Blog Archive

Thursday, June 24, 2010

540,சூறாவளியும் சிகாகோவும்



lightening  in Chicago
parking lot


அம்மா சைரன்ஸ் சத்தம் நிறையக் கேட்கிறது. நீ பத்ரமா இருக்கியாம்மா.

நானும் சின்னவனும் பத்ரமா இருக்கோம்பா. நீ அங்கயே ஸ்டீபனோட இரு.மழை
நிக்கட்டும்.
பேஸ்மெண்டுக்கு ரெண்டு பேரும் போயிடுங்கோ.
டொர்னாடோ வார்னிங் முடிஞ்சதும் மேல வந்தாப் போறும்.
'அதுக்குத் தாம்மா போன் செய்தேன். நீ முதல்ல டெலிபோனை ஸ்பீக்கர்ல போடு. அதை எடுத்துண்டு பேஸ்மெண்டுக்குப்
போய்விடு.
இங்க வெதர் ரேடியோ இருக்கு.
பக்கத்துக் கவுண்டியைத் தாண்டினதும் நான் வரேன்'
பேஸ்மெண்ட்ல பாத்ரூம் கப் போர்டில உட்கார்ந்துக்கோ.
பயப்படாதம்மா.''

பள்ளியில் கற்றுக் கொடுத்த டொர்னாடொ எச்சரிக்கைப் பாடங்கள்,
அந்தப் பயங்கரப் புயல்,இடி,மழையில் பேரனுக்குத் தெளிவாகப் பேசக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
இன்று காலை வழக்கம்போல சிகாகோவுக்குத் தொலைபேசியபோது ,

மின்சாரம் இருக்கும்மா,ஆனால் என் வாழ்க்கையில் இது போலச் சூறாவளியையும்,இடி மின்னலையும் கருமேகங்களையும் பார்த்ததில்லை என்று இன்னும்
பதட்டம் தணியாத குரலில் மகள் பேஇயதைக் கேட்டதும்
கலங்கிப் போனேன்.

அபரிதமான அழகு.அதீதமான இயற்கை வளம்,

மூச்சு நிற்கவைக்கும் பிரம்மாண்டம்.
கூடவே அஞ்சக் கூடிய
சீதோஷ்ணம். காற்று.
இதுதான் அமெரிக்கா:(
வாயு பகவான் முழு வீச்சில் ஆடிய ஆட்டம் மரங்கள்
விழுந்திருக்கின்றன.
நல்ல வேளையாக டொர்னாடோ இவர்களது இடத்தின் வருவதற்கு முன்னமே
வலு இழந்துவிட்டதாம். ஆனாலும் இடி மின்னல் தாக்கம்
கண்ணைக் கூச வைத்துவிட்டதாக மகள் சொன்னாள்.

என்னை அவள் நிலையில் வைத்துப் பார்த்தேன். ம்ஹூம்.:(
எனக்கு நம்ம ஊர் வெய்யில் எந்த நாளும்
எந்த நிலையிலும் எனக்குப் பிடிக்கும்பா.


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

34 comments:

சாந்தி மாரியப்பன் said...

மகளும் குடும்பத்தாரும் பத்திரமா இருக்கட்டும், இறைவனை வேண்டிக்கறேன்...

அபி அப்பா said...

உலகம் சுற்றும் அம்மா இப்போ சிக்காகோவிலா??? வாழ்க வாழ்க! புயல் எல்லாம் போயிடுச்சா? இப்ப பயம் இல்லியே?

Unknown said...

அமெரிக்காவின் சீதோஷ்ண நிலையும்,பெற்றோர்களின் மன நிலையும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் நம்ம ஊர் வெயில் எல்லாம் இப்போது பிடிக்கத்தான் செய்கிறது வல்லிம்மா.

துளசி கோபால் said...

வானத்தைக் கிழிச்சு மின்னல் வெட்டியது என்பது இதுதானா?

மகள் குடும்பம் நலமா?

சண்டிகரில் ஆந்தி அடிக்குது இப்போ.

படங்கள் நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

சிகாகோவிலா இருக்கீங்க? தொலைபேசியிலே பேசினதா இல்லை படிச்சேன்?? அபி அப்பா, ஒழுங்காப் பதிவைப் படிங்க முதல்லே! :P எங்கே போனாலும் ஒரே அவசரம்! :P

Geetha Sambasivam said...

