வந்துவிட்டோம் |
தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. |
விருது வாங்கிய திருமதி ரஞ்சனி |
சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் |
திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் |
விழா மேடை |
வீடுதிரும்பல் மோகன்குமார் |
காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி.
பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம்.
பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம்.
நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம்.
கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி
தூயாக் குட்டி,அவள் தம்பி
எல்.கே,
பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம்
அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந்த நன்றி
மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது நேற்று.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
82 comments:
வாழிய செந்தமிழ்... class.
உங்க photo ரொம்ப நல்லா வந்திருக்கு.
உங்கள் மகிழ்ச்சியைப் பார்த்து ஆனந்தமும் பொறாமையும் ஒரே சமயத்தில்...
விழா சிறப்பாக நடந்ததில் ஆனந்தம்.
இச்சிறப்பான விழாவில் நான் இல்லையே என பொறாமை!
விழா சிறப்புற நடத்திய, பங்குகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
உங்களைச் சந்தித்தது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், அத்துடன் நிறைய நம்பிக்கையையும் அளித்தது. மிக்க நன்றி! :-)
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது:)! தங்களுக்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
வாழ்த்துக்கள் வல்லிம்மா,
முகமெல்லாம் சந்தோஷத்தோட உங்க ஃபோட்டோ சுப்பர்.
அன்பு வணக்கங்கள் வல்லிம்மா...
பதிவர் திருவிழா படங்கள் அத்தனையும் அருமை... எல்லோர் முகத்திலும் நிறைந்த மகிழ்ச்சி காண முடிகிறது... சந்தோஷமாக இருக்கிறது... நேரில் வந்து கலந்துக்கொள்ள முடியவில்லையே என்ற சோகமும் தீர்ந்தது....
இனி அடுத்த மாநாடு எப்போது என்று காத்திருக்க வைத்துவிட்டது...
அனைவரும் சந்தித்து விழா சிறப்பித்து சந்தோஷமாக உரையாடி மகிழ்ந்தது எல்லாமே மனம் நிறைத்தது வல்லிம்மா...
மீண்டும் இப்படி ஒரு அற்புதம் நடந்து நாமும் இந்த பதிவர் விழாவில் கலந்துக்கொள்ள இயலுமா என்று இறைவனிடம் வேண்ட ஆரம்பித்துவிட்டது மனம்.....
விழாவை சிறப்பித்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்...
விழாவில் சிறப்புடன் பங்காற்றிய அனைவருக்கும் கலந்துக்கொண்டு மகிழ்ந்த அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்....
மனம் நிறைந்த சந்தோஷத்தை அப்படியே உங்க முகத்திலும் தெரிகிறது வல்லிம்மா...
அன்பு நன்றிகள் வல்லிம்மா படங்கள் பகிர்ந்தமைக்கு...
வல்லிம்மா,படங்களும் பகிர்வுகளும் அருமை.நேற்று நனைந்த உங்கள் அன்பு மழையின் நெகிழ்ச்சி இன்னும் என்னை விட்டு போகவில்லை.
வாழ்துக்கள் அம்மா.பொன்னாடையுடன் உங்கள் சிரித்த முகம் காண மிகவும் மகிழ்ச்சி.
வல்லி கலந்து சிறப்பிச்சிட்டீங்களா..குட் :) நல்லா இருக்கு படங்கள்..
உங்களின் மகிழ்வில் நாங்களும் மகிழ்கிறோம் வல்லிம்மா. உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாக என்னையும் நீங்கள் அங்கீகரித்ததில் மேலும் பூரிப்படைந்து இருக்கிறேன் நான். விருகை தந்து விழாவைச் சிறப்பித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
அழகான செய்திகளும் படங்களும்.
அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஹைய்யோ!!!!!! சூப்பரூ!!!!!!
படங்களும் பதிவர்களும் அருமை!
மிஸ் பண்ணிட்டேனேப்பா:(
விழாவில் நாங்களும் கலந்துக்கிட்ட உணர்வு வல்லிம்மா..
மிக்க மகிழ்ச்சி அம்மா...
