Blog Archive

Monday, November 05, 2012

தீபாவளி 1972



 அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் நல் வாழ்த்துகள்



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எத்தனையோ விதமாக மகிழ்ச்சிகள்   பலவிதத்தில் பொங்க தீபாவளி நாட்கள்
சென்றிருக்கின்றன.
மைதிலிக்கு ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு விதம்.
நான்கு குழந்தைகள்.பத்து ரூபாயில் கால் சட்டை. 15 ரூபாயில் சட்டை.
பையன்களின் வயதுக்கு ஏற்க  கிடைத்துவிடும். இரண்டு பெண்களுக்கு மட்டும் நல்ல பாவாடையும் சட்டையும் எடுக்க  கோஆப் டெக்ஸ் போக மைதிலிக்கு ஆசை. எல்லாம் புத்தகங்களில்  வரும் விளம்பரங்களைப் பார்த்துதான்.
கணவனின் போனஸ் நானூறுக்குள் எல்லா  வேலையை முடிக்க வேண்டும்.

தனக்கு  கைத்தறிப் புடவை   30 ரூபாயில் முடியும்.
கணவனுக்கு  வேஷ்டியும்  வெள்ளை வர்ணத்தில் லினன் துணி எடுத்தால் சட்டை தைத்துக் கொடுத்துவிடுவார்  தையல் காரர்.
பெண்களின் பாவாடைகளும்   சொக்காயும் தான்   அறுபது ரூபாயை எட்டிவிட்டது.

இதற்கும்  மேல் பட்சணம்,பட்டாசு,மத்தாப்பு.
மைதிலி சளைக்கவில்லை.
ஒன்றையும் குறைக்கக் கூடாது  நிறைவாக எளிமையாகச் செய்யவேண்டும் என்பதில் தீவிரம்.
வேலைக்கு உதவியாக  இருந்த சாரதாவும் சின்னப் பெண் தானே அதற்கு நல்லதாக  ஒரு தாவணியும் வாங்கவேண்டும்.
பட்சணங்கள் ஸ்டவ்வில் செய்வதால் வெளியே கெரசின் வாங்கவேண்டும்.

வெள்ளைத்தாளில்  தேவையான பொருட்களும் அதற்கான  பணமும்
எழுதிவைத்தாள்.
50,50,30,30,
30,30,30
20.....270 ரூபாய்த் துணிமணிகளுக்கே ஆகிவிட்டது.
மிச்சம் 130இல்
பட்டாசும்,பட்சணனுமும் என்று யோசித்துக் கொண்டிருந்தவள்

காதில் தபால்காரரின் குரல் கேட்டது.
அம்மா, மூணுதரம் குரல் கொடுத்திட்டேன். லெட்டர் வந்திருக்கும்மா.பாருங்க.

சென்னையா, மதுரையா என்று அட்ரஸ் பார்த்தவளுக்குப் பகீர் என்றது.
கடிதம் திருச்சியிலிருந்து,கணவனின்   அக்கா போட்டிருந்தார்.
கணவன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரே ஒரு அக்கா தான்.
பெரிய இடத்தில் திருமணம் செய்துகொடுத்து வள்மாக இருக்கும் அன்பு நாத்தனார்.
அவள் தான் எழுதி இருந்தாள் தானும் தன் இரண்டு பையன்கள் ,கணவரோடு

கோயம்பத்தூரில் தீபாவளி  கொண்டாட விரும்புவதாகவும், இன்னும் நான்கு நாட்களில் தங்களை எதிர்பார்க்கலாம் என்றும் எழுதியிருந்தாள்....மீதி நாளை.:)

24 comments:

ஸ்ரீராம். said...

ஓவியர் கோபுலுவின் முதல் இரண்டு படங்களுமே ரொம்ப அழகு. கடைசி படம் கூட!

