Thursday, August 12, 2010

திருவில்லிபுத்தூர் நாயகி வாழி.பூங்கோதை.

பூச்சூடிய கோதை.

பூவைச் சூட்டிய கோதை.

அரங்கனின் அரங்கத்தில் அரவ அணையில் ஏறி அவனுடன் ஐக்கியமானவள்.

ஒரு மானிடக் குலத்தில் பிறந்து,தோன்றி கண்ணனையே மணப்பேன் என்று மனதில் வரித்து, நடுவில் வந்த இடர்கள் களைந்து ,தூயவளாய் வந்து,தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடினாள்.

பாமாலையான திருப்பாவையையும் அவன் தோள் மாலையாக்கினாள். அவள் தோள் கிளி இப்போது ஸ்ரீரங்கம் பிரகாரத்தில் ரங்கா ரங்கா என்று அழைத்துக் கொண்டிருக்கிறது.

அவள் பெருமை பாடவும் ஒரு தகுதி வேண்டுமே.

சீதை என்றோ பூமாதாவிடம் அடைக்கலம் தேடினாள். அவளே நல்வாழ்வு தேடித் தன் மணவாளனுடன் லயிக்க ஆண்டாளாகப் பெரியாழ்வாரின் கரங்களில் தவழ வந்தாள். ஸ்ரீராமனின் ரங்கவிமானத்துள் துயில் கொள்ளும் ஸ்ரீரங்கனிடம் நிரந்திரமாகக் குடியேறினாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே

தொல்பாவை பாடிக்கொடுத்தபை வளையாய்

நாடி நீ வேங்கடவர்க்கு எம்மைவிதி என்ற
மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்குஸ்ரீ ஆண்டாள் கோபுரம்ஆண்டாளின் தந்தையானதால் பெரிய ஆழ்வார்.


ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார்,பெரியாழ்வார்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa
Add caption

20 comments:

அமைதிச்சாரல் said...

ஆடிப்பூரத்துக்கு ஆண்டாள்தரிசனம் ஆச்சு வல்லிம்மா..

Jayashree said...

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்

குமரன் (Kumaran) said...

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

குமரன் (Kumaran) said...

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

துளசி கோபால் said...

இன்னிக்கு எப்படியும் உங்க பதிவு வருமுன்னு நினைச்சேன்!

ஆடிப்பூரம் விசேஷ வழிபாடுகள் ஆச்சா?

சனிக்கிழமை பெருமாள் கோவிலில் பூ மாதா ன்னு போட்ட சந்நிதியில் யதேச்சையா 'பிரபை'யை உத்துப் பார்த்தால் வியப்பாப் போயிருச்சு.

துளசிச் செடிக்கடியில் குழந்தை கிடைப்பதையும், கண்ணாடியில் மாலையைச் சூட்டிக்கிட்டு அழகு பார்ப்பதையும் (பித்தளையில்) செஞ்சு வச்சுருக்கு!!!!

Sumathi said...

பூரத்தன்று தான் என் அம்மாவும் பிறந்தார்கள் அவர்களின் பெயரும் ஆண்டாள் தான் அதனால் சூடிக்கொடுத்தாள் கதையை கேட்டுகொண்டிருப்போம் அடிக்கடி என் அப்பாவின் பெயரும் பெருமாள் பெயரேதான் வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். மும்பையிலியும் மடுங்கா கோவிலில் கொண்டாடுவார்கள் என்று நினைவு.

வல்லிசிம்ஹன் said...

ஜயஷ்ரீ, உங்கள் பிரபந்த பாசுரங்கள் வழிபாடு எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.ஆண்டாளின் வல்லமை நமக்கு இருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

குமரனே வந்தாச்சா.

இப்ப எனக்கு நான் எழுதினதைத் திருப்பிப் படிக்க பயமாக இருக்கிறது.;)
நலமா குமரன். சேந்தனுக்கும் வயது கூடி இருக்குமே. பெண்ணும் மனைவியும் நலம் என்று நினைக்கிறேன்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

இன்றோ ஆடிப்பூரம்!! இதை எங்கள் தந்தை படிக்கும்போது எப்பவும் கண்கலங்கி விடுவார்.
நன்றி குமரன்.அவள் அருளால் மனதில் இனிமை கூடுகிறது. நல்லவர்களின் நட்பு துளிர்க்கிறது.

வல்லிசிம்ஹன் said...

என்ன அதிசயம் துளசி!!
பூதேவி யின் மகளாக ஆண்டாள் துளசிவனத்தில் தானே கிடைத்தாள்.
அந்த ஊரில் இது சித்திரமாகி இருக்கிறது என்றால் ஆச்சரியம் தான். அங்கே அந்த சந்நிதியைக் கட்டியவர் யாரோ. அவருக்கு என்றும் அருள்தான்.

வல்லிசிம்ஹன் said...

சுமதி,
கொடுத்துவைத்தவர் நீங்கள்.
எனது பிறந்த வீட்டில் எனக்கு வைத்த பெயரும் அதுதான்:0)
உங்கள் பெற்றோருக்கும் நல்ல பொருத்தம் தான் . உங்கள் ஊரும் தெரிந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

கோமதி அரசு said...

ஆடிப்பூரத்துக்கு ஆண்டாள் தரிசனம் செய்தோம்.நன்றி அக்கா.

இன்று வசந்த் தொலைக் காட்சியில்
திருவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேர்த் திருவிழாவை வைத்தார்கள்.

”திருவில்லிபுத்தூர் நாயகிவாழி வாழி”

Sumathi said...

எனது அம்மாவீடு கும்பகோணம்,எனது புகுந்தவீடு காஞ்சிபுரம் வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

படங்கள் அழகு... குறிப்பாக கோவிலும் ஆண்டாளும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கச்சி. என் டிவி டாட்டா ஸ்கை இணைப்பு. வீட்டுக்காரர் டிவில வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.பார்க்காமல் விட்டுவிட்டேனே:(
உங்கள் ஊரிலும் ஆடிப்பூர உத்சவம் நன்றாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சுமதி,ஒருவாறு ஊகிக்க முடிகிறது அப்பாவின் பெயரை!!நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் வருகைக்கு நன்றிமா.ஆண்டாளின் ஆசிகள் எப்பவும் உங்களோடு இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். ஆண்டாளு அவள் மாலையும் எப்பவுமே அழகு. நன்றிமா.

Sumathi said...

அப்பாவின் பெயர் நாராயணசாமி வல்லிம்மா அப்பாவின் சொந்த ஊர் நாச்சியார் கோவில் அருகில் திருச்சேறை இங்கு பெருமாள் கோவில் நன்றாக இருக்கும்.