நல்ல சேதி. விஜயாம்மா வந்துட்டாங்க.
நேற்று ஏதோ திருமண அழைப்புக்குப் போய் விட்டார்களாம்.
பஸ்ஸில் செயின் போனதும் நல்லதுதான்.
தனியே நடக்கும் போது கத்தியால குத்தாம இத்தோட போச்சேன்னு நினைத்துக் கொள்ளலாம்.
இரண்டரைப் பவுன். இன்னிக்கு இருந்தா ஐம்பதாயிரம் பெறும்.
என்றவரின் கழுத்தைப் பார்த்தேன்.
பளபளா என்று நல்ல கவரிங் செயின் இருந்தது.
பையன் போன் செய்தால் செயின் போச்சு ன்னு சொல்லிடாதேங்கொ. மருமகளுக்கு ரொம்ப சந்தோஷமாயிடும் என்று சிரிக்கிறார்.!!
இப்போதைக்குத் தங்கை வீட்டில் தங்கிக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் மதிய சாப்பாடு ஆகிடும். சாயந்திரம் அந்த ராதாவீட்டில் சப்பாத்தி எடுத்துப்பேன்.
என் சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
தங்கை வீட்டிலும் சும்மா இருக்க மாட்டேன். அவளும் சமையலுக்குப் போகிறவள் தான்.
அவளுக்கு இரண்டு பசங்க வேலைக்குப் போகிறார்கள். அவர்களுக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுத்துவிட்டு நான் கிளம்புவேன் என்று சொல்லி விட்டு
தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.
எவ்வளவு கற்றுக் கொள்ளவேண்டும் நான் இவரிடமிருந்து என்று இன்னும் யோசித்தபடி இந்தப் பதிவை இடுகிறேன்.
அஞ்சா நெஞ்சம் ,எதையும் தாண்டிவரும் வீரம். வணக்கம் விஜயாம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
8 comments:
ஆம்... எந்தத் துன்பத்தையும் தாங்கிவர அஞ்சாநெஞ்சம் வேண்டும். எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. விஜயாம்மாவை வணங்குகிறேன்...
ஆம் எங்கள் வணக்கங்களும் அவருக்கு.
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் இந்த மாதிரி தெளிந்த மனமும் நல்ல குணமும் உள்ளவர்களுக்கு.
மனோதைரியம் மிக்க விஜயாம்மாக்கு எனது வணக்கங்கள்....
அவர்களுடைய மன உறுதியில் கால்பங்காவது நமக்கும் வரட்டும். விஜயாம்மாவுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவிக்கவும்.
Good news!
அவங்களோட மன உறுதியை எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கச் சொல்லுங்க வல்லிம்மா..
தைரிய லஷ்மிதான்.
Post a Comment