மகள் குடும்பத்திலும், சிகாகோவின் மற்றக் குடிமக்களும் பத்திரமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்'

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல். இன்று வெளுத்துவிட்டதாக வெதர் சானலில் பார்த்தேன்.அவங்க எல்லாரும் அமைதியாத் தான் இருக்காங்க.மாப்பிள்ளை அலுவலகத்திலிருந்து வர ட்ரெயின் கூட ஸ்லோவாக வந்து அவர் 11 மணிக்குத் தான் வந்திருக்கிறார். கடவுள் கிருபையில் நன்றாக இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா நான் சென்னையில் தான் இருக்கேன்.தொலைபேசியில் தான் எனக்கு நியூஸ்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..
எல்லாவற்றியும் எக்ஸ்ட்ரீம்க்கள் என்பதை பார்த்துவிட்டு நம்ம ஊருகள் எவ்வளவோ தேவலை என்று தோன்றவைப்பது உண்மைதான்..

கோமதி அரசு said...

அன்பு வல்லி அக்கா,இங்கு நியூஜெர்சியிலும் வானத்துக்கும்,பூமிக்குமாய் விஸ்வரூப மின்னல்,பயங்கர
இடி.

சிகாகோவில் மகள் பேரன் மற்றும் அங்குள்ள அனைவரும் நலமாக இருக்க கோவர்த்தன கிரியை குடையாய் பிடித்தவன் அருளட்டும்.

ஆச்சு நாங்களும் வந்து 2மாதங்களுக்கு மேல் ஆகிறது. இரண்டு நாட்களில் சென்னை.

வல்லிசிம்ஹன் said...

சுமதி ,உங்க ஊரில இந்த மழை வரலியா. கிழக்கு நோக்கி நகருவதாகப் போட்டிருந்தார்கள்.
நாங்க எல்லாம் சுகவாசிகளாகிவிட்டோம்:)
சென்னையைத் தவிர வேற ஊரு (குப்பையாயிருந்தாலும்) பிடிக்கிறது கஷ்டம்தான்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளாசி, அந்த மின்னலைப் பார்த்தாலே என்னவோ செய்யும்.
நாங்க ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோவிற்குள் நுழையும் போது இப்படித்தான் காரின் மேல் கூரையைப் பிளந்து கொண்டு உள்ள வருகிற மாதிரி மழை.

சின்னப் பேரன் என் பெரிய ஓவர்கோட்டுக்குள் ஒளிந்து கொண்டு விட்டான்.
மாப்பிள்ளை பீட்சாவும் ,காப்பியும் வாங்கி வருவதற்குள் மகா சிரமமாகப் போய்விட்டது.
அந்தப் படங்கல் வெதர் சானலில் எடுத்த படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. நன்றாகவே இருக்கிறார்கள்.
எப்போதும் வருகிற கோடை மழைதான்.
அதுவும் டொர்னாடோ வார்னிங் எப்பவுமெ இரண்டு மூன்று ஊர்கள் தள்ளித் தான் கொடுப்பார்கள்.
இந்தத் தடவை மிகவும் பிரமாதமாக வந்துவிடுவே,பெண் என்னிடம் சொல்லி இருக்கிறாள்.
மற்றபடி அலுத்துக் கொள்ளமாட்டார்கள்.
கடவுள் தான் அவர்களிடம் இருந்து துணை கொடுக்கணும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து.
குளிர்னா ஒரே குளிர்.
மழைன்னால் அதிகம். அதுக்குப் பின்னால் விளைவுகள். பேஸ்மெண்டில் தண்ணீர் புகும் அபாயம்.
அதாவது வெளில தோட்டதில தண்ணி நின்னா நம்ம கிணத்துல தண்ணீர் மேல வருமே அது போல. சரியான நச்சு.:))

வல்லிசிம்ஹன் said...

கோமதி தங்கச்ச்சிக்கு நல்வரவு.
பேரனை விட்டு வருவது கொஞ்சம் சிரமமா இருக்கும்.

உங்க ஊருக்கும் மின்னலார் வந்தாரா.
நாந்தான் அதிகமாப் பினாத்தரேன்னு தோன்றியது:)

சந்தனமுல்லை said...

தங்கள் பதைபதைப்பை இடுகையில் உணர முடிகிறது வல்லியம்மா! படங்கள் - அழகா இருக்கு..ஆபத்தாகவும் தெரிகிறது!

ஹெட்டர் மாத்தவே இல்லை போலிருக்கே கொஞ்ச நாளா?!

வல்லிசிம்ஹன் said...

