Blog Archive
Thursday, July 22, 2010
தொடர்ந்து முடிந்தது பாகம் 7
சாயந்திர நேரம் எல்லோரும் ஸ்ரீனிவாசனின் அறையில் உட்கார்ந்து
சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
பெற்றோர் இருக்கும் நாட்களிலிருந்து ராதையும் ஸ்ரீநிவாசனும்
பெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மணி அளவில் கடவுள் துதி சொல்வது வழக்கமாக
இருந்தது.
நடுவில் நின்றிருந்த பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த
ராதை,தன் கணவனையும் பெண்கிருஷ்ணா,
மாப்பிள்ளை,பிள்ளை அனைவரையும் அழைத்து அண்ணன் அறைக்கு வந்து
அவரிடம் சொல்லவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தார் அவர்.
அரைமணி நேரம் பக்திமணத்தில் கரைந்தது.
பாமவின் பிள்ளைகளும் ,மனைவியரும் கூடத்தில் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தையைப் பார்த்து எல்லோரிடமும் குசலம் விசாரித்ததோடு
கடமை முடித்தவர்களாகத் தம் தம் அறை நோக்கிப் போனவர்கள் மீண்டும் கீழே
வந்தது இரவுச் சாப்பாட்டுக்குத் தான்.
நாணிப்பாட்டியும் அவரது மகளும் சுவையாக அளவாகச் செய்திருந்த
சாப்பாட்டை ருசித்து உண்டனர் ராதையும் அவளது குடும்பத்தினரும்.
க்றிஸ்டினாவும் தங்களோடு உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடுவதை
பாமாவின் பிள்ளைகளும் மருமகள்களும் அதிசயமாகப் பார்த்தனர்.
இயல்பாக இருக்கும் குழந்தைகளும் இனிமையாகப் பட்டுவுடன் அரட்டை
அடித்தவண்ணம் சாப்பிட்டு முடித்தனர்.
''அத்தை அவர்களுக்கு பீட்சா,பர்கர் அப்படிக் கேட்ப்பியோன்னு
நாங்க நினைத்தோம்'' என்று ஆச்சரியப் பட்ட தன் மருமகன்களைப்
புன்னகையோடு பார்த்தாள் பாமா.
அவர்களுக்கு எந்த இடத்திலும் எல்லாவிதமான சாப்பாட்டையும்
சாப்பிடப் பழக்கி இருக்கிறோம்பா. காரமில்லாத உணவு விரும்பிச் சாப்பிடுவார்கள்.
நம் நாணிப்பாட்டிக்கு அது பழகிய மெனு தானே என்றாள்.
சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு விரைந்தாள் ராதை.
அங்கே அண்ணனுக்குக் கஞ்சியும் தயிரும் கொடுத்துமுடித்திருந்த பாமாவைச்
சாப்பிடச் சொல்லி அழைத்தாள்.
நானும் இங்கேயே இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டுவீட்டேன்மா.இனி பழமும் பாலும்
போதும் என்றவளை மெல்ல அணைத்துக் கொண்டாள் ராதை.
விரதம் இருக்கியா என்று கேட்டதும், ஸ்ரீநிவாசன் அவளை அருகில் அழைத்துத்
தங்கள் தினசரி உணவே அதுதான்.காய்கறிகள் கலந்த சாலட் மட்டும் இல்லை,
என்று சைகையில் சொல்ல முனைந்தார்.
அவர் ஆரம்பிக்கப் பாமா முடிக்க நல்ல ஜோடி என்று கைகளை வளைத்து
அண்ணாவிடம் சூப்பர்' என்று காட்டினாள்.
*****************************************************************
''அப்போ கிளம்பலாமா ராதா. குழந்தைகள் களைப்பாக இருக்கிறார்கள்
என்றதும், இதோ வரென் கோவிந்தன்,என்ற வண்ணம்,
சமையலறைக்கு விரைந்தாள் ராதா.
