Blog Archive

Monday, July 12, 2010

அன்புடையார் என்றும் ,பகுதி --1




ரயில் வருவதற்கான அறிகுறிகளாக ப்ளாட்ஃபாரத்தில் பரபரப்பு அதிகமானது.


திருச்சி ஜங்ஷனின் காலை பரபரப்பு பாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.



சென்னையிலிருந்து வரும் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரசின் மீது ஒரு கண்ணும்,

கையில் பிடித்திருக்கும் பேத்தியின் மேல் ஒரு கண்ணுமாக,வெகு ஆண்டுகளுக்கப்புறம் வரும்

தன் நாத்தனாரையும் அவர் கணவர்,பையன்களையும் வரவேற்க ஆயத்தமானாள்.

 இந்த அத்தைப் பாட்டி உன்னைவிடப் பெரியவரா'என்னும் பேத்தியின் கேள்விக்கு ஆம் என்று தலையை ஆட்டிவிட்டுப்

பெட்டிகளில் தெரிந்த முகத்தைத் தேடினாள்.

பளிச்சென்று சிரித்த ராதாவின் முகத்தைப் பார்த்ததும்

பாமாவுக்கும் உற்சாகம் பிடித்துக் கொண்டது.

'ஹேய்! என்று பழைய சிநேகிதிகளைப் போல இருவரும் கைகளைப் பிடித்துக்

கொள்வதைப் பார்த்துப் பேத்தி

பட்டு, தன் விழிகளை விரித்தாள்.

அத்தைன்னு சொன்னியே பாட்டி, இது உன் ஃப்ரண்டா?

ஆமாம் ஃப்ரண்டும், அத்தையும் தான்:)

என்று பட்டுவை ராதாவுக்கு அறிமுகப் படுத்தினாள்.


இத்தனை கார்த்தாலைல எழுந்து உன்னோட வந்துடுத்தா,
அட பட்டுக் குட்டி, என்று தன்னை அணைக்க வரும் இந்தப் புதிய உறவை மிகவும் பிடித்துவிட்டது

பட்டுவுக்கு.!

அத்தை நீ இங்கயே இருக்கப் போறியா என்று கேட்கும் குழந்தையைப் பார்த்து
சிரித்த ராதா, உம்மாச்சி சேவிச்சுட்டுப் போயிடுவேண்டா செல்லம்'

என்றாள்.

பக்கத்தில் திரும்பி வயதான தன் கணவருக்கு கைலாகு கொடுத்தாள்.
பின்னால் வரும் மகன் குடும்பதையும்,மகள் குடும்பத்தையும்

கவனமாக இறங்குமாறு பார்த்துக் கொண்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாமா' இன்னும் உன் பால்யத்திலியே இருக்கியா

ராதா,அவர்களுக்கு வயதாகி விட்டது.

அம்மாப் பறவை மாதிரி கவனிக்கிறீயே என்று கேலி செய்தாள்.



புன்னகையோடு கேட்டுக் கொண்ட ராதா,

''இதுகள் வெளியூர் போய் இருபது வருஷமாச்சு

பாமா, இப்பத்தான் நம்ம ஊருக்கு வருகிறார்கள். ஆரம்பத்திலியே

அவர்களுக்கு ஜாக்கிரதை செய்து விட்டால் சமாளித்துக் கொள்வார்கள்.''



என்றபடி மகன் கண்ணனையும்,மாப்பிள்ளை ஸ்ரீராமையும் பாமாவுக்கு அறிமுகம் செய்தாள்.

ஹலோ பாமா மாமி! நீங்க அப்படியே தான் இருக்கிறீர்கள் என்று

புன்னைகையோடு அணுகும் மருமகனை அன்போடு பார்த்தாள் பாமா.
நீயும் அப்படியே தான் இருக்கேன்னு நான் சொல்ல மாட்டேன் என்று

அவன் தலை முடி,தொப்பை என்று கண்ணோட்டம் விட்டு சிரித்தாள்.
என்ன ஆச்சு உன்னோட எக்ஸர்சைஸ் ரொடீன் எல்லாம்,
என்றபடி அவன் மனைவி க்ரிஸ்டினாவையும் வரவேற்றாள்.

