செராமிக்கில் செய்யப்பட பொம்மைகள் |
சக்கர நாற்காலியில் மனைவியை அழைத்து வந்திருந்த பெரியவர் |
விழாக்காலங்களில் அலங்கரிக்க உபயோகப்படும் பொம்மைகள் |
ஏரி இல்லாத ஊரா |
வசந்தகாலப் பூக்கள் |
இத்தனை வண்ணங்களுக்கு நடுவே வானின் வண்ணம் |
பெயருக்கேற்ற அடர்த்தியான காடு |
சாக்கலேட் பாக்டரி |
ரயில் பாதை ஓர வீடுகள். |
காடும் வெளியும் |
ஒரு தொலை நோக்குப் பார்வை.:) |
மகனின் அலுவலக நண்பனுக்காக ஒரு குக்கூ கிளாக் வாங்க ப்ளாக் பாரஸ்ட் போகனும்மா. வருகிறீர்களா என்று கேட்டதும் ,என் கண்ணில் ஒரு பெரிய வட்டமான ஐஸ்க்ரீம் தடவிய கேக் விரிந்தது.
சாப்பிடத்தான் தடை
கனவு காணலாம் இல்லையா.:)
இந்த இடத்தில் தான் அது முதன் முதலாகச் செய்யப்பட்டது என்று தெரியும்.
கூட வருபவர்கள் கேக் கடைக்குப் போவார்கள் என்றும் தெரியும்.
அதில் ஒரே ஒரு துளி சாப்பிட்டால் வயிறு சண்டை போடாது என்ற தீர்மானத்துக்கு நானே வந்துவிட்டேன்.
பாசல் நகரத்திலிருந்து பக்கத்திலிருக்கும் ஜெர்மன் ரயில் நிலையத்துக்கு
ரொட்டிகள், பிஸ்கட்,வறுவல்கள் சகிதம் வந்து சேர்ந்தோம்.
அங்கு வந்த பிறகு தெரிகிறது. போகும் ரயில் பாதையில் விபத்து என்றும் , டிக்கெட் வாங்கியவர்களை பஸ், ரயில், மீண்டும் பஸ்,மீண்டும் ரயில் என்று மூன்று மணிநேரத்தில் செர்த்துவிடுவதாகச் சொன்னார்கள்.
என்னம்மா, ஏறி ஏறி இறங்கணும் போகனுமா இல்லை திட்டத்தைக் கைவிட்டுவிடலாமா
என்று மகன் வினவ நான் மருமகளைப் பார்த்தேன்.
அவள் தானே குழந்தையின் சாப்பாடு வேலைகளை அனுசரிக்கணும்!
இவர்கள் ரயில் நிற்கும் இடத்திலிருந்து
பஸ்சுக்கு நடக்கணும். அங்கிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் பயணம்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
முன்ன மாதிரி ஜெர்மனி இல்ல. பணக்கஷ்டம். ஒழுங்கு குறைந்துவிட்டது. ஒரு நாள் முழுவதும் மராமத்துச் செய்யாமல் என்ன செய்தார்கள்."
இதெல்லாம் சகபயணியர்களின் முணுமுணுப்பு.
கொஞ்சம் சிரமப்பட்டாலும் இரண்டு மணிநேரப் பயணத்தில் அலுங்காமல் நலுங்காமல் ப்ளாக் பாரஸ்ட் வந்துவிட்டோம்.
வழி நெடுகக் காணக் கிடைத்த செழிப்பான இயற்கைக் காட்சிகள் அலுப்பே தெரியாமல் செய்து விட்டன.
கொண்டு போயிருந்த உ கிழங்கு சான்ட்விச், தயிர்சாதம் உள்ளே போனதும்
உலகமே ஒரு நிலைப் பட்டதாகத் தோன்றியது.:)
.
மீண்டும் பயணிக்கலாம்.
RUVARUKK
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்