Wednesday, February 03, 2010

மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு

மீண்டும் எழுத வேண்டிய அவசியம். இந்தப் பதிவை அப்பவே எழுதி அப்படியே பப்ளிஷ் செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.
ஏதோ டெம்ப்லேட் தகறாரா என்ன வென்று தெரியவில்லை.
இருந்தாலும் எங்கள் பேத்திக்காகப் பிரத்தியேகப் பதிவு
என்பதால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

அநேகமாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய மகன் ,குழந்தையை வெப் காமுக்கு அழைத்து வந்துவிடுவான். முதலில்
பேத்திக்குப் புரியவில்லை. ஏன் இவர்களைத் தொட முடியவில்லை என்று. பேச்சு வந்ததும் தாத்தி,தாத்தா என்று அவளே அழைக்க ஆரம்பித்தாள்.
புதுப் பட்டம் எனக்குப் பிடித்தே இருக்கிறது.
அவள் அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்று அழைப்பதால் எனக்குத் தனிப் பட்டம் சூட்டி இருக்கிறாள்.

வெள்ளிக்கிழமை தன் அப்பா வீட்டில் இருப்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறாள்.
இது ஒரு பெரிய துப்பறியும் வேலை இல்லை.
தினம் அப்பா ஹாஃபீஸ்(!) கிளம்புபோது ஷூவை மறைத்து வைப்பாள். கைபேசியை எடுத்துக் கொண்டு தர மாட்டாள். பேனா,ஐடி கார்ட் எல்லாவற்றையும்
தன் குட்டிப் பைக்குள் போட்டுக் கொண்டுவிடுவாள்.

வெள்ளிக்கிழமையன்று அப்பா ஒன்றும் செய்யாமல் வெறும் வீட்டுச் செருப்போடு உலாத்துவதையும் ,
அம்மா தூங்குவதையும் கண்டு பிடித்து வைத்திருக்கிறாள்.
உடனே தான் ஒளித்துவைத்திருக்கும் அத்தனை பொருட்களையும் ஒழுங்காக மேஜையில்,கணினி முன்னால் வைத்துவிடுவாளாம்.

தன் பத்துப் பூனை பொம்மைகளையும் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டுத்
தாத்தி, தாத்தா என்று கம்ப்யூட்டரைக் காண்பிப்பாளாம்.
ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு பெயர்.

கைக்குள்ள ஒண்ணூ . அது ஜோஜோ. கண்ணை மூடித்திறப்பதால் அந்தப் பெயர்.
இன்னோண்ணு பால் போல வெள்ளையா இருக்குமாம்,
அதற்கு தூதுப் புத்தா என்று பெயர்.(அம்மாவுக்கு இந்திப் பழக்கம் ஜாஸ்தி:))

ரொம்பச் சின்னதாக இருக்கும் பூனைக்கு அச்சுப் புத்தா.
இவ்வளவையும் அப்பா மடியில் உட்கார்ந்த படி அறிமுகம் செய்வாள்.
அப்பா கேட்கிற கேள்வியும் அவளுடைய பதில்களும்.

''தந்த பொம்மை யாரும்மா''
மய்யா.(தன்னைக் குறிக்கும் பெயர்)

ஹாப்பி பர்த்டே எப்போமா?
தத்தியத்(30ஆம் தேதி)

புத்தா என்ன சொல்லும்.
கீய்ங்க்னு தத்தும்

டாக்கி(நாய்க்குட்டி) என்ன சொல்லும்
பவ் பவ்.

டான்கீ என்ன சொல்லும் ?
தொச்சு தொச்சு.

ம்ஹூம், என்னால் சிரித்து முடியாது. அத்தனை மழலை.
கொஞ்ச நேரத்தில் எங்கள் வெள்ளிக்கிழமை விளையாட்டு முடிந்துவிடும்.

அவளுக்கு அப்பாவோடு க்ரீக் பார்க் போக வேண்டுமே:)
எல்லோரும் வாழ வேண்டும்.

16 comments:

வல்லிசிம்ஹன் said...

போன பதிவின் தொடர்ச்சி.
அது சரியாகத் தெரியவில்லை.
எழுத்தும் புரியவில்லை.

வடுவூர் குமார் said...

குழ‌ந்தைக‌ளோடு அனுப‌வ‌மே த‌னி தான்.
குழ‌ந்தைக்கு என் ஆசீர்வாத‌ங்க‌ள்.

கீதா சாம்பசிவம் said...

பேத்திக்கு ஆசிகள் வல்லி, மழலை இன்பமே தனிதான். இனிமை, எங்க அப்பு இன்னிக்குக் காலையிலே லெல்லோ பாண்ட், க்ரீன் ஸ்வெட்டர் போட்டுண்டு வந்தது. லெல்லோனா எல்லோ கலர்னு நாம புரிஞ்சுக்கணும். அதுக்கு "ர"வும் வராது. அர்ஜுன் அல்ஜுன் இல்லாட்டி அஞ்சுன், கிருஷ்ணர், கிச்ணர்னு சொல்லும்.

LK said...

