Blog Archive

Saturday, June 11, 2011

கோடையிலே இளைப்பாறி..--

ஞானப் பழம் செடிகளின் ஊடே
சின்னவனின்  கைவண்ணங்கள்
பெரியவன்
  உருவாக்கிய
 லெகோ மைண்ட்    ஸ்ட ராம்

  ரிமோட் கண்ட்ரோல் வண்டி. 
சின்னவன் சேர்த்து வைத்த உலகம்
தாத்தா  துணையோடு சின்நவன்  வரையும் சித்தன்னவாசல் ஓவியங்கள்.
கடையில் பார்த்தா கப்பல். எம்ஜிஆர் கூடத் தெரிகிறார் பாருங்கள்:)
அனுப்ப நினைத்த பட்டாMபூச்சி.
ஐரோப்பிய  கல்லூரிச்சாலை.

இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன.
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்த கையுடன் மழை வந்தது.
இவர்களின் சிநேகிதர்கள் இந்தியா நோக்கிப் பறந்துவிட்டார்கள்.
இருப்பதெல்லாம் ஒரு சைனீஸ் பையனும், இன்னும் இரண்டு மூன்று அமெரிக்கர்களும்.
தான்.
சின்னவனின் தோழர்கள் வீட்டுக்குத் தனியாகப்
போகும் அளவுக்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.
அதனால் இப்போதைக்கு அவனுக்கு தாத்தா பாட்டி வரப்பிரசாதம்.
வெளியே இருக்கும் வெளி மரங்களையெல்லாம் வெட்டிவிட்டு, மணலை கிளறி, புது MAN
வாங்கி வந்து வந்து ஒரு காய்கறித்தோட்டம் ஆரம்பித்தார் சிங்கம்.
வெகு ஆசையோடு குடும்பமே கலந்து கொண்டது.
உணவுக்கு அலையும் அணில்கள், முயல்கள் இவை வந்து சாப்பிடாமல் இருப்பதற்காக, முதலில் பெரிய தொட்டியில் விதைகளை நாட்டுப் பிறகு கொஞ்சம் வளர்ந்தபிறகு
பூமியில் பதிந்திருக்கிறார்கள்.
தக்காளி,வென்டை, குடமிளகாய், கார மிளகாய், புதினாக்கீரை எல்லாம் கடவுள் கிருபையில் பிழைத்துக் கொண்டுவிட்டன.
அன்று அந்த வெய்யிலில் நின்றது சின்னவனுக்கு ஆகவில்லை. நச் நச் என்று தும்மல்.
என்ன ஊரு, என்ன காத்தோ.:(
கருவேப்பிலை மட்டும் வீட்டுக்குள் தான் வளர்கிறது.:)
செல்லப்பொண்ணு.
எங்க பொண்ணுக்கு அப்படியே அவள் அப்பா குணம்.
சுறுசுறுப்புக்கும், எடுத்த வேலையை முடிக்க வேணும்கற மும்முரத்தில் அவரை மிஞ்சி விடுகிறாள்.

--
    எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

2 comments:

அப்பாதுரை said...

இப்ப காத்து கம்மியாயிடுச்சுனு சொல்லணும். படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை.

காற்றின் சப்தமே என்னைத் தூங்கவிடாமல் செய்த நாட்களும் உண்டு. அதெல்லாம் சென்ற பயணங்களில்.

இந்த முறை அவ்வளவு காணூம். அதுசரி விண்டி சிட்டி என்ற பெயரை அது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா.:)

..