Saturday, December 03, 2011

கண்ணிலே நீர் எதற்கு? கண்களைக் காப்பதற்கு..

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 கண்ணில் நீர் வந்தால்
கண் அழுக்குப் போகும்.
மனபாரம் குறையும்.
அந்த நீர் வற்றிவிட்டால் காய்ந்த கண்கள்
உறுத்துகின்றன.

அடுத்த கட்டம் கண்வைத்தியர் .
எப்போது வைத்துக் கொள்ளலாம் அறுவை சிகித்சையை.

எதற்கு டாக்டர்.
கண்ணில் சதையம்மா.
வைத்துவளர்க்காதீர்கள்.
முதிர்வதற்குள் எடுத்துவிடுங்கள்.
ஐந்து நிமிட வேலை. 30 ஆயிரத்துக்குள் முடித்துவிடலாம்'
இல்லை என்றால் உங்களுக்குத் தான் சிரமம்.

ஒரு ஆறு மாதம் போனால் பரவாயில்லையா.
இது நான்.

நாளை கூட நல்ல நாள்தான்
கண் ஆயிற்றே.
கண்ணே என்று பார்த்துக் கொள்ளுங்கள்''

ஓ.அப்படியா. சரி.

''புதுக்கண்ணால் உலகம் விரிவடையும்.
தயக்கம் தாமதம் நல்லதல்ல.''
இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

33 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணும் பிரச்சினை இல்லை. பண்ணிக்குங்க. என்னோட மாமனார் கூட சமீபத்தில் பண்ணிண்டார்.

ராமலக்ஷ்மி said...

ஆம், மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். யோசனையில் இருந்து விடுபட முடியாமல் நாம்.

வெங்கட் நாகராஜ் said...

கண்ணிலே.... கண்ணல்லவா! அதுனால கண்ணின் மணி போல பார்த்துக் கொள்ளுங்கம்மா!

வல்லிசிம்ஹன் said...

பிரச்சினை எனக்கு இல்லை. எங்க வீட்டுக்காரருக்கு:)

ஒரு வாரத்துக்காவது வீட்டைப் பார்த்துக்கணுமே.

வல்லிசிம்ஹன் said...

அதே ராமலக்ஷ்மி.

இதில வேற நாலு விலை சொல்லுகிறார்கள்.
நான்கு வகை லென்ஸாம்.:)

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் பார்த்துக் கொள்ளுவேன் வெங்கட்.
இப்பவே கீபோர்ட் கொஞ்சம் மறைக்கிறது. சீக்கிரம் செய்துடலாம்.

பால கணேஷ் said...

வல்லிம்மா... எங்கம்மாவுக்கு இதே பிரச்சனைக்கு வைத்தியம் பார்த்தப்ப 15 ஆயிரம்தான் ஆனது. ஆனால் தாமதிக்காமல் செய்து விடுவதுதான் நல்லது. உடனே கவனியுங்கள் என்பது என் ஆலோசனை. நன்றி.

ஸ்ரீராம். said...

கண்ணை கண்ணாகத்தான் பார்த்துக் கொள்ளணும்! ஒத்திப் போடலாமோ...!

முனைவர் இரா.குணசீலன் said...

ஓ.அப்படியா. சரி.

பாச மலர் / Paasa Malar said...

தாமதம் வேண்டாம்...சீக்கிரம் ஆவன செய்யவும்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். அடுத்த வாரம் மருத்துவரைப் பார்த்துவிடுகிறேன். சரிசெய்துவிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

நிச்சயம் ஸ்ரீராம். அலட்சியம் செய்ய மாட்டேன்.பார்த்துக் கொள்ளுகிறேன். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்துவிடுகிறேன்.

Geetha Sambasivam said...

just saw this post. Hope you took necessary action. will pray God.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. பகிர்விற்கு நன்றி .
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

துளசி கோபால் said...

கண் பத்திரம்.

உடனே 'ஆவன'செய்யவும்.