நாணிப்பாட்டியும் அவரது பெண்ணும் சாப்பிட்டு முடித்து, அறையைச்
சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
பாட்டி, என்னுடன் எங்கள் இடத்திற்கு வரமுடியுமா, உங்களோடு பேச வேண்ட்டும்
என்ற ராதாவைப் பார்த்து ஒரு புரிதலோடு தலை அசைத்தார் பாட்டி.
பெண்ணிடம் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு
படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு
ராதையுடன் பாட்டியும் கிளம்பினார். பாமாவிடமும் விஷயத்தைச் சொல்லி
அனுமதி வாங்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெறவும்,பட்டுக் குட்டி ஓடி வந்து ஏறிக்
கொண்டு விட்டது. அம்மா கிட்ட கேட்டியா செல்லம் என்று ராதா ஆச்சரியப்பட,
நான் பாட்டி கிட்டச் சொல்லிட்டேன் , ஒண்ணும் நடக்காது.பயப்படாதே அத்தே
என்று சிரித்தது அந்தப் பெண்.
வண்டி
அபார்ட்மெண்ட்டை நோக்கிக் கிளம்பியது.
வாசலில் விளக்கு வெளிச்சத்தில் நிற்கும் பாமாவைப் பார்த்து ,அது வரை அழாமல் இருந்த ராதா
நாணிப்பாட்டி மேல் சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.
ஏன் இந்த மாதிரி நடக்கிறது. அண்ணா, பாமா மாதிரி நல்லவா பார்க்க முடியாதே.
இப்படிப் பிள்ளைகள் பெற்றோரிடமு ஒட்டாமல் உற்றாரிடமும் ஒட்டாமல்
ஏன் இப்படியானார்கள்.எனக்குப் புரியலையே என்று மெல்லிய குரலில் புலம்பியவளை
பாட்டி சமாதானப் படுத்தினார்.
காலப் போக்கு மாறிவிட்டது ராதாம்மா.
இப்ப நடப்பது பெண்கள் குடும்பம். நம்வீட்டு வண்டித்தடங்கள் ,
கரூர்,கொடியாலம் நோக்கித்தான் இனிமேல் போகும்.
அதை உன் அண்ணா நன்றகப் புரிந்து கொண்டார். பாமாவுக்குப் பிள்ளைகள்
வெளியூரில் படிக்கப் போனபோதே அவர்களின்
மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
திருமணம் ஆனதும் பெண்டாட்டிகளை அநுசரிக்க வேண்டிய கடமையும்,
அவர்களுக்குச் சேர்ந்து கொண்டது.
எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே ,என்று சந்தோஷப்படு.
நான் பாமாவையும் சீனுவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவனைப்
பார்த்துக் கொள்ள வந்திருக்கிறானே ஒரு கைகால் டாக்டர்,அவன் என் பையன் தான்.
சம்பத்துனு அண்ணாவைக் குளிப்பாட்டி, மத்தவேலையெல்லாம் செய்வது
என் பெண்ணின் புருஷன். அவனுக்கும் நல்ல சம்பளந்தான் தருகிறார் உங்க அண்ணா.
என்று புன்னகை புரிந்தார் பாட்டி.
தொலைவில் தெரிந்த உச்சிப்பிள்ளையார் கோவில் விளக்குகளையும்,
ஸ்ரீரங்க நாதர் கோபுர விளக்கையும் வணங்கினாள் ராதா.
ஏனோ ஒரே ஒரு ஊரிலே ஒரெ ஒரு ராஜா'' பாட்டு நினைவுக்கு வந்தது.
பக்கத்தில் தூங்கி விட்ட இளந்தளிர் பட்டுக் குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.
எல்லோரும் வாழ வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இதுதான் யதார்த்தம்.
அவரவர்களுக்கு அவரவர் உலகம், கடமை இன்னும் என்னென்னவோ.....
