Blog Archive

Monday, April 30, 2012

பதின்ம வயதில் ஒரு சின்னக் காதல் 1960

வாசல்  அழியைத் திறக்க வந்த  மாதவன் கதவின் இடது பக்கத்தில் சாக்பீஸில்   எழுதப் பட்டிருக்கும் எழுதி
இருக்கும் எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தது.
சின்னவன் ஏபிசிடி எழுதி இருப்பானோ என்றவண்ணம் உள்ளே போய் ஈரப்படுத்திய
துணிக் கிழிசலைக் கொண்டு வந்தார்.
கூடவே வந்த எட்டு வயதுக் கண்ணனைப் பார்த்து'ஏண்டா பையா இது போல மரக்கட்டையில் கிறுக்குகிறாய்.
சிலாம்பு ஏறிடாதா என்றால், அய்ய என்னப்பா எனக்கு என்னவயசாச்சு. எனக்குத்தான் நோட்டு புத்தகமெல்லாம் இருக்கே.
இது நீலா அக்கா எழுதினா''
துணுக்கென்றது அப்பாவுக்கு. அழிப்பதற்கு முன்னால்
என்ன எழுதி இருக்கு என்று பார்த்தார் .
 ஜாநீலா,நீலஜா  என்று எழுதி இருந்தது.
ஒன்றும் புரியவில்லை.
கண்ணனிடம்  கேட்டார். அவ ஸ்கூல் சிநேகிதியா இருப்பா அப்பா என்று ஓடிவிட்டான் கண்ணன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 தோழியின் பெயரெல்லாம் கதவிலயும் கம்பிகள்லயும் எழுதிவைக்கிறது
சரியாக இல்லையே.
என்றபடி சமையலறையில் விட்ட வேலையைத் தொடர்ந்தார்,.

சமயலறையை ஒட்டி இருந்த முற்றத்தில்  பெண்ணுக்குத் தலைவாரிக் கொண்டிருந்த
சிவு என்ற ஸ்ரீவரமங்கை,பெண்ணின்  பின்னலுக்கு ரிப்பன் கட்டி
''போய்க் குளித்துவிட்டு அப்பாவுக்க உதவி செய்.''
குட்டிம்மாவும் தலையை ஆட்டியவாறே பின்பக்கம் இருந்த குளியலறைக்குச்  சென்றாள்.
அங்கிருந்தபடியே அம்மாவுக்கு ஆர்டர் போட்டாள்.
அம்மா, அப்பாவை என் பின்க் பாவாடை சட்டையை எடுத்துக் கதவு மேல
போடச் சொல்லுமா.

சரி உங்க அக்கா  காலங்கார்த்தால எங்க போனாள்.?
அவளுடைய  ஸ்கூல் ஃப்ரண்ட்கிட்ட   கேள்விப்பேப்பர் வாங்கப் போயிருக்காமா.
என்கிட்ட என்னிடம் சொல்லலை.
இரண்டு வீடு தள்ளிதானம்மா இருக்கு சாந்தா வீடு.
  என்றபடிக் குளித்துவிட்டு வந்த குட்டிமா  அம்மா மேல படாமல்  அப்பாவிடம் சென்றாள்.
விளக்கு ஏத்திவிட்டு பெருமாளுக்குப் பூ வைம்மா.
என்ற மாதவன்,
சாதம் ஆகிவிட்டது. ரசமும் அப்பளமும் போதுமில்லையா
என்று மனைவியிடம் கேட்டார்.

கண்ணனை கோடிக்கடையில் மிக்ஸர் வாங்கி வரச் சொல்லுங்கள்.
நாலணா  போதும்.
குட்டிம்மா குறுக்கிட்டு இருபத்தைந்து பைசான்னு சொல்லுமா
என்று சிரித்தது.

அதற்குள் உள்ளே  வேகமாக உள்ளே நுழைந்தாள் பெரிய பெண் நீலா.
அம்மா,சாந்தாவாத்துல மத்யான ஷோ  பாலும் பழமும் போகிறார்களாம்மா.
நானும் போகட்டுமா ,ப்ளீஸ்மா.
முதல்ல  மேல வந்து விழாத. சத்தம் போடாத. அப்பா இவ்வளவு வேலை பார்த்திருக்கிறார்.
பதினாலு வயசுக்கான பொறுப்பு வேண்டாமா.
ஏம்மா அப்பா என்னைவிட நன்றாக  சமைப்பார்மா என்றச் செல்லச் சிணுங்கலுடன் அப்பாவைக் கொஞ்ச  செல்லும்  பெண்ணை
கவலையுடன் பார்த்தாள்.

