கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் நம் வாழ்க்கையோடு எவ்வாறு இழைந்து வந்தன என்று யோசிக்கப் போகும்போது தான், எத்தனை சுமைகளை நம் மனதிருந்து இறக்கி வைத்திருக்கிறார் அவர் என்னும் உண்மை புலப்படுகிறது.
அப்போது வந்த படங்களும் அப்படி. அரிவாள்,கத்தி,சுவிட்சர்லாந்த், ,நியூசிலாந்த் என்ற லோகேஷனுக்காக எழுதப் படும் பாடல்களாக இல்லை.
எங்கள் பள்ளி நாட்களில் சீனப் போர் வந்தது.
அதற்காக யார் யார் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தோம்.
அப்போது வந்த படம் சிவாஜி கணேசனும் சாவித்திரி அம்மாவும் சேர்ந்து நடித்த 'ரத்தத் திலகம்'
நாயக நாயகி காதல் நிறைவேறாமல் போனாலும் அமரத்துவம் பெறுகிறது படத்தின் இறுதியில்.
அதில் பலபாடல்கள் கண்ணதாசனின் முத்திரைப் பாடல்கள்.
மிகப் பிடித்தது.
பனிபடர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன்' என்று ஆரம்பிக்கும் உணர்ச்சி பூர்வமான பாடல்.
பாடலின் கடைசி வரிகளாகக் கதாநாயகன், போரில் வாடிய இந்தியத்தாயின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக
'' வீரர் உண்டு,
தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் மானம் உண்டு.
தானம் உண்டு தர்மம் உண்டு.
தர்மம் மிக்க தலைவன் உண்டு'
***********
''அன்னை சிரித்தாள்
அடடா ஒ! அச்சிரிப்பில்
முன்னைத் தமிழ்மணமே
முகிழ்தேழுந்து
நினறதம்மா' என்று முடியும்.
இதைக் கேட்டு அழாத நெஞ்சங்கள் எங்கள் பள்ளியில் இல்லை.
நாங்களே போர்முனைக்குச் சென்ற உணர்ச்சிதான் மிகுந்திருந்தது.
கவிஞரே என்பைத்தைத்து
வயதுதானே ஆகிறது. . இன்னும் இருந்து எங்களைத் தேன் அருந்த
விட்டு இருக்கலாமே.
ஆனால் இப்போதிருந்தால்
இந்நிலைமையே உங்களை
வழி அனுப்பி இருக்கும்.
எங்கள் வாழ்க்கையின் இனிய கட்டங்களுக்குப் பாடல் எழுதிக் கொடுத்த தமிழனுக்கு
ஆத்மார்த்தமான நன்றிகளும்
மனம் நிறைந்த வாழ்த்துகளும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
http://www.raaga.com/player4/?id=154883&mode=100&rand=0.9597735043388813//
raaga.com
paadal.Ketkalaam.
ஆத்மார்த்தமான பகிர்வு.
பாடலின் உருக்கம்...தேசபக்தி இல்லாதவர்கள் கூட (இப்போதைய அரசியல்வாதிகள்? உள்ளம் முள்ளாய் குத்த)) உருகிவிடுவார்கள்.
ஏன் ஒன்றோடு விட்டுவிட்டீர்கள்?
பதிவு கொள்ளாது என்பதாலா?
அருமையான உணர்வுகள் வல்லிம்மா..அவர் பாடல்கள் கேட்கும் போது...அவர் எழுத்தைக் கையில் பிடித்துக் கொண்டே இன்னும் சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன்...
அன்பு ராமலக்ஷ்மி,
அப்பொழுதெல்லாம் வேறு விதங்களில் பொழுதைக் கழிப்பது என்பது நடவாத காரியம்.
வானொலியும்,புத்தகங்களும்,கோவிலுமே வழி.
இந்த நிலையில் பதின்ம வயதில் காதில் விழும் அத்தனையும் சிக்'கnapp
பிடித்துக் கொள்வோம்.
இந்தியாவும் இளமையோடு இருந்தது. ஊழல் எல்லாம் கரை ஏற்றவில்லை. சில பல்வீன்களால் இந்தப் போர் நடந்தது.
அதையே கவிஞர் அவர்கள் அழகாக கொடுத்திருப்பார்.
நன்றி அம்மா.
தொடராகத்தான் எழுத நினைக்கிறேன் நானானி.
இது மனதில் வந்த முதல் பாடல்.
அந்த''சுருக்'' குத்தும் அளவிற்கு இப்போது எந்த அரசியல் வாதியும் இல்லை.
அறத்தை மறந்தவர்களுக்கு எந்தக் கவிதான் உதவ முடியும்.
நம் காலம் பொற்காலம்!
பாசமலர்,
உங்கள் பெயரைக் கேட்கும்
போது கூட, அவரது
பாடல்தான் நினைவு வருகிறது.
''அன்பு மலர்
ஆசைமலர்,
இன்ப மலர் நடுவே....
இதுதான் பாசமலரம்மா.
மிகவும் நன்றிம்மா. இன்னும் எத்தனை பேருக்கு எந்தெந்தப் பாடல்கள் பிடிக்குமோ.
உங்கள் உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன்.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் அவர் பாடல்கள் இருக்கும் எந்தப் பாடலைச் சொல்ல, எந்தப் பாடலை விட... மனசே இல்லாமல்தான் 'எங்களில்' முப்பதோடு நிறுத்த வேண்டியதாயிற்று...
//நம் காலம் பொற்காலம்!//
உண்மை..உண்மை..முக்காலும் உண்மை!!!!!
நீங்கள் பகிர்ந்து கொண்ட கண்ணதாசன்
பாடல் நல்ல பாடல் அக்கா.
அதேபடத்தில் வந்த” பசுமை நிறைந்த நினைவுகளே பாடிதிரிந்த பறைவைகளே” பாடல் பள்ளியில் , கல்லூரியில் எல்லாம் விழாவில் பாடப்படும். அருமையான பாடல்.
Lovely song... He is a legend and never vanish from people's memories... Thanks for sharing Vallimmaa...:)
கண்ணதாசன் நினைவில் வைத்திருப்பதும் ஒரு நிறைவு தான்.
காலத்தை வென்ற கவிஞரல்லவா அவர்..
Post a Comment