Blog Archive

Sunday, May 27, 2012

தலை முறை மாற்றம்


தண்ணீர்
எப்போதும் கீழ்நோக்கித் தான்   பாயும்  அதுபோல
அன்பும்   நம் எண்ணங்களும்
நமக்குப் பின் வரும் சந்ததியை நோக்கியே
தொடரும்..
தந்தையின் கை நீளும் மகனின் தோளை அரவணைக்க
மகனின் கை தேடும் தன் பிள்ளையின் பிஞ்சுக் கரத்தைப் பிடிக்க.
பிள்ளையின் கரத்தில் 
தாத்தா வாங்கின குட்டி மோட்டார் கார்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பால்யூ  அவர்கள் எழுதின சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
தவிப்பு என்று அந்தக் கதையின் தலைப்பு.

பேரனைத் தாத்தா கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அவன் அங்கு போய் ஆறு மாதம் ஆகியும் திரும்பவில்லை.
சென்னையில் இருக்கும்   தந்தைக்கு மகனைப் பார்க்கும் ஆவல். அதற்குள் மனைவி  இரண்டாவது  கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது. அவளோ என்னுடைய இந்த நிலையில் அவனைப் பார்த்துக் கொள்வது கடினம். அவன் உங்கள் அப்பாவுடனேயே இருக்கட்டும்  என்று விடுகிறாள்.

முத்துப்பேட்டை கிராமத்தில் இறங்கும்
இந்தத் தகப்பன் மகனைத் தேடி ஓடத் ,தந்தை அவன் உடல் நலம் விசாரிக்கிறார்.
பதில் சொல்லாமல் தன் மகனைத் தேடுகிறான்.  அதிகாலை வேளையில் வாயில்  விரலை  வைத்துப் பல் தேய்க்கும்
 அந்தப் பிஞ்சோ கொஞ்ச நேரம் கழித்தே புரிந்து கொள்கிறது.
யப்பா.....என்று ஓடி வருகிறது.
அவன் கிராமத்தில் இருக்க்கும் நான்கு நாளும் அவனுடனேயே
ஒட்டிக் கொள்கிறது.
அப்பா கிளம்பும் நேரமும் வருகிறது.
அப்பாவோட ஊருக்கு  வரியா கண்ணா 
என்று கேட்டால்
துளி கூடத்தயக்கம் இல்லாமல் தாத்தாவின் தோளைத் தழுவிக் கொள்கிறது
குழந்தை..நீயும் இங்க இரு  என்கிறது,.
தாத்தாவும் சொல்கிறார்.
''நீ  தான் எங்களை மறந்து   நாட்களைக் கழிக்கிறாய்.
இவனாவது எங்களிடம் இருக்கட்டும் என்று
ஆதரவாக  பேரனை அணைத்துக் கொள்கிறார்..

ரயிலில் ஏறும்  மகனின் தொண்டையில்
தவிப்பு உருள்கிறது.
தன்னை ஈந்தவரையும் தான் ஈந்தமகவையும்
விட்டுப் பிரியும்  சோகம்.

இது போல  கதைகளை   இப்பொழுது படிக்க முடியவில்லையே
என்ற   தவிப்பு எனக்கும்:)

ஆசிரியர் பால்யூவைப் பற்றித் தெரியாதவர்கள்  இருக்க முடியாது.  குமுதம் பத்திரிகை வந்ததும் படிப்பது பால்யூவின் பக்கம் தான்.
அவ்வளவு பிரபலம்.
சிறுகதைகளை  நாம் தேடிப் படிக்கவேண்டி இருக்கிறது இப்போது.
என்னுடைய  இளமைக்காலங்களைப் பற்றிப் பேசினால், ஒரு  விகடன் என்றால் மூன்று, கல்கி என்றால் மூன்று, குமுதம் என்றால் இரண்டாவது  இருக்கும். ஏனெனில் தொடர்கதைகளும் நிறைய வரும்.
தற்கால  நிலை....ம்ஹூம்   நான் சொல்வதாக  இல்லை.
இப்போது இந்தப் பதிவில்   பால்யூ அவர்கள் 1948 இலிருந்து எழுதின கதைகள் இந்தப் புத்தகத்தில்  இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தகத்தை நான் வாங்கினது    எட்டு வருடங்களுக்கு முன்னால்..


இப்போது கிடைக்கும் என்றே நம்புகிறேன். தொலைபேசி எண்ணும் இருக்கிறது. வாங்கிப் படியுங்கள். நல்லதொரு அனுபவம்    கிடைக்கும்.:)






Thursday, May 24, 2012

கிரிகெட் ஆடப் போகலாமா:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்தியா  முன்னேறுகிறது.

