இப்படித்தான் ஆரம்பித்தது நாச்சியாரின் எண்ணுதல்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.முட்டை பொரிக்கும் முன் கோழிக்குஞ்சை எண்ணாதே என்று.
நான் செய்த தப்பும் அதுதான். முட்டைகளை எண்ணி ஐன்னூறு பதிவு என்று போட்டுவிட்டேன்.
ஐன்னூறு முட்டைகளில் ஒன்று பொரிக்காத, வெளிவராத ட்ராஃப்டாக இருந்த பதிவு.
டாஷ்போர்டில் 500 என்று காண்பித்ததும்,(அதுக்குத் தெரியாது இல்லையா. எண்ணிக்கைதானே முக்கியம், பாதி எழுத்த பப்ளிஷ் பண்ண எழுத்தான்னு இனம் கண்டு கொள்ள ப்ளாகுக்குத் தெரியாது. அதோட சாஃப்ட்வேர் அந்த மாதிரி.:)
ஆகையினாலே இந்த மொக்கைப் பதிவைப் படித்து விட்டு நீங்க எல்லாரும் அப்ப சொன்ன வார்த்தைக்கு மாப்பு கொடுத்துடுங்க.
இப்ப நிசமாலுமே நான் 501 பதிவுக்கு வந்துட்டேன்!!
இது உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை.
இதனால் எனக்கு வயதாகிவிட்டது , கண்ணு சரியாகத் தெரியவில்லை,
வீட்டுக்காரருக்குக் கண் ஆபரேஷன் செய்த மாதிரி
வல்லிம்மாவுக்கும் கொஞ்சம் கவனிச்சா நல்லா
இருக்கும்னெல்லாம் நினைக்க வேண்டாம்.)
என் இதயம், நரம்பு மண்டலம், கொலெஸ்ட்ரால், சர்க்கரை,ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு எல்லாம் சரியாக இருப்பதாக
எம்.வி. டயபெடிக்ஸ்ல சொல்லிட்டாங்க.
மேலும் மேலும் உங்கள் ஆதரவைத் தந்து பதிவையும் என்னையும் வளர்க்குமாறு
பணிவோடு கேட்டுக்கறேன்:)
எல்லோரும் வாழ வேண்டும்.
30 comments:
இருந்தாலும் நாங்க இன்னும் ஒரு வருஷம் பாக்கறோம். அப்பறமும் ஒரு பதிவு போட்டீங்கன்னா எங்க வாழ்த்துக்கள் வீணாப்போயிடும்ல :)
எவ்வளோ 'வளர்த்தாச்சு' இங்கே மட்டும் வுட்டுருவோமா?
அதெல்லாம் வளர்த்துருவோம். நோ ஒர்ரீஸ்.
501 க்கு வாழ்த்து(க்)கள்.
அதென்னமோ 'பார் சோப்' நினைவு வந்து தொலைக்குது:-)
எப்படித்தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ? ரசிக்க வைத்தன. தலைப்பும் அருமை:)!
துளசி கோபால் said...
//அதென்னமோ 'பார் சோப்' நினைவு வந்து தொலைக்குது:-)//
:))!
பதிவு, போட்டோ பாத்துட்டு பின்னூட்டம் போடலாம்னு வந்தா சின்ன அம்மிணி, துளசியக்கா பின்னூட்டங்கள் படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன்.
வாழ்த்துக்கள் அக்கா!
அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டேன்.
நிறைய இருந்ததால பின்னூட்டங்கள் போடலை.
:-))
அய்ய, அம்மிணி இப்படி காலை வாரிட்டிங்களேப்பா:)))
எதுக்கும் மீண்டுமெண்ணிப் பார்க்கிறேன். :)
பொறுத்தே வாழ்த்துங்க. அப்புறம் தருமி கதையாகிடைப் போகுது.
''எல்லாரும் கேப்பாங்களே!ஏம்ம்மா இது உண்மையிலியே ஆயிரமாவதா? இல்லை 100த்தோட ஒரு சைபரைச் சேர்த்திய்ட்டியான்னு? :))0
நல்ல காமெடியாப்போச்சு,. நன்றி அம்மிணி.
வரும் வரும். 501ன்னா சோப் ஞாபகம்தான் வரும். அப்புறம் 777 அப்படீன்ன ஊறுகாய் ஞாபகம்.
சொல்ல மாட்டாங்களா.
ஆயிரத்தில் ஒருத்தியாகப் போகும் ஸ்ரீமதி துளசி கோபாலுக்கு இப்பவே வாழ்த்துகள். எல்லாரும் கவனிங்கப்பா.
நாச்சியார் பதிவுக்கு அடித்தளத்தில பதினஞ்சு கல்லுப் போட்டவங்களாச்சே. விழா எடுக்கணும்.
ஆமா ஆமா, ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா மாதிரி பூனை வளர்த்தவங்க , பதிவுகளையும் வளர்த்தாங்கன்னு ஒரு பதிவு போடணும். ஐடியா.!!!ஒகே, துளசி?
501 க்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா..
//துளசி கோபால் said...
//அதென்னமோ 'பார் சோப்' நினைவு வந்து தொலைக்குது:-)//
வெளுத்துக்கட்டிட்டீங்க அக்கா :-))))
வாங்கப்பா ராமலக்ஷ்மி,
தேடல் பா. தேடல்.
அள்ள அள்ளக் குறையாமல் கொடுக்க
வள்ளல் கூகிளார் இருக்க
நமக்கேது குறை. கேப்பதை கேட்கும் விதமாக் கேட்டா நிறையவே கொடுக்கிறார்.:)
நன்றிம்மா.
