எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஸ்ரீ ராமசுவாமி கோவில் கும்பகோணம் போக வாய்ப்புக் கிடைத்தது ஒரு சம்பவம்.
எங்கள் அப்பாவுக்கு, சுந்தர காண்டம் ஒரு வாரத்தில் படித்து முடித்தால், தீராத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை.
உடல், மனம்,சுகம் என்று எல்லோருக்கும் வேண்டிய தருணங்களில் மிகவும் சிரத்தையுடன் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஓரொரு நாளும் ஒன்பது அத்தியாயமாகப் படித்து அடுத்த வெள்ளிகிழமை சுந்தர காண்டம் பூர்த்தி செய்து ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் படித்து முடிப்பார்.
அந்த வெள்ளியன்று இனிப்பு வகையறா ஏதாவது கண்டிப்பாக இருக்கும்.
அப்பா படித்து முடிக்கும் அழகும் அம்மா பக்கத்தில் இருந்து பக்தியோடு கேட்கும் அழகும், அப்பா உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் அனுமனுக்கு ஒரு இருக்கை போடப்பட்டு, கோலமிட்டு பழஙகள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கும்.
ஓரோரு தடவையும் சீதை, ராமர் படும் துன்பங்கள் வரும் கட்டங்களைப் படிக்கும் வேளைகளில் எங்கள் அப்பா கண்கலங்காமல் படித்ததாக எனக்கு நினைவே இல்லை.
சீதா அசோகவனத்தில் ஸ்ரீராமனை நினைத்து கலங்கும் நேரம், அனுமன் ராமர் நாமத்தை உச்சரித்து அவள் கவனத்தைக் கவர்ந்து அவளை அமைதிவழியில் இருத்தி கணையாழி கொடுத்து,
சூடாமணி பெற்றுக்கொண்டு, அரக்கரை அழித்து,இராவணனிடம் வாதிட்டு, இலங்கையை தீக்கிரையாக்கி மீண்டும் சீதையம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்லி, ராமலக்ஷ்மணரோடு வருவேன் என்று உறுதி கூறி,
மீண்டும் வானில் பாய்ந்து ஸ்ரீ ராமரை வந்து அடைகிறார்.
சீதையைப் பார்த்து வரும் அனுமனை ராமன் நெஞ்சாரத் தழுவிகொள்கிரார்.
இவ்வளவும் எங்கள் அப்பா படிக்கும்போது மீண்டும் அந்தக் காலத்துக்கே போன உணர்ச்சி வந்துவிடும்.
அதே இன்பம் அவர், திருராமர் சீதை பரத,லக்ஷ்மண சத்ருக்னன் அனுமன்,அங்கதன்,விபீஷணனுடன் நடைபெரும் பட்டாபிஷேக காட்சி மனத்தில் உறுதியோடு படிந்துவிடும்.
இந்தக் காட்சிதான் அப்படியே திரு இராமசுவாமி கோவிலில் கல்சிற்பஙகளாகக் கம்பீரமாகக் காணக் கிடைக்கிறது.
வேறு எங்கேயும் காணக்கிடைக்காத காட்சி இது.
மிகப்பெரிய சிலா ரூபங்கள் அரியணையில் ராமனும் சீதையும் வீற்றிருக்க, பரதன் குடை பிடிக்க,சத்ருக்கினனும்,இலக்குவனும், (சில படங்களில் இலக்குவன் கை கூப்பி நிற்பது போல் இருக்கும்) சாமரம் வீச
அனுமன் பக்கத்தில் ஒரு கையில் வீணையை மீட்டிக் கொண்டு( வழக்கம் போல் ராமாயணம் படிக்கவில்லை) காட்சி.
எவ்வளவு தரம் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் அருமையான சிறப்பு மிக்க தரிசனம்.
இங்கெ நிகழ்ந்த அதிசயங்கள் எவ்வளவோ இருக்கலாம்.
நம்மைப் பாதிப்பது நமக்கு நிகழும்
நடப்புகள் தானே.
