பாட்டி,
இன்னும் உனக்கு டிக்கட் கிடைக்கலியா.
இல்ல ராஜாத்தி.
''ஜனவரி மாசம் வரை வெயிட் செய்யணும் கண்ணம்மா.''
ஏன் உனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க.?
பிளேன்ல இடம் இல்லையாம்பா.
எல்லாரும் ஹாலிடேக்கு புக் செய்துட்டாங்களாம்.
அப்ப நீ வரும்போது ரொம்ப குளிருமே பாட்டி.
உனக்கு ஜாக்கெட், வுல் பாண்ட் எல்லாம் இருக்கா.
ஓ வச்சிருக்கேனே.
தாத்தாக்கு>?
இருக்குப்பா.
அப்ப ஒண்ணு பண்ணு.
ஏர்போர்ட்ல மூணு மெஷின் இருக்கும்.
நீ அதில கார்ட் போட்டு ஜனவரிக்கு இப்பவெ டிக்கட் கொடுன்னு சொல்லு.
ரெண்டு டிக்கட் கொடுன்னு சொல்லு.''
சரிப்பா. எவ்வளவு பணம் கொடுக்கணும்.??
''உங்க ஊர் ரூபாய் கொடுக்காதே. எங்க ஊரு ஃப்ரான்க் 60 கொடு
அவ்வளவுதான் டிக்கட் விலை.
ஓ!! அப்படியா. சரிப்பா. செய்யறேன்.
கார்ட் எடுத்து வச்சுக்கோ. டிக்கட் வந்ததும்
எடுத்துண்டு வந்துடு.
பச்சை வளையல், மஞ்ச்ள்,ப்ளூ வளை வாங்கிண்டு வரியா.
சரிம்மா.
''நான் உன்னை எல்லா இடத்துக்கும் அழைச்சுண்டு போறேன்.
பயப்படாதே என்ன,.
சரிம்மா.
ஒரு சின்னக் குழந்தைக்கு தாத்தா பாட்டி எப்படியாவது
தன் வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நினைவு.
போக வேண்டியதுதான்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
இன்னும் உனக்கு டிக்கட் கிடைக்கலியா.
இல்ல ராஜாத்தி.
''ஜனவரி மாசம் வரை வெயிட் செய்யணும் கண்ணம்மா.''
ஏன் உனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க.?
பிளேன்ல இடம் இல்லையாம்பா.
எல்லாரும் ஹாலிடேக்கு புக் செய்துட்டாங்களாம்.
அப்ப நீ வரும்போது ரொம்ப குளிருமே பாட்டி.
உனக்கு ஜாக்கெட், வுல் பாண்ட் எல்லாம் இருக்கா.
ஓ வச்சிருக்கேனே.
தாத்தாக்கு>?
இருக்குப்பா.
அப்ப ஒண்ணு பண்ணு.
ஏர்போர்ட்ல மூணு மெஷின் இருக்கும்.
நீ அதில கார்ட் போட்டு ஜனவரிக்கு இப்பவெ டிக்கட் கொடுன்னு சொல்லு.
ரெண்டு டிக்கட் கொடுன்னு சொல்லு.''
சரிப்பா. எவ்வளவு பணம் கொடுக்கணும்.??
''உங்க ஊர் ரூபாய் கொடுக்காதே. எங்க ஊரு ஃப்ரான்க் 60 கொடு
அவ்வளவுதான் டிக்கட் விலை.
ஓ!! அப்படியா. சரிப்பா. செய்யறேன்.
கார்ட் எடுத்து வச்சுக்கோ. டிக்கட் வந்ததும்
எடுத்துண்டு வந்துடு.
பச்சை வளையல், மஞ்ச்ள்,ப்ளூ வளை வாங்கிண்டு வரியா.
சரிம்மா.
''நான் உன்னை எல்லா இடத்துக்கும் அழைச்சுண்டு போறேன்.
பயப்படாதே என்ன,.
சரிம்மா.
ஒரு சின்னக் குழந்தைக்கு தாத்தா பாட்டி எப்படியாவது
தன் வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நினைவு.