காய்கறி விலை ஏறிவிட்டது. வாங்குகிறோம்.
வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை. அவ்வளவு வண்டிகள்.
முன்னேற்றம் தான்.

எங்கள் வீதியில் இருந்த பழையவீடுகள் 80(சுற்றி இருக்கும் பத்து க்ரௌண்ட் மனைகளோட))   கோடிகளுக்கு விற்கப்பட்டு
ஒரு அபார்ட்மெண்ட் 3 கோடி என்ற அளவில் விற்கப் படுகிறது.

கட்டினது தெரியவில்லை. குழந்தைகளும் துணி உலர்த்துக்   கொடிகளும்

கண்ணில் படுகின்றன.
ஒரே ஒரு வீதியில்  மூன்று அழகு நிலையங்கள்,
மூன்று துணிமணிக் கடைகள்.
மூன்று மருத்துவ மனைகள். ...
மூன்று பாங்குகள்.
இரண்டு தானியங்கி  பணம் வழங்கும் இயந்திரங்கள்..
அவைகளில்  எப்பொழுதும்   கூட்டம்..

இது இருக்கட்டும். ப்ளஸ்  2  தேர்வு முடிவுகள்
வந்து  எனக்குத் தெரிந்த  நாலைந்து குழந்தைகள்
நன்றாக மதிப்பெண்கள் பெற்றவர்கள்..
இரண்டு பெண்கள்  பொருளாதார்ம், வணிகம், கணக்கெடுப்பு
இந்த வகையில் பிரமாதமான   மதிப்பெண் எடுத்துத் தேர்வடைந்திருந்தார்கள்.

இரண்டு  பையன்களுக்கும் எஞ்சீயர்,அமெரிக்கா  கனவுகள்.

ஒரே ஒரு பையன்   விஸ்காம்,கிரிக்கெட்  இரண்டு அகாடமியில் சேரப் போவதாகச் சொன்னான்.

ஏன்பா என்றதற்Kஊ  இரண்டிலும் பணம்  உண்டு ஆந்டி.
நீங்க ஐபிஎல்  பார்ப்பதில்லையா.  என்றான்.
இல்லப்பா. எனக்கு ஈடுபாடு இல்லை.

அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி விடுவதில்
முனைப்பாக இருக்கிறார்கள்.
நூறு கோடியில் வீடு கட்டி இருக்கிறாராம் ஒருத்தர்.

எங்கள்  காலத்தில்  எண்பதுகளிலும் விழித்திருந்து இந்த விளையாட்டைப் பார்த்திருக்கிறேன்.
.
இப்போது உலக மயமான கிரிக்கெட்.. அவ்வளவு ரசிக்கவில்லை. அதுவும் ஒரு மாணவன் 750 ரூபாய் கொடுத்து, விளையாட்டைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னான். தொலைக்காட்சியில் பார்த்தேன்.

மாற்று சிந்தனை உடைய எனக்கு இது ஒப்பவில்லை. ஒரு பக்கம்
கணினி படிப்புக்குக் கையேந்தும் வறுமைக் கோட்டு    மாணவர்கள்.
மறுபுறம்  அம்மா படிப்புக்காகக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு  கிரிக்கெட்
பார்க்கப் போகும் இன்னோரு  பையன்.

எல்லோர் கையிலும் கைபேசி.
கண்மண் தெரியாமல் சாலையில் விரையும் முகமூடிப் பெண்கள்.
சர்ரென்று எங்கள் வண்டியை தப்பான பக்கத்தில்
கடந்த பெண்ணைப்  பார்த்தால்   சிரிக்கிறாள்.
 ஒரு செகண்ட் இவர் சமாளிக்காமல் இருந்தால் வண்டி யோடு கீழே விழுந்திருப்பாள்


வந்திருந்த   பெண் நான் கூட ஸ்கூட்டி கேட்டிருக்கிறேன் . என் மதிப்பெண்ணுக்குப் பரிசாக. என்றாள். பதினெட்டு வயது..

''ஓடிப் போய்க் கல்யாணம் செய்துகொள்ளலாமா ''என்று ஒருவிளம்பரம்.

அந்த நிமிடத்துக்காக மட்டுமே வாழக் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை.
ஒரு அணி எங்கயோ வெற்றி பெற்றால் சென்னையில்
பார்ட்டி  கொண்டாடும்    விடலைப் பையன்கள் பெண்கள்.

