கதிரவன் கிரணங்கள் வண்ணமூட்டம் பச்சை இலைகள் |
நம் ஊரின் ஃபால் கலர் |
காலை நம்வீட்டில் |
கிறிஸ்மஸ் மரம் |
ஆஸ்பத்திரி மீன் தொட்டி |
சிங்கத்தின் அக்கா சற்றே வயதானவர். பலவருடங்களாகச் சர்க்கரை நோயில் அவதிப் பட்டாலும் வெளியே போக வரும் வழக்கம்
என்று உற்சாகமாக இருந்து வந்தார்.
இப்பொழுது ஆறுமாதமாக வெளியே வர விருப்பம் இல்லாமல் சோர்வாகவே இருந்தார்.
எனக்கு வயசாகிவிட்டது நீங்க எல்லாம் என்னை வந்து பாருங்கள்
என்று சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென்று உடலில் சோர்வு அதிகமாக,
வைத்தியரை வரவழைத்தால்
கூப்பிடு ஆம்புலன்சை, இஸபெல்லில் சேர்த்தால்தான் சரிப்படும்.
என்றார் டாக்டர் நம்பி. நம் பேராசிரியர் மு.வரதராசனாரின் புதல்வர்.
வெகு கூர்மையாகக் கவனம் வைத்து நோயை அணுகுபவர்.
சுற்றி இருக்கும் அநேக ஏழைகளுக்கு வைத்தியம் செய்பவர். எப்பொழுதும் அவர் வைத்தியசாலையில் கூட்டம் இருக்கும்.
பரம்பரையாக அவரிடம் வைத்தியம் செய்துகொள்பவர்கள் கணக்கில் அடங்க
மாட்டார்கள்.
என் நாத்தனாருக்கும் அவர் கணவருக்கும் இவரே வைத்திய தெய்வம்.
அவர் சொன்ன வார்த்தையை மீறமுடியாதே. உடனே இஸபெல் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் விரைந்தோம்.
அங்கே இடமே இல்லை. அவ்வளவு நோயாளிகள்.
பிறகுதான் முந்தைய தேவகியும் இன்றைய மீனாக்ஷி ஸ்பெஷாலிட்டி மருத்துமனையாகவும் இருக்கும் இடத்தில் அறை கிடைத்து வந்தோம்.
கால்கள் துவண்ட நிலையில் அவருக்கு உடனடியாக அளிக்கப் பட்ட
சிகித்சை பலனளித்தது,.
மறைந்திருந்து தாக்கும் நோய் என்று சும்மாவா சொன்னார்கள்.
இப்பொழுது தேறி வருகிறார்.இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்குச்
செல்ல அனுமதி கிடைக்கலாம்.
தானாக நடந்தால் மட்டுமே அனுமதி:)
அதற்குத் தேவையான சக்தி வரவேண்டும்.
கடவுள் காக்க வேண்டும் .
மருத்துவமனையில் எடுத்த படங்களுடன், இன்று
காலைக் கதிரவன் வண்ணங்களையும் படம் எடுத்தேன்.
பாதிநேரம் அங்கேயே செல்வதால் கணினி இணையம் இரண்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டன.:)
இனியெல்லாம் சுகமே.
அப்பப்போ பகவான் நான் இருக்கிறேன் கொஞ்சம் நினைவில் வை என்று சொல்வதை நினைவில் வைக்கவேண்டும். பயத்தைக் கொடுப்பவனும் அவனே பயத்தை நீக்குபவனும் அவனே.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
27 comments:
தங்களின் நாத்தனார் நலமடைய பிரார்த்திக்கிறேன் அம்மா.
தங்களின் நாத்தனார் நலமடைய பிரார்த்திக்கிறேன் அம்மா.
என் பிரார்த்தனைகள்.
என்னுடைய பிரார்த்தனைகளும்.
//பயத்தைக் கொடுப்பவனும் அவனே பயத்தை நீக்குபவனும் அவனே.//
ரொம்பச் சரியாச்சொன்னீங்க வல்லிம்மா.