உடனே பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
சந்தோஷமாய்க் கலந்து கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி. அன்னிக்கு நீங்க பேசறச்சே குரலில் தொனித்த வருத்தம் நெஞ்சிலேயே இருந்தது. உங்க படத்தைப் பார்த்ததும் ஆறுதலா இருக்கு. இத்தனை உடம்போடயும் போய்க் கலந்து கொண்ட உங்கள் மன உறுதிக்குத் தலை வணங்குகிறேன். சில பதிவர்கள் தெரியாதவங்க என்றாலும் முக்கியமாய் ரஞ்சனியெல்லாம் தெரியாது. அநேகப் பதிவர்கள் பெயர் கேள்விப் பட்டது தான்.
லக்ஷ்மி இதுக்குன்னே மும்பையிலிருந்து வந்திருந்தாங்களா?? அவங்க பதிவிலே பின்னூட்டம் கொடுத்திருந்தேன்; வரலையேனு நினைச்சேன். இன்னும் பல பதிவர்கள் வெளிஊரிலிருந்து வந்திருக்காங்க போல.
உங்க படம் நல்லா வந்திருக்கு. பகிர்வுக்கு நன்றி. சென்னையில் இருந்திருந்தால் வந்திருப்பேனோ என்னமோ! கலந்துக்க முடியலை என்பது குறைதான். என்றாலும் உங்கள் படங்கள் நிறைவைத் தந்தது.
பதிவர் சந்திப்பிற்கு நேரில் சென்று வாழ்த்திய உங்களுக்கு நன்றி!
//காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. //
என்ற உங்களது வரிகளைப் படித்த போது அங்கு நிலவிய உற்சாகம் தெரிந்தது. எனது சூழ்நிலை அங்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது. படங்களுடன் செய்தியைத் தந்தமைக்கு நன்றி!
நன்றி துரை.
எல்லாமே புதுமுகங்கள்.இருந்தாலும் சுற்றம் சூழ இருப்பதுபோல ஒரு சூழ்நிலை.நன்றாக நடந்தேறியது.இளைஞர்களின் ஒத்துழைப்பு என்னைப் பிரமிக்க வைத்தது.
வரணும் வெங்கட். நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதாக நினைத்தேன். நீங்கள் கீதா இன்னும் இன்னும் தெஇந்தவர்கள் எல்லோரும் வந்திருந்தாஅல் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
சேட்டைக்காரன் உங்களைப் பார்த்ததும் ஏன் நாகேஷ் நினைவுக்கு வருகிறார் என்று நினைத்தேன். இன்று உங்கள் பதிவிலேயே அவரைப் பார்த்து விட்டேன்.நன்றி மா.
அங்கே பக்கத்தில் இருந்தவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.நீங்கள் தென்றல் ,துளசி,சாரல்,ஹுசைனம்மா எல்லாரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று.நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி தென்றல்.
உங்கள் அனைவரையும் நானானி,கோமா எல்லாரையும் நினைத்துக் கொண்டேன்.
அன்பு மஞ்சுபாஷிணி,
உண்மையாக வார்த்தைகள் இல்லை என் நன்றியைச் சொல்வதற்கு. எல்லாப் பதிவர்களும் ஓடிஓடி வேலை செய்தார்கள்.மதுரை,மும்பை,பங்களூர் என்று அனைத்து இடங்களில் இருந்தும் பதிவர்கள் கலந்து கொண்டார்கள்.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு.அருகில் இருந்தால் அடுத்த விழாவில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.
அன்பு ஸாதிகா.
அருகில் சென்னையில் தான் இருக்கிறோம். ஆனாலும் நேற்றுதான் சந்திக்க முடிந்தது. இது இந்த விழாவினால் தானே. லக்ஷ்மி அம்மாவோடு உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இறைவன் உங்களுக்கு எல்லா நலனும் அருளட்டும்.
வரணும் இந்திரா.நீங்களெல்லாம் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி மா.
ஆமாம் கயல். அம்மா,நீங்கள் எல்லோரும் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நன்றிப்பா.
வரணும் கணேஷ் .நீங்கள் அனைவரும் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.புதிய பழைய பதிவர்களை அனைவரும் அறிந்து கொள்ள நடந்த அறிமுகமே நன்றாக இருந்தது. கேபிள் சங்கரும்,செந்தில் குமாரும் நிகழ்ச்சிகளைக் கலகலப்பாக்கினார்கள்.அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்த உங்களுக்கும்,மதுமதி,மோகன்குமர் மற்றும் மற்றவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
வணக்கம் திரு.கோபாலகிருஷ்ணன். உங்களையும் சந்திப்பேன் என்று நினைத்தேன்.நீங்கள் எனக்கு விருது ஒன்றைப் பகிர்ந்து கொண்ட வேளை இன்னோரு பரிசும் பந்துவிட்டது.
