Blog Archive

Thursday, July 29, 2010

கூரையில் தங்கிய மழை


pulampeyarntha  porutkal
idam maariya  saappattuk koodam:0)

kaarai vizhuntha  koorai
refugees  from rain:(

வருஷா வருஷம் வெளியூர் போவதும், போயிருக்கும் நேரம் மழை பெய்வதும்


ஒரு ஆறு வருடங்களாக நடந்து வருகிறது.

ஏதாவது ஒரு எமர்ஜென்சி காத்து இருக்கும் நாங்கள் திரும்பி வரும்போது.



முதல் தடவை என் அருமை துர்கா அம்மா சுவரில் பதிந்த ஈரத்தால்

கரைந்துவிட்டாள்.

அதற்குப் பிறகு கூரையில் மழைக்கான சிகிச்சை எல்லாம் செய்தது.

ரெயின் ப்ரூஃப் ரசாயனக் கலவை தடவி,

அதற்கு மேல் டைல்களைப் பதித்து எல்லாம் செய்தார். செய்தவர் பணம் வாங்குவதில்

காட்டிய ஆர்வத்தை பிரச்சினையில் காட்டத் தவறியதால் அடுத்த வருடம்

மழையில் சுவற்றில் மாட்டி இருந்த சாமி படங்கள் அனைத்தும் கறைபடிந்தன.

''இப்படியெல்லாம் எங்களை அவமானப் படுத்தவா ஆணி அடித்து
மாட்டினாய் ''என்று
அவர்கள் எல்லாரும் கேட்பது போல எனக்கு ஒரு பிரமை.:(
இப்போது மீண்டும் வேலை ஆரம்பித்திருக்கிறோம் . மழையோ ராத்திரி வந்து ,ஆட்டத்தைக் கலைக்கலாமான்னு  பார்க்குது.
சரியாகிவிடும் என்றே நம்புகிறேன்.
சரியான  பிறகு மீண்டும் படம் போடுகிறேன்.:)


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

17 comments:

ஸ்ரீராம். said...

மழையோ ராத்திரி வந்து ,ஆட்டத்தைக் கலைக்கலாமான்னு பார்க்குது"//

அடடா.... மழை பெய்து கொண்டிருக்கிறதே...

சாந்தி மாரியப்பன் said...

அச்சச்சோ.....உங்க துர்க்காம்மா கரைஞ்சதை படிச்சிருக்கேன். வீட்டுக்குள்ளேயே அகதிஎன்றால் பாவம்தான்...

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.ஆடி மழை நல்லது. பதினெட்டு கொண்டாடணுமே:)
சரியாகிவிடும்னு ஞானப்பிரகாசம், மேஸ்திரி சொல்கிறார்.நம்புவோம். காலையில் பார்த்தேன் ..ஒழுகவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். மழை ஊருக்கு நல்லது.பெய்யட்டும். நாம் வீட்டை ஒழுங்கா வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. 39 வயசாகிறது இந்த வீட்டுக்கு:)
நல்ல வீடு.அதனால் தொந்தரவு தராது.

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

கூரையில் படிந்த காரை

அடடா...... என்னம்மா எதுகைமோனை துள்ளிவிளையாடுது. ரசித்தேன்:-)))))

சீக்கிரம் பழுதுபார்க்கும் வேலைகள் நல்லபடியாக முடியவும் (சுவற்றில் இருக்கும்) ஆணி பிடுங்கும் வேலை ஜரூரா நடக்கவும் வாழ்த்துக்கிறேன்.

பி.கு: 125 மறுபடி வந்துருக்கும் டிலீட் செஞ்சுருங்க அதை:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. இன்னும் இரண்டு வாரம் ஆகும்னு நினைக்கிறேன்.
டெர்ரஸ்ல ஒரு பச்சை ப்ளாஸ்டிக் கூரை போடலாம்னு முடிவு செய்திருக்கோம். பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்??? வெதரிங் மொட்டை மாடியில் பண்ணி இருக்கீங்க தானே? நாட்டு ஓடு, அல்லது ரயில் ஓடு போட்டு வெதரிங் பண்ணினால் அப்புறமாய் இந்தத் தொந்திரவு இருபது வருடங்களுக்காவது இருக்காது. உங்க சிங்கத்துக்குத் தெரியாதது இல்லை, இருந்தாலும் சொன்னேன். நேத்திக்கு இங்கே கொட்டித் தீர்த்தது மழை! :)))))))))

கோமதி அரசு said...