போன வார ஸ்காண்டல் வாரமாக  பல தொலைக் காட்சிகளில் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு.

சிறுவர்கள் தெளிவாக இருக்கிறார்களோ இல்லையோ
நான் குழம்பிப் போயிருக்கிறேன்.
இன்று ஏறியிருக்கும் பெட்ரோல் விலை,
அதைத்  தொடரப் போகும் மற்றவிளைவுகள்..

வெளிநாட்டில் முடங்கியிருக்கும்   கறுப்புப் பணம். அதைச் சொல்ல ஏசி  வண்டியில் வந்து   தீர்மானங்கள் இயற்றும் கல்விமான்கள்.(?)

மேரா பாரத் மஹான்.
.



Sunday, May 20, 2012

இன்று அ(ம்)மாவாசையாம்..........சூரிய கிரகணமும் கூட.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பச்சை நீலம் வெள்ளை கரும்பச்சை
கலந்து பொங்கி வரும் நீர் வெள்ளம்

பொங்கும்  பரிவு, கருணை,எளிமை
கண்டிப்பு, அபரிமிதமான புரிதல்
இதெல்லாம் சேர்த்தால்
அம்மா .

திருமங்கலத்தில் ஒரு வீட்டில்  தலைவி 
இறைவனடி சேர்ந்தாள்.
பாட்டி,தாத்தா,அந்த அம்மாவின் கணவர் கதறினர்.
குழந்தைகள் எங்கள்  வயதுதான் இருக்கும்
இங்கே வந்துவிட்டன.
எங்களுடன் சேர்ந்து அம்மா அந்தக் குழந்தைகளுக்கும் கைகளில் சாதம் கலந்து போட்டாள்.
பக்கத்துவீட்டு அழுகைக் காதில் விழா வண்ணம் கதவுகளை மூடி அவர்களைப் படுக்க வைத்துத் தூங்கச் சொன்னாள்.

குழந்தைப் பிறப்பின் போது இறந்துவிட்டதால் அந்தக் குழந்தையின் அலறல் வேறு.
என்  எட்டு வயதிற்கு இவை அனைத்தும்
அளவுக்கு மீறின கலவரத்தை   ஊட்டின.

அம்மாவைவிடாமல் அவளுடன் எவ்வளவு
ஒட்டமுடியுமோ அப்படி ஒட்டி இருந்தேன்.
தம்பிகள்  நிலைமை புரிந்தும் புரியாமலும்
விழித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசி நேரத்தில்  குழந்தைகளை எழுப்பவும் அலறிக் கொண்டு சென்றன.

அம்மாவிடம் அன்று உறுதி மொழி வங்கினேன். நீயெல்லாம் நிறைய நூறு நூறு வருஷம் இருப்ப இல்லமா.
ஆமாம் உம்மாச்சி எப்பவும் பார்த்துப்பார்.
இதெல்லாம் பார்த்துப் பயப்படக் கூடாது.

சரியாகிவிடும் கொஞ்சநாளானால் உனக்கே புரியும்.


புரிகிறது. ஆனல் பிடிக்கவில்லை. இப்பொழுது   நீ  இங்கே  இருந்தாலும் அழாதே என்றுதான் சொல்வாய்.
எத்தனை வயது எனக்குத்தான் ஆனால் என்ன,உனக்குத் தான் ஆனால் என்ன.
அம்மா நீ என்றும் வேண்டும்.


Saturday, May 19, 2012

சுற்றம் சூழும் கோடை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எப்பொழுதும் சொல்வதுதான்.
இந்த வருடம்  வெய்யில்    கொஞ்சம் கூடுதல் என்னும்   எண்ணமும் அலுப்பும்.
வயதும் கூடும் நேரம்.சகிப்புத் தன்மை  குறையும் நேரம்.

சென்னையில்  இந்த வருடம் மதிய நேரம்
மனிதர்கள்   நடமாட்டம்     குறைந்து தான் இருக்கிறது.
பஸ்கள் கூடக்  குறைவாகவே   போகின்றன.
தினம் தினம் வருகிறேன் வருகிறேன் என்று உறுமும் மேகங்கள் கூடக் கலைந்து போகின்றன.எப்பொழுதும் போலக் கூடுவாஞ்சேரி  வரை வந்துவிட்டு த் தெற்கே   திரும்பி விடுகின்றன.

ஒரு பத்துவருடங்கள் முன் கூட வெய்யிலின் தாக்கம் 3  மணி வாக்கில்
குறைந்துவிடும்.கடற்காற்று மென்மையாக வந்துவிடும்.