ஆமாம் துளசி நீங்கள் வந்திருந்தால் இன்னும் களை கட்டி இருக்கும் . மனசுக்குள் புலம்பிக் கொண்டே இருந்தேன்.நம்ம மினி மாநாட்டுல பார்க்கலம்.
வரனூம் தனபாலன். உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை.மிக மகிழ்ச்சியாக இருந்தது. பதிவுலகம் எத்தனை நட்புகளை எனக்குக் கொடுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.நன்றிமா.
வரணும் சாரல்.அடுத்த பதிவர் விழா எல்லோரும் கலந்து கொள்ளக் கூடிய கோடைவிடுமுறை அல்லது டிசம்பர் விடுமுறையில் இருக்கவேண்டும்.
ஆமாம். கண் பற்றி வருத்தமிருந்தாலும்,இந்த சந்தோஷத்தை விட்டுக் கொடுப்பதில் நஷ்டம் எனக்குத்தான்.அதனால்தான் வயிற்றைப் பற்றிக் கவலைப் படாமல் போனேன். சுபாஷினி ஒரு விருந்தே கொடுத்துவிட்டார்கள்.எழுத்து எத்தனை பேருக்குப் பாலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
லக்ஷ்மி மும்பையிலிருந்து இதற்காகவே வந்திருந்தார்.அவர்கள் தங்கையும் ,அக்கா பெண்ணும் வந்திருந்தார்கள்.மொத்தத்தில் நல்ல கலகலப்பு.நான் தக்குடுவைக் கூட எதிர்பார்த்தேன்.
நீங்கள் வர இயலாமல் போனது வருத்தமே திரு.தமிழ் இளங்கோ.சீக்கிரமே இரண்டாவது விழா நடக்கட்டும். மிக மிக நன்றி.
வல்லி மா உங்க close up போட்டோ நான் எடுத்தது தானே. உங்க புண்ணியத்துலே நானும் இந்த விழாவில கலந்துண்டேன்........ கீதா மாமி உங்களை தான் ரொம்ப மிஸ் பண்ணினதா வல்லி மா கிட்ட சொல்லிண்டு இருந்தேன்........
அம்மா ஆண்கள் அனைவரிடமும் மகன் போல் ஆசி வழங்கி நீங்கள் பேசியதும், பெண்கள் அனைவருக்கும் மல்லிகைப்பூ வாங்கி வந்து வைத்து கொள்ள சொன்னதும் நீங்கள் எத்தனை அன்பானவர் என தெரிய தந்தது. இதை எழுதும் போது கூட நெகிழ்ச்சியில் அழுகை வருகிறது
உங்கள் வலையில் உள்ள என் படம் எப்போ யார் எடுத்தார்கள் என தெரியலை. உங்கள் அன்பிற்கு நன்றி
உங்களை எங்கு பார்த்தாலும் போனில் பேசினாலும் அம்மா என்று அன்போடு அழைப்பேன்
//வல்லிசிம்ஹன் said...
வணக்கம் திரு.கோபாலகிருஷ்ணன். உங்களையும் சந்திப்பேன் என்று நினைத்தேன்.நீங்கள் எனக்கு விருது ஒன்றைப் பகிர்ந்து கொண்ட வேளை இன்னோரு பரிசும் வந்துவிட்டது.//
தங்களைப்போன்ற குறிப்பிட்ட நபர்கள் ஒரு சிலரை சந்திக்கவே நானும் மிகவும் விரும்பினேன். என்னவோ பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.
திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் கூட மெயில் மூலம் மிகவும் வற்புருத்தி அழைத்திருந்தார்கள்.
பிறகு அவர்கள் ஸ்ரீரங்கம் வரும்போது என்னை சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என் தொலைபேசி எண்களை வாங்கிக்கொண்டுள்ளார்கள்.
புலவர் திரு. இராமநுசம் ஐயா + திரு. மதுமதி அவர்கள் ஆகிய இருவரும் என்னுடன் 15 நாட்கள் முன்பே தொலைபேசியில், வெகு நேரம் பேசினார்கள், அன்புடன் அழைத்தார்கள்.
