Blog Archive

Thursday, November 17, 2011

:"எங்கள் ப்ளாகின்" ''சவுடால்'' போட்டிக்கான கதை பாகம் 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html

இதைத் தொடர்ந்து கதை எழுத ஆரம்பிக்கிறேன்.
கொடுத்த சுட்டி எங்கள் ப்ளாக்  வலைப்பூவைச் சேர்ந்தது.
அங்கே வந்த கதை யில் இரு ராஜகுமாரன்களும் ஒரு ராஜகுமாரியும் இருக்கிறார்கள்.
 ராஜகுமாரியோ தங்கத்தவளையா  வடிவெடுத்து  இருக்கிறாள்.

தன் கணவனை  ஒரு ராக்ஷசனிடமிருந்து விடுவிக்க
தான் வந்திருக்கும் நாட்டின் ராஜாவிடம்  கோரிக்கை விடுக்கிறாள்.

இந்த ராஜா என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறான்.
தங்கத் தவளைப் பெண்ணிடம் விடை பெற்றுக் கொண்டு
அரண்மனைக்குத் திரும்புகிறான்.

இந்த நாள் இனிய நாள்னு சொன்ன   ஜோசியர்  இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஏதோ சம்திங்   கிடைக்கும் என்று  ஆசை.:)

வகை வகையான பதார்த்தங்களோடு  போஜனசாலை  மணம்
மூக்கைத் துளைக்கவே அங்கெ  விரைந்தான்  மன்னன்.
வழியில் ஜோசியரைப் பார்த்ததும் சட்டென்று பொறி தட்டியது அவனுக்கு.
ஆஹா கையில்   லட்டுவை வைத்துக் கொண்டு ,பாதுஷாவைத் தேடுவார்களா  என்று நினைத்தவண்ணம்,
''வாரும் அஹோ ஜோஸியரே  இன்று
ராஜாவோடு போஜனம் செய்ய  உங்கள் ஜாதகத்தில்
எழுதி இருக்கிறது'  வாரும் என்று அவர் தோளில் கைகளைப் போட்டு அழைத்துச் சென்றான்.


உண்மையாகவே  நம் ஜாதகத்தைப் பார்க்கவேண்டிய  நேரம்
வந்துவிட்டது  என்று  தன்னையே  கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.,வல்லப நம்பூதிரிகள்.
சாப்பாட்டைச் சுவைத்துக் கொண்டே அரசன் தன் பிரச்சினையை
அவருடன் அலச  ஆரம்பித்தான்.
வல்லபருக்கோ ஒரே குழப்பம். தங்கத் தவளைக் காலமெல்லாம் பழசு இல்லையோ.
 இப்பவுமா உண்டு  என்ற வாறே
அரசனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தார்.
நிதானமாகத்தான் இருந்தான்.தப்பில்லை.
சோமபானம் அருந்தும் நேரமும் இல்லை.

அரசன் கிட்டத்தட்ட தவளை ராஜகுமாரி யானதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த
போது விழித்துக் கொண்டார்.

அவரது சொற்களுக்காகக் காத்திருக்கும் அரசனைப் பார்த்து,
ராஜா இன்று நான் கூறிய ஆரூடம் பலித்துவிட்டது.
நீங்களே  அந்தப் பெண்ணை  மணமுடிக்கலாமே என்றார்.

தலையிலடித்துக் கொண்ட அரசன்' ஐயா ஜோசியரே அவள் ஏற்கனவே அந்த
 ராஜகுமாரனைக் காதலிக்கிறாள். அவனை
விடுவிக்க வழி சொல்லுங்கள் என்றான்.
 ஜோசியருக்கு உண்ட மயக்கம். ''மன்னா  சற்றே  கண்ணயர்ந்து சிந்திக்கிறேன்.
கனவிலே விடை கிடைக்கும்''என்று எழுந்திருக்க எத்தனித்தார்.

நீர் எங்கும் போகவேண்டாம். இங்கயே சிந்தித்து விடை சொல்லுங்கள்.
 இல்லாவிட்டால்,...... என்று கழுத்தை அறுப்பது
போல ஒரு சைகை
காண்பித்துவிட்டு அந்தப்புரத்துக்குப்  போய்விட்டான்.!!
பிடித்ததே எனக்கு சனி என்று நினைத்து   தலையில்  தட்டிக் கொண்டார்.
வழுக்கையில் இன்னும் அடித்தால் வரும் யோசனையும் போய்விடுமே
என்கிற பயம் தான்;)

''ஏய்  நம்பூதிரி என்ற பேய்க்குரல் அவரை எழுப்பியது.
அலங்க மலங்க முழித்த அவர் முன் ஒரு பெரிய நாகம் படமெடுத்தவாறு நின்றது. ஆமாம் நின்றது!!
ஆ!!என்றலறக் கூட அவருக்கு வாய் வரவில்லை.
ஓய், என் கிட்ட இருக்கிற இளவரசனை மை போட்டுப் பார்த்தாலும் கிடைக்க மாட்டான்.
ஏனெனில் அவனை  ஓ  சோன் படலத்துக்கு மேலே எடுத்துச் சென்று விட்டேன். உனக்கு
நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா நீ மீட்டுக்கோ'' என்றபடி ஒரு சீறல் போட்டது அந்த நாகம்.