இப்பொழுதோ மாலை ஆறு மணிக்குக் கூட வெய்யிலின்  சூடு தணிய மாட்டேன் என்கிறது. வீட்டுச் சுவர்கள் கூடச்  சுடுகிறதோ என்று தோன்றுகிறது.
எங்களுக்காவது பரவாயில்லை  காலை எட்டு மணி யிலிருந்து பத்து மணி வரைதான்   மின்வெட்டு. நடுநடுவிலும்    சொல்லாட மின்வெட்டும் வந்துவிடுகிறது. சுற்றிக் கட்டப்படும்  வீடுகளுக்கு  எப்படித்தான்

தொடர்ந்து     மின்சாரம் கிடைக்கிறதோ.
  இடைவிடாத  சத்தம்.இந்த வெய்யிலில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அவர்களின் உற்சாகத்துக்கும் குறைவில்லை.
கைபேசியில்  இன்னா மச்சான் '  விசாரிப்பும்.
ட்ரான்ஸிச்டரில்  'என் ஃப்ரண்டைப் போல யாரு  மச்சான்' 
பாட்டும்,அவர்களுக்காகவே ,சாமர்த்தியமாகக் கடை போட்டுவிட்ட டீக்கடைக் காரரும், இளநீர் விற்கும்   அம்மாவும் 
வெய்யிலை லட்சியம் செய்யவில்லை.!

இதோ வாராந்திர சந்தையாக டி ஷர்ட்,அரை நிஜார்கள் என்று ஒருவர் கடை பரத்திவிட்டார். இனி ஒன்பது மணிவரை  கலகலப்புக்குக் குறைவிருக்காது.
 ஒருவேளை இவர்கள் பிழைக்கட்டும் என்றுதான் வருணபகவான்  தள்ளி நிற்கிறாரோ:)
  ஓடிப் போய்விடுகிறது.

Monday, May 14, 2012

கண்ணே பாப்பா..

2012 இல் பதிந்த  சம்பவம்
  


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மூன்று நாட்களாகக் கண்வைத்தியரிடம்  கண்ணைப் பரிசோதித்து அலுத்து,  கண்ணாடி போட்டுக்கங்கன்னு   தீர்மானமா சொல்லிட்டாங்க.

அவங்க கொடுத்த  கண்ணாடியைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தேன்.
வைத்தியர்  உள்ளே இன்னோருவரை அறுத்துக் கொண்டிருந்தார்,. அறுவை  பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

''பாட்டி'
ஒரு குட்டிக் குரல் கேட்டது.
மனம் பூராவும் ஆநந்தம் துள்ளியது.
 யாரிந்த தேவதி என்று திரும்பினேன்.
ஒரு நான்கு வயதுக் குழந்தை (பெண்)
புடவையைப் பிடித்து  கண்ணு வலிக்கிறதா பாட்டி என்று கேட்டது.
எனக்கு அப்பவே கண்வலி போய்விட்டது.

இல்லடா கண்ணம்மா. சரியாப் போச்சு. இதோ கண்ணாடி போட்டுக்கப் போறேண்டா, என்றபடி குழந்தையைப் பார்த்தேன்.
ஆணைப் போலக் கால் நிஜாரும்,அரைக்கை சட்டையும்
போட்டு சுருள்குழலோடு பெரிய கண்களால் என்னைப் பார்த்தது அந்தத்
தேன்மலர்.
''ஏண்டா கேட்கறே''
 எங்க அம்மா இல்ல எங்க  அம்மா''
ஆமாம்'
அவங்களுக்குக் கண்ணு தொங்கிப் போச்சு''
!!!!!!!
என்னது? என்று அடுத்த வரிசையைப் பார்த்தேன்..
அங்கே ஒரு அம்மாவும் இந்தக் குழந்தையோட அண்ணாவும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்   கண் வீங்கி இருந்தது.

நான் இந்த ந்ண்டுசிண்டைப் பார்த்து, உன் பேர் என்னடா
என்றேன்.
இன்மாயி
என்னது?
அவளோட அண்ணா   ஹிரண்மயி  ஆந்டி என்று புன்னகைத்தான்.
ஹிரண்மயி இங்க வாடா, ஸ்கூல் போறியாம்மா என்றேன்.
அய்ய சூலெல்லாம் கிடையாது
சம்மல்சூல்(சம்மர் ச்கூல்)   தான் போறேன்.
ஆனா இன்னிக்குப் போலை.
ஏன் தெரியுமா
தெரியாதே.
காலைப் பாக்கறியா பாட்டி என்றது.
காண்பிடா   கண்ணு  என்றதும் சிரமப்பட்டு ஒரு துளியூண்டு கீறலைக் காண்பித்தது.
புண்ணு வந்திருக்கு. என்னால ஒக்காரவே முடியாது
அதனால தான் போல.
என்று    தாவி தாவிக் குதித்தது.:)
ஏய் வலிக்கப் போறதுடா என்றேன்.
குதிச்சா,டான்ஸ் ஆடினால் வலிக்காது
ஸ்கூலுக்குப் போய் உட்கார்ந்தால் வலிக்கும் என்று
ரொம்பப் பாவமா முகத்தை வைத்துக் கொண்டது.
அவளுடைய அம்மா,அப்பா,அண்ணா எல்லோரும்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