வரணும் வரணும் தம்பி வாசுதேவன். உங்களுக்கு இருக்கும் வேலைகள் நடுவில்
படிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம்.
மொக்கை போட்டு நாளாச்சு. அதான்.....:)
தேடல்.....
தேடுங்கள். கண்டடைவீர்கள் னு பரிசுத்தாகமத்திலே சொல்லி இருக்கு.
ஆண்டவரே.... எங்கள் கூகுளாண்டவரே எங்கள் ப்ரார்த்தனையைக் கேளும். ஆமென்.
உண்மைதான் தென்றல்.
சென்ஸ் ஆஃப் ஹ்யூமருக்கு துளசிக்கு அடுத்தபடி சின்ன அம்மிணிதான்.
வாய்விட்டுச் சிரிக்கத் துளசியம்மாகிட்ட நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் பாங்கு வெகு அழகு. நன்றிம்மா.
வாழ்த்துக்கள் வல்லிம்மா, ஆயிரம் தாண்டி செல்ல வேண்டுகிறேன்.
501ன்னுனு தலைப்பு பாத்ததும், 501 சோப்பு சம்பந்தப்பட்ட உங்க அந்தக் கால நினைவுகளைச் சொல்றீங்க போலன்னு நினச்சு ஓடி வந்தேன்!! ;-))))
வாழ்த்துகள் வல்லியம்மா!
/இதனால் எனக்கு வயதாகிவிட்டது , கண்ணு சரியாகத் தெரியவில்லை,
வீட்டுக்காரருக்குக் கண் ஆபரேஷன் செய்த மாதிரி
வல்லிம்மாவுக்கும் கொஞ்சம் கவனிச்சா நல்லா
இருக்கும்னெல்லாம் நினைக்க வேண்டாம்.)/
LoL!
வரணும் வரணும் அமைதிச்சாரல்.''//வெளுத்துக்கட்டீங்க// ம்ம்ம். ஒருத்தரை ஒருத்தரை மிஞ்சறீங்களா. கொண்டாட்டம்தான்:)
சரி 501க்கு வாழ்த்துக்கள். அப்ப 502 ,503 எல்லாத்துக்கும் வாழ்த்துகள் உண்டா சாரல்:)
ரொம்ப நன்றிப்பா.
எனக்கு அப்பவே இந்த சந்தேகம் இருந்துச்சி. கவுன்ட் பண்ணி பார்க்க பொறுமை இல்ல அதான் விட்டுட்டேன்.
பாருடா. ட்ரங்குப் பெட்டிக்கு நான் சொன்னதை பார் சோப்புக்கு இவங்க சொல்லிட்டாங்க.
இது கூட நல்லா இருக்கே ஹுசைனம்மா, நாம் வாங்கின சோப்புகளைப் பத்திப் பதிவு போட்டால் என்ன:)இப்பதானே வாஷிங் மெஷின் வந்திருக்கு.
வாங்க கைலாஷி வாழ்த்துகளுக்கு நன்றி.
முடிந்தவரை பார்க்கலாம். முயற்சி திருவினையாக்கும்.
நான் கூட நினைத்தேனாக்கும், உண்மையை நீங்க ‘பளிச்’ என சொன்னதால் பார் சோப் நினைவு வந்துட்டு துளசி மேடத்துக்கென்று:))!
வரணும் எல்.கே. நல்ல வேளை நீங்களும் எண்ணிப் பாத்து வெளுத்துப் போக விடவில்லை நான். முழித்துக் கொண்டுவிட்டேன்:)
வரணும் வரணும் முல்லை.
உள்ளதைத்தான் சொன்னேன்.
இன்னும் கொஞ்சம் சீக்கிரம்மாச் சொல்லி இருக்கணும்:(
ஆஹா, நெல்லைக்கரசியே ராமலக்ஷ்மி, இந்த ''ஆக்கும்'' கேட்டு எவ்வளவு நாளாச்சு!
எங்க செண்பகவடிவு பேசுகிற ''அங்கயே நிக்கி.
படிக்கி'' என்று கிளி மாதிரி பேசுகிற சத்தம் நினைவுக்கு வந்துவிட்டது.
பளிச்சிடும் வெண்மைக்கு 501 பார் சோப்!!
படங்கள் எல்லாம் அருமை.
501வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உடல் நலத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
மேலும்,மேலும் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!!
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தொடரட்டும்.
அன்பு கோமதி,வாழ்த்துகளுக்கு நன்றிமா. நல்ல உள்ளங்கள் சேரும்போது புதிய எண்ணங்கள் உதயமாகட்டும்.
வாங்க மாதேவி.வாழ்த்துகளுக்குத் தகுந்தபடி சுவரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன். மிகவும் நன்றீ.
வல்லியம்மா, அதுக்குள்ள 501 பதிவுகள் ஆகிவிட்டதா ? நம்பவே முடியவில்லை.
நல்வாழ்த்துகள் !
ஆஹா! கண்ணன்.
வாங்கப்பா. நீங்க எல்லோரும் வளர்த்த எழுத்து தானேம்மா.
உங்கள் எழுத்துக்கள் எல்லாம் படித்து தான் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.நீங்கள் பின்னூட்டம் இட்டதால் தான் மேலும் எழுதத் துணிவு வந்து, தயக்கம் போனது. இப்ப நீங்க வந்து வாழ்த்துகள் சொன்னது மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது.
நன்றிம்மா.
Post a Comment