மழை,புயல் பயம்,நியூசியில் மீண்டும் பூகம்பம் எல்லாம் சேர்ந்து புத்தாண்டைக்
கொஞ்சம் களையிழக்கச் செய்தாலும்,
மக்கள் மீண்டு வந்து மெரினாவில் புத்தாண்டை ஆரவாரமாக வரவேற்றது
அதிசயமாக இருந்தது எனக்கு.
ஆமாம் கடலென்ன செய்யும். அதன் உள்ளே புகுந்து ஆட்டி வைத்த புயலுக்கு அது ஆட்டம் காட்டிவிட்டது.
கடலில் மீன் பிடிக்காது தவித்தவர்களுக்கு நிலக்கரி டன் கணக்கில் வலையில்
அகப்பட்டது இன்னோரு ஆச்சரியம்.
'தானே'' வரப் போகிறது. வந்து விட்டது. இல்லை புதுச்சேரி போகிறது. கடைசியில்
கடலூருக்கு அருகில் மைய்யம் கொண்டதாக, செய்தி.
சென்னையில் மின்சாரம் போய் வந்தது. மழையும் காற்றும் விடவில்லை.
எங்களுக்கோ அவசரமாக , ஒரு நோய்வாய்ப்பட்ட
உறவினரைப் பார்க்க வேண்டிய அவசியம்.
கொஞ்சம் மழை நின்றதும் ராதாகிருஷ்ண சாலையில் பயணித்தோம்.
அவங்க வீடோ சாலை முடிவில் இருந்தது.
கடல் வரை சென்று சிடி செண்டருக்கு அருகில் திரும்பி வரவேண்டும்..
சாலை விதி அப்படி!
முக்கால் தொலைவு போனதுமே கடலின் வண்ணமும் அலைகளின் ஆக்ரோஷமும்
தெரிந்தது.
காணக்கிடைக்காத காட்கி.
கடலைக் கறுப்பு வண்ணத்தில் நான் பார்த்ததே இல்லை.
அதுவும் அந்தப் பத்தடி உயர அலைகளின் சீற்றம்... அதையும் பார்த்ததில்லை.
ஊழிக் காற்று இதுதாணனோ என்ற வண்ணம் மழையையும்
குடையையும் தூக்கும் காற்று..
கையில் காமிரா இல்லையே என்றிருந்தது.
கூட வந்தவருக்கு (சிங்கம்தான்)ப் பொறுமை இல்லை.
ஒரே சமயம் போல இருக்காது கிளம்பு என்று என்னைக் கிளப்பிவிட்டார்..
அடுத்த நாள் இங்கே கமராஜர் சாலை வரை வந்த கடலும், புதுச்சேரியிலும், கடலூரிலும்
125,135 கிலோமீட்டர் வேகத்தில் நாசம் விளைவித்தது இதே "தானே".:(
இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். இல்லை ஓரிரு மாதங்களாவது
ஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.
ஆண்டாள் அவள் தன் திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணனை அழைக்கையில்
தீங்கில்லாத மழையைத் தான் கொடுக்கச் சொல்லுகிறாள்.
''வாழ உலகினில் பெய்திடாய்''
இன்றைய செய்தி யாரோ கிளப்பிவிட்ட பூகம்பம் பற்றியது.
கடலூர் மக்கள் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே
தவித்தபடிக் காத்திருக்கிறார்கள்.
தானாக வரும் குழப்பம் , தீங்கு நினைப்பவர்கள் செய்யும் குழப்பம் .
இதிலிருந்து கடவுள் தான் நம்மைக் காப்பாற்றணும்.
இன்னொரு அதிசயம் என் ப்ளாக் ரான்க் 128 லிருந்து 69 ஆகியிருப்பதை நம் ராமலக்ஷ்மி சொல்லித் தெரிந்து கொண்டேன். நன்றி ராமலக்ஷ்மி!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

22 comments:
//ஓரிரு மாதங்களாவது
ஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.//
நிலைமை சீராகப் பிரார்த்திப்போம்.