மருந்து போட்டியாமா என்றால். அவளுக்குப் பிடித்த மிக்கிமௌஸ் பாண்ட் எயிட்  கிடைக்கலையாம்.:)
அதற்குள் என் முறை வரவே  உள்ளே  சென்றேன்.

வெளியே வரும்போது அந்த சிறிய சொர்க்கத்திடம் வரேண்டா கண்ணா
என்றதும். இங்கயே இரு பாட்டி என்றது. தாத்தாக்குப் பசிக்கு இன்னோரு நாள் வரேன் என்றதும். சரி பாட்டி  பைபை என்று கையசைத்துவிட்டது.
கண் நிறைய அந்தச் செல்வத்தைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்து எஜமானரிடம் சொன்னேன். உனக்கு எப்பவும் பேரன்பேத்திகள் கிடைத்துவிடுவார்கள் என்றபடி வண்டியைக் கிளப்பினார்.

சின்ன சொர்க்கங்களைப் படைக்கும் கடவுளுக்கு நன்றி.
Posted by Picasa

Saturday, May 12, 2012

வெள்ளிநிலவே எந்தன் அன்னையே

அமெரிக்காவில் வந்த நிலா.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நீ  கடைப்பக்கம் போவியாம்மா.
உம்ம் போவேன்  .
என்னவேணும்மா.
தயங்கியவாறு தனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருளை அம்ம சொன்னார்.
நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
ஏன்மா  உனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் நின்று விட்டதே .

இது என்ன புதிதா.டாக்டரைப் பார்க்கணுமா.
இல்லைமா அப்பா அழைத்துக் கொண்டு போனார்.
எனக்கு அவரிடம் இதை வாங்கிக் கொண்டு வரச் சொல்ல கூச்சமாக இருக்கிறது.

நீ அடுத்த தடவை வரும்போது,  இம்ப்காப்ஸிலிருந்து
ஸ்வாஸ்  மாத்திரையும்,
இந்தப் பாக்கேட்டையும் வாங்கிண்டு வருகிறாயா என்றபடி ஒரு நூறு ரூபாயை என் கையில் வைத்தார்.

என்ன கஷ்டம் அம்மா உனக்கு?
அடிக்கடி நீர் கசிகிறது. வெளியே போகவே பயமா இருக்கு.
டாக்டர் ஆபரேஷன் செய்துக்கலாம்னு சொல்கிறார்.
  நீ சரின்னு சொன்னால் கல்யாணி  நர்சிங் ஹோமில் செய்து கொள்கிறேன்.

ஐய்யோ  அம்மா, பெண்ணிடம் பேசவே உனக்கு இவ்வளவு பயமா.
என்னை ராட்சசி   வம்சத்தில்   சேர்த்து  பயந்திருக்கிறாயா.

இது நடந்தது    23 வருடங்களுக்கு முன்.
அப்போது இந்த   சங்கடத்துக்கு மருந்து மாயம் ஒன்றும் இல்லை. சிறுநீரக  ப்ளாட்டர் அருகே ஒரு மைனர்    அறுவை சிகித்சை.

ஆனால் அது செய்தும்   பயன் படவில்லை. இந்தப் பிரச்சினையும் வாங்குவதும் தொடர்ந்தது.

சுத்தம் படு சுத்தம் என்றிருக்கும் அம்மாவுக்கு
இது பெரிய    விஷயமாக மனதைப் பாதித்தது.

உடல் தளர்ந்ததால் வந்த    சிரமம்.
பிறகு அதையும் தைரியமாக எதிர் கொண்டார்.
சிரித்த முகத்தை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளவில்லை.
இப்போது எத்தனையோ மாற்று சிகித்சைகளும்

உதவிகளும் பலவடிவில் வந்துவிட்டன.

நாற்பது வயதிலேயே அவதிப் படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகை  வாயிலாக அறிகிறேன்.
இதோ நானும் அந்த லிஸ்டில் தான்.