கூரை சரியாகி,கண்ணுக்கு குளுமையாக

பச்சை கூரை வேய்ந்த அழகியவீட்டின் படங்கள் பார்க்க ஆவலாய் உள்ளோம்.

Unknown said...

அச்சச்சோ வீடு இவ்வளவு ரகளையாகி விட்டதா வல்லிம்மா. மாடியில் பச்சை ப்ளாஸ்டிக் கூறை போட்டால் வெயிலுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் பார்க்கவும் நன்றாக இருக்கும் வல்லிம்மா.தற்போது ஒழுகவில்லை என்றால் மகிழ்ச்சி வல்லிம்மா.

Matangi Mawley said...

aiyaa jolly... vera paint adikkalaam!

engaathla intha maathiri vela nadanthaa enakku kushiyaa irukkum! intha cement poosarathu.. paint adikkarathu pola velayellaam anna pannunnu uttuduvaa... avaalukku oru vithaththula nimmai.. nekkum oru vithaththula nimmathi!!! :D

awaiting your post!!!

Jayashree said...

ஒரு temporary roofing போடலாமோ?DRAINAGE லேயும் கவனம் வச்சுக்கோங்கோ.இங்க SLEET AND HAILல ஸ்வாமி ரூம் DRAINSல ரொம்பி அடுத்த நாள் குளிர்ல FREEZE ஆகி தண்ணி ரூஃப்ல ஓரமா இற்ங்க ஆரம்பிச்சு ரகளை. நல்ல வேள UNUSUAL ஆ அந்த இடத்துல ஜன்னலில் பட படனு மோதின பறவையை பாக்கப்போய் ரூஃப் கார்னர் கண்ணுல பட்டது. சரியாக்கியிருக்கு பாக்கணும். SEEPAGE ஒரு NUISANCEதான்:(( Happy Renovation.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
பச்சைவர்ணக் கூரை போடுவதற்குப் பதிலாக ஒரு அறையே அங்கே கட்டிவிடலாம்னு ஒரு யோசனை.பார்க்கலா. எப்படியெல்லாம் அப்பாவும் பிள்ளைகளும் செய்கிறாற்கள் என்று.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி கவலை வேண்டாம். தேவையில்லாத பொருட்களைக் கழித்துக் கட்டவும் நல்ல சந்தர்ப்பம் இல்லையா.. அந்த ஸ்டோர் ரூமில் எனக்குத்தெரியாமலெயே எத்தனை பொருட்கள்.:(
மறந்தவற்றை வெளியில் போட்டுவிட்டால் இடமும் சுத்தம் மனசும் சுத்தம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.
போன தடவை போட்டதும் மங்களூர் ஓடுகள் தான்.சரியாக் ஜலதாரை அமையாததலோ ,இல்லை வேற என்ன காரணத்தாலோ இப்படி ஆகியிருக்கிறது.இந்தத் தடவை சரியாகிவிடும்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,உங்க ஊருத் தொல்லைகள்ளெல்லாம் கணக்குல யாரு எடுத்துக்கறது. ஆளைவிடு.அதுக்கு நம்ம ஊரு எவ்வளவோ தேவலைம்மா. இனிமேல் டைல்ஸ் ஒட்ட வேண்டியதுதான் பாக்கி. கொடியெல்லாம் திருப்பிக் கட்டணும்.தான்க்ஸ் மா

வல்லிசிம்ஹன் said...

அட இந்த மாதங்கிக்கு வந்த ஜாலியைப் பாரும்மா:)இந்த நிமிஷத்துல தான் உங்களைப் போன்ற குழந்தைகளை மிஸ் செய்யறேன். மாடியில் மதில் சுவர்ரிப்பேர் முடியப் போகிறது.
அப்புறம் பெருமாள் ரூமும் ஸ்டோர் ரூமும் பெயிண்டிங் செய்யணும். போட்டோ எடுத்து அனுப்பறேன் சரியா:)
நன்றிம்மா