Blog Archive

Monday, February 03, 2014

மனதில் பதிந்த நாட்கள்

மலரும் நினைவுகள்               இது ஒரு மீள்பதிவு.








அக்டோபர் 31



அக்டோபர் 27

இந்த இரண்டு நாட்களும் ஏதோ நடந்திருக்கிறது. மனதில்

குறிக்கப் பட்டப் பத்திரிகையில் வராத நாட்கள்.

ஒரு முக்கிய நிகழ்ச்சி. சமுதாயம் சம்பந்தப் பட்டதில்லை. என்

வாழ்க்கையில் நடந்தது.

அடச்சே என்ன வயசுடா இது. என்னவெல்லாமோ நினைவில் இருக்கிறது.

மாமியாரின் பிறந்த இறந்த நாள்,

பாட்டியின் திதி,

ஏதோ சூரிய கிரகணம்,அப்போது ஊட்டி வரை உறவு ,சினிமாவை

தொலைக்காட்சியில் பார்த்தது.

பக்கத்துவீட்டில் புது பாப்பா.அது இப்போ அமெரிக்காவில்

பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறது.



இன்னோரு பாப்பாவுக்கே பாப்பா பிறந்தாச்சு.

அக்டோபர் 31ஆம் தேதி குடும்பத்தில் யாருக்கும்

பிறந்த நாளில்லை.



பின் எது என் இல்லாத மூளையைப் பிறாண்டுகிறது??

''ஓஹோ!இன்னிக்கு ராம் க்கு வெட்டிங் அனிவெர்சரி''

சிங்கத்தின் குரல்.

ராமுக்குக் கல்யாண நாள் என்றால் .....

ஓ!! நாங்கள் முதன் முதல் சந்தித்த நாள்.

அவருக்கு நினைவிருக்க சந்தர்ப்பம் இல்லை. புதிதாக

செய்யும் சிற்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

பரவாயில்லை. இப்பவாவது நினைவு வந்தது.



கடவுளே இந்த நல்ல அப்பாவி மனிதரை

எனக்குக் காண்பித்துக் கொடுத்தாய்.

இல்லாவிட்டால் இந்த மாதிரி

வாயாடிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்க

என் தந்தை சிரமப்பட்டிருப்பார்.:)

என் செலபரேஷன் என்ன என்று கேட்கிறீர்களா.

பிடித்த பாடல்களைக் கேட்பது.:)
 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

46 comments:

எல் கே said...

இன்று உங்கள் திருமணநாள வாழ்த்துக்கள் அம்மா

வல்லிசிம்ஹன் said...

நன்றி. எல்.கே.
திருமணம் தை மாசம். இது பெண்பார்த்த நாள்:)ஐப்பசி.
இல்லை ஆண்பார்த்த நாள்னும் வச்சுக்கலாம்:)

எல் கே said...

ஓ சரி சரி.. பெண் பார்த்த நாள் வாழ்த்துக்கள் :)))

துளசி கோபால் said...

ஆண் பார்த்த நாளுக்கான அன்பான வாழ்த்து(க்)கள்.

அன்னிக்கு நீங்க என்ன கலர் புடவைன்னு கேட்டுப்பாருங்க:-))))

சுந்தரா said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா :)

சட்டென்று, அண்ணலும் நோக்கினான்...அவளும் நோக்கினாள் என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது :)

ராமலக்ஷ்மி said...

அன்னங்கள் பார்த்துக் கொள்ளும் அழகுக் காட்சியுடன் அழகான நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

மாட்டேனே.:) கேட்க மாட்டேனே. என்னப்பா சம்திங் வேகா ,....அப்படின்னு பதில் வரும். இதை நினைவு செய்வதற்கும் ஒரு நல்ல சண்டைபோடாத நாளா தேர்ந்தெடுக்கணும்.
ஐய்யாவோ நான் கிழக்க நின்னா குத்தமா மேற்க நின்னா குத்தமான்னு யோசித்துக் கொண்டிருக்கிறார்.:)

கோமதி அரசு said...

மறக்க முடியாத நாளுக்கு வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுந்தரா.அந்த வயசில அப்படியும் தோன்றி இருக்க வாய்ப்புண்டு:)

வல்லிசிம்ஹன் said...

ஏற்றுக்கொண்டோம் எல்.கே.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. ஒரு க்ளாஸிக் சீன் இந்தப் படம்.எங்கள் ஆசிரியர் கூட அடிக்கடி இந்த அன்னங்களைக் கரும்பலகையில் வரைவார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. நன்றி. தீபாவளி வாரம் வந்துவிட்டது. பிள்ளைகள் யாராவது வருவார்களா.