எதிர்பார்ப்பு இல்லாம வாழக் கத்துக்கணும். அப்பத்தான் நிம்மதி.
இந்தக் கதை(!) சொல்வது அதைத்தான் என்று நினைக்கிறேன்.
மனதை நெருடிய அனுபவங்கள். ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் வரும் உங்கள் "எல்லோரும் வாழ வேண்டும்" வரி மனதிலேயே தங்கி விட்டது.
ஆமாம் துளசி,
எவ்வளவு சீக்கிரம் இதை உணருகிறோமோ அவ்வளவு நல்லது.
நிஜம்தான் கதையாகிறதுன்னு தான் நமக்குத் தெரியுமே.
வரணும் ஸ்ரீராம்.
எல்லோரும் வாழவேண்டும் நன்றாகவும் வாழணும்.
தொடர்ந்து படிச்சதுக்கு நன்றி.
சுருங்கச் சொல்லும் பழக்கத்தை இனிப் பழகிக் கொள்ளணும்.:0)
//சுருங்கச் சொல்லும் பழக்கத்தை இனிப் பழகிக் கொள்ளணும்.:0) //
எப்படி?
தந்தி மொழியிலா???????
எ.கா: நான் மாம்பழத் திருவிழா போய் வந்தேன்.
(அம்புட்டுதான்)
கதையை ரொம்ப நல்லா கொண்டுபோனீங்க வல்லிம்மா.
துளசிம்மா,
இது ரொம்பத் தந்தி பாஷையா இருக்கே:)
ஏதோ வந்தது.ன்னு யாரோ சொன்னாங்க கதையா.:)
இல்லை என் எழுத்து ஸ்டைல் கொஞ்சம் மாத்திக்கணும் இல்லாவிடில் முன்னேற்றம் தடைப் படும்:)))))00000000000000000))
வாங்கப்பா சாரல். பதிவுகள் பூராவும்'' குத்து''
வரிசையில் ரொம்ப ஸுவரஸ்யமா போய்க் கொண்டிருக்கேன்னு பார்த்தேன்.
என் கதையையும் வந்து படித்தது ரொம்ப சந்தோஷம். நன்றிப்பா.
இந்த மாதிரி அவரவர் வாழ்க்கை அவரவர் வழியில் என்று வாழும்போது குழந்தைகள்தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் வல்லிம்மா.
வாங்கப்பா சுமதி.
இந்த எண்ணம்தான் என்னை ரொம்ப வருத்தியது. செல்லங்களைக் கொஞ்ச பெரியவர்கள் வேண்டாமா. எங்கள் காலத்தில் எத்தனை அத்தைகள் ,பெரியப்பாக்கள், மாமாக்கள்.
மூட்டை மூட்டையாக அன்பு கிடைத்தது. இப்போதும் நல்ல குடும்பங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி ஒரு எக்ஸப்ஷன்.
பரியனாகி வந்த அவுணனுடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத் தமலன் முகத்து
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாயகண்கள் என்னைப் பேதமை செய்தனவே !!
லக்ஷ்மி நரசிம ஸ்வாமி சந்தனம்/ மஞ்சள் காப்பு அட்டஹாஸம் . எங்கப்பா? நல்ல ஈர்ப்பு!! லக்ஷ்மி கண்ணும் சொப்பாட்டும் வாயும் அழகா இருக்கா இல்ல?
கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்த்ததா? நல்லா இருந்தது. தனியா வரோம் ; தனியாத்தான் போணும். குழந்தைகள் குடும்பம்னு பாசம் கட்டினாலும், குழந்தைகளுக்கு நாம keepers மட்டும் தான் என்பதை எப்பவும் நினைவு வைத்துக்கொள்ளணும்னு எனக்கு இந்த கதை பாடம் சொல்லித்தந்தது. குழந்தைகளின் வாழ்க்கையை நாம் வாழவும் கூடாது; நம்ப வாழ்க்கையை அவா இழுக்கவும் முடியாது.பாவம் பெரியவர்கள் உடம்பு சரியாகி நல்ல மன அமைதியோட இருக்கட்டும். மனசுல, க்ஷணத்துல நான் பட்டுனு போயிட எனக்கு உன் கையை தா லக்ஷ்மி நரஸிமா நு தான் எனக்கு வேண்டிக்க தோனித்து.
