இது ஒரு மாதிரி ''திரும்பிப் பார்க்கிறேன்'' ஆகிவிட்டது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் . என்றாலும் ஒருவரையும் மறக்காமல் அழகாகப் போட்ட கோலம் என்று நினைக்கிறேன்.
மறந்திருந்தால் கட்டாயம் மன்னிக்கணும்.
டிஸ்கி....கேள்விகள் அன்பு "அமைதிச்சாரலு"டையது. பதில்கள் என்னுடையது .இதோ இந்தப் பதினெட்டாம் தேதி காலை நாலரை மணிக்கு எழுதும் பதிவு.
தூங்கும் கணவருக்குப் பக்கத்தில் ஆறு தலையணைகளை அண்டக் கொடுத்துக் கணினி வெளிச்சத்தை மறைத்து எழுதும் அமைதிப் பதிவு:)
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வல்லிசிம்ஹன்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அதில் பாதி கணவருடையது.நாச்சியார் கோவில் வஞ்சுளவல்லியை மிகவும் பிடிக்கும்.
கும்பகோணம் ஆராவமுதனின் துணைவியாரின் பெயரும் கோமளவல்லி.
நான் வளர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் பெரியாழ்வார் மகள் கோதை நாச்சியாரிடமும் தீராக் காதல்:)
எல்லாவற்றுக்கும் மேல் புனைபெயர் வைத்துக் கொள்ளும் ஆவல் எப்பொழுதும் உண்டு. அதனால் நரசிம்ஹனின் மனைவி வல்லி சிம்ஹன் ஆனாள்.:)
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
கதை சொல்லப் பிடிக்கும். பேசப் பிடிக்கும். பேசுவதைக் கேட்க தற்போதைக்கு
எங்க வீட்டில் ,இங்க சாமிகளும்,ஆசாமியும் தான் இருக்காங்க.
இரண்டுமே திரும்பி பதில் பேசாது.வாழ்க்கையின் சோகமான நாட்களைக் கடந்து கொண்டிருந்தேன்.யாரிடமாவது பேசவேண்டும். இல்லை எழுதியாவது வைக்க வேண்டும். திரு சுஜாதா தேசிகன் அவர்களின் இணைய நட்பு அம்பலம்
அரட்டை வழியாகக் கிடைத்தது.
சனிக்கிழமைதோறும் காலை 11 மணி அளவில் கணினியைவிட்டு நகரமாட்டேன்.
அத்தனை நபர்களுடைய கேள்விகளுக்கும் எழுத்தாளர் சுஜாதா பதில் சொல்வதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
அந்த வருடம் ஸ்விட்சர்லாண்ட் பயணத்தின் போது தான் பதிவு எழுதலாம் என்கிற எண்ணம் தோன்றியது.
ஆங்கிலத்தில் ப்ளாக் தொடங்கி எழுத ஆரம்பித்த போது கிடைத்த நட்புகள், மதுரை சாம் என்ற தருமி சார். டாக்டர் டெல்ஃபின்,மற்றும் ஓகை,தெக்கிகாட்டான் இவர்கள்.
பிறகுதான் தமிழ் எழுத்துரு தரவிறக்கம் செய்து தத்தித் தத்தி ,நடந்து பிறகு பறக்க ஆராம்பித்தேன்.:)
எழுதினால் மனபாரம் குறைந்தது. பிடித்துக் கொண்டேன் கொழுகொம்பாக.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்ன செய்திருக்கலாம் என்று இனிமேல்தான் யோசிக்கவேண்டும்.பலவித மனநிலை மாறுபாடுகள், வாழ்க்கை முறையில் மாற்றம், அம்மாவின் மறைவு என்று எல்லாவற்றையும் பதியத் தோன்றிய அளவுக்கு,
மற்றவர்களையும்
பார்க்கணும் ,படிக்கவேண்டும் என்ற எண்ணம் சூடு பிடிக்கச் சில நாட்கள் ஆயிற்று.
இதையும் மீறி என் பதிவையும் படிக்க ஆளிருந்தார்கள் என்பதே பெரிய விஷயம்.:)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
முக்காலே மூணு வீசம் பதிவுகள் என் சொந்த அனுபவங்கள் தான்.
