Blog Archive

Monday, July 30, 2012

பட்டீஸ்வரம் கதை குருக்கள் சொன்னது

இரண்டு வருடங்களுக்கு என்னைக் கௌரவித்த அன்னை.
2002  கொலுவில் கொலுவிருந்த துர்காமா


பட்டீஸ்வரம் துர்கா அன்னை
++++++++++++++++++++++++++++++++
காமதேனுவின் மகள் பட்டியால் பால் சொரிந்து வழிபடப்பட்டவர்.
அடுத்தது நம் தாயார் ஞானாம்பிகா.
இந்தப் பட்டீஸ்வரம் தான் பழையாறையாம்.
அர்ச்சகர் இந்தவரலாறுகளைச் சொன்னதும்   பொன்னியின்  செல்வன் பக்கங்களுக் குப் போன உணர்வு ஏற்பட்டது. சோழ மன்னர்கள் வழிபட்ட, தலைநகரமாக  இருந்த இடம்.

திருஞானசம்பந்தர்   வழிபட வருவதை அறிந்த இறைவனும் இறைவியும் வெய்யில் தெரியாமல் இருக்க அவருக்கு நிழலாக முத்துப் பந்தல் இட்ட இடம்.

சோழர்கள் போருக்குப் புறப்படுவதற்குன் வழிபட்ட ஸ்ரீதுர்காம்மா.
பட்டி விக்ரமாதித்யன் வந்து வழிபட்ட இடம்.
1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்று விளக்கினார் குருக்கள்.

எனக்கு இந்த உலகில் ,இப்போதைய நேரத்தில் இருக்கும் எண்ணமே இல்லை. காலத்தத் தாண்டி வேறு எங்கே யோ இருக்கும் உணர்வுதான் மிஞ்சியது.

. அற்புதமான சூழல்.
எத்தனை சித்திரங்கள். எத்தனை சிற்பங்கள். பார்க்கத்தான் நேரம்  இல்லை. முடிந்தவரை நினைவுகளைத் தேக்கிக் கொண்டேன்.

அனைவரும் சென்று தரிசிக்க, உணர வேண்டிய தலம்.
இந்தப் புண்ணிய தரிசன த்துக்கு வழி வகுத்த இறைவனுக்கு நன்றி.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கும்பகோணம் தொடர்வோம்-3

துர்க்கையின் கோவில் பிரகாரம்
ஞானம்பிகா தாயார்
காம்தேனுவின்  மகள் பட்டி
முல்லைவனநாதர்
ஸ்ரீபட்டீஸ்வரம் துர்க்கையம்மா
காலையில் எழுந்து அளவான   உணவை உள்ளே இறக்கிவிட்டு
உப்பிலி அப்பன் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம். எப்பொழுதும் திகட்டாத தரிசனம்.

தள்ளல் இடித்தல் இல்லை.
நிம்மதியாகப் பிரார்த்தனை செலுத்திவிட்டு  வெளியே வந்தால் ஆடியபடியே கஜராஜன் காட்சி அளிக்கிறார்.
அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)
ஆவர் ஆட்டத்தை ரசித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து மதிய உணவை முடித்துக் கொண்டு 
பட்டீஸ்வரம் நோக்கிப் பயணம்.
இந்த அம்மாவைத் தேடி அலைந்த நாட்கள் முடிவுக்கு வந்தன.

பத்துவருடங்களுக்கு முன்னால்
காதிக்ராஃப்ட்  கடையில்   கண் முன் நின்றாள்.
கேட்டால் பட்டீஸ்வரம் அம்மா என்றார்கள். 
அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.

எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்.
இவளுக்கு எதற்கு ஆயுதம்.?
பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா   தாயே!
உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, July 25, 2012

கும்பகோணம் புண்ணியம் கிடைத்தது--2

ராமாயணக்காட்சிகள்
கர்ப்பரகஷாம்பிகா    கோவில் குளம்
ஆடிக்காட்டிய யானை
அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை கோவிலை   தங்கும் விடுதியிலிருந்து 45 நிமிடப் பயணத்தில் அடைந்தோம். வண்டியை 35 மைல் வேகத்தில்தான் ஓட்டவேண்டும் என்று ஓட்டுனர்  மணி  சொன்னாதால்   பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு கூட  மெதுவாகச் செல்ல முடிந்தது.
வெகு குறுகலான  பாதைகள்..தெருவோர திறந்த வெளி கழிவுநீர்ப்பாதைகள்.
கும்பகோணம் மாறவில்லை.
எனக்கு அருவருப்பும் தோன்றவில்லை.
முல்லைவனநாதர் கோவிலை அடைந்த போது அங்கே இருந்த அமைதி
அளவிட முடியாதது.

புனுகினால் செய்த திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது என்றும் சொன்னார்.வருடத்துக்கு ஒரு முறை  புனுகு சட்டத்தை நீக்கிவிட்டு 
மீண்டும் சார்த்துவார்களாம்.ஆவுடையாருடனும் ஒளிர்ந்தமுல்லைவனநாதரை  மனமார வணங்கிவிட்டு
அம்பாளின் இருக்குமிடம் நோக்கிவிரைந்தோம்.சுகந்தமானகாற்று.
அமைதி.
கண் நிறைக்கும் பசுமை.நந்தவனம் எல்லாம் தாண்டி அம்பிகையின் திருவாசலில் நுழைந்தோம்.1997இல்  இவளை நினைத்து 
வேண்டிக்கொண்டதும், மணிஆர்டர் அனுப்பி நெய், தைலம் எல்லாம் பெற்றுக்கொண்டதும், பிறகு மகன்களின்     சந்ததிக்காகவேண்டிக்கொண்டதும் நினைவுக்கு வர கண்ணில் நீர்.
அம்மா.அனைவரின்      அன்னையரின் கர்ப்பத்தை எப்போதும் மகிழ்வாகவைத்திரு.
உனக்குத் தெரியும்.யார் யாருக்கு எப்பொழுது மகவு வேண்டும் என்று. இதோ இங்கே கட்டியிருக்கும் தங்கத் தொட்டில்களே  ஸாட்சி.
மரத்தொட்டிலும் இருந்தது.

வந்த சிசுக்களுயும் வரப் போகும் சிசுக்களையும் நீயே அல்லவா காப்பாற்றுகிறாய்.உன்னிடம் பிரார்த்தனை செய்தோம். வழிகாட்டினாய்.உன்னை நாட்கள் கழித்தாவது வந்து தொழும் பாக்கியம்  கொடுத்தாய் நன்றி தாயே என்று சொன்னபடி அவளின் சௌந்தரிய மேனியையும் அழகான மடிசார்க் கட்டுப் புடவையையும்,அங்கிருந்த  அர்ச்சகரின்   அருமை வாசகங்களையும் கேட்டுக் கொண்டோம்,மருமகள்களும் மகளும் தனித் தனியே அவரவரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.
வெளியே வரும்முன் அவளிடம் மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, முல்லைவனத்தைப் பார்க்கவந்தோம். அங்கெ முல்லைப் ப்பூ  விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம்  பூவை வாங்கிக் கொண்டு
கும்பகோணம் திரும்பவும் இருள் சேரவும் சரியாக இருந்தது. அதற்கு மேல் குழந்தைகள் பசி தாங்காது என்று தெரியும்.
வழியில் நல்ல் சாப்பாட்டு விடுதி கிடைக்குமா என்றூ  தேடி  ஒருவிடுதியை  மகன் கண்டுபிடித்தார்.

ஒருவாறு ஈக்களையும், ஏசிக் குளிரையும் தாங்கிக் கொண்டு  இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் உப்பிலி அப்பனைத் தரிசிக்கணுமே.  நடுவில் கண்ணில் அகப்பட்ட   நிலவையும்  படம் பிடித்துக் கொண்டேன்.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, July 23, 2012

வில்லிபுத்தூர்க்கோன் ஸ்ரீரங்கன் ஆண்டவள் ஆண்டாள் பிறந்தாள்

ஆடிப்பூர மங்கை   வாழியே
ஸ்ரீ ஆண்டாள் திருத்தேர்
முத்துப்பல்லக்கில் ஆண்டாள். குதிரை வாகனத்தில் சுற்றிவரும் பெருமாள்
ஆண்டாள் தோன்றிய இடம் துளசி வனம்
மடித்தல சயனம் ரங்கனுக்கு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, July 22, 2012

சொ செ சூ

உயிர்கொல்லிகள் ஜாக்கிரதை!




