எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நெல்லைக் குசும்பு என்பதெல்லாம் ஒரு தனித்துவமான குணம் இல்லை.
எல்லா ஊர் மக்களிடமும் இருப்பதுதான்.
ஒருத்தரை ஒருத்தர் விமர்சிக்க, சிலசமயம் புண்படுத்தப் பலசமயம் கேலிகாட்ட
இந்தக் குசும்பு என்னும் சிறு கருவி பயன்படும்.
இதில் எல்லா ஊர்களிலும் காணப்படும் குணம்தான். தஞ்சைக் குசும்பு பற்றிக் கேட்டால் நம் கீதாசாம்பசிவம் சொல்வார்கள்.
கோவையில் நான் கண்டதெல்லாம் நட்புதான்.நல்ல மரியாதை.
மற்ற ஊர்க்காரர்களுலும் மிகுதியாக நல்லவர்களையே தான் கண்டு பழகி வந்திருக்கிறோம்
சில மனிதர்கள் இந்த ஊரென்றெல்லாம் சொல்ல முடியாது.
ஊரென்ன செய்யும். அவர்கள்
பேச்சில் அடக்கிவாசிக்கப்பட்டாலும் பீறிட்டு வரும் அடர்த்தியான வார்த்தைகள். கூராயிருக்கும்
பென்சில் முனை போல.
எனக்குத் தெரிந்த வட்டத்தை மட்டும் சொல்கிறேன்:)
நாம் ஒதுங்கிப் போனாலும் மேல பாய்ந்துலேசாகக் கீறும்:)
இந்த மாதிரி ஒரு சம்பவத்தைத் தான் வேடிக்கையாக எழுத இந்தத்
திருமணத்தில் நடந்த மைக்கூத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒன்றுமில்லாத சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனக்கசப்பை
சம்பந்தமில்லாதவர்களே கிளப்பிவிடுவார்கள்.
அதையும் மீறிச் சுமுகமாக நிறைவேறும் சம்பவங்கள் அழகு.
யாராவது என்ன ஊரைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டால் ,
பூர்வீகம் திருநெல்வேலி என்று சொன்னாலும் தொடர்பு விட்டு நிறைய நாளாச்சே.
எனக்குத் தெரிந்து எங்க அப்பாவின் நமட்டுச் சிரிப்புதான் நல்ல குசும்பு.:0)
அதவும் அம்மாவைக் கேலி செய்து அம்மா முகம் சிவக்கவைத்துவிடுவார்.:)
அதனால் ஒரு நல்லவார்த்தையைத் தப்பாகப் புரிந்தவரைப் பற்றி எழுதப் போய் நேற்றைய பதிவு வந்துவிட்டது.
எங்க ஊர்
மதுரைன்னு சொல்லலாம் என்றால் பெரியவர்கள் இருந்தவரை அது சொந்தம்.
எல்லாம் விட்டுச் சென்னைக்கு வந்தே37 வருடங்கள் ஆச்சு.
இதில் நமக்கு யாரோட குசும்பும் ஒட்ட வாய்ப்பே இல்லை.
யாரோ திருநெல்வேலிக்காரர், ஏதோ ஒரு சமயத்தில் ஒரு குடும்பத்தில்
தகறாரு செய்துவிட்டால் நெல்லை முழுவதும் விஷமக்காரகள் என்று
சொன்னார் பாதிக்கப் பட்டவர்.
அந்த வார்த்தை என்னைக் குடைந்து கொண்டே இருந்தது.
சொன்னவருக்கு நானும் அங்கிருந்துதான் வருகிறேன் என்று
தெரியும்.
தெரிந்தே சொல்கிறார் என்றால்.. கொஞ்ச நேரத்துக்கு வருத்தமாக இருந்தது.
யாரோ செய்த தவறுக்கு நம்மைச் சுட்டுகிறாரே என்று நினைத்தேன்.