நீலா   இரண்டு குழந்தைகள் தவறிய பிறகு பிறந்த பெண் என்பதால்
அப்பா   செல்லம் நிறைய..
அதை நன்கு உணர்ந்த பெண் ,சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வாள்.
இப்பொழுது இரண்டு வருடமாக அம்மாவின் கைக்குள் வரப் பழகியிருக்கிறாள்.
இருக்கட்டும்,காப்பிப் பாத்திரங்களை   அலம்பி வை.
நகமெல்லாம்   அழுக்காயிடும். நாளைக்கு ஸிச்டர்   பள்ளிக்கூடத்தில் கையிலியே போடுவார்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லமா. எஸ்டர் ஸிஸ்டர் ரொம்ப நல்லவங்க''குட்டிம்மாவோட குரல்.
நாளைக்குப் பாத்துக்கறேன் உன்னை என்று கறுவிக் கொண்டே
பக்கெட்டிலிருந்த தண்ணீரை   வைத்துச் சின்னச் சின்னப் பாத்திரங்களை அலம்ப ஆரம்பித்தாள் நீலா.

பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா.கைவலிச்சுதுன்னால் விட்டுடும்மா. நான் பார்த்திருக்கிறேன் என்றார்.
வெளியிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இந்தப் பதினாலு வயசிலயெ  உங்கள் வீட்டு அண்டா எல்லாம் நான் தேய்த்திருக்கிறேன் நினைவிருக்கட்டும்  என்றது.
 உதட்டைச் சுழிக்கும் பெண்ணைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அப்பா.

ஆமாம் யாருமா அந்த ஜானீலா  வாசல் மூங்கில்   தட்டைல  எழுதி இருக்கிறே?

ஒரு க்ஷணம் கைகள் நின்றுவிட்டன  நீலாவுக்கு.
நானாப்பா.  அய்ய  என்னை என்னச் சின்னக் குழந்தைன்னு நினைச்சியா
குட்டிமா எழுதி இருக்கும். அதுக்குத் தான் யாரோ  ஆறேழு சாக்பீஸ் கொடுத்தார்கள்' என்றபாடி பரபரவென்றுக் கழுவி முடித்துக்
கைகளை சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டாள். அடுத்த மூச்சில்  ஷாந்தாவோடு பாலும் பழம் படம் போகும் விஷயம்   அப்ப்ளிகேஷனாக

வந்தது.
எவ்வளாவோ நல்ல பாட்டுப்பா. ச்சிவாஜி சரோஜாதேவி வேற. உன்னாலியும் அழைச்சுண்டு போக முடியாது.   வேலை நிறைய இருக்குன்னு நீதான் சொன்ன. நான் அவர்களோடப் போனா என்னப்பா.

யாரெல்லாம் போகிறா.
சாந்தா ,அவ அண்ணா ஜானகிராமன்,  தம்பி பப்லூ, அந்தாத்து மாமி.
சொல்லும்போது பெண்ணின் முகத்தில் பளபளக்கும் சந்தோஷம்
மாதவனைச் சற்றே பிரமிக்க வைத்தது.
அடுத்தவாரம் அம்மா நான் நீ எல்லாரும் போகலாம்மா.
அடுத்த வாரம் வேற எம்ஜியார் படம் வந்துடும் பா.
நீ  அதுக்கெல்லாம் வரமாட்ட.

ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது. அந்தப் பிள்ளைக்கு ஸ்கூல் ஃபைனல் எக்ஸாம் லாம் வரது
எப்படி அவர்கள்  வீட்டில் இதற்கு சம்மதிக்கிறார்கள்..

அவந்தான் மா டிக்கட் எடுக்க முன்னாடியே போயிருக்கான்.
குதிரை வண்டி கூட வந்துடும். அம்ம  அம்மா இந்தத் தடவை மட்டும்மா.

இனிமே கேக்க மாட்டேன்.
பின்க் சாட்டின் பாவாடையும் ,பச்சை ஜார்ஜெட் தாவணியும் போட்டுக்கட்டுமா.
பிங்கும்  பச்சையுமா அழகா  ஒரு ஜாக்கெட் இருக்கே.
ஹை இதோ இரண்டு பின்க் ரிப்பன்.

வளையல் தான் இல்லை. பரவாயில்லை என்று தேனியாகப் பறக்கும் மகளின் புதிய அவதாரத்தைப் பார்த்துப் பிரமித்தார் அப்பா மாதவன்.....
இது  மதுரை பழங்காநத்தத்தில்   நடக்கிற கற்பனை:)   தொடரும்.