போக வேண்டியதுதான்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
19 comments:
ஸ்விஸ்ஸா:). குழந்தைகள்:))
:)எ ல்லா கலரிலம் வளை வாங்கியாச்சா
நானும் துணைக்கு வரவா? இன்னும் ஒரு 60 ஃப்ராங்க் போட்டு இன்னொரு டிக்கெட் எடுக்கவும்:-))))
அப்பழுக்கில்லா பாசம்.
அழகான நேசம்.
பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
ஊருக்கு போவது என்றால் ஒரு மகிழ்ச்சிதான் வல்லிம்மா.குழந்தைகளுக்கும் நம் வீட்டிற்கு பாட்டி,தாத்தா வருகிறார்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி வல்லிம்மா:)))))
வரணும் பாலா.
ஏற்கனவே அவள் எங்களை அழைத்தவண்ணம்
இருப்பாள். இப்போது தம்பியோ தங்கையோ வரப் போகிறதாம். அது வந்தால் அவளால் எங்கும் நகர முடியாதாம். அதான் இந்த வாராவார தொலைபேசி அழைப்பு.:)
அடுத்த வாரத்துக்கு என்ன சொல்வது என்று யோசிக்கிறேன்.! நன்றிம்மா.
வாங்கணும்பா முத்து. அவளுடைய அம்மாவுக்குத்தான் சரியான கடை தெரியும். அந்தக் கடைக்குப் போய் வாங்கவேணும்.பட்டா பட்டா(மருதாணி) வாங்கணும்:) சமத்துக் குட்டி.
60க்கு இரண்டு டிக்கட் பா துளசி:)
அதனால நாம் கோபாலையும் அழைத்துக் கொண்டு போலாம்:) அவளுக்கு சூரிக் ஏர்போர்ட்டில் அவள் அப்பா மெஷினிலிருந்து ரயில் டிக்கட் வாங்கினது ஞாபகம். அதான் என்னையும் வாங்கச் சொல்கிறாள்:))
உண்மைதான் ராமலக்ஷ்மி. ரொம்ப ஒட்டுதல். இந்தப் பேச்சையும் அன்பையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி. குழந்தை நன்றாக இருக்கணும்.
வாங்கப்பா சுமதி.
ஆமாம் உண்மைதான். அந்த ஊர்க் குளிர் நினைத்தாலே பற்கள் கிட்டிவிடும்.அதுவும் ஜனவரி!! லஸ் விநாயகன்தான் துணை:)
இதே போல்தான் தன் தாத்தாவை ஆஷிஷும் அம்ருதாவும் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப அப்பா,அம்மா வந்திருப்பது அவங்களுக்கு செம குஷி. அது ஒரு தனியான சந்தோஷம். பேரன் பேத்திகள் அன்பை பொழிவதை அனுபவிக்கவும் கொடுத்து வெச்சிருக்கணும்.
சந்தோஷம் வல்லிம்மா
பேத்திக்கு,தங்கையோ,தம்பியோ வரப் போகிறதா, வாழ்த்துக்கள்!
மழலை அழைப்பு அருமை.
//பயப்படாதே என்ன//
கரக்ட்டா தானே சொல்லியிருக்கு..? :))
ஏர்போட்டுல தாத்தவ தண்ணி வாங்க எல்லாம் அனுப்பாதேன்னும் சொல்லி இருக்கலாம். :P
இந்த அழைப்புக்கு நான்...டிக்கெட்டா? வித்வுட்டிலேயே ஓடிடுவேன்.
என்ஜாய்!:-))
வாங்கப்பா தென்றல்.உண்மைதான். தாத்தா பாட்டி அன்பில் ஆஷிஷும்,அம்ரிதாவும் திளைக்க என் ஆசிகள்.மழலை இதயம் தூய்மையானது.
வரணும் தங்கச்சி. சாமி புண்ணியத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கணும்.
மழலைகள் பெருகணும்.
நன்றிப்பா கோமதி.
வரணும் அம்பி. நன்றாக இருக்கே. அந்தக் குழந்தை சொன்னது இந்தக் குழந்தைக்குப் புரிந்து விட்டதா:)
சரி உங்க ஆசிகளோடப் பத்திரமாக் கிளம்பறோம். அதன் நாலுமாசம் இருக்கே:)
Naanaani , lets go pa.;)
Post a Comment