//ஹாப்பி பர்த்டே எப்போமா?
தத்தியத்(30ஆம் தேதி)

புத்தா என்ன சொல்லும்.
கீய்ங்க்னு தத்தும்

டாக்கி(நாய்க்குட்டி) என்ன சொல்லும்
பவ் பவ்.

டான்கீ என்ன சொல்லும் ?
தொச்சு தொச்சு.//

என்னுடைய தேவதை திவ்யாவின் ஞாபகம் வருகிறது ...

யானை எப்படி கத்தும்

யானை கத்தும் ..... :D


அவளுடைய பிஞ்சு மொழியில் அவள் பேசும் பாதி புரிய வில்லை எனினும் வீடு திரும்பியவுடன் அதுதான் எனக்கு புத்துணர்வு தருவது

நானானி said...

ஆஹா..! இதே மழலையை நேரில் கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்!!!!மிஸ் பண்ணீட்டீங்களே, வல்லி!!!

LK said...

உங்கள் பேத்தி எல்லா வளமும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள்

Vetrimagal said...

Lovely time with grand daughter. Lucky person!

After reading your blog, I am eager for my GD to start speaking.

Thanks.

கோமதி அரசு said...

மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு வந்ததால் தான் என்னால் படிக்க முடிந்தது,காலையில் வந்த பதிவை படிக்க முடியவில்லை.

மறுமுறை பேத்தியின் மழலையை ரசிக்க தந்தமைக்கு நன்றி.

தாத்தா தாத்தி அருமை.

பேத்திக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் குமார். நம் குழந்தைகள் வளரும்போது
அவ்வளவாகக் கவனிக்க நேரம் இருக்காது.
இப்ப நேரமும் வாய்த்து பேரன் பேத்திகளின்
மழலைக் கேட்கக் காதுகளும் சரியாக இருந்தால் சந்தோஷமே.
அப்பாவோ அம்மவோ ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்யணும்:).
நன்றிம்மா. உங்க ஊர்க் குளிர் அனுபவிக்கும்படி இருக்கிறதா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, அந்தப் பதிவு எழுதும்போது வடிவாகத்தான் இருந்தது.
பப்ளிஷ் செய்தால் எழுத்தெல்லாம் சின்ன எறும்பு அளவுக்குத் தெரிகிறது.

என்னவோ செய்து திருத்தப் பார்த்தேன். தலைசுற்றல் தான் மிச்சம்.
மீண்டும் எழுதலாம்னு வேறுவிதமாக எழுதிவிட்டேன்.
ரசிப்பதற்கு ரொம்ப நன்றிம்மா.
குழந்தைகளுக்கே தனி சாமர்த்தியம்.
ரெண்டு பாட்டிக்கு நடுவில வித்யாசம் சொல்லத் தெரிகிறது பாரு.:)

வல்லிசிம்ஹன் said...

லெல்லொ பாண்டா!!!ம்மா னு கட்டிண்டு முத்தம் கொடுக்க ஆசையா இருக்கு கீதா.
நம்ம கிஷாவுக்கும் இன்னும் ஆர் வரலை.
லாரா மிஸ் லாலா ஆகிவிடுகிறாள்.
ஹரிமாமா அடி மாமா ஆகிறான்.:)
அப்புக்குட்டிக்கும் எங்கள் ஆசீர்வாதங்கள். அவள் அக்காவுக்கும் தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெற்றிமகள்.
உங்க பேத்தி வாயைத் திறந்த ஒலி எழுப்பும்போதே
ரெகார்ட் செய்ய ஆரம்பித்து விடுங்கள். அமிர்த மொழிகளை எப்போ வேணுமானாலும்
கேட்டு மகிழலாம். எனக்கு என் பசங்க என்ன பேசினார்கள்
என்று கொஞ்சமும் நினைவில்லை. எங்க அம்மா இருந்தால் சொல்லி இருப்பார்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க எல்.கே.
மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர்.

தெரியாமலா மஹாகவி பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சினார். மழலை இன்பம்
போல் வேறேது இனிமை?

LK said...

//வாங்க எல்.கே.
மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர்.

தெரியாமலா மஹாகவி பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சினார். மழலை இன்பம்
போல் வேறேது இனிமை//

முழு பெயர் திவ்ய லக்ஷ்மி

வல்லிசிம்ஹன் said...

என்ன செய்யலாம் நானானி. எப்பவும் அவர்கள் அருகில் இருக்க ஆசைதான்.
குழந்தைகளை வெப்காமில் பார்க்கும்போது வாரி அணைத்துக் கொள்ள ஆசை.

பொறுப்பு அவர்களுக்கு. கொஞ்சல் நமக்கு. அவ்வப்போது அனுபவித்து மகிழ
நமக்குக் கொடுத்து வைத்தால் போதும்.:)

வல்லிசிம்ஹன் said...

அட , லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டாளா.
அப்புறம் என்ன கவலை.!!!
அன்புச் செல்ல திவ்யா லக்ஷ்மிக்கு எங்கள் இருவரின் மனம் நிறைந்த ஆசிகள்.