 நினைத்ததே    இல்லை. கொசுவையும் கரப்பான் பூச்சியையும் கொல்லும் மஸ்கிடோ  ஸ்ப்ரே  என்னையும் பதம் பார்க்கும் என்று.இரண்டு நாட்கள் முன்
 ஆடி மாத  ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தது.
ஜன்னல்களில் போட்டிருக்கும் வலைகளையும் தாண்டி இரண்டு ஈக்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டன.
அவை என்னைத் தான் தேடி வந்ததோன்னு நினைக்கிறபடி  குளிக்கும் அறைக்குள்ளும் புகுந்து விட்டன.
இதேதடா வம்பு  என்று எடுத்தேன் ஹிட்   குழாயை.
அதான் விளம்பரத்தில் சொல்கிறார்களே, ஒரு கறுப்பு ஹிட் இருந்தால் போதும்.உலகத்தையே ஜெயிக்கலாம் என்று.:(
ஹிட்  அடித்த கையோடு  குளிக்க நுழைந்து கதைவையும் சாத்திவிட்டேன். ஒரே ஒரு மூச்சு தான் இழுத்திருப்பேன்.

அவ்வளவுதான்     தொண்டையை யாரோ  இறுக்கியது போல
மூச்சு விட முடியாமல்(gasp) இழுக்க ஆரம்பித்துவிட்டது.
முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான்  அவசரமாகக் கதவை த் திறந்து வெளியே வந்து  ஃபானைப் போட்டுத் தடால் என்று உட்கார்ந்தவள் ஒரு பத்துநிமிடத்துக்காவது போராடியிருப்பேன்.

மகனோ என்ன  ஆச்சு என்று தெரியாமல் அம்மா அம்மா என்று கதவுக்கு அப்பாலிருந்து கேட்கிறேன்.
வாயிலிருந்து வார்த்தை வந்தால் தானே!!
கொஞ்சம் நிதானம் வந்தபிறகு கதவைத் திறந்து நான் சரியாக இருக்கிறேன் என்று தெளிந்த பிறகு மீண்டும் குளிக்கப் போனேன்.

படித்த முட்டாள் என்று இதைத்தான் சொல்வார்கள். நிதானம் இல்லாமல்  இவ்வளவு  அவசரம் வேண்டுமா.
இந்த  சாதனங்களின் வீர்யம் தெரியாமலயே  உபயோகித்து வந்திருக்கிறேன்.
விவேகம் இல்லாமல் நான் செய்த இந்தத்   தவறை வேறு யாரும் செய்யக் கூடாது என்றே பதிவிட்டேன்.

அதிர்ஷ்டவசமாக வேற ஒன்றும் நடக்கவில்லை.
பக்கவிளைவாக வயிற்றுவலியும் தலைவலியும் மட்டும்.
கடவுளுக்கு நன்றி.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, July 21, 2012

கும்பகோணத்திற்கு ஒரு புண்ணியப் பயணம் 1

வஞ்சுளவல்லித் தாயாரும்   ஸ்ரீநிவாசப் பெருமாளும்
திருஞான சம்பந்தருக்காக விலகி  இருக்கும் நந்தி பகவான்
கோமளவல்லித்தாயார்
ஒப்பில்லா  அப்பன்
அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகா
 மே  மாதம்   மருமகள் தொலைபேசியபோது  தங்களது விடுமுறை நாட்கள் பயணத்தைப் பற்றியும், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை  கோவிலுக்குச்  செலுத்த வேண்டிய  
பிரார்த்தனை  யையும் சொன்னார்.
உடனே    தோன்றியது மனக்கண்ணில் மற்ற கோவில்களும்.
பத்துவருடங்களுக்கு முன்னால்   தரிசனம் செய்த தெய்வத்திருத்தலங்கள்.
மீண்டும் காண வாய்ப்பு.
அதற்கேற்றார்ப் போல  மகளும் அவள் குடும்பமும்  வருவது.
ஒருவரையும் கேட்காமல் இரண்டுநாட்கள் கும்பகோணத்தில் தங்குவதாகத் திட்டம் போட்டு
பயண ஏஜண்டிடம்    சொல்லி ஜூலை 4 ஆம் தேதிக்குக் காலை ரயிலில் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டேன். அப்படியே   அன்பு த்தோழி கீதா சாம்பசிவத்திடம்   வழிமுறைகளையும்  கேட்டுக் கொண்டேன்.

