Blog Archive

Monday, April 16, 2012

ஆநந்தத்திற்கு அழைப்பு விடுவோம்.....நன்றி எங்கள்ப்ளாக்

அரசனின்  கனவு நிஜமான இடம்
இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே   பிடித்த விஷயங்களே கண்ணிலே  பட்டன.
  கனவுகள்  எனக்கு  நிறையவே வரும்.அதுவும்  சிலசமயம் இனிமை சிலசமயம்
படபடப்பு ,அவசரம் என்று.அது   முதலில் என்னைக்  கவர்ந்தது.
அதற்கு முன்னால்  பெண்ணை உருவாக்கும் இறையின் அழகான பொன்மொழிகள் . அதை எழுதாவிட்டால் இந்த நாவலின் விமரிசனம் முழுமையாகாது என்று தோன்றியது.

இதோ
அந்த  வரிகள். இறைவிக்கும்  இன்னோரு தேவதைக்கும் நடக்கும் சம்பாஷணை....'அற்புதமான படைப்பு. மிகவும் யோசித்துச் செய்திருக்கிறீர்கள்
வேறென்ன திறமைகள்  இவளுக்குத் தந்திருக்கிறீர்கள்''

அவளால்  வாழ்க்கையின் சுமைகளை சுமக்கவும் திறம்பட க் கையாளவும்   முடியும்.
ஏககாலத்தில் அழவும் சிரிக்கவும் முடியும்.
இவளில்லாது மாயக்கதைகள் இருக்காது
பாடவும் ஆடவும்,கொண்டாடவும் தெரிந்தவள்
தான் நம்பும் விஷயங்களுக்காகப் போராடுவாள்
தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக  நன்மைக்காக  எந்தத் தியாகமும் செய்யத்தயங்காதவள். 
குழந்தைகளின் வெற்றியில்  களித்துக்  கூக்குரல்   எழுப்புகிறவள்.
பிரியமானவர்களை இழக்க நேர்ந்தால் வாழ்வு முழுவதும் அழுகிறவள்.
வாழ்வின் சிரம்னகளை எதிர்த்து நிற்கும்  பலத்தை நொடியில் உருவாக்கிக்  கொள்கிறவள்.
ஓர் அணைப்பும் ஒரு முத்தமும்  உடைந்த நெஞ்சத்தை ஆற்றவல்லது  என்பதை அறிந்தவள்.
அச்சத்தியமான பொறுமை கொண்டவள் என்றாலும் எதிர்த்து  உந்தித்தள்ளப்
படுகிறபோது உறுதியாக  எதிர்த்து நிற்கும் திறமை கொண்டவள்''
தேவதை பெருமூச்சு விடுகிறது.
இந்த உன்னதப் படைப்பு மற்ற படைப்புகளுக்கு அநீதி இழைக்கப் பட்டது போலத் தோற்றம் தருகிறதே.

இல்லை இந்தப் படைப்பிலும் ஒரு  பிழை இருக்கிறது.
??? தன் உன்னதம், தன் மதிப்பு என்ன என்பதை மறந்து விடுகிற தன்மை:(

அற்புதம் இல்லை? இந்த ஒரு  பக்கத்துக்கே  இந்த நாவலைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆசை.
இனி  கதை.
மாயா என்ற மென்மையான இளம்பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதியைப் பார்க்கப் போகிறோம். அவள் வாழ்க்கையிலும் ஆநந்தததிற்கு வழிக்கோடு ஒன்று வரைய ஒரு குரு வருகிறார்..
இன்றைய காலகட்டத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட இந்த நாவலை நான் 
இரண்டு நாட்களில் முடித்துவிட்டேன்.(நாவலின் சுவை அப்படி)
இப்போது அசை போடும் நேரத்தில் மீண்டும்   படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கணும்.
 

 
 



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

12 comments:

கௌதமன் said...

மீண்டும் நன்றி!!

பால கணேஷ் said...

