எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
டெல்லியில் நேற்று சிறிய ஆட்டம்.
ஓடு போனை எடு. சம்பந்தி!! சௌக்கியமா...
துபாயில் சிவப்பு வர்ண அலைகள்
மருமகளை அழை.
என்னப்பா ஆச்ச்சு. எனக்குத் தெரியாதேமா
நாங்கள் பீச் பக்கம் போவதே இல்லை.
ஜெல்லிஃபிஷ் கடிக்கிறதாம் குழந்தையை அலைகளில் நிற்கவைக்காதீர்கள்.
சரிம்மா நாங்க பாத்துக்கறோம்.
சாமி என் கிட்ட இருந்து எங்க பிள்ளைகளைக் காப்பாத்து:)
மறந்து போன வரிகள்.
இதில் அக்கம்பக்கத்துக் காரர்களும் அடங்குவார்கள்.
பதிவர்களும் தான்:)
டெல்லியில் நேற்று சிறிய ஆட்டம்.
ஓடு போனை எடு. சம்பந்தி!! சௌக்கியமா...
துபாயில் சிவப்பு வர்ண அலைகள்
மருமகளை அழை.
என்னப்பா ஆச்ச்சு. எனக்குத் தெரியாதேமா
நாங்கள் பீச் பக்கம் போவதே இல்லை.
ஜெல்லிஃபிஷ் கடிக்கிறதாம் குழந்தையை அலைகளில் நிற்கவைக்காதீர்கள்.
சரிம்மா நாங்க பாத்துக்கறோம்.
சாமி என் கிட்ட இருந்து எங்க பிள்ளைகளைக் காப்பாத்து:)
மறந்து போன வரிகள்.
இதில் அக்கம்பக்கத்துக் காரர்களும் அடங்குவார்கள்.
பதிவர்களும் தான்:)
26 comments:
thavippu than!:( இங்கிருந்தால் அங்கே, அங்கிருந்தால் இங்கேனு தவிக்கும் மனம்.
'அவன் பார்த்துப்பன்'னு சரணாகதிக்கு இதுவே சமயம்.
இப்படிக்கு பத்தாயிரம் ஆட்டம் கண்ட பர'தேசி':-)
ஆமாம் கீதா. ஆனால் தவித்து நான் என்ன செய்யப் போகிறேன்.
எல்லோரும் ஓடிக்கொண்டிருப்பவர்கள். நான் உட்கார்ந்து நம்பரைச் சுற்றித் தொந்தரவு செய்தால்
தவறுதானே.
நான் இந்தச் சரணாகதியை என்னிக்குக் கற்பேனோ. துளசி!
சம்மட்டி அடி வாங்கினாலும்
தாங்குகிறதே என் தலை.
எல்லாம் பாசம் படுத்தும் பாடு...
கடைசி வரி.. :-)))))))))))
கடைசி வரியை ரசித்தேன்:)!
ஆனால் எப்போதும் அம்மா அம்மாதான்!
வாங்கப்பா சாரல்.
நான் தொலைபேசும்போது ஒருவர் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார். ஒருவர் அலுவலக மீட்டிங்ல இருப்பார். ஒருவர் பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பார்.
கையில் ஒரு பிள்ளை, காதில் ஒரு புலம்பல்னா தாங்குமா பூமி:)
வரணும் ராமலக்ஷ்மி,
இதுவே ஒரு தடவை,ரெண்டு தடவை என்றால் பரவாயில்லை.
இப்ப எல்லாம் பிள்ளைகள் அம்மா ஒரு ஹைப்பர் கேஸ் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்:)
:)
தப்பு இல்லைங்க.. ஒரு ஆட்டம் கண்ட அன்று யாருமே எனக்கு கால் செய்யலன்னா தெரியும் அடடா! எல்லாரும் மறந்துட்டாங்களோன்னு..:)
அவர்கள் அலுத்துக் கொண்டாலும், நீங்கள் விடாமல் அழையுங்கள்.