தங்குமிடம், பயணம் செய்ய ட்ராவல்ஸ்  வண்டி  எங்க   முன் பதிவு செய்யலாம் என்று கேட்டுக் கொண்டு,லஸ் விநாயகரையும் வேண்டிக் கொண்டு(எல்லோரும் இந்த ஏற்பாடுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே:))
ஒவ்வொரு   குடும்பமாக வந்திறங்கியது.
வந்த இரண்டுநாட்களில் கும்பகோணம் ரயிலேறியாச்சு.
கடைக்குட்டிப்   பேரனைப் பற்றித்தான்  கொஞ்சம் கவலை.
சீக்கிரம் சளிபிடித்துக் கொள்ளும். இன்னும் இரண்டு வயது கூட முடியவில்லை.

கவலையைத் தீர்க்கத் தானே  தாயும் தந்தையுமாக கடவுளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.!
ஒவ்வொரு ஊராக வண்டி கடக்கும் போது மாயவரம் நிலையம் வந்தது. 
மாயவரத்துப் பதிவர்கள் அனைவரும் மனதில் வந்து போனார்கள்.
திருமதி அரசு,கயல்விழி,ஆயில்யன்     என்று இன்னும் எத்தனையோ  ஞாபகங்கள்.
அத்தனை ரயில் நிலையங்களின்  சுத்தமும்  நேர்த்தியும் மனதைக் கவர்ந்த்து.
குப்பையெல்லாம் நம் சென்னைக்குத் தானோ என்று நினைத்துக் கொண்டேன்:(
இளமைக்கால எழும்பூர் ரயில் நிலையமும் இப்போது இருக்கும்   நிலையும் மனதை என்னவோ செய்தது.
காலத்துக்கேற்ற  மாறுதல்கள்.கிணற்றுத்தவளையாக நான் இருந்தால்,நகரம் மாறாமல் இருக்குமா.

நிறைய நல்ல மாறுதல்களும்  வந்திருக்கின்றன. சுத்தம் தான் கொஞ்சம் போதவில்லை.
இதற்கு எதிர்மறையாக வழி  நெடுகப் பார்த்த ரயில் நிலையங்கள் மகா சுத்தம்.
கும்பகோணத்திற்கு நல்ல வெய்யில் நேரத்தில் மதியம் இரண்டிற்கு வந்தோம்.

கொண்டுவந்த ரொட்டிகளும், இட்லியும்,தயிர் சாதமும்  காலியாகி இருந்தன.
எங்களை அழைத்துப் போக வந்திருந்த   டெம்போ ட்ராவலரும்  ஓட்டுனர் மணியும் வந்தனர்.

சாரா   ரீஜன்சி  விடுதியை அடைந்தோம். 
அவரவர் அறைகளை அடைந்தோம்.   குழந்தைகளைத் தயார் செய்து,அவர்கள் சாப்பாட்டையும்   தயார் செய்து கொண்டு,
தாயார் கர்ப்பரக்ஷாம்பிகையை த் தரிசிக்கக் கிளம்பினோம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, July 08, 2012

என் துர்காவும் பட்டீச்சுரமும் பழையாறையும்

கும்பகோண நிலா

சற்றே விலகி நிற்கும்  நந்தி எம்பெருமான்
தேனுபுரீஸ்வரர்    கோபுரம்
பட்டாபிஷேக ராமன் கும்பகோணம்
கண்டேன்   என் துர்க்கையை!
உப்பிலி அப்பனின் யானையும் நானும்