வாங்க முல்லை. முதல்ல ஹெட்டரை மாத்திடறேன்:)

மாத்திட்டேன்.!!
நீங்க சொல்கிறது ரொம்ப சரி.
பழைய வெஸ்டர்ன் நாவல் படிக்கும்போது, (லூயி லாமர்)
அப்படியே கண்முன்னால் நடப்பது போல உணருவேன். இப்ப நாங்க அங்க போது அந்த ஊருக்கே போயி ரெண்டு மூணு புயல்மழை பார்த்தாச்சு. அந்த வீடெல்ல்லாம் மரத்தில கட்டி வெளிப்பூச்சு கனமா அடிச்சிருப்பாங்க. மேலே ஸ்லேட் ரூஃப்.
நமக்கு ஓரடி சுவரைப் பார்த்த பிறகு அதைப் பார்த்தால் ரொம்ப ஃப்ளிம்சியா இருக்கிறமாதிரி தோன்றும்.
அப்படியில்லைதான். பதைப்பாதான் இருந்தது.அதனால் தான் பதிவே எழுதினேன். எனக்கும் யார்கிட்டயாவது சொன்னால் தேவலைன்னு தோன்றியது:) நன்றிப்பா.

Jayashree said...

இயற்கையோட அழகுன்னு சொல்லறதா இல்லை சீற்றம்னு சொல்லறதான்னு சிலசமயங்களில் புரியாம செயலிழந்து போக வைக்கிற ஆற்றல் சில சமயம் நம்மை உறைந்து போக வத்துவிடுகிறது. மே மாச autumn கலர் பாக்க சௌத்தில் போய் டேரா( காம்ப் )அடிக்க போயிருந்தோம் போனமாசம்.எப்பவும் சொல்லற ஸதர்லி ஃப்ரான்டல் ஸிஸ்டம் தான் !!.அது மின்னலா அது!! மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவுல ரெண்டா கிழிச்ச மாதிரி !!இதுதான் ஊழி தாண்டவம் என்கிற ந்ருத்யமோனு "ஆ"னு வாய்பிளந்து பாத்துக்கொண்டிருந்த அடுத்தநொடியில் படால்னு சத்தத்தோட பலவித நிறங்களோட செழு செழு என்று பறவை கூட்டம் நிறந்த மரம் நொடில கீழ விழுந்து செத்துடுத்து!! எங்களுக்கு 50 மீட்டர் தொலைவில கண்ணுக்கெதிர. ஸ்தம்பித்துப் போய் யார்கிட்டேந்தும் பேச்சு மூச்சில்லை .
அவுக்குனு இருந்தது. கரணம் தப்பி இருந்தா நாங்க 4 குடும்பமும் பஸ்மமாகி இருப்போம்ங்கிற உண்மை ஜீரணிக்க கஷ்டமா இருந்தது:((. நம்ப இந்த யூனிவெர்ஸ் ல எவ்வளவு insignificant, எவ்வளவு helpless னு. ஒரு insight வந்தது.
குழந்தைகள் சௌக்கியம் என்பதை கேட்க சந்தோஷம்.

கோமதி அரசு said...

//பேரனை விட்டு வருவது கொஞ்சம் சிரமமா இருக்கும்//

அவன் இப்போது எங்களுடன் தான் வருகிறான்.அவன் திரும்பி போகும் போது தான் கஷ்டமாய் இருக்கும்.

//நாந்தான் அதிகமாய் பினாத்தரேன்னு தோன்றியது//

நீங்கள் பெற்றோர்களின் மனநிலையை,தாயின் தவிப்பை சரியாக சொல்லியிருக்கீர்கள் .


குழந்தைகள் படும் சிரமம் எல்லாம் பார்த்தால் நம் நாடே நமக்கு சொர்க்கம்.

அபி அப்பா said...

ஓஓ காட்! வழக்கம் போல பதிவை சரியா படிக்காம மேலேட்டமா மேஞ்சுட்டனா? கீதாம்மா! எப்படித்தான் கண்டுபிடிப்பீங்களோ தப்பை எல்லாம்:-))

வல்லிசிம்ஹன் said...

பரவாயில்லை அபி அப்பா. பெரிய தப்பு ஒண்ணும் நடந்துடலை. நட்டு ஸ்கூலுக்குச் சம்த்தாப் போறானா.


கீதா ஒரு பூரண கவனிப்பு நிறைந்தவர். ஞாபகம் இருக்கா. உங்கள் முதல் பதிவிலிருந்து தமிழ் எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுவாங்களே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,
இயற்கையோடு உங்களது சந்திப்பு என்னை அதிர வைக்கிறது.
என்னவொரு பயங்கரம்.
பகவான் எப்பவும் நம்மோடு இருக்கணும்.