அழகான பாசுரத்தை ஒரு கஷ்ணத்தில் எழுதிவிட்டீர்களே ஜயஷ்ரீ.
அந்த ந்ருசிம்ஹன் அவன் தோன்றிய ஜயந்தியைக் கொண்டாடும் கோவிலில் எடுத்தது.சந்தனமும் குங்குமுமாக இந்தப் படம் கிடைத்தது.
மிகுந்த யோசனைக்கப்புறமே இந்தப் பதிவுகளைப் பதிந்தேன், ஒரு கண்டனக் கடிதம் கூட வந்தது.
அட! நாம எழுதறதுக்குப் படிச்சு,கண்டிக்க ஒருத்தருக்குப் போது இருக்கானு சிரிப்புதான் வந்தது.அதற்காக ஒரு டிஸ்கி பதிவு போடணும்:)
நன்றி ஜயஷ்ரீ ஸ்ரீநிருசிம்ஹன் எப்பவும் கூடவே தானெ இருக்கான்.நல்லபடியாகவே வைப்பான்
வல்லியம்மா, இது ஒரு யதார்த்தமாக மற்றவர்கள் எட்ட்ருகொன்டாலும், என்னால் இதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எங்கே போனது நமது பண்பாடு ??? எங்கே சென்றது நம் கலாசாரம்??
நம்ம கலாசாரமெல்லாம் எங்கயும் போகவில்லை எல்.கே. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ளும் குணம்தான் குறைந்துவிட்டது.எனக்கு என் கசின்ஸ் எல்லோரையும் தெரியும். இவருக்கும் அப்படியே.
எங்கள் குழந்தைகளுக்கும் வீட்டிற்கு நிறைய பேர் வந்துவிட்டுப் போனதால் ஓரளவிற்குத் தெரியும்.
இப்ப உறவினருக்குப் பதிலாக சிநேகிதர்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார்களோ என்னவொ!!
கண்ணீர் வர வைத்த உண்மைக்கதை, என்றாலும் இதான் நிதரிசனம். அதிர அடிக்கும் உண்மை. :((((((((
குழந்தைகள் குடும்பம்னு பாசம் கட்டினாலும், குழந்தைகளுக்கு நாம keepers மட்டும் தான் என்பதை எப்பவும் நினைவு வைத்துக்கொள்ளணும்னு எனக்கு இந்த கதை பாடம் சொல்லித்தந்தது. //
இதை நாங்க எப்போவோ புரிஞ்சுண்டோம். எல்லாம் நாம் இருக்கும்வரைதான் என்பதும் புரியுது. அருமையான பதிவுகள் ரேவதி. இன்றைய நிலையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அப்பட்டமாய்ச் சொல்லிட்டீங்க.
அன்பு கீதா,
கேட்டதும் எனக்கும் கோபம் வந்தது. பிறகு இந்த நிகழ்ச்சியைச் சொன்னவர்களே அதை மறந்த நிலையில் நான் ஏன் வருந்தணும்னுட்டுப் பதிவாக எழுதினேன். இப்ப அப்பாடான்னு இருக்கு.சும்மாவா சொன்னார்கள்,எழுதித் தீர்த்துக் கொள் உன் ஆற்றாமையை''என்று.
நம்வயதில் இதை எல்லாம் தாண்டித்தான் வந்துவிட்டோம். குழந்தைகள் சந்தோஷமா இருக்கணும். அவ்வளவு போறும். நன்றிம்மா.
Post a Comment