எனக்கு ஏதோ கொடுப்பிணை இல்லை.
தங்கள் பதிவினில் படங்களின் மூலம் அனைவரையும் பார்த்ததில் ஓர் ஆறுதல்.
நாம் எல்லோருமே வெவ்வேறு ஊர்களில் இருப்பினும், வலைப்பதிவின் மூலம், ஒருவர் மனதில் ஒருவர் என இடம் பெற்றுத்தான் இருக்கிறோம்.
மிக்க நன்றி, சந்தோஷம், மேடம்.
அன்புடன்,
VGK
படங்கள் எல்லாமே அருமை .என்னை போன்ற விழாவ்வில் கலந்து கொள்ள முடியாதவங்களுக்கு படங்களை அழகா பகிர்ந்ததற்கு நன்றிம்மா
அருமையான பகிர்வு,ரொம்ப சந்தோஷமாக இருக்கு பார்க்கவே.
alahaana niraivaana santhipukalai pakirnthu kondathil makilkiren,ithuvum marakka mudiyaatha anupavamaaka irukkum.
பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.
மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html
கொஞ்சம் முன்னாடி சொல்லி இருக்கக்கூடாதா? :-(
ஆமாம் சுபாஷினி நீங்கள் எடுத்த படம் தான். குழந்தைகளுக்கும் அனுப்பினேன்.அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.
வருணுக்கு என் அன்பு.
இதென்ன புண்ணியம் அப்படி இப்படீன்னு.அன்னமிட்ட கை மகளே:)
மறக்க மாட்டேன்!!
அன்பு மோஹன் குமார், உங்களைஃபோட்டோ எடுத்தது நான் தான்.என் படம் தவிர எல்லாப்படங்களும் நான் எடுத்ததுதான்.;)
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அம்மாதான். பாட்டி கூட:)உங்கள் அன்பும் எல்லோரின் பரிவும் உண்மையாகவே அருமை.இந்த நட்பும் அன்பும் தொடரவேண்டும் .
சுபா எடுத்த படமா அது?? சுபாவும் வந்திருந்தாங்களா? நேரம் இருந்ததா? பையனையும் அழைச்சு வந்திருந்தாங்களா??
சுபாஷிணி, என்னையும் நினைத்துக் கொண்டதற்கு நன்றிம்மா. :))) சென்னையில் இருந்திருந்தால் ஒருவேளை வந்திருப்பேன். :))))
படம் நன்றாக வந்திருக்கிறது. சுபா எடுத்ததும், வல்லி எடுத்ததும். எல்லாமே நன்றாய் வந்திருக்கிறது. வல்லி சிம்ஹனின் சந்தோஷம் மனதுக்கு இதமாகவும் இருக்கிறது.
கொஞ்சம் முன்னாடி சொல்லி இருக்கக்கூடாதா? :-(//
வா.தி. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நான் நினைச்சிருந்தேன். இல்லைனா நானாவது கேட்டிருப்பேன். :((( என்னோட பிரச்னைகளிலே கேட்கத் தோணலை. :((((((
நேரலையில் பார்த்தேன், சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி!
Ungalai santhithatil magilchi. unga photo unga facebookla share panni iruken. parkkavum
மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்ததுவே :)) உங்கள் படம் அருமை.
பலரையும் கண்டுகொண்டோம். பகிர்வுக்கு மிக்கநன்றி.
படங்கள் அனைத்தும் மிகத்தெளிவாக இங்கு பகிர்ந்து இருக்கீஙக மிக்க நன்றி வல்லி அக்கா
WOW! Cool event! :) I was not there... Yet thanks for sharing the pictures...
தெளிவான படங்கள். மோகன் குமார் பதிவிலும் உங்கள் புகைப் படங்கள் கண்டேன். பரிசு வாங்கியமைக்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சியான நிகழ்வைப் படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அம்மா. எல்லோரும் சொன்னாலும் நானும் சொல்லலாம்தானே - உங்க படம் உங்க மனசு போலவே அழகா வந்திருக்கு :)
மனம் நிறைந்த வாழ்த்துக்கள். படங்கள் அருமை. உங்க படம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல அழகா, களையா இருக்கீங்க. :)
ஆமாம் கீதா, சுபா எடுத்த படம்தான். பையன் வரவில்லை. நான் போய்ப் பார்த்தேன்.