தொடர்ந்து நான் ஒரு நாலு நாள் கூப்பிடலன்னா, என்னாச்சுன்னு அம்மாவோ, அப்பாவோ கூப்பிட்டுக் கேக்கலைன்னா, ஒரு வருத்தம் இருக்கும். ‘என்னை மறந்ததேன்...”னு மனசு பாடும்!! :-))))
அம்மான்னா சும்மாவா....! இது மாதிரி கவலைப்படவும் வீட்ல பெரியவங்க இருக்கணுமே...!
சரியே கயல். டெல்லில கலங்குவதற்குக் காரணம் வேணுமா என்ன. போன வருடம் குண்டுவெடிப்பென்ன, ஆட்டம் என்ன. ஒவ்வொரு தடவையும் சம்பந்தி வீட்டுக்குப் போன் செய்துவிடுவேன். அந்த அம்மாவுக்குப் பழகிவிட்டது. பலங்க் கொஞ்சம் ஆடித்து. இதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமி'ன்னு சொல்லிடுவாங்க:) உங்க நம்பர் இருந்தால் உங்களையும் கேட்பென்;))
உங்க ஊருக்குப் போன் செய்து கட்டுப்படியாகுமா ஹுசைனம்மா. எஸெம் எஸ் தான்.ரொம்ப அவசரமா இருந்தால் மருமகளை அழைத்து விடுவேன்.!!!
இனிமே உங்க அட்வைஸ் தான்.
காயட்டும்:)
இப்போ என்ன மணி அமெரிக்காவுல! ஓ. 3 மணி ஏ.எம். இன்னும் ஒரு 4 மணி நேரம் போனே செய்ய மாட்டேன்:)
நன்றி ஸ்ரீராம். காலையில் ரொம்ப நொந்து போயிருந்தேன்:) என் பெண் எனக்கு டென்ஷன் ட்ராக்கர்''னு பெயர்ப் பட்டம் வைக்கிறதாகச் சொல்லி இருக்காங்க:)
நானும் ஒரு காலத்தில் என் அம்மாவை hyper என்று நினத்ததுண்டு...இன்று என் மகளின் turn....
தவிப்புகள் தொடரும்...தொடரவேண்டும்...
”எல்லாம் அவன் செயல்” - ந்னு விட்டுட வேண்டியது......
பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் தொலைபேசி அழைப்பே இல்லைனால் எல்லாம் செளக்கியம்னு அர்த்தம். நாங்க பொதுவா இப்படித்தான் நினைக்கிறோம். :))))) ஆகவே தவிப்புக் கொஞ்சம் குறைச்சலோ?????
அதேதான் கீதா. NO NEWS IS GOOD NEWS!
ஆபத்து, அவசியமுன்னு வந்தா அவுங்களே கூப்பிட்டுருவாங்க:-)
SUPERB
நானும் உங்க மாதிரி தான் அம்மா...
மனசு அடிச்சுக்கும்...
வாங்கப்பா மலர்.
தொடராமல் எப்படி இருக்கும்.
அவங்க அவங்களுக்குப் பிள்ளைகள் கவலை வந்துவிடுகிறதே. அந்த நேரம் பார்த்து அம்மாக்களும் அனுசரித்துப் போகவேண்டியதுதான்.:)
தள்ளி இருக்கும் போது இதுதான் சிரமம் ஆதி. அதுவும் நாளில் குறிப்பிட்ட நேரம் தொலைபேசுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டோம் என்றால்
கைவிடுவது கஷ்டம் தான். சில சமயம் தொல்லைபேசுவதாக ஆகிடும்:(
வரணும் வெங்கட்.அப்படியே பழகிக் கொள்ளுகிறேன்.
கீதா, துளசி நல்ல வார்த்தைகள்
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வந்திருக்கு. ததாஸ்து சொல்லிக்கறேன்!!
நன்றி தனபாலன்.
உங்கள் தவிப்பு புரிகிறது.இருந்தாலும் ஒரு சந்தேகம்.தில்லியில் எதுவும் நிலநடுக்கம் வந்ததா?
Post a Comment