ஹுஸைனம்மா said...

ஆஹா, ‘ஆண் பார்த்த’ நாளுக்கு வாழ்த்துகள் வல்லிம்மா!! உங்க கடிதக் கதை மறுபடியும் ஞாபகம் வந்து, புன்னகை பூக்க வைக்கிறது!!

Unknown said...

மனதில் குறித்து வைத்திருந்தே என்ன நாள் என கண்டுபிடித்து வீட்டீர்களே வல்லிம்மா வாழ்த்துக்கள்:))))

சாந்தி மாரியப்பன் said...

நோக்கிய நாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா :-))))))

ஸ்ரீராம். said...

சந்தித்த வேளை நினைவுகளை சிந்தித்து இப்போது பொருத்தமான அழகிய படத்துடன் இணைத்து எழுதி விட்டீர்கள். வாழ்த்துக்கள். திருமண நாள் பிறந்த நாள் நினைவில் வைப்பது போல சந்தித்த நாளையும் நினைவில் வைப்பது சிலருக்கே கை வந்த கலை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இஆரெஸ்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல், இனிமே அப்படி ஒரு நாள் கொண்டாடலாமா. :)நன்றி ப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ஹுசைனம்மா. அந்தக் கடிதத்தை எழுத என்னோட வந்த தங்கச்சி கூட போன் செய்தாள். மீண்டும் சிரிப்பு தான்.!! நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்
எனக்கு இந்த நம்பர்கள் சிந்தனையில் படுத்தும்பாடு இருக்கே. சொல்லி முடியாது. தேதியையும் அதற்கு உண்டான உறவினர்களையும் நண்பர்களையும் சேர்ப்பது பெரிய பிரச்சினை. அக்டோபர் 27 மதுரையில்
took the train to MS.

நானானி said...

வல்லி,
வாழ்த்துக்கள்!!

//பெண்பார்த்த நாள்:)ஐப்பசி.
இல்லை ஆண்பார்த்த நாள்னும் வச்சுக்கலாம்:)//

யாரை யார் பார்க்கும் போது யார் மண்ணைப்பார்த்தார், யார் விண்ணைப் பார்த்தார்?

கரீ....ட்டா சொல்லுங்களேன்!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.இப்ப வேணா யாஉம் யாரையும் பார்க்கலாம். அப்போ நான் ஒரு தடவை விண்ணைப் பார்த்தேன். அடுத்ததடவை மண்ணைப் பார்க்கக் குனிந்ததுதான் ,இன்னும் நிமிரவில்லை:)

கோமதி அரசு said...

தீபாவளிக்கு இரண்டு பிள்ளைகளும் வரவில்லை.

நாங்கள் தான் வழக்கம் போல் கோவை போகிறோம்.தீபாவளிக்கு எங்கள் மாமியார் வீட்டுக்கு.

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

திவாண்ணா said...

ஆணைப்பார்த்த நாளில் நீங்க என்ன புடைவை.... சரி சரி எதுக்கு அதெல்லாம். வாழ்த்துக்கள் அக்கா!

நானானி said...

அடப் பாவமே!!!
அப்போ நிமிர்ந்த நடையே வல்லையா? வல்லிம்மா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள். காலங்கள் தான் மாறிவிட்டதே. நீங்கள் கோவைக்குப் போவது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுவே பெரிய வாழ்த்துதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி,
குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண்ணனுமேய்யா.
ஐய்யா கை தான் எப்பவும் உசந்து இருக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி திவாவுக்கு, உங்களைத்தான் பெண்பார்க்கும்போது ஆழைத்துப் போகலாம்னு நினைத்தேன். உங்க விலாசம் தெரியது. மேலும் அப்போ நீங்களும் சின்னப் பையனாக இருந்திருப்பீர்கள் 1964ல.
புடவை ஆனைக் கலர் ஆரணிப்பட்டு.அதில நீலவர்ண கோடு போட்ட ஜரிகை.., பார்டர். விலை 108ரூபாய்/மட்டுமே. எனக்காக வாங்கிய முதல் பட்டுப் புடவை.:)

மாதேவி said...

வாழ்த்துகள் திரு & திருமதி வல்லிசிம்ஹன்.

"அன்னிக்கு நீங்க என்ன கலர் புடவைன்னு கேட்டுப்பாருங்க:-))))" ஹா...ஹா

வல்லிசிம்ஹன் said...

மாதேவி,அந்த வம்புக்குப் போகக் கூடாது. நமக்கு இருக்கிற நினைவு எல்லாம் அவங்களுக்கும் இருக்கும்னு நம்ப முடியாது.:))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,

ஆர்.அர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

நானானி said...