ஜோசியருக்கோ உடலெல்லாம் வியர்த்தது.எங்கே அந்தப் பாம்பு தன்னைக் கடித்துவிடுமோ
 இல்லை கொத்திவிடுமோ என்று நகர்ந்தவர் கீழே விழுந்தார்.!
விழுந்தபிறகுதான் தான் கண்டது கனவு என்று தெளிவு வந்தது.:0)
இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து அடுத்த பகுதியை எழுதி விடுகிறேன்.

11 comments:

கௌதமன் said...

நல்லா இருக்கு கதை. ஆனால், தொடர் பதிவு கூடாது - ஒரே பதிவில் முடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோமே - மறந்துவிட்டீர்களா!

கடைசி வரியாக,
" தான் கண்டதெல்லாம் கனவுதான் என்று தெரிந்தவுடன், கண் விழித்த ஜோசியருக்கு, எதிரே தொங்கிய வெங்கடாசலபதி படம் தெம்பூட்டியது; கை எடுத்துக் கும்பிட்டார் அவரை."
என்று முடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், இது போட்டிக்கு வந்த முதல் என்ட்ரி என்பதால், சேர்த்துக் கொள்கின்றோம். இன்னும் நாற்பது நாட்கள் மீதம் இருப்பதால், மேலும் கற்பனைக் குதிரையை ஓட்டி - இன்னும் நிறைய பதிவுகள் எழுதலாம். வாழ்த்துகள்.
ஆமாம் - சொல்ல மறந்துவிட்டோம் - ஒருவரே எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

ஸ்ரீராம். said...

ஆஹா...எத்தனை பாகம் பாக்கி இருக்கு? வெல்கம் சாண்டில்யி...!

வல்லிசிம்ஹன் said...

இதுதான் அரைகுறை எழுத்தாளிக்கு உரிய லட்சணம். ரூல்ஸ் படிக்காமலயே போட்டியில் கலந்து கொள்வது;0
மன்னிக்கணும் கௌதுமன். ஒரே பத்துவரிகளில் கதையை முடித்தால்
நன்றாக இருக்காதே என்கிற அவசர ஞானத்தில் எழுதிய கதை. இதோ முடித்துவிடுகிறேன்.''மறக்காமல். அவரை"

வல்லிசிம்ஹன் said...

பயப்படாதீர்கள் ஸ்ரீராம்.:) ஒரே பதிவாகப் போட்டிருக்கலாம். ஜிம் செண்டர் பயிற்சிகள் பாக்கி இருக்கின்றன.அதற்காக
கதைக்குத் தொடரும் போட்டுவிட்டுப் போனேன். நல்ல படியாக எழுதிவிடுகிறேன், சாண்டில்யி பட்டத்திற்கு (தகுதி இல்லாவிட்டாலும்) ரொம்பவே நன்றி.

Geetha Sambasivam said...

ஆஹா, விட்டலாசார்யாவோட கூடப் போட்டியெல்லாம் போடுவீங்களா? நல்லாத் தான் இருக்கு. ஏதேனும் குழந்தைகள் புத்தகத்துக்கு அனுப்பி வைக்கலாமே இதை. எங்கள் ப்ளாக் பக்கம் போனதில்லை; போய்ப் பார்த்து ஏதேனும் தேறுமானு யோசிக்கிறேன். நன்றி வல்லி. வாழ்த்துகளும் போட்டியில் வெற்றியடைய. உங்கள் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனாலும் போட்டியெல்லாம் போடப் போறதில்லை.

Kavi Ra said...

Then I had come to India with university recently shared an experience that will help you feel it..................
http://sarithram.blogspot.com/2011/11/blog-post_08.html

வல்லிசிம்ஹன் said...

கீதாம்மா நீங்க எழுதறது சரித்திரம். இது ச்சும்மா ஜாலிக்கு. :)
போட்டின்னு சொன்னதும் பழைய கதம்பம் புதுக் கதம்பம் எல்லாம் கட்டிக் கொடுக்கலாமேன்னு தோணித்து. அதுவும் இல்லாம மனசுக்கு டைவர்ஷன் ரொம்பத் தேவையாக இருந்தது. எங்கள் ப்ளாக் நிஜமாவே நல்லா நடத்திக் கொண்டுவருகிறார்கள். சேம் ப்ளட் மாதிரி:) வெற்றிக்காக எழுதல.எனக்கே வைத்துக் கொண்ட டெஸ்ட்:)நீங்களும் போய்ப் பாருங்கள் . உங்களுக்கும் பிடிக்கும்.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் கனவா:)? வருகிறேன் அடுத்த பாகத்துக்கு..

வல்லிசிம்ஹன் said...

கனவுக்கு அப்புறம் எல்லாம் நிஜமாகி விடுகிறது.
ராமலக்ஷ்மி ,ஒருவரே பல கதைகள் அனுப்பலாமாம். யோசித்துக் கொண்டிருக்கிறேன்.:)

ராமலக்ஷ்மி said...

நான் அறிவிப்பிலேயே சொல்லி விட்டுள்ளேன், இந்த சவுடால் எனக்கு சற்று சிரமமானதென. அசத்துபவரைத் தொடருகிறேன். உங்களது அடுத்த கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்:)!

மாதேவி said...

ஆகா...தொடர்கின்றேன்.