முன்பே சொன்னது போல் கும்பகோணம் முதல் டிரிப்பின் போது சாரங்கபாணியைக் கண்ட பிறகுப் பார்க்கப் போன,உணரப் போன அடுத்த அதிசயம் இந்த சாமி தான்.
நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று இடியுடன் கூடிய மழை.
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.? கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரும், அது என்ன டிவி சானல் பார்த்து விட்டு வரலாமா வேண்டாமா என்று யோசிக்குமா, இல்லையென்றால் இந்த(நான்) அம்மா வருதே, இடியும் மின்னலும் இவங்களுக்கு ஆகாதே.
கண்ணூ காது மூடிக்கொண்டால் சாமியைப் பார்ப்பது எப்படி என்று எல்லாம் வருண பகவானுக்கு நினைவு இல்லை.
யேதோ நல்லவங்க கும்பகோண்த்துக்கு வந்துட்டாங்கன்னு பார்க்க வந்துட்டார்.(நீங்கள் இங்கே சிரிக்க உரிமை உண்டு)
சைகிள் ரிக்சாவில் இருந்து இறங்க முடியாதபடி பிரளய மழை.
ஒரே ஒட்டம் கோவிலுக்குள். (ஆமாம் ,நானும் ஓடினேன்.)!
உள்ளே சிற்பங்கள் வரிசையாக நின்றன. அறுபத்தினாலு கால் மண்டபம் வேறு. ஒவ்வொன்றிலும் அற்புதமான சிற்பங்கள்.
எந்த சிற்பி கொடுத்து வைத்தானொ, ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்துப் பார்க்கிறான். என்ன கருணை அவனைத் தேடி வந்ததோ.
ஸ்ரீ ராமனின் பரிவு அவனை அணைத்திருக்கும்.
எல்லா கற்களும் உயிர் பெற்று அங்கெ ராமன் புகழ் பாடின.
நமது மெயின் கதை நம்மளைச் சுற்றித் தான்.
அங்கெ சன்னிதியை அடைந்ததும் மஹா பெரிய இடி, மின்னலோடு நுழைந்தது.
அவ்வளவுதான் என் பக்தி பின்னடைந்தது. பயம் பிடித்தது.
அங்கே இருந்த பட்டாச்சாரியாருக்கு இந்த மழை பத்தி எல்லாம் பயம் இல்லை போல.
அவர் சாவதானமாக. பெரிய விளக்குகளை ஏற்றி ,ஒளி ஏற்றி எங்கள் எல்லோருக்கும் கர்பக்ருஹத்தைக் காண்பித்தார்.
என்ன அழகுடா ராமா நீ?
உண்மையான ராமராஜியத்தினுள் வந்து விட்ட உணர்வு.
உடனேயே எங்கள் அப்பாவின் குரல், காதில், பயம் வரும் போது சொல்ல சொன்ன பஞ்ஜாயுத ஸ்தோதிரம் நினைவு வருகிறது.
அங்கெயெ கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து விட்டேன்,.
என்னுடன் வந்த தம்பிகள்,அவர்களின் மனைவிகள்,குழந்தைகள் மற்றவர்கள் சுற்றிப்பார்க்கக் கிளம்பினாலும் எனக்கு மனம் வரவில்லை. இடி வேறு பயமுறுத்தியதால் அந்த தெய்வக் குடும்பத்தையே பார்த்து என் பயம் போக்க வேண்டினேன்.
(இப்போது சிரிப்பு வரலாம். அப்போது அதுதான் என்னை கவ்விக்கொண்டு இருந்தது .பயம். பயம். )
உடனேயெ மனதில் அச்சம் குறையத் தொடங்கினது. நம்ப முடிகிறதா.
அனலைசிங் இங்கே வேலை செய்யாது. முடியாது.
எனக்குக் கிடைத்தது ஒரு காப்பு.
ஒரு அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்பமே எனக்குக் கருணை செய்ததாக உணர்வு.