பெண் இந்த விஷயத்தில் என்னைவிட எவ்வளவோ தேவலை. எமர்ஜென்சி என்றால் ரொம்பத் தெளிவாக யோசிப்பாள்.நான் கம்பம் போல நிற்பேன். அவள் அப்பாவோட ஜீன்ஸைக் கொண்டிருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ சந்தோஷம்,கோமதிம்மா.

சென்னைக்கு வந்து செட்டிலானதும் போன் செய்யுங்க.
பத்திரமா வாங்க.

Unknown said...

நாங்கள் இருக்கும் இடத்தில் இந்த் அளவு இடி,மின்னலுடன் மழை இல்லை. நாங்களும் நியுஜெர்சியில் இருந்துவிட்டு 1மாதம் முன்புதான் இங்கு மாறினோம் அதனால் இங்கு சிதோஷ்ண நிலை எனக்கு சரியாக தெரியவில்லை குளிர் இன்னும் இங்கு அதிகம் என்று சொல்கிறார்கள் அதனால் குளிர்காலத்தில் கடினம்தான் வல்லிம்மா.

Unknown said...

மாற்றி சொல்லிவிட்டேன் வல்லிம்மா நியுஜெர்சியில் இருந்து டெக்ஸாஸ் சென்று 6மாதம் இருந்து விட்டு தற்போது மெய்ன்.

அபி அப்பா said...

\\பரவாயில்லை அபி அப்பா. பெரிய தப்பு ஒண்ணும் நடந்துடலை. நட்டு ஸ்கூலுக்குச் சம்த்தாப் போறானா.\\

ஆகா ரொம்ப சூப்பரா போகிறான். என்ன சனி, ஞாயிறும் கூட போக அடம். சும்மா அங்க அழைச்சுட்டு போயிட்டு வரோம். தவிர மிஸ் கிட்ட அபிஅம்மா "பையன் எப்படி?"ன்னு கேட்க அவங்க "எல்லோரையும் ஏதாவது படம் வரைந்து காமிக்க சொல்லி நோட் கொடுத்தேன். அவன் வாங்கும் போதே கிறுக்கி கொடுத்தான் கோவத்தோட. நான் அதற்கு ஏன் அப்படி செஞ்சன்னு கேட்டதுக்கு சமாளிச்சுகிட்டு 'நான் நூடுல்ஸ் படம் போட்டிருக்கேன்'ன்னு சொல்றான்" அப்படீன்னாங்க மிஸ். இப்படியாக நட்ராஜ் ஸ்கூல் அருமையாக போகிறார்.


\\கீதா ஒரு பூரண கவனிப்பு நிறைந்தவர். ஞாபகம் இருக்கா. உங்கள் முதல் பதிவிலிருந்து தமிழ் எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுவாங்களே.\\

ஆமாம். 300 பதிவாக போகின்றது. இப்போதும் பிழை வருது. எனக்கு பிழை திருத்தி திருத்தி கீதாம்மா என் பாணில பிழையா எழுத ஆரம்பிக்க போறாங்க பாருங்க என் மிருதங்க குருநாதர் போல:-))))

தக்குடு said...

//நான் சென்னையில் தான் இருக்கேன்.தொலைபேசியில் தான் எனக்கு நியூஸ்.:)// but america போன மாதிரி இருந்தது....:)

Matangi Mawley said...

enakkum namba oor veyil thaan pidikkumpaa!

மாதேவி said...

மகள் குடும்பத்தினர் நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

அக்கரைக்கு இக்கரை பச்சை. வெயிலே தேவலாம்தான்.

எல்லோரும் நலமே என அறிந்து மகிழ்ச்சி. மின்னல் வெட்டும் படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

தக்குடு வரணும். முதல் வருகைக்கு ரொம்ப நன்னிங்கோவ்:)

ஃபர்ஸ்ட் ஹேண்ட் ஒலிபரப்பு, பேரன் செய்தது.அப்படியே மறு பதிவு வலைப்பூவில:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதங்கி,
சரிதான். வெயில் காதில விழுந்துடப்போகிறது. அசையாக் கூப்பிடறாங்களேன்னு வந்துவிடப் போகிறது:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நம்முடைய இக்கரை இன்னும் பசுமையாக இருக்கட்டும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

படங்கள் அனைத்துமே வெதர் சானலில் எடுத்தவை.உங்க ஊரு
வெய்யில் எல்லாம் ஓடிப் போயிருக்குமே.
ராமலக்ஷ்மி,இரண்டு கரையில் ,அக்கரைக்குப் போய் இரு மாதம் இருந்துவிட்டு வந்துவிடவேண்டும்.
அதற்கு மேல் என்றால் வம்புதான்:)