அப்பப்போ பகவான் நான் இருக்கிறேன் கொஞ்சம் நினைவில் வை என்று சொல்வதை நினைவில் வைக்கவேண்டும்.
தங்களின் நாத்தனார் விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்..
நன்கு குணமடைய என் பிரார்த்தனைகளும்.
பயத்தைக் கொடுப்பவனும் அவனே பயத்தை நீக்குபவனும் அவனே.//
உண்மைதான் அக்கா.
உங்கள் நாத்தனார் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.
நம்பிக்கையுடன் இருப்போம்.
புத்தம்புது காலை படங்கள் எல்லாம் அருமை.
//பயத்தைக் கொடுப்பவனும் அவனே பயத்தை நீக்குபவனும் அவனே. //
அவனிருக்க பயமேன்!! :-))
உங்க நாத்தனார் உடல்நலம் சரியாக எங்கள் பிரார்த்தனைகள். மு.வ. நம்பி டாக்டரிடம் என் பையருக்காக ஒரு முறை வந்திருக்கேன். அப்புறமாத் தொடரும்படி இல்லாமல் ஊர் மாற்றிப் போய் விட்டோம். ஆனால் அப்போ கன்சல்டேஷனுக்காக இரண்டு மூணு தரம் அவரை வந்து பார்த்திருக்கோம். தொண்ணூறுகளில்.......
என் புராணத்தை எழுதிட்டுப் பெரியவங்க உடல் நலம் சீரடையணும்னு எழுதாம விட்டிருக்கேன் போல! :))))
உங்க நாத்தனார் பழையபடி நடந்து தானாக எல்லாம் செய்து கொள்ளும்படி ஆண்டவன் அருள் புரிவான். எங்கள் பிரார்த்தனைகள்.
நாத்தனார் சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளும்.
நலம்பெற வேண்டுகின்றேன்.
நாத்தனார் உடல் நலம் தேற எனது பிரார்த்தனைகளும்...
உங்கள் நாத்தனார் முன் போல சிரித்தபடி வலம் வர பிரார்த்திக்கிறோம் குடும்பத்துடன்.
'ஔஷதம் ஜாஹன்னவி தோயம்
வைத்யோ நாராயணோ ஹரி:'
தங்கள் நாத்தனார் உடல் நலம் நன்று தேறி வீடு நோக்கி விரைந்து வந்திருப்பாரென நினைக்கிறேன்.
கலைமகள் இதழில் காணுவது போல் இங்கு ஒரு உபரி தகவல்.
நாத்தனார் என்பதும் நாத்தி என்பதும் கணவனது சகோதரியைக் குறிக்கும் சம்ஸ்க்ருதச் சொல்.
இது எப்படி வந்தது என்று அந்தக் காலத்தில் அதாவது 1950ல் எனது சம்ஸ்க்ருத ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
நடக்கும் சூழ் நிலையும் ஒரு அறுபது எழுபது ஆண்டுகட்கு முன் எனக்கொள்ளவேண்டும்.
புகுந்த வீட்டில் புதிதாய் வந்த பெண்ணுக்குத் தன் கணவனை விட வேறு யாரிடம் மனம் விட்டு பேச முடியும் ?
கணவனது சகோதரி ரொம்பத்தான் போட்டுக்கொடுக்கிறாள் போலும் ( இதுவும் அந்தக்காலத்திலே தான் )
தன் வாயால் இல்லாவிடினும் செய்கையால், கண்ணால் தன் எண்ணங்களைக் கணவனிடம் வெளிப்படுத்தும்பொழுது
கணவன்,
" ஏன் இதற்கெல்லாம் வருத்தப்படுகிறாய். அவள் ந அஹதி. . அதாவது அவள் இங்கே இந்த வீட்டில் இருக்கப்போவது
இல்லை. ( சீக்கிரமே திருமணம் நடந்து அவள் அவளுக்கென்ற புகுந்த வீட்டுக்குச் சென்று விடுவாள் ) " என்பாராம்.