கணக்குப் பார்த்து பார்த்து தீபாவளி செலவு.... அதில் கடிதம்... கோயம்புத்தூருக்கு வந்த சோதனை!! என்ன வளமான அக்காதானே.... செலவை அவரே பார்த்துக் கொண்டு விடுவார்! :))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, ஸ்ரீராம் கதையை அப்படிச் சட்டுனு முடிக்க முடியுமா:)
என்ன குறும்பு.:)
வளமான அக்கான்னாலும் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேண்டும் தெரியுமா:)ஆனால் நீங்க சொன்னதை நான் செய்திருக்கிறேன்.!!!

ராமலக்ஷ்மி said...



அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் தங்களுக்கும்.

கடிதத்தைப் பார்த்து யோசனையோடு உட்கார்ந்து விட்டாளோ மைதிலி (படம்:இரண்டு). தொடரக் காத்திருக்கிறோம்.

கடைசிப் படம் சிறுவயது தீபாவளி மலர் ரசனைக் காலத்துக்கு இட்டுச் சென்றது:)!

ஸ்ரீராம். said...

//ஆனால் நீங்க சொன்னதை நான் செய்திருக்கிறேன்.!!!//

செய்யலைன்னாதான் ஆச்சர்யம். :)))

//எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்//

Geetha Sambasivam said...

வளமாய் இருக்கிறவங்க அவங்க தகுதிக்கு ஏற்றாற்போல் எதிர்பார்த்தால்? எத்தனையோ தீபாவளிக்கு திடீர் நாத்தனார் வரவில் தனக்குனு எடுத்த புடைவையை அவங்களுக்குக் கொடுக்கும்படி ஆயிருக்கு. :)))) அப்படியும் திருப்தி அடையாதவங்க உண்டு.

ஒரு சிலர் தான் வல்லி மாதிரி பிறந்த வீட்டுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுனு நினைக்கிறவங்க. எல்லாரும் அப்படி இல்லை. :)))))))

Geetha Sambasivam said...

அப்போதெல்லாம் கோ ஆப்டெக்ஸில் எடுக்கிறது ஒரு பெரிய விஷயம். இப்போ யாருமே சீந்தறது இல்லை. :)))) ஆனாலும் பட்டுனா கோ ஆப்டெக்ஸ் தான். மற்றது பட்டே இல்லை. அங்கே நான் ப்யூர் மைசூர் சில்க், காஞ்சிப்பட்டு, திருபுவனம் பட்டுனு எல்லாமும் வாங்கி இருக்கேன்.

sury siva said...

ஓவியர் கோபுலுவின் அந்த கடைசி படம்.
அதே அந்த தீபாவளி .
அம்பது ரூபாயில் ஒரு புதுத் துணிமணி
நினைவுக்குக் கொண்டு வந்து
அன்று அதே கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும்
ஒரு நொடியிலே எங்கள்
மனக்கண் முன்னே
மானாட மயிலாட என்று
நர்த்தன மாட விட்டீர்களே !!

சுப்பு ரத்தினம்.
www.subbuthatha.blogspot.in

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
சரியான கணிப்பு.யோசனைப்படம் கூகிளில் கிடைத்தது.
அந்தப் பாட்டி தாத்தா குழந்தைகள் விகடன் தீபாவளி மலர்களில் கிடைத்தது.

வல்லிசிம்ஹன் said...

புகுந்தவீட்டிற்குச் செய்வது பழகிய ஒன்று ஸ்ரீராம்.
பிறந்த வீட்டுக்கு ஒரே ஒரு தீபாவளிக்குச் செய்தேன்:)
மனம் நிறையச் சந்தோஷத்தோடு.

வல்லிசிம்ஹன் said...

அதானே கீதா,

நமக்குப் பிறந்தவீடு.அட்ஜஸ்ட் செய்து கொள்வோம்.அந்த அளவிற்கு அவர்களும் விட மாட்டார்கள்.
புகுந்த வீட்டில் அதி ஜாக்கிரதை வேண்டும். ஒருத்தருக்குச் செய்த மாதிரியே மற்றவர்க்கும்.;)

வல்லிசிம்ஹன் said...