சிலது சிரிக்க வைக்கும். சிலது அய்யொடா இது ஏன் இந்த வல்லிம்மா இப்படி அழறாங்கன்னு சொல்ல வைக்கும்.
சிலது பக்திபூர்வமா இருக்கும் .அதுக்காக ஆன்மீகம் பக்கம் உறுதியாக இருந்தால் ஒழிய, போக மாட்டேன்
சிலது படங்கள் மட்டும் கொண்ட பதிவாக இருக்கும்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா
சம்பாதிக்கலாம்னு தெரியும்.அதிலயும் நான் சொதப்பவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த பயமும் உண்டு:)
இப்போதைக்கு இது ஒரு தொடர் போதையாகப் ஆகப் பீடித்திருக்கிறது.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட்டேன்.
குழந்தைகளுக்காக ஆரம்பித்து அதுவும் அப்பப்போ எழுதுகிறேன்.
படங்கள் மட்டும் போடுவதற்காக என்று ஒன்று.
நிச்சயமாக அப்டேட் செய்வது நாச்சியார் தளமும் புகைப்படப் பயணங்களும்.மட்டுமெ.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்
வீணாக விவாதங்கள் நடக்கும்போது தோன்றும்,. கோபம்.
ஓ நிறைய பொறாமைப் படுவேன். வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான என் சக பதிவாளினிகளைப் பார்த்து அதிசயப்
படுவேன்.பிறகு அதையும் விட்டுவிட்டேன்.
பொறாமைக்கு ஏது இடம்?
.நீரளவே தாமரையும்.
படிக்கக் கண்கொடுத்த இறைவனை வேண்டி இவர்களை வாழ்த்திவிடுவேன்
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டுகள் கீழே கொடுத்திருக்கும் அத்தனை நபர்களுக்கும் தான்.
முதல் என்றால், துளசி, அம்பி,அபி அப்பா, வடுவூர் குமார்,கீதா சாம்பசிவம்,கோவி.கண்ணன் நாகை சிவா,கோபிநாத்,,
சுலைமான்,மௌலி .தருமி,ஓகை ,கண்மணி,பாலராஜன் கீதா
,பொன்ஸ்..........என்கிற பூர்ணா ராஜாராம் எனக்குப் புகைப்படங்களைப் பதிவில் ஏற்றுவதைக் கற்றுக் கொடுத்தார்...........
என்னைப் பாடவைத்த(புது ஆழ்வார் என்று ஏன் அழைக்ககூடாது )கண்ணபிரான் ரவிசங்கர்,அந்தப் பாட்டை எழுதிக் கொடுத்த மௌலி,
சர்வேசன்,
இன்னும் என் பதிவு கலைமகளில் தெரியவைத்த ஷைலஜா .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++..
துளசிகோபால் மட்டுமே பின்னூட்டம் இட்ட பதிவுகளும் உண்டு.:))கீதாவும் துளசியும் என் எழுத்துக்கு உற்சாகம் கொடுப்பவர்கள்.திராச சார்,எனக்குக் கிடைத்த அன்பு நண்பர்.
பிறகு ஆயில்யன்,இலவசம்,(கொத்ஸ்),சின்ன அம்மிணி(இப்ப அகிலா), ,நானானி, தம்பி திருமூர்த்தி வாசுதேவன். சகாதேவன் சார், திரு சீனா அய்யா, மீனாட்சிப்பாட்டி,சுப்புரத்தினம் ஐயா, சிஜி என்கிற சிவஞானம் சார்.
ராமலக்ஷ்மி,தென்றல்,சந்தனமுல்லை,அமைதிச்சாரல்,முத்துலட்சுமி,கோமதி தங்கச்சி,மாதேவி, இராஜராஜேஸ்வரி,எங்கள் ப்ளாகை வெற்றிகரமாக நடத்தி வரும் ஸ்ரீ கௌதமன், ஸ்ரீராம்.................
மாதங்கி, மௌலி,ஜயஷ்ரீ,சுமதி.,எல்.கே,., தேனம்மை லக்ஷ்மணன்.....,அமித்து அம்மா.கார்த்திகா வாசுதேவன்....அப்பாவி தங்கமணி,அம்பியின் தம்பி தக்குடு என்று நீண்டு கொண்டே போகும் அன்புள்ளங்கள்.