அம்மா உன்னளவிற்கு எனக்கும் பொறுமையும் தைரியமும் கொடு.
அத்தனை உயிரையும் நேசிக்கும் பண்பையும் கொடு.

.

உலகில் அன்னை பெண்வடிவத்தில் மட்டும் இல்லை. தந்தையரும் குழந்தைகளைப் பேணும் காலம் இது.
வாழ்த்துகள். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். குடும்பம் நன்றாக இருக்கும்.

Posted by Picasa

Sunday, May 06, 2012

முழு நிலாவும் புயலாக வந்த காற்றும்.

இரவு மூன்று மணிக்கு அடித்த சூறைக்காற்று.
சித்ரா பவுர்ணமி நிலாவைப் பிடிக்க வந்தவளுக்குக் கதவை திறந்ததும் முகத்தில் அடித்தது காற்று.எதிர்வீட்டுத் தென்னங்கீற்று  இப்படி ஆடி நான் பார்த்ததே இல்லை.
 ஆளைவிடு சாமின்னு உள்ள வந்து அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வந்துவிட்டேன்.

ராத்திரி இந்த மாதிரிக் காற்று அடித்தது என்றால்
உன்னையார்  மூன்று மணிக்கு
வெளிய   போகச் சொன்னது என்று ஆரம்பித்துவிட்டார்.;0)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, May 05, 2012

சித்ரா பவுர்ணமியும் அழகர் ஆற்றில் இறங்குவதும்

சுந்தரத் தோளழகன்
பக்தர்   வெள்ளம்
அழகர்  ஆற்றீலிறங்குவார் நாளை.

குதிரை அழகும்  குடை அழகும்
வண்ணப் பட்டழகும்
சீறிப்பாயும் கண்ணழகும்
அத்தனை அழகும் சேர்ந்தும் ஆண்டாள் அவனிடம் வரம் தானே கேட்டாள்.
இணைத்துவை என்னை அரங்கனொடு என்று.
அரங்கனும் அழகர் வடிவில் வந்து அவளை ஆட்கொண்டதாகவும் செய்தி சொன்னார்,,.
ஆண்டாளின் திருத்தகப்பனார்  பெரியாழ்வார், இறைவனை நினைத்து அரங்கனை நினைத்து ,மாலிருஞ்சோலைக்கு வந்து  திருநாட்டுக்கு எழுந்தருளினார்,'அவரது நினைவிடம்(திருவரசு)   இங்குதான் இருக்கிறது,.
அதைத் தரிசிக்கத்தான்    எங்களுக்கு முடியவில்லை.

சுந்தர பாஹு(அழகிய  தோள்கள்) என்று அவனுக்குப் பெயர். ராமனுடைய வடிவத்தில்
அவன் இருந்தால்   வில்லெடுத்து அம்பு விடும் தோள்கள்  அழகில் சிறந்து
  பருத்து நீண்டுதானெ இருக்கும்.
சுந்தரராஜன் என்றும் இன்னோரு பெயர்.
மூலஸ்தான பெருமாளுக்கு 'பரமஸ்வாமி'   எனும் நாமம்.
நாங்கள் 2003இல்   மதுரைப் பயணம் மேற்கொண்ட போது கேட்டுக் கொண்ட விவரங்கள் இவை.

கொஞ்சம் மலையில் ஏறி நூபுர கங்கையையும் தரிசித்தோம்.

கள்ளர்கள் கூட்டமாக வந்து வழிபட்ட இடம் அவனும்கள்ளழகனானான்..

அவனுக்கும் காவல்  பதினெட்டாம்படிக் கருப்பண்ணன் சாமி.பெரிய பெரிய ஈட்டிகளும் அருவாள்களும்  அந்தப்  பெரிய கதவை ஒட்டி  நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

நீதி    நியாயம்  கேட்டு வருபவர்களுக்கு  அங்கே  கிடைக்கும் என்றும்
பொய் வழக்குப் போட்டவர்களுக்கு  அதற்குத் தண்டனை கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
நாளை எந்தத் தொலைக்காட்சியிலாவது ஒளிபரப்ப மாட்டார்களா  என்று  எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, May 02, 2012

இன்று மீனாட்சிக்குத் திருமணம் சொக்கன் கை பிடிக்கிறார்

மீனாக்ஷி கல்யாண வைபோகம்
இன்று
மீனாக்ஷி

சுந்தரேச்வரரைத்  திருமணம் செய்கிறாள்.



Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப் போகிறது.
எட்டுமணிக்குள் மதுரைக்குப் போகத் தயாராக  வேண்டும்.
ஒளிபரப்பும் ஜயா  தொலைக்காட்சிக்கு
மனமார்ந்த நன்றி.
எல்லோரும் கண்டு களித்து
மீனாட்சியின் கடைகண் கடாக்ஷத்தை ப் பெறுவோம்.
திவ்யதம்பதிகளுக்கு   கோடானுகோடி நம்ஸ்காரம்.
மதுரையம்பதிக்கும் நம்ஸ்காரம்.

Tuesday, May 01, 2012

பதின்ம வயதில் ஒரு சின்னக் காதல் 2

அடுக்கு மல்லி இன்று லக்ஷ்மிக்கு சமர்ப்பணம்
சங்கும் புஷ்பமும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அம்மா  இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்து , பெண்ணைக் கண்டிக்க ஆரம்பித்தாள்.எப்பப் பார்த்தாலும் சாந்தா சாந்தான்னு ஓட வேண்டியது. ஆடிட்டருக்குத்தான் வெளியே  போகவே சரிய இருக்கு. மைலி(மைதிலி)க்கும்
கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா. இன்னோருத்தராத்துப் பெண்ணைக் கூப்பிடறோமேனு  கொஞ்சம் கூட    தோணலியே.
அதுவும் சின்ன வயசா.
ஜாடை மாடையாக் கிணத்தடில சொல்ல்வேண்டியது. என்னடி சீவு

எங்காத்து ஜானிக்கும் உங்க நீலாக்கும் உயரம் எவ்வளவு பொருத்தம் பார்த்தியா.
என்னவோ யாருக்கு எங்க போட்டு வச்சிருக்கோ.
அப்டீனு  ஒரு கேள்வி.
பக்கத்திலியே இது மொட்டு மாதிரி நின்னு கேட்டுக் கொண்டிருக்கும்.
மனசில ஆசைவர வயசில்லையா.
நாம   பள்ளிக்கூடம் பக்கத்தில வீடு மாத்திப் போயிடலாம்னா.
எல்லாவிதத்திலியும் சௌகர்யமா இருக்கும். உங்களுக்கு டவுன்
ல தானே தாலுகாபீஸ் இருக்கு.

என்று  பொரிந்துவிட்டு  உட்கார்ந்து கொண்டாள்.
இதெல்லாம் கேட்க  நீலா அங்கே இருந்தால் தானே.

சாப்பிடாமக் கூட ஓடிப் போயிடுத்தே.
அதான் கார்த்தாலை கோபாலன்  வீட்டு மெஸ்ஸில  நிறைய இட்லி
சட்டினி எல்லாம் வங்கி வைச்சுட்டேனேமா.
நீ  சாப்பிடு. உடம்பு தள்ளாது. இவ்வளவு கோபம் உடம்பு தாங்காது
என்றவாறு இட்லி சட்டினியை அவளருகில்   கொண்டு வைத்தார்.

மாட்டினி  ஷோ மா. மத்தியானம் வந்துடுவாள் .கவலைப் படாமப் படுத்துக்கோ.
  உங்களுக்கு ஒண்ணும் புரிகிறதில்லை. இப்போ தெரிகிறதா ,வாசல்ல பார்த்த பெயருக்கு
அர்த்தம். ஜானகி நீலா தான் சேர்ந்து ஜாநீலா ஆகியிருக்கு. என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் சீவு.

வெளியிலிருந்து குட்டிமாவும் கண்ணனும்  வந்து காரம்போர்டை எடுத்துவைத்துக்   கொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

காயினும் ஸ்ட்ரைக்கரும் மோதும் சத்தம் கேட்டு அம்மா எழுந்து உர்ட்கார்ந்து கொண்டாள்.
நேரம் என்னடா  ஆச்சு கண்ணா.
ஒண்ணும் ஆகிறதுமா.
எப்போ சினிமா விடும்.
இண்டர்வெல்லோடு சேர்த்து மூணரை மணி.
ஆகக் கூடி   மூணு மணியாகும்மா.
இது குட்டிம்மா:)

சரி வெய்யில்ல எங்கயும் போகாதீங்கோ. நான் குளித்துவிட்டு வருகிறேன்.
முற்றமெல்லாம்  சுண்ணாம்பு பூசி வைத்திருக்கிறேன். அந்தப் பக்கம் வரவேண்டாம். பாத்ரூம் போகணும்னால் வீட்டைச் சுற்றி வாங்கோ.
என்றபடி கையில் புடவை துணிமணிகள் சகிதம் பின்புறம் சென்றாள்.

