Add caption |
Add caption |
Add caption |
Add caption |
ஆடிப் பூர்ணிமா முழுமையாகப் படம் பிடிக்க முடியாமல் பக்கத்து வீட்டு மூன்று மாடிகளும் தடுத்தன. |
கட்டிடத்தின் பிடியிலிருந்து வெளிவரக் காத்திருந்தேன்.
நேற்றைக்கு இருந்த ஒளி இல்லாவிட்டாலும் முழுநிலாப் பெண்
வந்தாள் .
ஒருவேளைக் காவிரியில் தன் பிம்பத்தைக் காணமுடியாத வருத்தமோ
கொஞ்சம் வாட்டம் இருந்தது.
தன் ஒளியிலியே ஆற்று மணலை அள்ளும் பூதங்களைப்
பார்த்தும் வருந்தினாளோ
அடியார்களின் சங்கடங்களைக் கேட்டும்
தன் மனதைச் சலனமில்லாமல் வைத்து,
தன் மனதைச் சலனமில்லாமல் வைத்து,
அறிவுரை கூறும் பெரியோரைப் போல
அவளும் நில்லாமல் தெற்கும் மேற்கும் சேர்ந்த திசையில் நகரத்தொடங்கினாள்.
தக்ஷிணாயன நிலவுப் பெண்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
9 comments:
நிலா.... அழகு....
மணல் திருடும் பூதங்கள்... :(
அழகாக உள்ளது அம்மா... நன்றி...
அமைதியில் ஒரு அழகு!!!!
எப்பப் பாத்தாலும் எப்படிப் பாத்தாலும் நிலா அழகுதான். உங்க காமிராக் கண் வழியாவும் வெகு அழகு.
ஆடிவந்த நிலா ஆனந்தமளித்தது..
வாழ்த்துகள் !
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது!மனதையும்!
ஆடிநிலா குளிர்விக்க வந்துவிட்டாள்.
ஆடி நிலா நல்ல கருத்தை சொல்கிறாள்.
ஆற்றில் தண்ணீர் இல்லை, மணல் திருட்டு எல்லாம் சொல்கிறாள்.
அருமை.
மூன்றாவது படத்தில் கண்ணாமூச்சி ஆடுகிறாள்:)!
Post a Comment