Blog Archive

Tuesday, October 16, 2012

நவராத்திரி ஆரம்பித்தாச்சு

காராமணி சுண்டல்  கூகிளார்  உபயம்
சோளிங்கபுரம் நரசிம்ஹனும்,அமிர்தவல்லித் தாயாரும்,சின்னமலை ஆஞ்சனேயரும்.புது வரவு.
ஆரத்தியும் தீபமும்,செட்டியார் தம்பதிகளும் அவரது கடையும்
ஸ்ரீராமர்,சீதா,லக்ஷ்மண  ஹனுமான்
மற்றும்  பண்டரினாதனும் ருக்மணியும்
நாச்சியார் கோவில் கல்கருடன் புதிய வரவு
 


கண்ணனின்  ராஜ்யம்
முருகனின் அம்மா மாமனார்,மாமியார்,அம்மா
ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மாவின் ஆட்கி.மணவாளன்,தந்தை ,சேர்த்து வைத்த கருடாழ்வார். துளசி மாடம்.
தஞ்சாவூரிலிருந்து  ஸ்ரீமதி துளசி கோபாலன்  கொண்டுவந்த  பரிசு. நன்றிப்பா.
Add caption
கருடனுடன் வந்து ஆனையை ரட்சித்த  எம்பெருமான் நாராயணன்,ஸ்ரீ ராமானுஜர்,ஸ்ரீமஹாபெரியவா, நம் பிள்ளையார்,குகப்படலம்,ஸ்ரீஸ்வாமி தேசிகன்,அனுமன் தோளில் ராமனும் லக்ஷ்மணனும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

16 comments:

ராமலக்ஷ்மி said...

கொள்ளை அழகு அத்தனைப் பொம்மைகளும்.

நான் கேட்டதை முதல் படமாகத் தந்திருப்பதற்கும் நன்றி:)!

நவராத்திரிப் பண்டிகை வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு அருமை...

நன்றி அம்மா...

துளசி கோபால் said...

கல்கருடன் கொள்ளை அழகு!!!!!

ஐ மிஸ் சென்னை!

Ranjani Narayanan said...

ரொம்ப அழகான கொலு வல்லி!

நவராத்திரி வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எல்லாமும் சூப்பர் வல்லிம்மா ....ஆனா அந்த துளசிமாடம் கண்ணுலேயே நிக்குது போங்க . நவராத்திரியை வெச்சு ஒரு கதை எழுதலாமானு யோசிக்க வெச்சுட்டீங்க அம்மா. உங்க வீட்டு கொலுவுக்கு நேர்லயே வந்தாப்ல ஆய்டுச்சு...:)

குமரன் (Kumaran) said...

உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அருமை வல்லியம்மா.

ADHI VENKAT said...

உங்க வீட்டு கொலு அழகு வல்லிம்மா. துளசிம்மா கொடுத்த பரிசு அழகோ அழகு.... இன்று உங்க வீட்டு கொலு பார்த்தாச்சு....

இப்போ தான் ரங்கநாச்சியாரின் புறப்பாடை பார்த்து விட்டு வந்தேன்.

ஸ்ரீராம். said...

கண்கவரும் பொம்மைகள். காராமணி சுண்டல்! நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.அதற்குப் பிறகு பொம்மைகளைச் சரியாக வைத்துவிட்டேன். பண்டிகைக் காலத்துக்கு இந்தப் பக்கம் வரக்கூடாதா.
இங்கிருந்தே வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். இனிய நந்நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. சட்டென்று கண்ணில் பட்டது. மாடவீதியில்.லபக்கென்று வாங்கிக் கொண்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. உங்கள் வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கம் உண்டா.
உங்கள் பதிவுக்குத்தான் பதில் போட முடியாமல் போகிறது.இனிமேல் ப்ளஸ்ஸில் தான் பார்க்கவேண்டும்.
இனிய நவராத்திரி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி.புவன்.துளசி மாடம் காதி க்ராமத்யோக் பவன் கொலு கண்காட்சியில் வாங்கியதுமா.

நேரிலியே கொலு பார்க்க வர்லாமே.நவராத்திரி அழைப்புகள் உங்களுக்கு இதன் மூலம் அனுப்புகிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா குமரன். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நவராத்திரி தேவியரின் வாழ்த்துகள் வந்து சேரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

கொடுத்துவைத்தவர்கள் தான் ஸ்ரீரங்கத்தில் வசிப்பார்கள்.எல்லாத் தேவியருக்கும் பெரிய நாச்சியார் ரங்க நாச்சியார். அவள் கண் திருஷ்டி உங்கள் மேல் பட்டிருக்கிறது. சர்வமங்களுமும் உண்டாகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.சாரி கூகிள் சுண்டலை வைத்து விட்டேன். இனி நிஜ சுண்டல்கள் படைக்கப் படும்.