Tuesday, August 31, 2010

இன்று புதிதாய்....

<>
</>

வெள்ளை டிஸ்டம்பர் மினுக்குது வெய்யிலில்
வாழ்வின் ஏடுகளை அழிக்க வந்த கரையான்கள் போயின கும்மியடி'' இப்படிப் பாடலாமா என்று தோன்றியது.


இந்த ஒரு விழிப்பைக் கொடுத்த அந்தக் கரையாஙகளுக்கும் நன்றி. அரதப் பழசாக இருந்த வீடு இப்போது வெள்ளையடிக்கப்பட்டு,

சமையல் அறைக்கு மருந்து காபந்து செய்து(கரப்பான் வராது),

தண்ணீர் ஒழுகிய தளத்தில் புது தரை மேவி, அப்பாடி என்று நிமிர 60 நாட்கள் பிடித்திருக்கின்றன.

இந்தக் கோலாகலத்தில் எனக்குத் திருமணப் பரிசாக வந்த பெட்டி ,உளுத்துப் போய் காயலான் வந்து எடுக்கப்போகும் நேரம், ஐய்யொ அது அப்பா கொடுத்தது'என்று எடுத்து வைத்துக் கொண்டேன். அதைப் புதுப்பித்தாயிற்று. என்ன வைக்கலாம் அதற்குள். இனிமையான நினைவுகளை வைத்துப் பூட்டலாமா:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

16 comments:

ராமலக்ஷ்மி said...

புதிதாய் ஜொலிக்கும் இல்லத்தில் இன்று போல் என்றும் பொலிவும் வளமும் நிலவ வாழ்த்துக்கள்!

//இனிமையான நினைவுகளை வைத்துப் பூட்டலாமா:)//

ஊஹூம். முதலில் உள்ளிருப்பவற்றை ஒன்றொன்றாக வெளியில் எடுத்துப் பார்த்து ரசிக்கலாம்:)!

துளசி கோபால் said...

சூப்பர் ஜொலிப்பு.

அட! ட்ரங்கு பொட்டி!!!!!

பார்த்து எவ்வளோ நாளாச்சு!!!!!

கட்டாயம் இனிமையான நினைவுகளை அதுலே வச்சுக்கணும்.

ஆனால்...ஒரே ஒரு கண்டிஷன்.

அடிக்கடி தொறந்து பார்க்கணும் கேட்டோ:-))))

கோமதி அரசு said...

புதிதாய் ஜொலிக்கும் இல்லத்திற்கு வாழ்த்துக்கள்!

டிரங் பெட்டிக்குள் வைத்துப் பூட்டுவதற்கு முன் அந்த இனிமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அடடா, ஆமாம் பா ராமலக்ஷ்மி. நினைவுகளை ஏன் பூட்டவேண்டும். இனிப்பைப் பகிர்ந்து கொள்ளலாமே! நல்ல யோசனை.செய்கிறேன்மா.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. எத்தனை நினைவுகள்!!
ஏன் பூட்டணும் ?இல்லையாப்பா. எங்க இருந்தது தெரியுமா இது.. சிங்கத்தோட டூல்ஸ் ரூம்ல. இரும்பு துண்டுகளோட இன்னோரு இரும்பா இருந்தது. பாவம்.
நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன். பெட்டி வீட்டுக்கு வந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ,கோமதி தங்கச்சி. இன்னிக்கு ஏன் பதிவு எழுத வந்தேன் என்பதற்கு அர்த்தம் நன்றாகவே புரிகிறது. எல்லோருக்கும் ஒரே நினைவு பார்த்தீர்களா. முதலில் நினைவுகளை வரிசைப் படுத்திக் கொண்டு பிறகு எழுதுகிறேன்.:) நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

என்னோட பச்சைக் கலர் நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்கில் கொலு பொம்மைகள் குடி இருக்கின்றன. :))))) நல்ல நினைவுகளைக்கிளப்பி விட்டீங்க ரேவதி! ஒரு திருஷ்டி பொம்மை வைங்க வீட்டிலே! :)))))))

ஹுஸைனம்மா said...

ஹை நம்ம ட்ரங்குப் பொட்டி!! நினைவுகளைப் பகிர்ந்துவிட்டு, எங்களின் கருத்துக்களெனும் பரிசோடும் சேர்த்து அதில் வைத்துப் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்!!

திவா said...

:-))

Sumathi said...

வெள்ளை அடித்தவுடன் வீடு நன்றாக உள்ளது வல்லிம்மா. இதேபோல் ஒரு ட்ரங் பெட்டியில்தான் என் சிறுவயது உடைகளை அதாவது என் பாட்டி நான் பிறந்த உடன் வாங்கிய பட்டு பாவாடை போன்றவற்றை என் அம்மா இன்னும் வைத்திருக்கிறார்கள் வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ் மா கீதா. இவர் கிட்ட சொல்கிறேன்.பொம்மை வைக்கிறதுக்கு. அம்மாவின் மரப் பெட்டி ஒன்றும் இருக்கிறது. அதையும் சீர் செய்து விடுகிறேன். இந்த ட்ரன்க் பெட்டியும் நாகப்பட்டினம்தான்.நன்றிமா.பெட்டிகள் தொடர் ஆரம்பிக்கலாம:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா. உண்மையாச் சொல்லப் போனால் உங்கள் டிரன்குப் பொட்டியைப் படிக்கப் படிக்க எனக்கு அதன் மேல் அசை வந்தது. அதனால் நீங்கதான் இதற்கு மூல காரணம். நன்றிம்மா. நல்ல நினைவுகளும் பாராட்டுகளும் இந்தப் பெட்டியில் நிரம்பட்டும்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி திவாவுக்கு என்ன சந்தோஷம்??
அக்காக்கு சீர் வரிசை என்ன கொடுக்கறது என்றா:)) வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி வாசுதேவன்,

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி. ஆகக் கூடி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை.;)
ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு பொக்கிஷம்.

நல்ல விஷயங்கள். பெட்டிகள் நம் பயணங்களின் அடையாளங்கள் இல்லையா சுமதி. உங்களுக்கு அது விட்டுவந்த சிறுவயது நினைவுகள். நன்றிம்மா

கோமதி அரசு said...

கீதா சொன்ன மாதிரி எனக்கு அம்மா கொடுத்த 2 ட்ரங்கு பெட்டியில் கொலு பொம்மைகள் உள்ளன.

நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளோம்.

மாதேவி said...

"ட்ரங்கு பெட்டி" ஆகா..

இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.