அன்பு ஏஞ்சலின்,
அன்பு திருமதிஸ்ரீதர்
அன்பு ஆசியா ஒமர்,
அன்பு திரு அருள் அனைவர் வருகைக்கும் நன்றிமா.
அன்பு திரு விஜிகே,
நீங்கள் வரமுடியாமல் போனது வருத்தமே சந்தர்ப்பம் சாதகமாக அமையட்டும் ஸ்ரீரங்கத்தில் பதிவர் சந்திப்பு நடத்தலாமே.
மனம் வருந்தவேண்டாம்.
நன்றி வரலாற்றுச் சுவடுகள். நீங்களும் வந்திருக்கலாம்.
அன்பு மாதங்கி ஊரில் இல்லையா.
சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோமே.
அன்பு ஜலீலா கமால்,வருகைக்கும் அன்புக்கும் நன்றி.இனி ஒவ்வொரு ஊரிலும் பதிவர்களைத் திரட்ட வேண்டியதுதான்:)
அன்பு மாதேவி அங்கிருந்தே இங்கவந்து வாழ்த்தியதற்கு நன்றி. இன்னும் நிறைய பேர் வந்திருந்தால் பூரண மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.
அன்பு கார்த்திக் ,முகப் புத்தகம் பார்த்தேன் .ரொம்ப நன்றிமா.யாரெல்லாம் விசிட் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்:)
அன்பு ஸ்ரீராம் நீங்கள் ஏன் விழாவிற்கு வரவில்லை.
எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.
வாழ்த்துகளுக்கு நன்றிமா.
அன்பு கவிநயா,அன்பு மீனாக்ஷி
இருவருக்கும் ஒன்றாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கணும். இவ்வளவு பின்னூட்டங்களை ஹாண்டில் செய்து வழக்கமில்லாமல் போய்விட்டது.
இருவரின் அன்புக்கும் மனத்திலிருந்து வந்த வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றிமா.
வல்லி அம்மா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... நான் எதிர்பாராது சந்தித்த அழகான தோழி நீங்கள்!!!!
உங்கள் வயதில் எங்களுக்கு இவ்வளவு இளமையும் துடிப்பும் இருக்குமா என்பது சந்தேகமே ..... நன்றி அம்மா!!!
அன்பு சமீரா, இத்தனை உற்சாகத்தோடு ஒரு அழகுப் பெண் தோழியாகக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். சீக்கிரம் வலைப்பூ தொடங்குங்கள். வளர்ச்சி கிடைக்கும்.
உங்கள் மெயில் ஐடி எடுத்துக் கொள்ளாமல் போனேன்:(
அன்பு வல்லி, உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி!
என் பதிவையும் இன்று தான் போட்டேன்.
http://ranjaninarayanan.wordpress.com/2012/08/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
அன்றைய சந்திப்பில் உங்கள் யாருடனும் வந்து பேச முடியவில்லை... அது ஒன்று தான் எனது வருத்தமே தவிர வேறு எதுவும் இல்லை.... நீங்கள் அனைவரும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா.....
தங்களைத் தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
அன்பு வல்லி,
எனக்கு வந்த ஒரு பின்னூட்டம் இது:
gardenerat60
புர 01, 2012 @ 13:14:46 [Edit]
வாழ்த்துக்கள் ரஞ்சனி. படங்களும் அழகாக உள்ளன.
வல்லியம்மாவை சந்தித்தீர்கள், எத்தனை லக்கி!
இவரது பெயர் பட்டு ராஜ் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இந்தப் பின்னூட்டத்திற்கு என் பதில்:
நன்றி பட்டு! நிஜமாகவே லக்கி தான்! மிகவும் சகஜமாக பல வருடங்களாக பழகியவரைப் போல, முகம் நிறையச் சிரிப்புடன்…..அபூர்வமான பெண்மணி!
எல்லோருடைய அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்க என்ன பாக்கியம் செய்தீர்களோ!
அன்புடன்,
ரஞ்ஜனி
பி.கு: ரேவதி நரசிம்மன் என்பதும் நீங்கள் தானே?
google+ இல் பின்னூட்டம் பார்த்தேன்.
அன்பு சீனு , உங்கள் அனைவரையும் ஒவ்வொருவராகச் சந்திக்காததில் எனக்கும் வருத்தம் தான்.