தலைப்பை தமிழ் பண்ணிருக்கீங்க. ஆனந்தத்திற்கு தவறிய அழைப்பு விடுப்போம்-னுல்ல இருந்திருக்கணும். நானும் இப்போ படிக்க ஆரம்பிச்சாச்சுங்கோ... ஆனா நீங்க ரசிச்சு எழுதியிருக்கறதப் பாத்தா நான் ரசிச்சதுன்னு எதுவும் எழுத மிச்சம் வெக்க மாட்டீங்க போலருக்கே வல்லிம்மா... (முந்திக்கடா கணேஷ்...)

வல்லிசிம்ஹன் said...

மீண்டும் நன்றி கௌதமன்:)

வல்லிசிம்ஹன் said...

அப்படித்தான் இருக்கணும் கணேஷ்.
ஆனால் எனக்கென்னவோ அழைத்தால் வருவேன் என்று கண்ணன் சொல்லி இருப்பது நினைவுக்கு வந்தது. அதான் அழைத்துவிட்டேன். மாறுதலுக்காக:)
அடுத்த பகுதியில் முடித்துவிடுகிறேன். உங்களுக்கு நிறைய விட்டுவைக்கிறேன்;)

கோமதி அரசு said...

??? தன் உன்னதம், தன் மதிப்பு என்ன என்பதை மறந்து விடுகிற தன்மை:(//

இறைவன் படைத்த பெண் என்கிற படைப்பு சில நேரங்களில் தன் உன்னதத்தை மறந்து விடுகிற தன்னமைக்கு காரணம் இது தானா!

பெண்ணின் பெருமையை, திறமைகளை கூறும் பக்கம் அழகானது.

அனுமனுக்கு தன் பலத்தை வேறு ஒருவர் எடுத்து சொல்லவேண்டும் அது போல் பெண்ணின் உன்னதத்தை எடுத்து சொல்ல குரு வருகிறாரா அதை படிக்க ஆவல்.

ADHI VENKAT said...

விமர்சனம் அருமையாக இருக்கும்மா.....

அப்பாதுரை said...

'ஆனந்தத்திற்கு அழைப்பு விடுவோம்' சரினே தோணுது. 'missed call' என்பது இங்கே பொருந்தவில்லை என்று நினைக்கிறேன். தலைப்பு என்னவோ புத்தகத்தைப் படிக்கத் தூண்டவில்லை. இருந்தாலும் படிச்சுடணும் - நம்ம பிலாக்லந்து பரிசாக் கொடுத்திருக்காங்களே? நல்லா இருக்குனு வேறே சொல்லியிருக்கீங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.... நல்லா இருக்கும்மா.

வல்லிசிம்ஹன் said...

இந்த வரிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தன.
பலபல சமயங்களில் கோபம்,வருத்தம்,சுய இரக்கம் எல்லாம் சேர்ந்து நம்மை நம் உள்ஸ்வரூபத்தை மறக்க வைக்கின்றன. நம் சக்தி நம்மிடம்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.
இதைக் கவனித்து மனத்தில் இருத்தியதற்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி. சென்னை வந்தால் கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

துரை, உண்மையாகவே நன்றாக இருப்பதாலயே இந்தப் பதிவு வந்தது.
பெண்களின் கோணத்திலிருந்து படிக்கும்போது பல மென்மையான உணர்ச்சிகளை வடித்திருக்கும் ஆசிரியரின் சாதுர்யத்தை வியக்கிறேன்.
ஆநந்தம் பல இடங்களில் அலைகிறது. அதை மிஸ்ஸ்ட் கால் கொடுத்தால் கவனிக்கும்.
திரு ஜவஹர்லால் சரியாகத்தான் புத்தகத்துக்கு நாமகரணம் செய்திருக்கிறார்.படியுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். இன்னும் விமரிசனமே ஆரம்பிக்கலை மா.
சுருங்கச் சொல்வது எனக்குப் பிடிபடாத கலை.:)
நன்றிமா.