கவிதை அமைக்க கவிஞன் முற்பட்டால்
கவிபாட இனிதே கருத்துகளும் உருவெடுக்கும்
இதமான உள்ளத்தில் இணைந்தே இசைபாடும்
பதமான பாடல்கள் பண்ணோடு அமையப் பெறும்.
கற்பனைகள் உருவாகக் கருத்துக்கா பஞ்சம்
கற்றறிந்த இலக்கியத்தில் காணாத கருத்துகளா
காற்றின் ஓசைக்கும் கானல் நீருக்கும்
காரிகையின் இன்மொழிக்கும் காளையின் முரசொலிக்கும்
கடலின் அலைகளுக்கும் கறுத்திருக்கும் மேகத்துக்கும்
கனவுகளின் இனிமைக்கும்காட்சிகளின் தெளிவுக்கும்
மழலையின் சிரிப்புக்கும் மானிடரி மமதைக்கும்
மண்ணின் பெருமைக்கு மாசற்ற சூழலுக்கும்
எளிமையான பதத்தில் ஏற்றமான பாடல்
எளிதாக அமையும் எண்ணத்தில் தெளிவிருந்தால்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கனிவான வண்ணத்தில்
கவிஞனின் எண்ணம் கவிதையிலே மின்னும்
N.Rengan
1952-2004.
எல்லோரும் வாழ வேண்டும்.
6 comments:
இந்த நாள் என் தம்பிக்கானது.
அதனால் அவன் எழுதிய பாடலை இங்கே வெளியிடுகிறேன்.
நல்ல கவிதை. நன்றி.தங்களின் சகோதரரின் கவிதையும் நீங்கள் அவரை நினைவு கூறும் விதமும் அருமை. நன்றி அம்மா. நான் பெண்கள் செல்ல முடியாத வெள்ளியங்கிரி மலை உச்சியில், ஒரு குகையில் உள்ள ஈசனை சூரிய பகவான் காலையில் அவர் மீது பட்டு, வழிபடும் அரிய காட்சியினைப் புகைப் படமாக வெளியிட்டு உள்ளேன். வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணத் தொடரின் நிறைவுப் பகுதியினைப் பார்க்கவும். நன்றி.
தம்பியை நினைவு கூரும் அருமையானதொரு கவிதை, தம்பிக்குத் தான் கொடுத்துவைக்கலை, இருந்து பார்க்க! :((((((((((((
நன்றி கீதா.
உண்மைதான்.
வேறு எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பான்.
உங்கள் சகோதரராகிய கவிஞருக்கு என்னுடைய அஞ்சலிகள் வல்லிம்மா!
அன்பு சுந்தரா,
ரொம்ப நன்றி.நானும் ஒவ்வொரு வருஷமுமவனைப் பற்றிப் பதிவு போடக் கூடாது என்று நினைப்பேன்.
ஆனால் அவனுக்கு அவன் எழுதினதை யாராவது படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்
மிகுந்த மகிழ்ச்சி அடைவான். அதற்காக ஒரு மேடை அவனுக்கு இது. வந்து பார்த்ததற்கு நன்றி.
Post a Comment