நேரம் போதவில்லை. வீடு திரும்பும் அவசரம். இனி ஒவ்வொரு பதிவுவையும் படிக்கவேண்டும்.
அன்பு ரஞ்சனி,
உண்மையில் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.முகம் நினைவில் இல்லை. நீங்கள் க்ளிப்தமாக குறிப்பு எடுத்துக் கொண்டீர்கள்.நான் அதையும் செய்யவில்லை. பத்துவருடம் கழித்துப் பிறந்தவீடு வந்த பெண் போல அத்தனை பேரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்:)பட்டுராஜின் வலைப்பூ பெயர் என்னவோ.பார்க்கிறேன்மா.பங்களூரில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தால் எல்லாரையும் பார்க்கவரலாம்:)
பட்டுராஜ் என்பவர்தான் வெற்றிமகள் என்னும் பெயரில் எழுதுகிறார் என எண்ணுகிறேன். :))))))
கமென்ட்ஸ் நூறைத் தாண்டிடும் போல! :))))))
//Geetha Sambasivam said...
பட்டுராஜ் என்பவர்தான் வெற்றிமகள் என்னும் பெயரில் எழுதுகிறார் என எண்ணுகிறேன். :))))))//
ஆம்ம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
அவர்களின் வலைத்தளம்:
Mrs. PATTU [VETRIMAGAL]
http://vetrimagal.blogspot.in/
அன்புடன்
VGK
அப்படியா கீதா.:)
சரிதான். அவர்களும் பங்களூரா.
வரணும் விஜிகே சார். நாந்தான் ஸ்லோ:)
நூறு எல்லாம் எப்படி கீதா.பாதி என்னோட பின்னூட்டம்:)
தாங்கள் விழாவிற்கு வந்ததால் மட்டுமே தங்களை சந்த்தித்து உரையாட முடிந்தது அம்மா.பகிர்விற்கு நன்றி.
வாவ்வ்வ்வ்வ்வ்... வல்லிமா என் பெயரையும் குறிபிட்டதுகு நன்றிம்மா... வச்சு கண் வாங்காம பாத்துட்டிருக்கேன் அதை!
உங்க கூட இன்னும் நெறய நேரம் பேசாம போயிட்டேன்னு நீங்க போனபின் வருத்தப்பட்டேன்! அடுத்த முறை சென்னை வந்தால் உங்களை சந்திக்கிறேன் அம்மா
அன்பு மதுமதி, கௌதமன் சொல்லி கணேஷ் கூப்பிட்டு நானும் வந்தேன். உங்கள் கௌரவப் பரிசுகளையும் ஏற்றுக் கொண்டேன். நிறைய பதிவர்களை எனக்கு அடையாளம் காணமுடியவில்லை.எல்லா முகத்திலும் அன்பைப் பார்க்க முடிந்தது. அத்ற்கு நாந்தான் நன்றி சொல்ல வேணும் பா.
அன்பு ஆமீனா,கபடமில்லாத உங்கள் அன்பு என்னை மிகவும் வசீகரித்தது.பாட்டி ஆனாலும் இளைஞர்களை அணுகி அறிமுகம் செய்து கொள்ளக் கொஞ்சம் கூச்சமே:)அதனால் உங்களை எல்லாம் சந்த்திதது பெரிய மகிழ்ச்சி.நன்றி கண்ணா.
நீங்கள் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு விருது பெற்றது மகிழ்ச்சி.
உங்கள் மலர்ந்த முகம் எல்லோரையும் வசீகரித்து இருக்கும் அன்பால்.
நானும் கலந்து கொண்டு இருப்பேன் அந்த சமயம் சென்னை வந்து இருந்தேன். மருமகள், பேரன் தனியாக நியூஜெர்சியிலிருந்து வந்தார்கள் அவர்களை அழைத்து போக வந்து இருந்தேன்.
மும்பையிலிருந்து சென்னை விமானம் ரத்தானதால் மும்பை போய் கூப்பிட் வேண்டி ஆகி விட்டது மன உளைச்சல், அவள் மாமா போய் அழைத்து வந்தார்கள்.
பேரனின் வரவால் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியவில்லை. பேரன் மதுரை போய் இருக்கிறான். அம்மா பாட்டி வீட்டுக்கு நவராத்திரிக்கு வருவான்.
இடைவெளியில் படிக்கிறேன்.
Post a Comment