அடடா...! மண்ணையும் விண்ணையும் நீங்களே பாத்தீங்களா?
அப்ப...சிங்கம்?

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நானானி,என்னாச்சுப்பா:)))ஒரே ரொமான்ஸ் கேள்வி பறக்குது.:)) அவர்
என்ன செய்திருப்பார்னு இப்ப சொல்றேன் . இது சரியான நாட்டுப்புறமா இருக்கே. எப்படி மாத்தறதுன்னு பார்த்திருப்பார்:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆர்.ஆர்.ராமமூர்த்தி. அது நாங்க ''முதன்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்'' :) நாள்.நன்றிம்மா.

நானானி said...

//குனிந்திருக்கிற மாதிரி பாவலாவாவது பண்ணனுமேய்யா.
ஐய்யா கை தான் எப்பவும் உசந்து இருக்கணும்:)//

ஐயோ பாவம்...நீங்க இல்லை, சிங்கம்!!!

cheena (சீனா) said...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த நாள் - விண் பார்த்து மண் பார்த்த நாள் - நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சற்றே கடினமான செயல் தான் ஆண்களுக்கு - பெண்களுக்கு நினைவாற்றல் அதிகம் - ஐயமே இல்லை. இதுல என்ன புடவையின் நிறம்னு கேள்வி வேற - யாரு கிட்ட இருந்து ? துளசியின் தூண்டுதல் - பாவம் சிங்கம் ...... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் வல்லி சிம்ஹன் - நட்புடன் சீனா

முகுந்த்; Amma said...

பெண் பார்த்த நாளை அழகா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.. ரசித்துப் படித்தேன்.
பெண்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி நினைவிருக்கிறது?

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் சீனா சார்.
உண்மைதான் யானை மாதிரி நினைவு எங்களுக்குத் தான். அவரை இதுக்கெல்லாம் தொந்தரவு செய்யறது எப்பவோ விட்டாச்சு.பாவம்.
வர்ணம்நினைவு இல்லாட்ட என்ன. உடுத்தியவளை மறக்க முடியாது அவரால்:)
ரொம்ப ரொம்ப நன்றி வருகைக்கு.

வல்லிசிம்ஹன் said...

தீபாவளிக்கு வந்த விருந்தினரோடு மும்முரமாக இருந்ததில் பதில் எழுத மறந்துவிட்டது.
வரணும் முகுந்த் அம்மா. மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
பெண்களுக்கு இதை விட்டால் வேறு ஏது நினைவு:)நன்றி மா.

ஸ்ரீராம். said...

நினைவிலிருந்து நீங்காத நாள். மண்ணிலிருந்து மறைந்தாலும் மனதிலிருந்து மறையாத அற்புத மனிதரைப் பற்றிய ஒவ்வொரு நினைவும் பொக்கிஷம்தான் அம்மா. அவற்றை எங்களுடனும் நீங்கள் பகிர்ந்து கொள்வது நெகிழ்ச்சியளிக்கிறது.

Geetha Sambasivam said...

இந்தப் பதிவை நான் பார்க்கலை போல, என்னோட பின்னூட்டமே காணோமே! :)) இன்னிக்குத் தான் பார்க்கிறேன்.:)) பெண் பார்த்த/ஆண் பார்த்த நாள் முதற்கொண்டு நினைவில் இருக்கா?

நீங்க சொன்ன சூரிய கிரஹணத்தின் போது செகந்திராபாதிலிருந்து மாற்றல் ஆகி சென்னை வந்த புதுசு. 1980 ஆம் வருஷம். வைரம் போட்டுக்கக் கூடாதுனு எல்லாரும் சொன்னாங்க.அப்போ யாரும் வெளியேயும் வரக் கூடாதுனு சொன்னதாலே சென்னை தொலைக்காட்சியிலே "ஊட்டி வரை உறவு" படம் போட்டதாக என் நாத்தனார் சொல்லித் தெரிந்து கொண்டேன். எங்க வீட்டிலே அப்போ டிவி கிடையாது. 1981 ஆம் வருஷம் தான் டிவி வாங்கினோம்.:))))

திண்டுக்கல் தனபாலன் said...

// பிடித்த பாடல்களைக் கேட்பது // மனதிற்கு மிகச்சிறந்த ஆறுதல் அம்மா...

ராமலக்ஷ்மி said...

முதல் சந்திப்பு.மறக்க முடியாத நாளல்லவா?

கோமதி அரசு said...

மறக்க முடியாத உன்னத நாட்கள்.
வாழ்த்துக்கள்.