நான் என் நினைவுகளில் இருந்து நான் மீண்டபோது மழை
நின்று இருந்தது.
சுற்றுப் பிரகாரங்களில் எல்லாம் தண்ணீர். மின்னல் இன்னும் வெட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் என் பயம் தான் வேறு எங்கோஒளிந்து கொண்டது.
வெளி சுற்று எல்லாம் ராமாயணக்காட்சிகள்.
ஒரே ராம மந்திரம் ஒலிக்கிறது.
நீங்களும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டாமா?
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராமா.

14 comments:
நல்ல பகிர்வும்மா.... உங்கள் புண்ணியத்தால் எங்களுக்கும் ராம தரிசனம்!
ஸ்ரீராமன் கிருபை எல்லோருக்கும் புண்ணியம் கொடுக்கட்டும்.
நன்றி வெங்கட்.
அந்த வீணை மீட்டும் அனுமனைத் தேடி ஓடி கடைசியில் பட்டரிடம் கேட்க, மூலவருக்கு இந்தப்பக்கம் என்று காமிச்சார். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி....ஒடுன ஞானத்தங்கமாக்கும் நான் கேட்டோ:-)))))
நல்ல நாளும் அதுவுமா அருமையான பதிவு.
இன்னும் ராயப்பேட்டை ஹைரோடு போகலை:(
ஸ்ரீராம நீ நாம ஏமி ருச்சிரா...ஓ ராமா நீ நாமம் என்தோ ருச்சிரா...
இந்தத் தடவை இந்தப் பக்கம் வரும்போது பார்த்துட்டால் போகிறது.துளசி உங்களுக்கு இல்லாத நேயுடு பாசமா.
ஸ்ரீராமா நீ நாமம் ஏமி ருசிரா.!!எத்தனை தடவை இந்தப் பாட்டைக் கேட்டாலும் அலுக்காது.
அதுவும் மதுரை சோமு பாடிக் கேட்கணும்.ஸ்ரீராம்.
நல்ல நடையில் அசத்தறீங்க வல்லிமா...
ராமன் வந்தாச்சு எங்க வீட்டிலேயும். :))))
உண்மைதான்... மதுரை சோமுவும் கேட்டிருக்கிறேன். எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிக் கேட்டிருக்கிறீர்களோ... பத்ராசலர் கீர்த்தனைகளை அவர் பாடி ஒரு இசைத் தட்டு இருக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'சீதாராமஸ்வாமி நே சேசின நேரமுலேமி, ஏமிரா ராமா (இது மிக மிகப் பிடிக்கும்), அப்புறம் இந்த ஸ்ரீராம நீ நாம' பாடல் மொத்தம் ஏழோ எட்டோ பாடல்கள் இருக்கும். எப்போதோ கேசெட்டில் இருந்தது. சிசியில் தேடுகிறேன். கிடைக்கவில்லை. யூ டியூபிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்...இன்னும் கிடைத்த பாடில்லை!
நல்ல நாளில் ராமனின் தரிசனம் கிடைத்தது இன்று தங்கள் பதிவில்.
//அப்பா படித்து முடிக்கும் அழகும் அம்மா பக்கத்தில் இருந்து பக்தியோடு கேட்கும் அழகும், அப்பா உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் அனுமனுக்கு ஒரு இருக்கை போடப்பட்டு, கோலமிட்டு பழஙகள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கும்//
"சீதா, ராம, லக்ஷ்மணர், அனுமன்" சகிதமா ஒரு படம் எங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும்... நீங்க அம்மா அப்பா பத்தி விவரிச்ச விதத்தில் அது ஞாபகம் வந்துடுச்சு'ம்மா... சூப்பர்
வள்ளிம்மா, ராமன் வெரும் ஏக்பத்னி விரதன் அவ்வளவுதான். நீங்கள் இந்த இடத்தில் படப்பாடல் "ஜானகி தேவி ராமனைத்தேடி" என்ற பாடலைப் போல ஒரு பாடலையும் சேர்த்து எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Post a Comment