128 மூன்றுமாதங்களுக்கான ட்ராஃபிக் ரேங்க். 69 சென்ற ஆண்டு முழுவதுக்குமாக தமிழ்மணம் தங்கள் வலைப்பூவுக்குத் தந்திருக்கும் அங்கீகாரம்:)! மனமார்ந்த வாழ்த்துகள் வல்லிம்மா. தொடருங்கள்!
ஆஹா அப்படியா சேதி::)
ஆமாம், வருடம் முழுவதும் படித்தால் தான் முதல் நூறுக்குள் வர முடியும்:)
விளக்கத்திற்கு மிகவும் நன்றி. ராமலக்ஷ்மி.
சட்டென்று சொப்பனம் கலைந்துவிட்டது!!!
விழித்திருக்க வேண்டிய மாதத்தில் , கவனிக்க மறந்த நாச்சியாரை என்ன செய்வது:)))))))))))))))))))))))))))))))))))
தானே புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல என்று என் புதுச்சேரி நண்பர்கள் சொன்னார்கள். அதையும் அவர்கள் கடந்து வர பிரார்த்திப்போம். வலைப்பதிவு ரேங்கில் மிக பின்தங்கியிருக்கும் நான் தாங்கள் மிக முன்னே வந்திருப்பதைக் கண்டு களிபேருவகை கொண்டு தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துகள். நல்லாப் படிச்சு, நல்ல ரேங்க் வாங்கினத்துக்கும்!!
/நிலக்கரி டன் கணக்கில் வலையில்
அகப்பட்டது இன்னோரு ஆச்சரியம்.//
இது என்னன்னு புரியலையே?
//கறுப்புக் கடல்//
மொபைல்கூட இல்லியா... மிஸ் பண்ணிட்டோமே...
வரணும் கணேஷ்.பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.இதோ கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் முடியும் நிலையில்
இந்த நிலை. நீங்களெல்லாம் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் எட்டிவிடுவீர்கள்.
கைபேசி இருந்தது. எடுத்த படம் சரியாக வரவில்லை ஹுசைனம்மா.
நான்கு
படங்களும் தெளிவில்லை. கடல் எது கரை எது என்றே தெரியவில்லை.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் மா.
ராயபுரம் அருகில் கடலில் வலை வீசிய போது அருகில் இருக்கும் துறைமுகத்தில்
ஏற்றுமதியாகும் நிலக்கரி , கடலில் விழுந்து இருக்கிறது.
புயலில் ஆழ்கடலிலிருந்து புரட்டி எடுக்கப்பட்டு
வெளியே வந்திருக்கின்றன.
பத்துவருடங்களுக்கு முன்னாலும் இப்படி நடந்ததாம்!!
புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா :-)
தமிழ்மணம் முதல் 100 பட்டியலில் 69-ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்......
தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்! நன்றி! தொடர்க!
புயல்தானே சென்னையை எங்கே தாக்கப் போகிறது என்கிற சென்னை மக்களின் அலட்சியத்தை மறுபடி நிரூபித்தாலும் பக்கத்தில் வந்து பயமுறுத்தியிருக்கிறது தானே!
நன்றி சாரல். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள்
எல்லோருடைய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.. ராமலக்ஷ்மி சொல்லிய பிறகுதான் இப்படி ராங்கிங்க்
இருப்பதே தெரியும். அதனால் எல்லாருடைய ராங்க் வரிசைகளையும்
பார்க்க முடிந்தது. அனைவரும் முன்னேற ஆசைப்படுகிறேன்.
நன்றி தனபாலன். உங்களது தொடரும் நட்புக்கும் தான்
ஆமாம் ஸ்ரீராம். 1977 நாகப்பட்டினம் புயல் தான் சொன்ன இடத்தில் கரைகடந்தது.
அதற்குப் பிறகு நெல்லூர்,பிரகாசம் ,குண்டூர் என்று நம்மைக்
கடந்த புயல்களே அதிகம்:)
தானே, தானே முடிவெடுத்துக் கடலூருக்குப் போய்விட்டது..
