Blog Archive

Wednesday, March 02, 2011

வல்லமை மின்னிதழில் அம்மாவின் பதிவு

எனது முந்தைய பதிவில் அம்மாவின்   டயரிக் குறிப்பு   ஒன்றை வலையேற்றி இருந்தேன்.

அன்பு சகபதிவர் , தோழி  ''முத்துச்சரம்'' ராமலக்ஷ்மியிடம் எங்க அம்மாவின் எழுத்தாளராக  ஆகும் கனவு பற்றியும் சொல்லி இருந்தேன்.


என்னிடம்  அவர் இந்தப் பதிவை'' வல்லமை  ''  மின்னிதழுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி இருந்தார்.
இன்று அது நிஜமாகிவிட்டது. அம்மாவின் எழுத்து  பத்திரிகையில் வந்துவிட்டது.

என்னால் முடிந்தால் டமாரம் அடிக்காத குறையாக எல்லோரிடமும் போய்ச் சொல்லி இருப்பேன்.
முடிந்தது என் வலைப்பதிவிலேயெ பதிப்பதுதான்.

இன்னும் என்னால் இது நடந்தேறியிருக்கும் விதத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
 வெகு பூரிப்பாக இருக்கிறது.
வயதில் இளையவர் ராமலக்ஷ்மி.
அம்மாவின் சார்பில்   அவருக்கு  என் நமஸ்காரங்களை அளிக்கிறேன்.
காலத்தில் செய்த உதவி.அதற்கே என் வணக்கங்கள்.
வெளியிட்ட ''வல்லமை'' இதழுக்கு நன்றி.
http://www.vallamai.com/?p=2119

அளவற்ற மகிழ்ச்சிக் கடலில் என் அம்மாவையும் அப்பாவையும் வணங்கிக் கொள்ளுகிறேன். மீண்டும் நன்றி ராமலக்ஷ்மி













எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

ராமலக்ஷ்மி said...

பெரிய வார்த்தைகள் சொல்லி விட்டீர்களே வல்லிம்மா. உங்கள் அம்மாவின் உணர்வுகளுக்கும் நேர்த்தியான அவர் எழுத்துக்கும் செய்யப்பட வேண்டிய மரியாதை. அவ்வளவே என் பக்கத்தில். புரிந்துணர்வுடன் உடனடியாக வெளியிட்ட ஆசிரியருக்கு நம் நன்றி. உங்கள் நன்றியை ஆசிகளாகவே ஏற்றுக் கொள்கிறேன்:)! தொடர்ந்து அம்மா எழுதி வைத்துள்ள மற்ற படைப்புகளை வல்லமை மூலமாக உலகுக்குத் தாருங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

உலகறியச்செய்த ராமலஷ்மிக்கு பாராட்டுகள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

"அம்மாவின் டயரியில் ஒரு நாள்"buzz ல் படித்தேன்...ரெம்ப அழகான எழுத்து... அதை வல்லமையில் வர உதவிய சகோதரி ராமலஷ்மிக்கு எனது நன்றிகளும்

வல்லிசிம்ஹன் said...

செய்கிறேன் ராமலக்ஷ்மி. அவள் நினைவுக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து எழுத நேரம் வேண்டும்.

ஆனால் செய்வேன். இது அம்மாவுக்குச் செய்ய வேண்டிய கடமை.நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

உண்மை.சாரல்.ராமலக்ஷ்மியின்

உதவியும் ,முன் யோசனையும் மனதிலியே நிற்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே . புவனா.பெரிய மனசு வேணும் இல்லையா.எங்கள் தமிரபரணித் தண்ணீருக்கு அது நிறையவே உண்டு:)

Kavinaya said...

//பெரிய மனசு வேணும் இல்லையா.எங்கள் தமிரபரணித் தண்ணீருக்கு அது நிறையவே உண்டு:)//

ஆம் அம்மா :) அதிலும் ரா.ல. ரொம்பவே ச்வீட் :)

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கவிநயா.
உண்மைதான்:).ஆனால் அல்வா கொடுக்கமாட்டோம்!!!!

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி இராஜராஜேஸ்வரி.

கோமதி அரசு said...

அம்மாவின் கனவை நனவாக்கிய உங்களுக்கும், ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

அருமையாக எழுதியிருக்கிறார்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மை கோமதி.
திடீரென்று கையில் கிடைத்த மூலிகையாக அம்மாவின் குறிப்புகள். வருத்தமாக இருந்தாலும் அம்மாவிடம் மீண்டும் தொடர்பு கொண்டது போல.
நன்றிம்மா.

ஸ்ரீராம். said...

ராமலக்ஷ்மிக்குப் பாராட்டுக்கள். உங்கள் சந்தோஷத்தோடு எங்கள் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...

மாதேவி said...

மிக்க மகிழ்ச்சி.