அதெல்லாம் சிங்கம் சமாளிச்சுடுவார்:-)

கோமதி அரசு said...

புதுக்கண்ணால் உலகம் விரிவடையும்.
தயக்கம் தாமதம் நல்லதல்ல.''
இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//


யோசிக்காதீர்கள். கண்ணன் காப்பான் கண்களை. கவலையின்றி காலத்தில் செய்து கொள்ளுங்கள்.

ஹுஸைனம்மா said...

டாக்டர்ட்ட பேசியாச்சா, எப்ப சிகிச்சை? :-)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. கட்டாயம் நன்றாகப் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கிறார்.
கார்த்திகை தீபம் ஆன பின்னால் டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, நல்வரவு. புனித யாத்திரை பூர்த்தியாகிவிட்டதா.
அன்புக்கு நன்றி'. அப்பாய்ந்ட்மெண்ட்
கேட்டிருக்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர்.
தாமதம் தவறு என்று தெரியும் இந்த வாரத்துக்குள் சோதனைகள் முடிந்துவிடும். பிறகு தேதி குறித்துவிடலாம்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.
இரண்டொரு நாளில் டாக்டரைப் பார்த்து ஏற்பாடு செய்துவிடுகிறேன்.
ராஜன் க்ளினிக் தான் போகவேண்டும்.

Anonymous said...

தாமதம் வேண்டாம்...உடனே கவனியுங்கள்...

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் கவனித்துக் கொள்ளுகிறேன்.
அன்புக்கு மிகவும் நன்றி ரெவெரி.

மாதேவி said...

டாக்டரிடம் கலந்தாலோசித்திருப்பீர்கள்.

சிகிச்சை பெற்று விரைவில் நலன் பெறுக.

கோமதி அரசு said...

வல்லி அக்கா, டாக்டரை பார்த்து விட்டீர்களா?

சீக்கீரம் செய்து கொள்ளுங்கள் காலையில் செய்து கொண்டு மாலையில் வீட்டுக்கு வந்து விடலாம்.

அப்பாதுரை said...

இதெல்லாம் ஜூஜூபி (சரியாச் சொல்றேனா?)
சீக்கிரம் ஆவட்டும் ஆவட்டும்..

[கண் சிகிச்சைக்குப் பிறகு கணவரிடம்: 'இந்தப்பா.. இந்தாப்பா.. நில்லு நில்லு.. கடகடனு வீட்டுக்குள்ள நுழைஞ்சு நேரே கிச்சனுக்கே போறேயே? யாருய்யா நீ?']

Geetha Sambasivam said...

அப்பாதுரை, நல்ல தீர்க்கதரிசனம்! :)))))) எங்கேயோ போயிட்டீங்க! :)))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி இன்று சில பரிசோதனைகள் முடிந்தன. வெள்ளியன்று சில இருக்கின்றன.
கடவுள் அருளில் சரியே நடக்கும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

துரையா .ஓ. மங்கலாத் தெரியறதே.:)
ஜுஜூபிதான் தெரியும்.இப்ப அறுவை முடிந்ததும் அடுத்த நாளே அலுவலகம் போகலாம்னு சொல்கிறார்களே/.

ஆனால் நீங்க சொன்ன அடுத்த விஷயம் ரொம்பப் பிடித்தது. யாருய்யான்னு கேக்கணும்னு ரொம்ப ஆசை எனக்கு.:))))))))))))))))))))0

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி வைத்தியரைப் பார்த்தாச்சு. இன்னும் நான்கு பரிசோதனை நாளைக்கு. அப்புறம் நாள் பார்த்து சிகித்சை செய்து கொள்ளவேண்டியதுதான்.
நீங்கள் எல்லாம் இருக்கும் போது எனக்கு என்னமா கவலை.

வல்லிசிம்ஹன் said...

தீர்க்க தரிசனம்!!! கீதா அதுதான் இப்ப வேணும்.:) நன்றி மா.