கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் நம் வாழ்க்கையோடு எவ்வாறு இழைந்து வந்தன என்று யோசிக்கப் போகும்போது தான், எத்தனை சுமைகளை நம் மனதிருந்து இறக்கி வைத்திருக்கிறார் அவர் என்னும் உண்மை புலப்படுகிறது.
அப்போது வந்த படங்களும் அப்படி. அரிவாள்,கத்தி,சுவிட்சர்லாந்த், ,நியூசிலாந்த் என்ற லோகேஷனுக்காக எழுதப் படும் பாடல்களாக இல்லை.
எங்கள் பள்ளி நாட்களில் சீனப் போர் வந்தது.
அதற்காக யார் யார் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தோம்.
அப்போது வந்த படம் சிவாஜி கணேசனும் சாவித்திரி அம்மாவும் சேர்ந்து நடித்த 'ரத்தத் திலகம்'
நாயக நாயகி காதல் நிறைவேறாமல் போனாலும் அமரத்துவம் பெறுகிறது படத்தின் இறுதியில்.
அதில் பலபாடல்கள் கண்ணதாசனின் முத்திரைப் பாடல்கள்.
மிகப் பிடித்தது.
பனிபடர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன்' என்று ஆரம்பிக்கும் உணர்ச்சி பூர்வமான பாடல்.
பாடலின் கடைசி வரிகளாகக் கதாநாயகன், போரில் வாடிய இந்தியத்தாயின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக
'' வீரர் உண்டு,
தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் மானம் உண்டு.
தானம் உண்டு தர்மம் உண்டு.
தர்மம் மிக்க தலைவன் உண்டு'
***********
''அன்னை சிரித்தாள்
அடடா ஒ! அச்சிரிப்பில்
முன்னைத் தமிழ்மணமே
முகிழ்தேழுந்து
நினறதம்மா' என்று முடியும்.
இதைக் கேட்டு அழாத நெஞ்சங்கள் எங்கள் பள்ளியில் இல்லை.
நாங்களே போர்முனைக்குச் சென்ற உணர்ச்சிதான் மிகுந்திருந்தது.
கவிஞரே என்பைத்தைத்து
வயதுதானே ஆகிறது. . இன்னும் இருந்து எங்களைத் தேன் அருந்த
விட்டு இருக்கலாமே.
ஆனால் இப்போதிருந்தால்
இந்நிலைமையே உங்களை
வழி அனுப்பி இருக்கும்.
எங்கள் வாழ்க்கையின் இனிய கட்டங்களுக்குப் பாடல் எழுதிக் கொடுத்த தமிழனுக்கு
ஆத்மார்த்தமான நன்றிகளும்
மனம் நிறைந்த வாழ்த்துகளும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்