இந்த ந அஹதி என்ற சொற்களே திரிந்து நாஹதி, நாத்தி என்றும் பிறகு நாத்தனார் ஆயிற்று என்றார் எனது ஆசிரியர்.
இதெல்லாம் அந்தக்காலம்.
இப்ப இருக்கற நாத்தனார் எல்லாம் தங்கம்.
மீனாட்சி பாட்டி.
எனது பிரார்த்தனைகளும்...
நன்றி இந்திரா. நேற்று நடக்க வைத்தார்கள்.கால் மிகவும் துவளுவதால் பத்தடி தான் நடக்க முடிந்தது.ஆனாலும் நல்லது நடந்திருக்கிறது.இனி மனோதைரியம் வந்துவிட்டால் நலம் தான். மிகவும் நன்றி.
நன்றிப்பா துளசி.நானே பேசிப் பேசி அவரை சோர்வடையச் செய்கிறேனோன்னு பயமாப் போச்சு.நல்ல அலெர்ட் ஆக இருக்கிறாற்கள்.
நன்றி சாரல். நாம் ஓடும் ஓட்டத்தில் இரண்டு மணிநேரம் அவனுக்கு ஒதுக்குகிறோம். இது போல சமயங்களில் சர்வ காலமும் அவன் நினைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.இதுவும் ஒரு கருணைதான்.
கட்டாயம் நலமடைந்துவிடுவார் இராஜராஜேஸ்வரி.அநேகமாகக் கடவுள் கிருபையில் அடுத்தவாரம் வீட்டிற்குச் செல்லலாம்.மிக நன்றி.
பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.எத்தனையோ நபர்கள் எத்தனையோ நோய்கள்.
இறைவன் கருணையில் இவரது நிலைமையைச் சரியாகக் கணித்த வைத்தியருக்கும்,குண்மாக்கும் இறைவனுக்கும் நன்றிகள் பல.
ஆமாம் கோமதி.
நல்ல மனுஷி. பொறுமையோடு இருப்பவர்.படுத்திருப்பதால் முதுகெல்லாம் வலி.ஒரு வார்த்தையும் சத்தம்போட மாட்டார்.கூடவே இருக்கும் செவிலியிடம் சொல்லித் திருப்பிவிடச் சொல்வார். இன்னும் நான்கைந்து நாட்களில் வீடு திரும்ப இறைவன் அருளவேண்டும்.
கண்டிப்பாக இறைவனைவிட்டால் வேறு யார் கதி,.
ஹுசைனம்மா.துன்பம் வரும்போது அவனை அதிகம் நினைக்கிறோம்.
அதனால் என்ன கீதா.ஒருவிஷயம் நடந்தால் சொல்லிக் கொள்ள என்க்கு இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிகுரிய நடப்பு இல்லையா.
டாக்டர் நம்பி.கண்டிப்பான வைத்தியர்.சொன்னபடி நடந்தால் சரி.:)
இவர்கள் இருவரிடமும் மிகுந்த அன்பு,
நேற்றுதான் அடியெடுத்துவைத்திருக்கிறார்.இனி படிப்படியாக நலம்தான்.
அன்பு ஸ்ரீராம் பிராத்தனைகளுக்கு
மிக மிக நன்றி.
அன்பு மாதேவி நன்றிமா.
அன்பு ஆதி,
அன்பு வெங்கட் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வைத்யோ நாராயணோ ஹரி:
இந்த மந்திரம்தான் வாழ்வின் ஆதாரம். மனதுக்கம், உடல் துன்பம் அனைத்துக்கும் அவனே வைத்தியன்.
நன்றி ரஞ்சனிம்மா.
அன்பு சுப்புசார். என்ன அழகான விளக்கம். அதற்கு க்கலைமகளை உதாரணம் காட்டியது இன்னும் அருமை.நம் அஹத்தை விட்டு விலகினாலும்,மனத்திற்கு அருகில் இருப்பவர்.
போட்டுக் கொடுக்காத நாத்தனார்கள்தான் இப்போது அதிகம். சீரியல்களை விலக்கிவிட்டால்:)
Post a Comment