நாமும்கண்ணனைப் பாட இனிதாக காலைப் பொழுதில் விழித்து எம்பாவையாம் ஆண்டாளை முன்னிட்டு,அவளை வழிபட்டு மாதவனையும் அடைய முயற்சிக்கலாம்.
26 comments:
நல்ல படங்கள்...
அழகான மலர்கள் ஆண்டாள் சூடிட.
மார்கழிப்பூக்கள் அனைத்தும் அழகோ அழகாகச் சிரித்தபடி ..............
சிறப்பான பகிர்வு. ;))))) நன்றி !!
மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... :)
நல்ல படங்கள். பகிர்வுக்கு நன்றி.
படங்களும் மாயணின் மகிமையை போற்றுவதும் ரசிக்கக்கூடிய அம்சம்!
ஆஹா..... மார்கழி பிறந்தாச்சா!!!!!
தினமும் திருப்பாவை கேக்கும்போது எங்களையும் நினைச்சுக்குங்கப்பா.
வாங்க ஸ்கூல்பையன். மிகவும் நன்றி
ஆமாம் ராமலக்ஷ்மி.அவளுக்கில்லாத மாலையா. பூமாலை பாமாலை
எல்லாம் சூடவும் சூடிக்கொடுக்கவும் பிறந்தவள் அவள் ஒருத்தியே.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார்.
ஆண்டாளுக்குப் பிடித்த பெயரையும் வைத்துக் கொண்டு காவேரி தீரத்திலும் வசிக்கிறீர்கள்.
இந்த மாதம் இனிதே செல்ல அவள் துணை இருப்பாள்.
வரணும் வெங்கட்.ஸ்ரீரங்கத்தை மனத்தில் இருத்தி திவ்யதம்பதிகளைத் தினமும் வணங்கும்
பாக்கியம் நமக்கு வேண்டும்.
வாங்க தனிமரம். மாயனை வணங்குவதால் நம் துன்பம் எல்லாம் மாயமாகும்.நன்
துளசி இல்லாத கண்ணனா.
துளசி கோபால் இல்லாத மார்கழியா.
பத்மநாபன் எழுந்து நம்மைக் கவனித்து அருள் செய்யட்டும்.
மார்கழி மாதம் முப்பதும் தப்பாமல் அவன் புகழ்பாட இறைவன் அருள வேண்டும்.
உங்கள் மார்கழி பூக்கள் அழகு, அற்புதம்.
மழை பெய்து பயிர் செழித்து உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ நானும் உங்களுடன் சேர்ந்து பிராத்திக்கிறேன்.
மலர்களிலே பல நிறம் கண்டேன்...
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்....!
//பத்மநாபன் எழுந்து நம்மைக் கவனித்து அருள் செய்யட்டும். //
ஆஹா... இது!!!! இப்போதைக்கு அந்த 'எழுந்து'......... அந்த லக்ஷணமே இல்லை.
இதுதான் போகாத ஊருக்கு வழி சொல்றது கேட்டோ:-))))
ஆஹா ஸ்ரீராம்.எல்லாவற்றிலும் பாடல்கள் கவிதைகள்.இசைவிழாவே இங்க நடக்கிறதும்மா.
துளசிமா. அவன் படுத்திருந்தாலும் எழுந்திருப்பான்.அழித்த குரலுக்கு வருபவந்தான் கண்ணன். நியூசி வரக் கொஞ்சம் நேரம் எடுக்கிறானோ. இருக்காது. சூரியனே அங்கதானே பயணத்தை ஆரம்பிக்கிறான். சூரியநாராயணனும் அவரோட வந்துடுவாரே.அதனால் கவலையே கிடையாது.
சூடிக்கொடுத்த மலர்க்கொடியை பாடும் மாதம் இது.
உங்கள் மலர்களும் அணிவகுத்து நிற்கின்றன.
கலர் கலராக் பூக்கள்
அழகான பதிவு
மார்கழியை மலர்களுடன் வரவேற்று இருக்கிறீர்கள் வல்லி!
பாராட்டுக்கள்!
அன்பு கோமதி நல்ல பிரார்த்தனை.
மழைதான் வேண்டும்.அதற்கும் அவனே அருள வேண்டும்.
அன்பு மாதேவி அன்புடையோர் அனைவரும் சேர்ந்து பிரார்த்திக் கொள்வோம் எல்லோரும் வாழ்வேண்டும் என்று..
வரணும் திரு .முருகானந்தன்.
அமைதியும் இன்பமும் எங்கும் நிலவவேண்டும்.
அன்பு ரஞ்சனி பங்களூருவில் உண்மையாகவே குளிரும் மார்கழி. எங்கள் ஊரில் வெய்யில் மார்கழி.
இரண்டையும் மாதவன் ரசிப்பான்.
நன்றி மா.
மார்கழிப்பதிவுபோடறீங்களா? இப்போத் தான் தெரியும். மலர்களால் ஆன மாலையும், உங்க பதிவும் அருமை.
இப்படி நினைத்து ஆரம்பிக்கவில்லை கீதா. தானாகக் கோதை எழுதிக் கொள்கிறாள்:)
Post a Comment