கோஆப்டெக்ஸில நம்பி வாங்கலாமே. விலையும் குறைவு. பட்டுப் புடைவையே 100,110க்கு வாங்கின நினைவு இருக்கு. கீதா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார்.எத்தனை அழகான படம் .எவ்வளவு உயிரோட்டம்.ஒரு வீட்டை நேரே பார்ப்பது போல இருந்தது. அதுவும் அந்த விசிறித் தாத்தா!!
எண்ணெயை வைத்து மிரட்டும் பாட்டி:)
உண்மையாக நானும் என் பல்ய நாட்களுக்குப் போய்விட்டேன்!!வருகைக்கு மிகவும் நன்றி சார்.

Anonymous said...

ஓவியங்கள் பிரமாதம். கடைசி ஓவியத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு. ஒவ்வொரு முகத்தையும் ரசித்து பார்த்து பார்த்து மாளவில்லை. நன்றி வல்லி மேடம். இந்த படத்தை நான் அப்படியே ஒரு காபி எடுத்துக் கொள்ளலாமா?

கதை ஜோரா போறது. எங்க வீட்டிலேயும் பட்ஜெட் தீபாவளிதான். அதே நேரம் எல்லா பண்டிகைகளும் ஒரு குறையும் இல்லாமல் நடக்கும். எங்கள் வீட்டில் நிறைய தீபாவளிக்கு குடும்பத்தோடு துணி எடுக்க கோ ஆப் டெக்ஸ் போயிருக்கும். அழகான நினைவுகளை மீட்டுகிறது கதை. என்னதான் வளமாக இருந்தாலும் பிறந்த வீட்டில் செய்யும்போது அது சிறிதே ஆனாலும் பெற்றுக் கொள்ள ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும். அடுத்து கதை எப்படி தொடருகிறது என்பதை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறது. தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,வருகைக்கு நன்றிமா. எல்லாமே கூகிள் படங்கள் மா,. தேடத்தான் நேரம் பிடித்தது. பழிய நினைவுகளைத் தேடக் கடலின் ஆழத்துக்குப் போவது போல. நிங்கள் வந்தது ரொம்ப சந்தோஷம். அம்மா அப்பாவோடு செலவழித்த சந்தோஷ தீபாவளிகள்,அதற்கப்புறம் நம் குடும்பத்தோடு திட்டமிட்டுச் செலவழித்து அனுபவிக்கும் சந்தோஷங்கள் எல்லாம் இறைவன் அளித்த வரங்கள்.

மாதேவி said...

கடைசி படம் முன்பு பார்த்து ரசித்திருக்கின்றேன். மீண்டும் பார்க்கக் கிடைத்தது மகிழ்ச்சி.

மிகுதி படிக்க ஆவலுடன்....

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வும் படங்களும் அருமை அம்மா... நன்றி...

Ranjani Narayanan said...

கோபுலுவின் படங்களுடன் பட்ஜெட் தீபாவளி கதை.

நாளைக்கு என்ன ஆகுமோ?

தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி!

சாந்தி மாரியப்பன் said...

பட்ஜெட் பண்டிகையின் இனிமை தனிதான்.

கோபுலுவின் கைவண்ணத்தில் கடைசிப் படம் அட்டகாசம்.

ADHI VENKAT said...

தீபாவளி வாழ்த்துகள் அம்மா.

படங்கள் தத்ரூபமாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி.

மைதிலி என்ன செய்தார் என தெரிந்து கொள்ள வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. இந்தப் பின்னூட்டத்துக்கான பதிலை அடுத்தபதிவில் போட்டு விட்டேனோ:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

கதையும் முடிந்தது சுபமாக. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் ரஞ்சனி.வளமே பெருகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி சாரல். உங்கள் தீபாவளியும் சிறக்க வேண்டும் மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.அலுக்காமல் பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி. தீபாவளிக்கு வெங்கட் வந்துவிடுவார் என்று நம்புகிறேன். இனிய நினைவுகளோடும் எதிர்காலச் சிறப்புகளோடும் உங்கள் குடும்பம் சிறக்க வேண்டும். ரோஷ்னி குட்டிக்கு என் ஸ்பெஷல் அன்பு.
மைதிலியின் நல்ல மனம் சங்கடங்களைத் தாண்டிச் சந்தோஷத்தை வாங்கிக் கொண்டது.