அவர்களின் குழந்தைகளும் பட்டுவைச் சுற்றிக் கொண்டார்கள். சமவயதுடைய

அவர்களின் ,பழுப்பு நிறத்தலைமுடியை, நீல நிறக் கண்களை

ஆச்சரியத்தோடு பார்த்தாள் பட்டு.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

17 comments:

எல் கே said...

innum formatting saroya varala pola iruku puthusalua?? yaru intha bama and radhaa??

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு சம்பவம். கதைன்னும் வச்சுக்கலாம்.
எனக்கு ஒரு செய்தியை அவசியமாகத் தெரிவிக்கணும். அந்தக் கருவைச் சுற்றி அமைந்த சம்பவங்கள் இவை.
பாமாவும் ராதாவும் முக்கியமான பாத்திரங்கள்.:)

எல் கே said...

hmm sari sari .. continuingo

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்,, சொல்லுங்க

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி,

:) நாளைக்குத் தொடரும்.

Jayashree said...

60 to 80s நடுத்தர வர்க orthodox குடும்பங்களின் தற்காலிக நடவுகள். Acceptance, அன்பு tolerance அதை சார்ந்த விவேகம்) அருமை.
நீலப் பட்டாடை உடுத்தி சின்னஞ்சிறு பெண் அவள் யாரோ? வல்லி நாச்சியாரோ?

Geetha Sambasivam said...

மறுபடியும் டெம்ப்ளேட் படுத்தல், நாழியும் ஆறது வல்லி. என்னனு பாருங்க. எல்கே, கொஞ்சம் உதவக் கூடாதா?? :D

வல்லிசிம்ஹன் said...

Thanks pa ThenRal.

வல்லிசிம்ஹன் said...

கீதா, எனக்குச் சரியாக வருகிறதே. இத்தனைக்க்ம் ஸ்மார்ட் க்ளீனர் எல்லாம் போட்டு டிஸ்க் சுத்தப் படுத்தியாச்சு. பேரை மாற்றி புது பீட்டா ப்ளாக் தான் ஆரம்பிக்கணுமோ என்னவோ.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. க்ளோபல் வில்லேஜ்ல தானே நாம் இருக்கோம் இப்ப. இதில சந்தோஷமாக் கல்யாணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நாமும் சந்தோஷப் பட வேண்டியதுதான். நீலப் பட்டுப் பெண் என் உறவினர். மிக மிக அருமையானவர். நான் ரெண்டு மூணு பதிவுகளுக்கு முன்னால் வந்திருந்தேன்:)

Unknown said...

நன்றாக உள்ளது வல்லிம்மா உங்கள் கதையின் நடை படிக்க ஆவல் தொடரட்டும்.

துளசி கோபால் said...

'தொடரும்' உண்டா?

வல்லிசிம்ஹன் said...

சுமதி ,தொடர்ந்து விட்டிருக்கிறேன் ,..இன்று மூன்றாவது போட்டால் ,அப்புறம் கடைசிப் பதிவு போட்டுடலாம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி நல்வரவுப்பா.
மின்வெட்டு இரண்டு நாட்களாகப் படுத்துகிறது. தொடருகிறேன். பாதி எழுதினதை முடித்துப் பதிவிடணும்.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் தொடருகிறேன் முத்துலட்சுமி:)))

ஸ்ரீராம். said...

லேட் அட்டெண்டென்ஸ்.... இப்போதான் முதல் பாகம் படிக்கிறேன்... இந்தப் பதிவின் புகைப்படத்தில் சிரிப்பது யார்..? நீங்களா, தோழியா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், வரணும்..
படிச்சத்துக்கு நன்றி:)

அந்தப் படத்தில் இருப்பது எங்க குழந்தைகளின் அத்தை.:)
அன்பான அருமையான மனுஷி.

இரண்டு பதிவுகள் முன்னால் ,அதாவது பின்னால் ஊப்ஸ்:)
போனால் நானும் பேரனும் இருப்போம்.