நீ அப்பா கிட்ட கேட்டுக்கோ.
படிக்க பாடங்கள் ஒன்றும் இல்லையென்றால் அப்பா  ஒண்ணும் சொல்ல மாட்டார்.

11 comments:

துளசி கோபால் said...

எனக்கென்னவோ.... 'இது ' கற்பனையாத் தோணலை கேட்டோ:-))))))

சாந்தி மாரியப்பன் said...

நல்லாத்தான் இருக்கு வல்லிம்மா :-))

கோமதி அரசு said...

வெளியிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இந்தப் பதினாலு வயசிலயெ உங்கள் வீட்டு அண்டா எல்லாம் நான் தேய்த்திருக்கிறேன் நினைவிருக்கட்டும் என்றது.
உதட்டைச் சுழிக்கும் பெண்ணைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அப்பா.//

வீட்டுக் காரியங்களை பெண் செய்து பழக வேண்டும் என்று நினைக்கும் அம்மா , அதை செய்ய் சோம்பல் படும் பெண், ரசிக்கும் அப்பா என்று எல்லோரும் கண் முன் உண்மையில் பார்ப்பது போல் அருமையான காட்சி விளக்கம்.
கதை நன்றாக இருக்கிறது.
தொடருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க துல்சிமா:0)
பாதிக் கற்பனை. ஹீரோயின் நான் இல்லை. நடுவில் வசமாக மாட்டிக் கொண்டவள்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா சாரல். இப்பொது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.காதல் படுத்தும் பாடு இருக்கே
ஐய்யோ பாவம்.:)

வல்லிசிம்ஹன் said...

அந்தப் பெண் என் சித்தப்பா பெண்தான். ஒரே ரொமாண்டிக்;0

இப்போது அன்புக் கணவரோடு வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்கிறாள்.
ரசிப்புக்கு மிகவும் நன்றிமா.

ADHI VENKAT said...

அந்தக் கால காதலை நாங்களும் உங்க எழுத்து மூலமா தெரிந்து கொள்கிறோம்.

தொடரும்னு சொல்லிட்டீங்களே.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா... தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, அன்பு வெங்கட் அது ஒரு சுவாரஸ்யமான காலம். ஆஹா நான் ரசித்தேன்.:)
நன்றிமா.

ஹுஸைனம்மா said...

இதன் அடுத்த பகுதியையும் படிச்சுட்டேன். சுவாரஸ்யம். அந்தக் காலம் ஆனதினால் இப்படி ஒரு வெகுளித்தனம்.

//இந்தப் பதினாலு வயசிலயெ உங்கள் வீட்டு அண்டா எல்லாம் நான் தேய்த்திருக்கிறேன் நினைவிருக்கட்டும்//

இது எந்தக் காலத்திலும் மாறாத டயலாக்!!

உங்க பதிவுகளின் டெம்ப்ளேட் கொஞ்சம் சரிசெய்ய வேண்டும் வல்லிமா. பழைய பதிவுகளைத் தேடி எடுப்பதில் சிரமம் உள்ளது. மேலும் page arrangement-ம் சரியாக்க வேண்டும். தெரிந்தவர்கள் யாரிடமாவது கொடுத்துச் சரிசெய்யமுடியுமா பாருங்க. சிரமப்படவேண்டாம். எப்பிடியிருந்தாலும் நாங்கள் வரத்தான் போகிறோம் உங்கள் பதிவுக்கு. :-)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.

நாங்கள் திண்டுக்கல்லில் இருந்த போது நடந்த கதை. அந்தப் பெண் வீட்டில் நான்கு சகோதரிகள் ஒரு பையன்.
அதுவும் அவங்க அம்மாவுக்குச் சினிமா பைத்தியம் ஜாஸ்தி.
நான் அவர்கள் வீட்டுக்குப் போனாலே எங்க அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது:)
அந்தப் பெண் பக்கத்துவீட்டுப் பையனோடு காதல் என்னும் பெயரில் கற்பனையை வளர்த்துக் கொண்டது. அவன் மதுரைக்குப் படிக்கப் போனதும் எல்லாம் மறந்து விட்டது.
துணைக்கு என்னையும் அவள் இழுப்பாள். கோவிலுக்குப் போகம்லாம்.கடைத்தெரு போகலாம் என்று. என் அம்மாவிம்ன் ஒரு பார்வையில் நான் அடங்கிடுவேன்:)
டெம்ப்ளேட் விவரம் புரியவில்லை.