Blog Archive

Monday, October 24, 2011

வணக்கம் விடைபெறுகிறேன் வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
8:07 AM 10/24/2011
ஒரு வாரமாக நட்சத்திரம்.
அநேகருக்கு இப்படி ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிந்திருக்கும்.

பழைய கதைகளும்,புதிய   அனுபவங்களும் கொடுக்க எனக்கு மேடை
அமைத்துத் தந்த தமிழ்மண  நிர்வாகத்துக்கு மிகவும்

நன்றி.
வெறுமனே நன்றி சொன்னால் போதாது.
இந்த வாரம் எனக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுத்தது என்று யாராலும்நினைத்துப் பார்க்க முடியாது.
வந்திருந்த மகனும்  அவன் குடும்பமும் கிளம்பினார்கள்.
அது ஒரு வெற்றிடம் உண்டாக்கியது.மழலைகளின் சத்தம் இல்லாத வீடு...வீடு இல்லை.
என்னுடைய வைத்தியர்  வார்த்தைகள் அவ்வளவு
பலம் கொடுப்பதாக  இல்லை.

இவ்வளவு நினைவுகளிலிருந்தும் என்னை மீட்டுக் கொடுத்தது இந்த வாரம்.

வேறு எந்த  நெகடிவ் சிந்தனைகளிலும் மனம் போகாமல் என்  மனதை முழுமூச்சோடு
 எழுத்திலும் ,நினைவுகளை மீட்டு எடுப்பதிலும்
செலவழிக்கவும்
நடு நடுவில் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதிலும் ஒரு தனிமனிதப் பயணமாக இருந்தது.
என் வான்வெளி நண்பர்கள் யாரும் கைவிடவில்லை.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்று கேட்கிறீர்களா.

அநேகருடையப் பதிவுகளுக்குப் போவதில்லை.
போய்ப் படித்தாலும் பதில் பின்னூட்டம்   இடுவதில்லை.
இதையும் மீறி என்னிடம் இவர்கள் அன்பும் மதிப்பும் காட்டியதுதான் அருமை.

என்னைவிடச் சிறியவர்களுக்கு ஆசிகளும் என்னொத்த சகோ சகாக்களுக்கு வணக்கங்களும் நன்றியும்.


சொன்னவுடன் பதில் எழுதிய திரு பாரதிமணி சாருக்கு  மிகவும் நன்றி.

அத்தனை ஆயிரம் பதிவர்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ஒளியும்,மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும்  எப்பொழுதும் உங்கள் வாழ்வில் நிறைந்து இருக்கணும்.
தமிழ்மணம் எப்பொழுதும் போல மணம் வீசி
அனைவரையும் ஆதரிக்கவேண்டும்.
வணக்கம்,
அன்புடன்,
வல்லிமா என்கிற ரேவதி நரசிம்ஹன்.
இன்று முதல் ஒளிவீசப் போகும் அடுத்த நட்சத்திரத்துக்கு  மனம் நிறைந்த வாழ்த்துகள்.


15 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுகளைத் தந்ததற்கு நன்றி வல்லிம்மா. சிறப்பான நட்சத்திர வாரம்.

மதுரையம்பதி said...

2 வருஷங்கள் கழித்து நட்சத்திர வாரத்தின் ஒவ்வொரு போஸ்டையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தீர்கள்.... உங்களுக்கும், சாருக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

உங்களோட சேர்ந்து நாங்களும் உங்க நினைவலைகளில் பயணப்பட்டோம் வல்லிம்மா.. அருமையான பயணம் :-)

பால கணேஷ் said...

இனிய அரிய பகிர்வுகளைத் தந்தீர்கள். உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி மா. இனி புகைப்படப் பயணங்களைப் பார்க்கப் போகலாம்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு மௌலி. எத்தனை இனிய பாராட்டு. இதற்காகவே இன்னும் பாடுபட்டு எழுதலாம் என்று தோன்றுகிறது.
உங்களுக்கும் அம்மாவுக்கும், குழந்தை மாதங்கிக்கும் ,உங்கள் மனைவிக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் முடிந்ததைதான் எழுதினேன்.கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருப்பேன் என்றே நம்புகிறேன்.

தக்குடு said...

வெண்ணைக்கட்டியா பிசைஞ்ச தச்சு மம்முவுக்கு ஒரு துண்டம் ஆவக்கா ஊறுகாய் தொட்டுண்டு சாப்பிட்ட மாதிரி ஆர்ப்பாட்டம் இல்லாத பாந்தமான பதிவுகளை குடுத்த வல்லிம்மாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!! :))

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ள திரு கணேஷ், முதல் வருகைக்கு நன்றி.
பதிவுகளை ரசித்ததற்கும் தீபாவளி வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. உங்களுடைய குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள் தீப ஒளியோடு வருகின்றன.

Geetha Sambasivam said...

அநேகருடையப் பதிவுகளுக்குப் போவதில்லை.
போய்ப் படித்தாலும் பதில் பின்னூட்டம் இடுவதில்லை.
இதையும் மீறி என்னிடம் இவர்கள் அன்பும் மதிப்பும் காட்டியதுதான் அருமை.//

அதே, அதே, நானும் பல பதிவுகளுக்குப் போகமுடிகிறதில்லைனாலும் என் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடுபவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?

ஸ்ரீராம். said...

பழைய நினைவுகளுடன் சிறப்பாக முடித்தீர்கள் இந்த வாரத்தை. தீபாவளி வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாரம் முழுவதும் அருமையான பகிர்வுகளைத் தந்தமைக்கு மிக்க நன்றிம்மா.. தொடர்ந்து எழுதுங்கள்...

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

துளசி கோபால் said...

அருமை!

ஆர்பாட்டம், ஆரவாரம் இல்லாம அமைதியா 'தூள்' கிளப்பிட்டீங்க!
மனம் நிறைந்த பாராட்டுகள்!!!!

குமரன் said...

வல்லி அம்மா அவர்களுக்கு,

நட்சத்திர வாரத்தில் இறுதியில் இருக்கிறேன். நன்றி நவில்வது எப்படி என உங்கள் எழுத்தில் இருந்து சுட வந்தேன்.

சுட்டுவிட்டேன். நிறைய நன்றிகள்.