மீனாக்ஷி கல்யாண வைபோகம் | இன்று | மீனாக்ஷி சுந்தரேச்வரரைத் திருமணம் செய்கிறாள். |
Add caption |
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப் போகிறது.
எட்டுமணிக்குள் மதுரைக்குப் போகத் தயாராக வேண்டும்.
ஒளிபரப்பும் ஜயா தொலைக்காட்சிக்கு
மனமார்ந்த நன்றி.
எல்லோரும் கண்டு களித்து
மீனாட்சியின் கடைகண் கடாக்ஷத்தை ப் பெறுவோம்.
திவ்யதம்பதிகளுக்கு கோடானுகோடி நம்ஸ்காரம்.
மதுரையம்பதிக்கும் நம்ஸ்காரம்.
12 comments:
மீனாட்சியின் கடைகண் கடாக்ஷத்தை ப் பெறுவோம்.
திவ்யதம்பதிகளுக்கு கோடானுகோடி நம்ஸ்காரம்.
மதுரையம்பதிக்கும் நம்ஸ்காரம்.//
நீங்கள் சொன்ன மாதிரி எட்டு மணிக்கு மீனாட்சி கல்யாணம் பார்த்து எல்லா மங்களங்களையும் பெறுவோம்.
நன்றி அக்கா.
அன்பு கோமதி ,மதுரையில் இல்லையே என்று மனம் அலைபாய்கிறது.
ஜெயா தொலைக்காட்சியில் பாருங்கள்.
அவளுடையும் வீரமும் கருணா கடாக்ஷமும் நம்மை வந்தடையும். வாழ்த்துகள் வளமுடன் வாழ.
ஏப்ரல் மே வந்தால் மதுரை படும் அல்லகல்லோலத்தை நினைத்து மனம் ஏங்குகிறது. அங்கிருந்த நாட்களில் சித்திரைத் திருவிழா நாட்களில் மதுரையில் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன!
ஆமாம் ஸ்ரீராம். அதுவும் கிராம மக்கள் வரிசையாக வைகை ஆற்றை நோக்கி வரிசையாகப் போவதும், தோள்களில் குழந்தைகள் தூங்கி வழிவதும், இரவு நேரத்தில் அவர்கள் சமைத்துச் சாப்பிடுவதும் ,அழகர் ஆற்றில் இறங்கியதும் திரும்பி இதே வழியில் பீப்பி,ட்ரம்,ரப்பர் பொம்மைகள் என்று முகம் நிறைந்த பூரிப்புடன் அவர்கள் திரும்புவதும், நான் விழித்திருந்து பார்த்த நாட்கள்.
எவ்வளவு அருமையான படங்கள் ! நன்றி அம்மா !
திவ்யதம்பதிகளுக்கு கோடானுகோடி நம்ஸ்காரம்.
மீனாப்பொண்ணு அழகு கொஞ்சிண்டு இருக்கா! :)
வாங்க தனபாலன்.
ரொம்ப நன்றி.
நமஸ்கஅரம் இராஜராஜேஸ்வரி உங்கள் அழகர் பதிவையும் படித்தேன்.அருமையாக இருந்தது.
பின்ன மதுரைப் பொண்ணு எப்படி இருப்பா. தக்குடு.
அழகி அழகனைக் கல்யாணம் செய்து கொண்டாள்.:)
அந்த திருஷ்டிப் பொட்டு ஒண்ணு போதும். தொலைக்காட்சி தயவில் நாங்களும் திக்விஜயம், மீனாக்ஷி கல்யாணம் எல்லாமும் பார்க்கிறோம். முன் மாதிரி திருவிழா சமயம் மதுரையில் இருந்து பார்க்கும்படியான உடல்நிலை இருக்குமானு சந்தேகமாவே இருக்கு. :((((
மீனாக்ஷி திக்விஜயத்தன்று மீனாக்ஷி அலங்காரம் செய்து கொண்டு வந்த சின்னப் பெண்ணைப் பார்த்தால் அழகோ அழகு! சிரிப்பழகு, கண்ணழகு, நடையழகு எல்லாமும். உயர்ந்தால் எட்டு வயசுக்குள்ளாக இருக்கும். சுந்தரேசர் அலங்காரத்தோடு வந்த பையரோ, தலைத் தலைப்பாகையைக் கழட்டுவதும் மாட்டிக் கொள்வதுமாக விஷமம்! ரசிக்க முடிந்தது. :))))
நான் தேரோட்டம் திக்விஜயம் பார்க்கவில்லை கீதா.
அந்த இரண்டு குழந்தைகளையும் மிஸ் பண்ணிட்டேனே. மீனாட்சி அழகு. அதுவும் குட்டி மீனாட்சின்னால் கேட்கணுமா.
அந்தப் பிள்ளை உடம்பில் சொக்கன் புகுந்து தலைப்பாகைத் திருவிளையாடல் நடத்தினரோ:)
Post a Comment