எதுவுமே பலிக்கும் இடத்தில் ஸ்வாதீனம்(அதாவது இவர்களைச் சொன்னாலும் ரியாக்ட் செய்ய மாட்டர்கள் என்ற தீர்மானம்!!) நிறைய இருக்கும்
அதனால் பரவாயில்லை. மனசால மன்னித்துவிடலாம் என்று பெருந்தன்மையாக
நினைத்துக் கொண்டேன்:)
பதிவு போட்டால் தப்பில்லை இல்லையா!!!!! ஒரு டைஜீன் சாப்பிட்டப் பலன் ஒரு பதிவு கொடுத்துவிடும்:0))))))))))))))))))))))))))))))

14 comments:
இறுக்கமான சூழல்களை இலகுவாக்குகிற, மனதைப் புண்படுத்தாத குசும்புகள் இதம். மற்றன..
வருத்தம் புரிகிறது.
இந்த டைஜீன் மயிலிறகுதான், சந்தேகமில்லை:).
கவலையது விலக்கேல்! கேட்பவரும் ரசித்துச் சிரிக்கும் வண்ணம் இருந்தால் குசும்புகூட இனிக்கும்தானே... மயிலிறகின் வருடல் அருமை!
ஆம் ராமலக்ஷ்மி. குசும்பு எனும் வார்த்தைக்குத் தீங்கு என்று பொருள் கொண்டவர்களை நாம் வ்விலக்கிவிடலாம். அது ஒரு அருமையான சொல்.
விளையாட்டுச் சொல்.
நம் ஊர்க்காரர் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இதமாகவும் சொல்லிவிட்டீர்கள் நன்றி ராமலக்ஷ்மி.
இனிப்பத்ற்கான வார்த்தைதான் குசும்பு. அதைத் தெரியாதவர்கள் வேறு அர்த்தம் கொள்கிறார்கள் கணேஷ்.
கவலையைப் போனவாரமே தூக்கிப் போட்டுவிட்டேன்:)
டைஜீன் தன் வேலையைச் சரிவரச் செய்து விட்டதென்று நினைக்கிறேன்..
குசும்பு என்ற வார்த்தை அவ்வளவு பாதிக்கக் கூடியதா என்ன....போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே...
பிறர் மனதை புண்படுத்தாத வரை ஒன்றும் தப்பில்லை.....
மத்தவங்களைப் புண்படுத்தாத வரைக்கும் எதுவுமே சரிதான்..
ஆமாம் மலர். பதிவெழுதினால் பாதி துன்பம் ஓடிவிடும். நன்றிமா.
குசும்பு நல்ல வார்த்தை ஸ்ரீராம்.
அவர்கள் அதை அர்த்தப் படுத்திக் கொண்டவிதம் தவறு.
இன்னோன்று சம்பந்தமே இல்லாத என்னிடம் வந்து உங்க ஊர்ர்க்காரர் இப்படிச் செய்தார் என்று சொன்னது வேடிக்கை.
ஆஹா கட்டபொம்மன் வசனம் நினைவுக்கு வருகிறதே''தூக்கிலிவதற்கு முன் கட்டபொம்மன் சொல்லும் வார்த்தைகள். கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே பூமியில் தான் பிறந்தார்கள்!!வல்லி நீ எங்கியோ போயிட்ட:))))
அதேதான் ஆதி.யாதொன்றும் தீமை இலாத சொல் சொல்லிவந்தால் புண்ணியம் சேரும்.
வரணும் சாரல். ஏன் இவர் திருநெல்வேலியைக் குற்றம் சொல்கிறார் என்றுதான் என் வருத்தம்.
எனக்கும் ஊர்ப்பாசம் விடவில்லை போலிருக்கு:)
மிக நன்றிமா.
யார் என்ன சொன்னா என்னங்க..
தஞ்சாவூர் குசும்பு பத்தி இப்பத் தெரிஞ்சாகணுமே?
மெட்ராஸ் குசும்பு ஏதாவது இருக்கா?
கீதா வேலையா இருக்கிறார்னு நினைக்கிறேன். இல்லாட்டா வந்து சொல்வார்.
தஞ்சைதான் ரொம்ப குசும்புக்குப் பேர் போனது.:)
மெட்ராஸ்ல தானே எலாரும் வந்து சேர்ந்திருக்கோம். அதனால் எல்ல ஜில்லாக்குசும்பும் இங்க அடங்கும:)))))
துரை குரோம்பேட்டைக் குறும்பன் எந்த ஊர்னு கேளுங்கோ.
Post a Comment