பிம்பம் தெளிவாகத் தெரிவது நிஜத்தின் நேர்மை |
15/12/2011
சலனமில்லாத குளமாக இருக்கத்தான் ஆசை.
விழும் கற்கள் காயப் படுத்தும்
ஆழத்துக்குப் போய்விட்டால்
இல்லை வேதனை.
பெருமழை பெய்யும்போது கலங்கும் நீர்ப்பரப்பு
தன்னைச் சுற்றி நிற்கும் மரங்களுக்கு
நீர்வளம் கிடைக்க மகிழும் குளம்.
எனக்கும் குளமாக இருக்கத்தான் ஆசை.
.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
கற்கள் காயப்படுத்தாத ஆழம்ன்னு சொல்ல வந்தீங்களா? அருமையான படம்!
சிந்திக்க வைக்கும் வாசகங்கள்.
சிந்தை மயக்கும் அழகான காட்சி.
/எனக்கும் குளமாக இருக்கத்தான் ஆசை./
கவிதை!
மற்றவர்களின் சோகத்தைப் போக்குபவன் - சந்தோஷமாக வைப்பவன் - தனிமையில் வாட முடியுமா? அவர்களின் சந்தொஷத்துக்காகத் தன உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லையோ? நிஜத்தின் நேர்மையில் பிம்பத்தின் தெளிவும் அருமை.
//விழும் கற்கள் காயப் படுத்தும்
ஆழத்துக்குப் போய்விட்டால்//
காயப் படுத்தாமல்
ஆழத்துக்குப் போய் விட்டால்....?!
காயப்படுத்திய பிறகு ஆழத்துக்குப் போய்விடவேண்டும்:)
மேலே வரவே கூடாது:)
நன்றி ராமலக்ஷ்மி.
ஆனந்தமோ வருத்தமோ
புத்தியைத் தூண்டுகிறது. இதைப் பதிந்துவிடு என்று.போன வருடம் நோட்பாடில் குறித்த வரிகள். கவிதையா? :)
காயப்படுத்தாமல் போவதில்லை. ஸ்ரீராம்.
நாம் நேசிக்கும் ஒருவரோ ஒருத்தியோ
கோபத்தில் வீசும் கோபக் கற்கள்
ஆழத்துக்குப் போகும் வரை உறுத்தும்.
சிலநாட்களில் மறக்கும் வடு இருக்கும்.
விட்டுக் கொடுத்துப் போகும் போதும் சிலர் அதை பலவீனம் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
நல்லவர்களுக்கு காலம் இல்லை. நல்ல பாம்பு போல சீறவும் தெரிய வேணும்:)
கவிதை அருமை. காயப்படுத்தாது விடுவதில்லை கற்கள்....
கவிதை அருமையாக இருக்கிறது.
விட்டுக் கொடுத்துப் போகும் போதும் சிலர் அதை பலவீனம் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
நல்லவர்களுக்கு காலம் இல்லை. நல்ல பாம்பு போல சீறவும் தெரிய வேணும்:)//
உண்மைதான்.
யாராவது உங்களை புரிந்து கொள்ளாமல் நோகடித்து விட்டார்களா?
படித்தவுடன் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை.
குளமாகவே இருந்துவிடுங்கள் வல்லி.
உண்மைதான் வெங்கட். எனக்கு மனிதர்களைப் புரிந்து கொள்வதே சிரமமான காரியமாக இருக்கிறது. நல்லது என்று நினைத்து வாயைத் திறந்தால் தப்பாகி விடுகிறது. அப்படி ஒரு வருத்தத்தில் எழுதின வரிகள் அவை.
பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்வாங்க இல்லையா கோமதி:)அது அத்தனை உண்மை இல்லைன்னு தோன்றுகிறது!!!
அன்பு ரஞ்சனி, சொற்களும் கற்களும் வரும்போது நாம எப்போதாவது யாரையாவது சொல்லி இருப்போம் என்று தோன்றும். நாம் சொல்லாத ஒன்றை எதிரில் இருப்பவர் தப்பாகப் புரிந்து கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்.? சலனமில்லாமல் எழுதிவிட்டு மௌனக் குளமாகி விடவேண்டும். :) இவ்வளவு அன்பு எனக்குக் கிடைக்கிறதே உங்களிடமிருந்து. இதுவும் ஒரு பாக்கியம். சாந்தோஷ அலைகளுக்கான காரணம். நன்றிமா.
கொஞ்ச நாள் முன்னர் 'உள் பெட்டியிலிருந்து' பகுதியில் வந்த ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்! ரஞ்சனியம்மாவுக்கு உங்கள் பதில் படித்ததும் எனக்கு அந்த வரிகள் நினைவுக்கு வந்தன.
"நான் என்ன சொன்னேன் என்பதற்கு மட்டுமே நான் பொறுப்பு; நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதற்கு அல்ல"
அப்புறம் பைபிளில் ஒரு வாக்கியம் உண்டே..."ஆண்டவரே இவர்கள் என்ன செய்கிறார்கள் (சொல்கிறார்கள்) என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். இவர்களை மன்னியும்..." :))
உண்மைதான் ஸ்ரீராம்.
அவர்கள் நினைப்பதற்கு நாம் பொறுப்பல்ல.
ஆனால் மனதோடு இருக்கும் அகம்
அவர்கள் நம்மைத் தப்பாகப் பேசுவதை ஏற்றுத் துன்பப்படுகிறது.
அப்புறம் சே! சொன்னது யாரு நமக்கு வேண்டியவர். நமக்கு நல்லன செய்தவர்.
அவருக்கோ அவளுக்கோ அன்று நல்ல மூடு இல்லை, என்று சமாதானப் படுத்திக் கொண்டுவிட்டேன்:)
என்னைவிடச் சிறியவர்களை நானே ஏற்றுக் கொள்ளாவிட்டால் அப்புறம் பெரியவள்
என்று சொல்வதில் என்ன லாபம். மிக மிக நன்றி அப்பா.
என்னஆச்சு? எல்லாம் நல்லபடியாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு....
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே....
க'விதை' அருமை!!!
அது வாங்கிக் கட்டிக் கொண்டது போன வருஷம்.
அதை மீண்டும் செய்தால்,?
வேண்டாம் மறந்து போயிடறேன்:)))
ஓக்கே ஓக்கே...டேக் கேர்.
டேக்கன் கேர்:))))))))))))))))))))))0
Post a Comment