கறுப்புக்கடலைக் கண்டு களித்தேன். தானே தானே சும்மா வந்துட்டுப் போகாமல் எல்லாரையும் படுத்தி எடுத்திருக்கு தானே! :(((( புயல் சீரழிவு குறித்த படங்களும், செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பார்க்கப் பார்க்க மனம் தாளவில்லை. பொதுமக்களும் ஏனோ தானோவென இருப்பதாய் தி.வா.வும் எழுதி இருக்கார். அதுவும் நினைச்சால் கோபமாய் வருகிறது. :((((
அது சரி, ஏதோ ராங்க் பத்தி எழுதி இருக்கீங்க? என்ன ராங்க்?? தமிழ்மணத்தில் மார்க்கிங், ராங்கிங் எல்லாமும் உண்டா?????????????? எப்படியோ 69-க்கு வந்ததில் சந்தோஷம்.
வரணும் கீதா.இந்த ராங்கிங்க் இருப்பது என் தமழ்மண வாரத்தில் தெரிய வந்தது..
அது வரை நான் நிறைய எழுதுகிற பதிவர் என்றேல்லாம் சொல்லமுடியாது இல்லையா. :)
அந்தவாரம் நாச்சியார் பதிவுக்கு வந்து படித்தவர்லகள் எண்ணிக்கை அதிகம் ஆனதால் ட்ராஃபிக்
அதிகமாகி ராங்கும் மேல ஏறியிருக்கிறது.
118க்குப் போய் யோயோ மாதிரி ஏறி இறங்கி இப்பொது 124இல் இருக்கிறது.
இந்த 69 எண் ஒரு வருடத்துக்கானது என்று ராமலக்ஷ்மி சொல்லித் தெரியும்!
சும்மா ஒரு சந்தோஷத்துக்காக அதையும் பதிவின் முகப்பில் போட்டேனா....தமிழ்மண
பட்டையும் மறைந்துவிட்டது.
இப்ப இருக்கும் தலைவலியில்
வேற எதுவும் ச்செய்வதாக இல்லை.:))
பாண்டிச்சேரியிலயா இப்படி? த்ரில்லிங்கா இருந்திருக்குமே ? (எனக்கென்ன இங்க வீட்டுக்குள்ள ரெண்டு போர்வையை சுத்திகிட்டு உட்கார்ந்திருக்கேன் :).
இயற்கையின் சீற்றம் எப்பவுமே டேஞ்சர் தான். அழிவு அதிகமில்லை என்று நம்புகிறேன்.
சுனாமியின் போது இந்தியப் பயணம். அப்பொழுது தான் ப்ளேன் பம்பாயில் இறங்கத் தொடங்கியிருந்தது. திடீரென்று பைலட் எங்களுக்குச் சொன்ன செய்தி - அவருக்கு சுனாமி என்று தெரிந்திருக்காது என்று இன்னும் நம்புகிறேன் - ஏதோ பிரமாதமான இயற்கைக் காட்சியைக் காண்பது போல் சொன்னார். எங்களுக்கு ஒண்ணும் கண்ணுக்குத் தெரியலை. கடல் கொந்தளிப்பு என்று அவர் சொன்னதே த்ரில்லிங்காக இருந்தது.
துரை இது நம் மெரினா.
ஹிண்டு வில் வந்த படம்.
கடலூர் படங்கள் ரசிக்கும்படி இல்லை. சோகம்தான் மிஞ்சும்.
சிகாகோ குளிரைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.ஆளை முடக்குவதில் அதனுடைய வல்லமை எனக்கும் தெரியும். ஒரு நவம்பர் டு -ஜூன் அங்கே இருந்திருக்கிறோம்.ஸ்னோ வந்து முற்றுகை இட்டதும் அப்போதுதான்.
சுனாமியின் போது விமானத்தில் இருந்தீர்களா.நினைக்கவே அதிசயமாக இருக்கு.
Post a Comment