எழுத்துக்குத் தகுந்த பின்னூட்டங்கள் வரும்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இனிமேல் சொல்ல ஒன்றும் கிடையாது.அநேகமாக என் எழுத்துக்களால் என்னைத் தெரிந்தவர்கள் என் நண்பர்கள்.
அவர்களுக்குச் சொல்ல வேண்டியது நன்றி மட்டுமே.
பதிவுகள் எனக்கு வடிகால். பின்னூட்டங்கள் எனக்கு மருந்து.
எழுத்து இல்லாவிட்டால் இருத்தல் சுகமில்லை.
கேள்வி கேட்ட சாரலுக்கும், வாய்ப்பு கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றியைச் சொல்ல பலவரிகள் வேண்டும்.
எல்லோரும் வாழ வேண்டும்.
19 comments:
அருமை
//எழுத்து இல்லாவிட்டால் இருத்தல் சுகமில்லை.//
சூப்பர் பஞ்ச்!!!! எனக்குப் பிடிச்சிருக்கு!!!!!
உங்கள் மனம் தெரியும் பதிவு.
//எழுத்து இல்லாவிட்டால் இருத்தல் சுகமில்லை.//
அக்கா அருமையாக சொன்னீர்கள்.
உங்களைப் போன்றதே உங்களது இந்த இடுகையும். எல்லோரது பெயர்களையும் விடாது எழுதியிருப்பதைப் பார்க்கையில், நீங்கள் அன்பாக ராஜா என்று அழைப்பது போலவே தோன்றியது என்றால் மிகையல்ல.
நன்றி சார்வாகன். அருமையான பின்னூட்டம்.
துளசி,
அப்ப திரைக்கதை எழுதப் போயிடலாமா நாம:)
கீதா நம்மிடையே நல்ல புரிதல் இருப்பதால்தான்,
மனம் தெரிகிறது.ரொம்ப நன்றிப்பா.
வரணும் தங்கச்சி கோமதி.
நீங்கள் எல்லாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள்.நன்றி மா.
அன்பு மௌலி, எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் அக்கறை எடுத்து வந்து பின்னூட்டம் இடுவது பெரிய விஷயம் இல்லையா.
உங்களைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா.
நன்றி மா.
உங்களை பற்றி அறிய முடிகிறது
அன்பு வல்லிம்மா, கீதா பாட்டி & துளசி டீச்சர் மாதிரியான பெரிய பெரிய ஜாம்பவான்களோட சேர்த்து இந்த சுண்டெலியையும் ஞாபகம் வச்சு சொன்னது ரொம்பவே ஆச்சர்யமா இருந்தது!! ஆனா இந்த அன்பும் பாசமும் தான் உங்க பலம்!! :)
//pathivu vadikaal, pinnuttam marunthu//
wel...well said valli!!
enakkum athey..athey!!!
மனம் திறந்த பதில்கள். மகிழ்வூட்டுகின்றன.
தூங்கும் கணவருக்குப் பக்கத்தில் ஆறு தலையணைகளை அண்டக் கொடுத்துக் கணினி வெளிச்சத்தை மறைத்து //
ஆகா .. :) கடமை கடமை..
ஐ...பதிவுல என் பெயர்...!
எழுத்து பயணத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமையான கேள்விகள் மூலம் அதை வெளிக் கொண்டு வந்த சாரலுக்கும் நன்றி.
திராச சார்,எனக்குக் கிடைத்த அன்பு நண்பர்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
அதில் பாதி கணவருடையது.நாச்சியார் கோவில் வஞ்சுளவல்லியை மிகவும் பிடிக்கும்.
கும்பகோணம் ஆராவமுதனின் துணைவியாரின் பெயரும் கோமளவல்லி
மயிலை வல்லியை விட்டுவிட்டீர்களேஆதி கேசவ மயூரவல்லி அப்படியும் சொல்லலாமோ
ஜூப்பரான பதில்கள் வல்லிம்மா :-)
ஜொலிக்கிறீங்க..
Post a Comment