மாதவன் ,சீவு சொன்னதின்  செய்திச் சுருக்கத்தை அலசிக் கொண்டிருந்தார்.
இப்படியும் இருக்குமா.  ஒன்பதாவது படிக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும்.

நிறைய  புத்தகங்கள் படிக்கிறாள்.
எப்படியடி காதலிப்பது  என்று வேறு ஒரு புத்தகம். காதலித்தால் போதுமா என்று ஒரு புத்தகம்.அதெல்லாம்  இருபது வயதுகளில் நடக்கும் சம்பவம் இல்லையோ.

அதுதான்   இந்தப் பெண் அவர்கள்    வீட்டிலேயே பழி கிடக்கிறதா.

சரி இதை மெதுவாகத் தான்  சரி செய்யணும்.

நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துவைத்துக் கொண்டு 
ஸ்ரீராமஜயம் எழுத  ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழிந்தது. குழந்தைகளைச் சாப்பிடக் கூப்பிட்டார்.
வரட் வரட்டென்று முற்றத்துப் பாசியைத் தேய்த்துக் கொண்டிருந்த சீவுவையும்  ,போதும்மா  வா. முதுகுவலிக்கப் போகிறது' என்று அழைத்தார்.

அவளுக்கும் அலுத்திருக்கவேண்டும்.
கொஞ்சம் அந்த விசிறிய இந்தப் பக்கம் தள்ளுங்கோ. நான் விகடன் படிக்கிறேன். நீங்க எல்லாம் சாப்பிட்டுவிட்டு

எனக்கு  தையல் இலை கொடுங்கோ என்றபடி அந்தவாரத்தொடரில் ஆழ்ந்தாள்.
ஒரு மணி நேரம் கழிந்தது. சாந்தாவின் குரல் சத்தமாகக் கேட்டது.

கூடவே  நீலாவின்  குரலும் கம்மியாகக் கேட்டது.
 அதெப்படி   வைஃப்  இருக்கும்போது இன்னோருத்தியை
சிவாஜி கல்யாணம் பண்ணிக்கலாம்
இது சாந்தா.
ஏய் அதான் போனால் போகட்டும் போடா பாட்டும்போதே  சரோஜா தேவி போயிட்டாள்னு தெரிகிறது.
அதற்கப்புறம்  தன் நன்றிக்கடன்  தெரிவிக்கணும்னு   தான் சவுக்கார் ஜானகியைக் கல்யாணம்  செய்துக்கிறார்.
அவா  ஒரு டூயட் கூடப் பாடலை பாரு இது   நீலா.

வாசல் கதவைத் திறக்கும் போது
நீலா 'டேய் கண்ணா நான் எழுதினதை ஏண்டா அழிச்சே.
என்று அவன் மேல பாய.
அடடா என்னம்மா நீ குழந்தையாட்டாம்  கண்ட இடத்தில
கிறுக்கிற வழக்கம்.
அப்புறம் யாரது ஜாநீலா?

ஓ!அது ஜாமீலாப்பா. சின்ன எம்   போட்டுதானெ  எழுதி இருந்தேன்.
நீ  ஜாநீலான்னு படிச்சயான்னு, சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சே என் இங்க்லீஷ் எழுத்து  இன்னும்  சரியா இல்லைன்னு ஹாண்ட் ரைட்டிங் மிஸ் சொல்வது சரிதான்.
என்று நாசூக்காகத் தலையில் தட்டிக் கொண்டாள்.

உடனே  மற்றப்  பசங்கள் எல்லாம் அவளைச்   சுற்றி
கும்மியடிக்க ஆரம்பித்தார்கள்
ஜாஆஆஅ நீல்லா
ஜாமீஈல்ல்லாஆ
என்று கைதட்டவும் அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.
அம்மா  அந்த விசிறியை இங்க போடு
எனக்கே பசிக்கிறது.இவர்களோட  ஆட்டத்தைப் பாரேன்.
ஆளுக்கு  முதுகில் ரெண்டு கொடுக்கிறேன்!!
அப்பா அடுத்தவாரம் நாமெல்லாம் மணப்பந்தல் போலாமாப்பா. அப்போதான் நான் சாப்பிடுவேன் போ''
என்று பொத்தென்று கீழே உட்கார்ந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டே
இருந்தார்.

சீவு தலையை நிமிரவே இல்லை.

ஏய் சாந்தா நீ மட்டும் வா என்ன. ஜானகி,,அம்மால்லாம் வந்தால் நாம் ஜாலியாப் பேச முடியாது.........